Friday, July 9, 2010

கால் எத்தும் கழுதை


தலைப்பை கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது . தலைப்பை மாற்றலாமா என்று ஆசிரியரை கேட்டதறகு , ஸ்டிராங்காக மறுத்தார் . சரி என்று நித்தியானந்தாவை மனசுக்குள் வேண்டிக்கொண்டு தொடரலாம். சரி அந்த ஆளிடம் என்ன வேண்டிக் கொண்டிருப்பேன் என்ற சரியாக யூகிப்பவர்களை தாந்தேவின் சிறுத்தையை விட்டு கடிக்கலாம் என்று உத்தேசம் . ஜெய்ஹிந்த்...


என்னைப்போன்ற ஒரு எழுத்தாளனுக்கு இந்த சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது . சற்றே ஆயாசமாகவும் இருக்கிறது . மொசாம்பிக்கில் ... மொசாம்பிக் தெரியுமா உங்களுக்கு ? நிச்சயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . அங்கு எழுத்தாளனின் பேனாவில் இங்க்..அதாவது மை தீர்ந்து விட்டால் போட்டி போடுவார்கள் நிரப்ப . இங்கு நிலைமை தலைகீழ் . பேனாவை புடுங்கி கிடாச ஒரு கூட்டமே அலைகிறது . கேவலம் ஒரு பேருந்தில் கைவரிசையை காட்ட கூட முடியவில்லை . விவரமாக சொல்கிறேன் .


பக்கிரியை உங்களுக்கு தெரியுமா ? மூலக்கொத்தளம் சுடுகாட்டில்தான் அவ(ரை)னை முதலில் சந்தித்தேன் . ஒரு எடுபட்ட அல்லது எடுபடாத எழுத்தாளனின் சாவுக்கு அஞ்சலி செலுத்த போயிருந்தேன் . ரொம்ப நாள் முன்னாடியே போக வேண்டியவன் அவன் . நாலைந்து முறை தற்கொலைக்கு முயற்சித்து நடக்கவில்லை . நல்லவேளை இந்த முறை நிறைவேறியது . எப்படி செத்து போனான் என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் . கொஞ்ச நாளாக நெஞ்சுவலி இருந்திருக்கிறது . சம்பவ தினத்தன்று (இந்த சம்பவம் , சம்பவம்ங்கிறாங்களே . இன்னா சார் அது கேக்காதீங்க..)யாரோ போனில் அழைத்திருக்கிறார்கள். நம்பர் ஏதோ புதுசாக இருந்திருக்கிறது . லைன் கட்டாகிவிட்டது . மீண்டும் அழைப்பு . மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது என்று சொன்னாராம். என்னதான் சூடு,சொரனை இல்லாமல் வாழ்க்கை போயிருந்தாலும் , மனசாட்சி என்று உண்டு இல்லியா? அப்போது பார்த்து காலாவதி மருந்துகளை எவனோ மொள்ளமாறி மெடிக்கல் ஷாப் காரன் கொட்டி வைத்திருந்தானாம் . அதை பாக்கெட் சாராயத்தில் கலந்து குடித்திருக்கிறான் எடுபட்டவன் . அப்பிட் .


