Friday, February 19, 2010

இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்


ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுற ஒரு ஆளு சவாரி முடிச்சு சப்பாத்தி சாப்பிடறச்சே யோசிக்கிறான். என்ன பொழைப்புடா இது...நாமளூம் எப்ப முதலாளி ஆகறதுன்னு ! ஒரு முடிவுக்கு வந்து வந்த விலைக்கு ரிக்‌ஷா மற்றும் தட்டு முட்டு சாமானையெல்லாம் வித்துட்டு கோதுமை கலர்ல முக்காடு போட்டுகிட்டு இருக்கிற பொஞ்சாதியையும் கூட்டி கிட்டு சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கி நேரா செளகார்பேட்டைக்கு போறான்.

அங்க அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு.அவிங்க சொன்னதை கேட்டு சென்னை புறநகர் பகுதில ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சு வீட்டு வாசல்ல”மாணிக்சந்த் கட்டாரியா”பான்புரோக்கர் னு ஒரு போர்டு மாட்டறான். தங்கத்துக்கு 3 வட்டி,வெள்ளி,பித்தளைக்கு 10 காசு வட்டி.சைடுல 1 கிராம் கவரிங் நகை. சிறு சேமிப்பு நகை சீட்டுனு விரிவு படுத்தறான்.சுற்று வட்டார ஜனங்களின் காது ,கழுத்து,மூக்கு எல்லாம் இந்தி படிக்க ஆரம்பிக்குது.அப்படியே சின்னதா ஒரு நகைகடையும் ஆரம்பிக்கிறான்..வாசல் மட்டும் சின்னதா இருக்கும்.உள்ளே பக்காவா டைல்ஸ் வச்சு வீடு பிரமாண்டமா இருக்கும். ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வாங்கிடறான் . அப்புறம் என்ன ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுன ஆசாமி இப்ப “சேட்டு”ஆயிட்டான். அவன் கொடுக்குற அடகு சீட்டுக்கு பத்து ரூபா ஸ்ஸ்டேசனரி” பீஸ் வேற.

நானும் என் அவசிய மற்றும் அனாவசிய தேவைகளுக்கு படியேறியதுண்டு. அதுல பாதி வட்டி கட்டாம் மூழ்கியும் போனதுண்டு. ஆனா இப்பல்லாம் நான் என் தங்கங்களை இந்தி படிக்க அனுப்பறதில்ல. வங்கில வச்சு வணிகவியல் கத்து கொடுக்கிறேன்.


என்ன மச்சான்..கன்னமெல்லாம் டொக்கு விழுந்தாப்ல இருக்கு..இப்படி இருந்தா அட்டு பிகர் கூட மடியாது.

அதுக்கு என்னடா பண்றது?

டெய்லி ஒரு 5000 போட்டு தாக்கு.சும்மா தக தகன்னு ஆயிடுவே..

சரி இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்..

மச்சான் கவிதா ஒர்க் அவுட் ஆயிட்டா.

அப்ப பார்ட்டி?

வெறும் பீர் கிக்கே இல்ல மச்சான்.ஒரு குவார்ட்டர் வாங்கி மிக்ஸ் பண்ணலாம்.

என்ன மச்சான்..வேலைக்கு போகல?

இல்லடா..நேத்து ரவி கல்யாணத்துல மப்பு ஜாஸ்தியாயிடுச்சு. தலைவலி.
முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். வா ஒரு கட்டிங் போடுவோம்..

