Saturday, July 17, 2010

மானிட்டர் பக்கங்கள் 17/07/10


சன் டிவியில் (கலைஞரிலும்) முதல்வரின் கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியிருப்பதாக சொன்னார்கள் . அதாவது ஜீலை 3 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அது. கிட்ட தட்ட 15 நாட்களில் பதில் வந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழ எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது . சந்தோஷம் நடந்தால் . சரி இந்த கடிதம் அடிக்கடி எழுதுகிறாரே . அதன் நடை முறை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை . நம்மைப்போல் தபாலாபீசுக்கு போய் கார்டு , கவர் வாங்கி வந்து எழுதுவாரோ ? ஆனால் ஆ.ராசா துறை மந்திரி எதற்கு இருக்கிறார் ? அண்ணனுக்கு அடுத்த வினை 2 ஜீ அலைவரிசையில் சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாம் . இந்த முறை நிச்சயம் கீரிடம் கிட்ட தட்ட கழலும் நிலையில்தான் இருக்கிறதாம் .(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 17/07/10)

அரசு உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் சொன்ன நடைமுறை . முதல்வரின் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு . அவரால் தமிழில் கையெழுத்திடப்பட்டு , ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் டெல்லிக்கு கொடுத்தனுப்பப்படுமாம் . அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி செம்மொழியை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம். எப்படியிருந்தாலும் சிங் ஒன்றும் செய்யப்போவதில்லை . ஒரு சம்பிரதாய பதிலை தவிர . பின் அந்த மெசஞ்சர் டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் கனையாழியை காட்டி , கடிதத்தை சேர்த்து விட்டு பதிலுக்கு காத்திருப்பார் . சவுத் பிளாக்கில் குரங்குகள் தொல்லை அதிகம் . அதற்கு ஒருவர் சொன்ன காரணம் . ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்ததுதானாம் . பின் அரசு செலவில் (வெட்டி) தலைநகரில் உண்டு , உறங்கி பதிலை பெற்றுக் கொண்டு கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு திரும்புவாராம். அவர் திரும்பி வருவதற்குள் இவர் இன்னொரு கடிதம் தயாராக வைத்திருப்பார் என்பது வேறு விஷயம் .


நானும் , காமராஜிம் ஒன்றுதான் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . இனிமே காமராஜ் ஆட்சின்னு யாரும் பேசாதீங்கப்பா கதர் கிழிசல்களே . இல்லா விட்டாலும் தலைக்கு மேல் சபை தொங்குகிறதே . மூச்...


இந்த வாரம் ஆனந்த விகடன் கொஞ்சம் சூடும் , சுவையுமாக இருந்தது என்று சொல்லலாம் . சாருவின் மனங்கொத்தி பறவை அட்டகாசம் . ஆனந்தவிகடனுக்கு சன் சார்பு அதிகமோ என்று தோன்றுகிறது . துணை முதல்வரின் தேநீர் விருந்து அமர்க்களம் . ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பற்றிய ஸ்கேனிங் . ஆங்காங்கே முதல்வருக்கு சில பச்சை மிளகாய்கள் . செழியனின் மார்க் கதையும் மனதை தொட்டது . எனக்கும் அந்த மாதிரி நண்பர்கள் இருந்தார்கள் . தியாகராஜன் என்றொரு இயக்குனர் நண்பர் . இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை . சினிமா ..மைக்ரோ சாஃப்ட் துணைத் தலைவரின் பர்சையே அடித்த கில்லாடிகள் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் . கும்பலாக கிளம்ப வேண்டியது . அண்டை மாநிலங்களில் ஆட்டையை போட வேண்டியது . திரும்ப இங்கு வந்து ஆட்டம் போட வேண்டியது . இவர்கள் குறவர் என்ற பிரிவு என்றும் ,சேர்வை என்ற பிரிவை சேர்ந்த மக்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுக்கு சிறையில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது . சுய உதவி குழுக்கள் மூலம் மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . 50 க்கும் மேற்ப்பட்டோர் மனம் மாறியிருக்கிறார்களாம் . நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது
பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் பற்றி லக்கிலுக் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனாயசமான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களும் . அப்படியே கொஞ்சம் பால்யமும் , பாலகுமார விமர்சனமும் .....


செம்மொழி மாநாட்டில் முதல்வர் அதிகம் புகழப்பட்டது அவருக்கு இருந்த ஒரே வீட்டையும் தானமாக ஈன்றதற்கு .உண்மைதான் .
இல்லம் தானம்
உடல் தானம்
சுய பெருமிதம்

நாட்டையே நாம்
தானமாய் தந்ததை
கண்டு கொள்வாரில்லை
யாரும்.....

21 comments:

அத்திரி said...

ரைட்டு/............நடக்கட்டும்

தராசு said...

கடைசில கவுஜ கலக்கல்.

Unknown said...

கடிதத்தை நல்ல வேலை புறாவின் காலில் கட்டி அனுப்பாமல் இருக்கிறார்களே..