சரி அவன் கதை எதுக்கு ? பக்கிரிக்கு வரலாம் . சர்வோதய சங்கத்தலைவர் இறுதி அஞ்சலிக்கு வர்றாராம் . அதுக்கு வெயிட்டிங் என்றான் பக்கிரி . எனக்கு அதிர்ச்சி . எழுத்தாளர் சங்கத்தலைவர் வந்தாலும் ஒரு அர்த்தம் இருக்கு. அவருக்கும் , இவனுக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேட்டால் , பக்கிரி ஒரு பிச்சுவா சிரிப்பு சிரிச்சான் . அது ஒரு காமெடி தலைவரே . அந்தாளுக்கு நம்மாளு எதோ கதை எழுதி தாரேன்னு துட்டு வாங்கியிருக்கான் . அதை சர்வோதயம் அவர் பேர்ல போட்டுப்பாராம் . மேலிடத்துல சொல்லி அவார்டு வாங்கிப்பாராம் . இப்ப கூட கோயம்புத்தூர்ல சுடர்விழி கூட்டம் நடந்துச்சாமே . அதுல கூட அவருக்கு பரிசு கொடுக்கறேன்னு சொல்லியிருந்தாங்களாம் . இதை சொல்லிட்டு பக்கிரி என்னை ஒரு மாதிரி பார்த்தான் . பக்கிரி அது செம்மொழி மாநாடுப்பா .சரி மேட்டருக்கு வா என்றேன் . நம்மாளுங்க அங்க போயிருந்தாங்க சாரே . செம்ம கலெக்‌ஷனாம் நான் தான் போக முடியலை . பெட்டி கேசுக்கு ஆளு வோணும்னு புளியந்தோப்பு ஸ்டேஷன்ல இட்டுகினு போயிட்டாங்க. சும்மா சொல்ல கூடாது அஞ்சாயிரம் ரூபா கொடுத்தாங்க அதுக்கு . பக்கிரி என்று முறைத்தேன் . இருந்தாலும் எனக்கும் மனசு அடிச்சுக்குது . பெட்டி கேசுக்கு அஞ்சாயிரமா ? நாமளும் போலாமான்னு தோணிச்சு . காட்டிக்கொள்ளாமல் பக்கிரி விஷயத்துக்கு வா என்றேன்


அதான் சாரே காசு வாங்கினப்புறம் இவன் அவரை பார்க்கவேயில்லை . எழுதியும் கொடுக்கலை . அதான் இப்பவாச்சும் பார்க்கலாமேன்னு வர்றாராம் . எனக்கு புரியலை பக்கிரி . இப்ப பார்த்து என்ன ஆகப்போவுது ? எந்திரிச்சு எழுதி கொடுத்துடுவானான்னு பெரிசா சிரிச்சேன் . அதுக்கு பக்கிரி சொன்னான் . அதில்லை சாரே .இன்னிக்கு வுட்டா இந்தாளை மறுபடியும் பார்க்க முடியாதில்ல . அதான் வந்து காறி துப்ப போறாராம் . எப்படி இருக்கு பார்த்தீங்களா எழுத்தாளன் நிலைமை ?


பக்கிரி ரூபா எவ்வளவு இருக்கு ? சரக்கடிக்கலாமான்னேன் .ஒரு நாலைந்து பர்ஸ்களை கொட்டி கவிழ்த்தான் பக்கிரி . 200 ரூபா தேறும் சாரேன்னான் .கொஞ்சம் மப்பு ஏறினவுடன் எனக்கு அந்த ஆசை வந்தது .பக்கிரி எனக்கு தெரியாத விஷயமே இல்லை . ஆனா ரொம்ப நாளா பிக்பாக்கெட் அடிக்கனும்னு ஆசை என்றேன் .அவ்வளவுதானே வாத்தியாரே . கத்துகொடுக்கிறேன்னு சொன்னான் பக்கிரி . எடுபட்ட எழுத்தாளனின் தகனம் முடிந்தது . இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேணும் . சாவும்போது கூட அவன் வலது கையை பேனா பிடிப்பது போலவே வைத்திருந்தான் அந்த எழுத்தாளன் .இட்ஸ் ப்யூர் டெடிகேஷன் என்றேன் பக்கிரியிடம் . ஆமா சாரே . பிக்பாக்கெட்டுக்கும் அது வோணும்னான் பக்கிரி .