இப்படியாகவும் இளைய தலைமுறையினரிடம் ஆரம்பிக்கும் மது பழக்கம்.மெல்ல மெல்ல அக்டோபஸ் போல் தன் பிடியை இறுக்க தொடங்குகிறது. அந்தி சாய்ந்து இருள ஆரம்பித்தால் போதும்! மண்டைக்குள் மரங்கொத்தி போல் ஆல்கஹால் அரிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.பணத்துக்காக,குடிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு குடிகாரன் தள்ளப்படுகிறான்.சமீபகாலமாய் அதிகரித்து வரும் வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் பிடிபடும் நபர்களின் வயது 18/20 ஆகவே இருக்கிறது.உணர்வு ரீதியான பாலியல் பிரச்சனைகளுக்கும்,விவாக ரத்து மற்றும் கள்ள தொடர்பு,கொலை போன்றவைகளூக்கும் மதுவே அடிப்படையாகிறது.டாஸ்மாக் கடைகளில் கூடும் இளைய தலைமுறை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. தொழிலையும்,குடியையும் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடியாது என்பது இன்னும் கவலையை கூட்டுகிறது.நிச்சயம் அவர்களில் கணிசமானோர் எதிர்கால குற்றவாளிகளே

குடி கவுஜை :

ஏன் இப்படி குடிக்கிற?
என் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு போயிட்டா.
ஏன் போயிட்டா?
நா குடிக்கிறது அவளுக்கு பிடிக்கல !

35 comments:

Vidhoosh said...

MANIJI, NEENGAL MATHU ARUNTHUVATHILLAIYAA? VITTUTEENGALAA IPPO??

சங்கர் said...

எனக்கு ஒரு விஷயம் பிடித்துப் போய்விட்டால், அதிலிருந்து வெளிய வருவது மிகக் கடினம், இந்த பயம் தான் இதுவரை என்னை மதுவின் பக்கம் போக விடாமல் தடுத்துப் பிடித்துள்ளது

vasu balaji said...

தலைவரே. முதல் விஷயம் இன்னும் ஆழமானது. பான் ப்ரோக்கர் கடைனே இல்லை. பான் விக்கிற கடைன்னாலும் இடம் பார்த்து இந்த இடத்துலன்னு சொல்லிட்டா போதும். லோகல்ல எல்லாம் பேசி முடிச்சி தாம்பாளத்துல இருந்து சரக்கு வரைக்கும் எல்லாம் வாங்கிக் குடுப்பானுங்க. அது ஒரு பெரிய ஸிஸ்டம் தலைவரே. நீங்க சொல்லாட்டியும் ரெண்டாவது விஷயத்துக்கும் முதலுக்கும் ஒரு சம்பந்தமுண்டு.

வடக்கூரான் பசங்க சமசோ, பான்பூரியாவது விக்கிற வயசில நம்ம ரத்தினங்க அம்மா மூக்குத்திய ஆட்டய போட்டு பீர் அடிக்கிற கொடுமை.

அன்புடன் நான் said...

டாஸ்மாக் கடைகளில் கூடும் இளைய தலைமுறை கவலை அளிப்பதாகவே இருக்கிறது//

டாஸ்மார்க் பக்கம் கூட்டம் குறைந்தால்... அரசுக்கு கவலை..... எவன் குடி அழிஞ்சா என்னன்னு அரசு அதன் கருவூலத்ததான் பாக்கிறது...... கடைசி நகைச்சுவை நல்லாயிருந்தது..... பகிர்வுக்கு நன்றி.

மணிஜி said...

/Vidhoosh said...
MANIJI, NEENGAL MATHU ARUNTHUVATHILLAIYAA? VITTUTEENGALAA IPPO??//

நான் சொல்ல வந்தது இன்றைய அரும்பு மீசை பருவத்தினரை பற்றி வித்யா ! அப்புறம் உங்க கேள்விக்கு பதில் ”எஸ்”
என் தொழிலையும், வாழ்க்கையையும் பாதிக்காத வகையில்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னவோ போங்க..தெரிஞ்சா சரி..

எறும்பு said...

///Vidhoosh said...
MANIJI, NEENGAL MATHU ARUNTHUVATHILLAIYAA? VITTUTEENGALAA IPPO??//

நான் சொல்ல வந்தது இன்றைய அரும்பு மீசை பருவத்தினரை பற்றி வித்யா ! அப்புறம் உங்க கேள்விக்கு பதில் ”எஸ்”//

அண்ணே விட்டதுக்கு ஒரு பார்ட்டி வச்சுக்கலாமா?
:)

தமிழ் அமுதன் said...

