Wednesday, July 7, 2010

ஜெயா தொலைகாட்சி காலைமலரில் நான்


ஜெயா தொலைகாட்சி அலுவலகம் . அம்மாவின் ராசி நிறம் . பார்க்கும் இடங்களிலெல்லாம் பச்சை வண்ணம்தான் . நல்லவேளை ! பச்சை , பச்சையாக பேசவில்லை . காலை மலர் நிகழ்ச்சியில் விளம்பரத்துறை பற்றிய நிகழ்ச்சிக்கு , விருந்தினராக அழைத்திருந்தார்கள் . நான் அவ்வளவு ஒர்த் இல்லையப்பா என்று சொன்னேன் . அட ...ரொம்பத்தான் ஃபீல் பண்ணாதீங்க என்று உட்கார வைத்து விட்டார்கள் .

“எப்படி இந்த துறைக்கு வந்தீங்க ?

ஜஸ்ட் பிடிச்சுது . வந்துட்டேன் என்றேன்

சார் இந்த மாதிரி ஒன் வேர்டு ஆன்சர் சொன்னால், எப்படி நாங்க அரை மணி நேரத்தை கடத்தறது ? இந்த ஒரு கேள்விக்கே ஒரு மணி நேரம் பேசணும் என்றார் சரவணன் . நிகழ்ச்சி தயாரிப்பாளர் . வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது . உள்ளேயே சமாதி கட்டி , அதற்கும் பச்சை பெயிண்ட் அடித்து விடுவார்கள் . என் பிளாக் ஐடி கேட்டார்கள் . சொன்னேன். ஜெயலலிதாவிடம் நான் கேட்ட 32 கேள்விகளை படித்தால் கன்ஃபார்ம் சமாதி

கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பேச வேண்டியிருந்தது . பத்து மணிக்கு மேல் என்றால் பிரச்சனையேயில்லை . ஏன் என்றால் நான் பேசப் போவதில்லை. உள்ளம் பேசுமே...moreeeeeeeeee... (இந்த பொன்னான தருணத்தில் பத்து மணிக்கு மேல் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றியையும் ,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)

பேட்டி நாளை வியாழன் காலை மலர் நிகழ்ச்சியில் (08/07/2010) ஒளிபரப்பாகும் . நேரம் காலை 8.00 மணியளவில்

...........................................................................................................................................................................




35 comments:

Prathap Kumar S. said...

//வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது //

என்னண்ணே நல்ல வாய்ப்பை தவறவிட்டீங்க... இனி கூப்பிடவாப்போறாய்ங்க...பட்டுனு சொல்லிருக்கவேண்டாமா...
என்னத்தான் நடக்கும்னு பார்த்துருவோம்ணே....:))

iniyavan said...

தலைவருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

பத்மா said...
This comment has been removed by the author.
பத்மா said...

கட்டாயம் பார்க்கிறேன்

Paleo God said...

8ம் தேதி 8 மணிக்கா? அஷ்டமத்துல எதுனா பிரச்சனையா தல??

எனிவே வாழ்த்துகள்.:))

(அடுத்த பேட்டி யாரோடது?)

ஜில்தண்ணி said...

அய்யனை தரிசித்துவிடுகிறேன் :)

Rajeswari said...

வாழ்த்துக்கள்!

Cable சங்கர் said...

ஓகே.. ரைட்டு..

CS. Mohan Kumar said...

முதலில் வாழ்த்துக்கள்.

இவ்ளோ சின்ன பதிவில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தீர்கள். :))

பெசொவி said...

Eagerly awaiting to see the programme.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் தல.

அங்க யாருமே அந்த 32 கேள்விகள படிச்சதா தெரியலயே? ரொம்பப் பத்திரமா திரும்பி வந்துருக்கீங்க.

ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம். அம்மா டி.வியில கூப்புடுறாங்கன்னு தெரிஞ்சும் நம்பி போயிருக்கீங்க. ஆனா அடுத்த தடவ போய்டாதீங்க. ஏன்னா இப்பத்தான் உங்க பிளாக் ஐ.டியக் கேட்டு வாங்கிட்டாங்கல்ல. இனி சொங்கியார் வந்து ஏதாச்சும் சொன்னா அவய்ங்களே தேடி வந்துருவாய்ங்க..

ப்ளீஸ் யாராவது அந்த நிகழ்ச்சிய காப்பி பண்ணி போடுங்களேன்.

vasu balaji said...

/ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
8ம் தேதி 8 மணிக்கா? அஷ்டமத்துல எதுனா பிரச்சனையா தல??

எனிவே வாழ்த்துகள்.:))

(அடுத்த பேட்டி யாரோடது?)/

ஆமாம். தலைவிக்கு ராசி எண் 9தானே. ஒரு வேளை மணிஜி பேட்டியை இப்படி ஒளிபரப்பினால் பரிகாரம் என்று புங்கமரத்தடி ஜோசியர் சொல்லியிருப்பாரோ?

vasu balaji said...

/வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது ./

எவ்வளவு அருமையான சந்தர்ப்பம். கலைஞரை இடுகை விடாம காச்சி எடுத்துட்டு, பேட்டில இப்படி சொல்லி, இடுகை வேறு, பேட்டி வேறுன்னு ஒரு இடுகை போட்டு, சும்மா ஒரு வாரம் கலகலன்னு கும்மியடிச்சிருக்கலாம். வடைபோச்சே:((.அவ்வ்வ்.

Rajan said...

ஜெயா டீவில டோண்டுவையும் உங்களையும் ##$%$^$&^*%^#$^%*%&$%%*^*^%&$&&%*^*^&(&(&(&(&(&(&(&)*_(_(_*)&(^*(^*(^*^(^^((^ அப்பிடியா!

மணிஜி said...

//ராஜன் said...
ஜெயா டீவில டோண்டுவையும் உங்களையும் ##$%$^$&^*%^#$^%*%&$%%*^*^%&$&&%*^*^&(&(&(&(&(&(&(&)*_(_(_*)&(^*(^*(^*^(^^((^ அப்பிடியா


ஆமாம்யா...

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்...! கண்டிப்பா பார்த்துடுவோம் ...!

Jackiesekar said...

வாழ்த்துக்கள் டைரக்டர் சார்....பத்து மணிக்கு மேல நீங்க என்னிக்கு பேசி இருக்கிங்க...

Ravichandran Somu said...

வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மணிஜி!

பாலா said...

இண்டர்னெட்டில் பேட்டியெடுக்கறேன்னு சொன்னா நாங்கள்ளாம் வேணாம்னா சொல்லப் போறோம்.

அதென்ன எப்பப் பார்த்தாலும் சென்னைப் பதிவர்களையே கூப்பிடுறாங்க?

இதுக்கு காமதவராஜ் வந்துதான் நீதி சொல்லனும்.

Jana said...

வாழ்த்துக்கள் மணி ஜி. கண்டிப்பாக பார்க்கின்றேன். என்னை நினைவு இருக்கின்றதா?

பா.ராஜாராம் said...

// வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது//

:-))

மருந்து குடிக்கும் போது....... நினைச்ச கதையாவுல இருக்கு. குசும்பா! :-)

க ரா said...

// July 7, 2010 9:27 AM
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

8ம் தேதி 8 மணிக்கா? அஷ்டமத்துல எதுனா பிரச்சனையா தல??

எனிவே வாழ்த்துகள்.:))

(அடுத்த பேட்டி யாரோடது?) //

ஹா. ஹா. ஹா.

மணிஜி said...

//Jana said...
வாழ்த்துக்கள் மணி ஜி. கண்டிப்பாக பார்க்கின்றேன். என்னை நினைவு இருக்கின்றதா//

ஒரு பதிவர் சந்திப்பில் மெரினாவில் சந்தித்தோம் என்று நினைக்கிறேன்...

வால்பையன் said...

பார்த்துடுவோம்!

ச.முத்துவேல் said...

/ (இந்த பொன்னான தருணத்தில் பத்து மணிக்கு மேல் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றியையும் ,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)/

ok :)

அத்திரி said...

//ஜெயலலிதாவிடம் நான் கேட்ட 32 கேள்விகளை படித்தால் கன்ஃபார்ம் சமாதி//

கிகிகிகி......
]

வாழ்த்துக்கள் அண்ணே

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்...! கண்டிப்பா பார்த்துடுவோம் ...!

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் மணிஜி..

||அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)||

என்னுடைய அனுதாபங்களும்... :o)

R.Gopi said...

//வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது //

*******

ஹா...ஹா..ஹா... தல மெய்யாலுமே நீதான்யா “தில்லுதுர”

ஷைலஜா said...

வாழ்த்துகள் திரு மணி! நீங்க சாதனைகள் பல செய்ததை சற்றுமுன் ஜெயா டிவில கண்டுகொண்டேன் ! பாராட்டுக்கள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மணிஜீ,

உங்களுடைய பேட்டியைப் பார்த்தேன். நல்ல பேட்டி. பல விசயங்களை அழகாகக் கூறியுள்ளீர்கள். இடையிடையே தெரித்த நகைச்சுவை உணர்வை ரசித்தேன். :)

(குறிப்பாக உங்களைக் கேள்வி கேட்ட பெண்ணிடம்.. "நீங்க பேசற தமிழ் நல்லா இருக்கு"ன்னு சொன்னது )

மேலும் பல விளம்பரப் படங்கள், செலிப்பிரிட்டி விளம்பரங்கள் எல்லாம் எடுக்க வாழ்த்துகள்.

பதிவுத்தளத்தைப் பற்றிய கருத்தும் நன்று.

வாழ்த்துகள்.

Ganesan said...

இப்படியே, பதிவர்கள் எல்லாம் ஜெயா டிவி பக்கம் போனால் மத்த டிவிக்கள் நிலைமை

மணிஜி said...

நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்