குருகுலவாசம் தொடங்கியது . முதல்ல மேல் பை வாங்க சொல்லித்தரேன் .மேல்பைனா சட்டை மேல் பாக்கெட்டாம் . தரை வாங்கறதுன்னா பின் பாக்கெட் . துண்டு பிளேடை எப்படி நேக்கா விரலிடுக்கில் கையாள்வது என்ற சூத்திரத்தை துரோணாச்சார்யார் ரேஞ்சுக்கு போதித்தான் பக்கிரி . சாரே நாளைக்கு வெள்ளோட்டம் என்றான் . எனக்கு கொஞ்சம் உதறலாக இருந்தது . பக்கிரி எழுதி கொள்ளையடிக்கறது ரொம்ப ஈசி . நான் சொன்னாப்போதும். அவங்களே வந்து பாக்கெட்டை காட்டி கிட்டு நிப்பாங்க. பிரச்சனையில்லை. ஆனா இதுல மாட்டிகிட்டா என்றேன் .


அடப்போ சாரே ! நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவே என்றானே பார்க்கலாம்.


(தொடரும்(லாமா)


22 comments:

Vidhoosh said...

அப்போ நாளைக்கு அடையார் கூட்டத்துல கன்னி முயற்சி நடக்கும்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தொடரலாம்.

Raju said...

தொடரலாமாவா..?

புக்காவே போடலாம்! ஷோக்காக்கீதுபா.

இரும்புத்திரை said...

ஆயாசமா இருக்குதா..அப்ப பாலிடால் இல்ல பாயாசம் சாப்பிடுங்க சரியாயிரும்

ஜானகிராமன் said...

போட்டுத் தாக்குத் தலைவா... அதான் பக்கிரியே சொல்லிடாருல்ல, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்கன்னு

மரா said...

தொடரலாமா ???....இல்ல தலாய் லாமா .....'Kundan'ன்னு ஒரு படம்.செம சோக்கா இருக்கு. பாருங்க எல்லாம் கடந்து போகும். ஒரே குஜால்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

லாம் :)))

மணிஜி said...

ஹலோ ! நீங்கல்லாம் அவலை நினைச்சு உரலை இடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். இது அவர் இல்லை. அவர் வேற...இது வேற..

vasu balaji said...

அடுத்த பார்ட் எப்ப? :))

நேசமித்ரன் said...

அத்தாச்சி மாதிரி கதை சொல்றீரு
இது அதுவல்லன்னும் சொல்றீரு
அப்போ இது எதுன்னும் சொல்லுங்க

ஆனா உங்க கதைகள்ல இது ரொம்ப நல்லா வரும்னு மட்டும் தெளிவா தெரியுது

லாம் லாம்
லால் சலாம் அப்துல் கலாம்

:)

ILA (a) இளா said...

லாம்

செ.சரவணக்குமார் said...

என்னாது தொடரலாமாவா???

அடிச்சு தூள் கெளப்புங்க தலைவரே.

VISA said...

இதென்ன கேள்வி தொடருங்க சார்...நல்ல வந்திருக்கு...

தருமி said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்குங்க.

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

what is this??

Romeoboy said...

தொடரும்(லாமா) இது என்ன ஒரு கேள்வி. அடிச்சி இல்ல இல்ல பிக்பாக்கெட்அடிச்சி விளையாடுங்க தலைவரே .

பாலா said...

திஸ் ஈஸ் பிச்சி உதறிஃபையிங்.

Mahi_Granny said...

good, go ahead

ஈஸ்வரி said...

nice concept, we like it..

Unknown said...

மொசாம்பிக்ல எழுத்தாளர்களை கலாச்சாரத் தூதரா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பாங்களா?

R.Gopi said...

//மணிஜீ...... said...
ஹலோ ! நீங்கல்லாம் அவலை நினைச்சு உரலை இடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். இது அவர் இல்லை. அவர் வேற...இது வேற..//

கரெக்ட் தலைவா...

இது நெஜமாவே ”அவர்” இல்ல... புரியற மாதிரி சொன்னதுக்கு நன்றிபா..

Sabarinathan Arthanari said...

//மணிஜீ...... said...
ஹலோ ! நீங்கல்லாம் அவலை நினைச்சு உரலை இடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். இது அவர் இல்லை. அவர் வேற...இது வேற.//
புரிஞ்சிடுச்சி