என்ன சொல்லுறது தலைவரே ஒன்னும் புரியல...


//செயின் பறிப்பு குற்றங்களில் பிடிபடும் நபர்களின் வயது 18/20 ஆகவே இருக்கிறது.//

இத படிச்சதும் எனக்கு தெரிஞ்ச விஷயத்தை ஒரு பதிவா போடலாம்னு தோணிச்சு
போடுறேன் பாருங்க...!

butterfly Surya said...

அப்புறம் வரேன் ஜி.

Thennavan said...

//இப்பல்லாம் நான் என் தங்கங்களை இந்தி படிக்க அனுப்பறதில்ல. வங்கில வச்சு வணிகவியல் கத்து கொடுக்கிறேன்.//

Ashok D said...

எதுவும் லிமிட்டா இருந்தா தப்பில்லே... அப்புறம் //வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில்// இதற்கு குடி மட்டுமே காரணமாக இருக்கமுடியாது.

நல்ல பதிவு

அகல்விளக்கு said...

அவசியமான பதிவு அண்ணா....

மங்குனி அமைச்சர் said...

என் பிரண்டுக்கு ட்ரீட்மென்ட் எடுத்த ஒரு மனநல மருத்துவர் சொன்னார் "குடி பழக்கம் உள்ள ஆண்கள் கஷ்டம் வந்தா போதைக்கு அடிமையகிவிடுவார்கள் பெண்கள் அதீத தெய்வ பக்தி அதிகமாகி மனநலம் பாதிக்குமாம் " ரெண்டுபேருக்குமே கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுக்கனுமாம்.

அகநாழிகை said...

// Vidhoosh said...
MANIJI, NEENGAL MATHU ARUNTHUVATHILLAIYAA? VITTUTEENGALAA IPPO??//


விதூஷ், மணிஜியை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

மணிஜி எவ்வளவோ அடிச்சாலும் தாங்குவார். ரொம்ம்பப நல்லவவ்வ்வ்வர்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வடக்கும்(சென்னை) வாழ்கிறது தெற்கும்(மதுரை) வாழ்கிறது இடையில் இருப்பவன் இருந்தால் என்ன செத்தால் என்ன.

அகநாழிகை said...

//சங்கர் said...
எனக்கு ஒரு விஷயம் பிடித்துப் போய்விட்டால், அதிலிருந்து வெளிய வருவது மிகக் கடினம், இந்த பயம் தான் இதுவரை என்னை மதுவின் பக்கம் போக விடாமல் தடுத்துப் பிடித்துள்ளது//


இந்த மாதிரி கெட்ட பசங்க சகவாசங்களையெல்லாம் கிட்ட சேர்க்காதீங்க.

சங்கர், நீங்க சொல்றததான் மணிஜியும் சொல்றார்.

அகநாழிகை said...

எறும்பு said...
///Vidhoosh said...
MANIJI, NEENGAL MATHU ARUNTHUVATHILLAIYAA? VITTUTEENGALAA IPPO??//

நான் சொல்ல வந்தது இன்றைய அரும்பு மீசை பருவத்தினரை பற்றி வித்யா ! அப்புறம் உங்க கேள்விக்கு பதில் ”எஸ்”//

அண்ணே விட்டதுக்கு ஒரு பார்ட்டி வச்சுக்கலாமா?
:)//

வெச்சுக்கலாமா..?

:)))

அகநாழிகை said...

// butterfly Surya said...
அப்புறம் வரேன் ஜி//

அவனா நீய்ய்யி...


அடுத்த பின்னூட்டம்...
//பட்டர்பிளை சூர்யா...
மணிஜி எனக்கு வயிறு வலிக்குது அப்புறம் வர்றேன்//

ஏன் சூர்யா இப்படி...

எனக்கு பீர் மட்டும்தான் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுங்க.