ராம்ஜி நகர் வாசிகள் பர்சைதான் அடித்தார்கள்.. மந்திரிகள்..?

முன் கதை சுருக்கம் ... நல்ல விமர்சனம்..

ஆனால் அத்தனையிலும் டாப்..
கடைசியில் சொன்னதுதான்...

R.Gopi said...

தலைவா

மானிட்டர் பக்கங்கள் இந்த முறையும் எப்போவும் போல் கலக்கல்...

எல்லா சைட்லயும் கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க....

பெசொவி said...

மானிட்டருக்கு நல்ல சைடு டிஷ் உங்க கவுஜை...........நடக்கட்டும்!

Prathap Kumar S. said...

மணியண்ணே... வழக்கம்போல கலக்கல்..

இந்த ஒரு கவிதைக்கு புலிட்சர் அவார்டே கொடுக்கலாம்... சூப்பர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்..

யுவகிருஷ்ணா said...

’முதல்வரின் கடிதம்’ குறித்து பதிவர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

அலுவலகப்பூர்வமாக அதற்கு பெயர்தான் கடிதமே தவிர அனுப்பப்படும் முறை நிறைய :

1) மின்னஞ்சலில் பிரதமருக்கு அனுப்பப்படும். சிசி ஐக்கிய முற்போக்கு கூட்டணித்தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு செல்லும். முதல்வரின் செயலகம் இந்த வேலையை செய்யும்.

2) தேவைப்படின் கடிதம் டெல்லியில் இருக்கும் தமிழக பிரதிநிதிக்கு ஃபேக்ஸாகவோ, மின்னஞ்சலாகவோ அனுப்பப்பட்டு பிரதமர் அலுவலகத்தில் நேரில் கையளிக்கப்படும்.


தமிழக முதல்வர் மட்டுமல்லாது இந்தியாவின் எந்த மாநில முதல்வராக இருந்தாலும் பிரதமரோடு பேச இந்த ‘கடிதமுறை’யைதான் பயன்படுத்தியாக வேண்டும். இதுதான் மரபு.

தமிழக முதல்வர் அதிகமுறை பயன்படுத்துகிறார் என்றால் அதற்காக தமிழர்கள் பெருமைதான் படவேண்டும் :-)

ரமேஷ் வைத்யா said...

I am proud of TN CM

ரமேஷ் வைத்யா said...

Where is Songiyaar?

vasu balaji said...

இன்னாது, பிக்பாக்கட், திருட்டுன்னு ஒரு மார்க்கமா போவுது:))

மணிஜி said...

லக்கி ..இந்த கடித மேட்டர் நான் விசாரித்து எழுதினேன் .. செகரெட்டரியேட்டில் ஒரு நண்பரிடம்..நீங்கள் சொல்லும் முறையும் இருக்கலாம் ..ஆனால் இந்த மெசஞ்சர் முறையும் இருக்கும் என்று நினைக்கிறேன்.மற்றப்டி ஒரு தமிழரின் துறையை , தமிழ் முதலமைச்சர் மேம்படுத்துவது குறித்து நிச்சயம் பெருமைதான்..தினத்தந்தி செய்திகள் மாதிரி..இவர் ஒரு பலே...

கண்ணகி said...

. நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது

ஆம்மா...பார்த்து நட்ந்துக்கங்க...

சி.பி.செந்தில்குமார் said...

கலைஞரை தாக்கீட்டாரு,உடன்பிறப்புக்கள் எல்லாம் என்ன பண்றீங்க?
சுருக்குனு இருக்கு தல

ரோஸ்விக் said...

இந்த மானிட்டர் பக்கங்களினால் அடிக்கடி கட்டுண்டு போகிறேன் என் அன்பின் படா(வா) அண்ணா மணிஜீ... :-))

butterfly Surya said...

இனி “முதல்வருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.

மணிஜி said...

பின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

Kumky said...

மணிஜீ...... said...

பின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே..

ஹி..ஹி..

கலகலப்ரியா said...

present maniji... =))

தருமி said...

//ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் //

அந்த போஸ்ட் மேன் வேலை கிடைச்சா எம்புட்டு நல்லாருக்கும்.

:(

Unknown said...

அண்ணாத்தே, டெம்ப்ளேட்லாம் மாத்துறீங்க... கலக்குங்க.

லெட்டர் சமாச்சாரம்னதும் ஒரு சீன் ஞாபகம் வருது. ஒரு படத்துல அசோகன் சரியான ஞாபக மறதி ஆசாமி. கோட்டோட வலது பக்கப் பாக்கெட்ல மளிகை கடை லிஸ்ட்டும், இடது பக்கம் சுருளிராஜனோட லவ் லெட்டரும் இருக்கும். மளிகை கடைக்காரனிடம் லவ்லெட்டரைக் கொடுத்து அம்மா குடுத்துவிட்டாங்கன்னு சொல்லிட்டுப் போயிடுவார். அந்த மாதிரி தலைவர் லெட்டர வச்சு ஒரு காமெடி பதிவு போடுங்களென்.