அகநாழிகை said...

//D.R.Ashok said...
எதுவும் லிமிட்டா இருந்தா தப்பில்லே... அப்புறம் //வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில்// இதற்கு குடி மட்டுமே காரணமாக இருக்கமுடியாது.

நல்ல பதிவு//

அடடாடா,... சாத்தான் என்னமா வேதம் ஓதுது..
திருத்தொண்டர் புராணம் அருமை.

அகநாழிகை said...

//மங்குனி அமைச்சர் said...
என் பிரண்டுக்கு ட்ரீட்மென்ட் எடுத்த ஒரு மனநல மருத்துவர் சொன்னார் "குடி பழக்கம் உள்ள ஆண்கள் கஷ்டம் வந்தா போதைக்கு அடிமையகிவிடுவார்கள் பெண்கள் அதீத தெய்வ பக்தி அதிகமாகி மனநலம் பாதிக்குமாம் " ரெண்டுபேருக்குமே கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுக்கனுமாம்.//

ரொம்ப நல்லவர் சார் நீங்க. பெரிய மனசு உங்களுக்கு.

அகநாழிகை said...

மணிஜி பதிவு அருமை.
பகிர்தலுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

(இதுதான் என் பின்னூட்டம். போலிகளை நம்பாதீர்கள்)

VISA said...

KAVIDHAI EXTENDED.

//ஏன் இப்படி குடிக்கிற?
என் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு போயிட்டா.
ஏன் போயிட்டா?
நா குடிக்கிறது அவளுக்கு பிடிக்கல !//


ஏன் புடிக்கல.
ஏன்னா அவ குடிக்க வாங்கி வச்சிருந்த சரக்க நான் குடிச்சிட்டேன்.
:)

Paleo God said...

butterfly Surya said...
அப்புறம் வரேன் ஜி.

"":)

டக்கால்டி said...

அண்ணே இறுதி கவுஜ நச்..

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை தலைவரே.

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

நிசமாவே நீங்க திருந்திட்டீங்களா..?

சந்தேகமா இருக்கு..!!!

மரா said...

அண்ணே வர வர நீங்க சரி இல்ல.இனி உங்களோட ‘Magic Moments' கிடையாதா?இருங்க உலக்ஸ்கிட்ட பிராது குடுக்கிறேன்..

thiyaa said...

அருமையான பதிவு

Kumky said...

என்ன வண்டி மெல்ல நம்ம ரோட்ட பாக்க திரும்புது.......

அந்த ரெண்டு வயத்தெரிச்சலையும் ஏன் கேட்கறீங்க...ஏராளமா இருக்கு.
எவனும் திருந்துன பாட்ட காணோம்.

Cable சங்கர் said...

சரக்கு அடிச்சிட்டு எழுதின பதிவோ..:)

Unknown said...

பதிவு நல்லா இருக்கு. இனிமே அந்த சேட்டுக் கடையில செயின வச்சிட்டு டாஸ்மாக்ல போயி குடிக்காதீங்க.. எல்லாம் சின்ன பசங்களா குடிச்சிட்டுத் திரியுதுங்க..

புலவன் புலிகேசி said...

தல டாஸ்மாக்ல உட்கார்ந்து யோசிச்சீங்களோ???

சேட்டு வரலாறு சூப்பர்..

துளசி கோபால் said...

குடியை விட்டொழிச்சா குடும்பமே நல்லா ஆயிரும்.

ஆனா ஒரு ரூபாய் அரிசி போட்டு ஏழைகளின் கண்ணீரை யார் தொடைப்பா?

மணிஜி said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் அன்பும் நன்றியும் நண்பர்களே!

Jerry Eshananda said...

மணிஜி,இதையெல்லாம் நான்...ஒத்துக்க மாட்டேன்,இது கள்ள ஆட்டை,....இந்த பதிவ, டெலிட் பண்ணிட்டு வாங்க,நம்ம மொத இருந்து வெளையாடுவோம்..