Tuesday, February 2, 2010

சைகாலஜி


சூர்யா அம்மா இப்பல்லாம் என் கிட்ட முகம் கொடுத்து பேசறதேயில்லை.

ஏன் ? நீ எதாவது சண்டை போட்டியா?

இல்லைங்க. திடீர்னு மூஞ்சி காட்டறாங்க. போடி சரிதான்னு விட்டுட்டேன். நன்றி கெட்டவங்க. எவ்வளவு செஞ்சிருக்கேன்!!

எதாவது காரணம் இருக்கும். நாமெல்லாம் சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரிதான் ரியாக்ட் பண்றோம். எத்தனை நாளா இந்த பிரச்சனை?

கரெக்டா சொல்லனும்னா, நம்ம வீட்டுக்கு வாஷிங்மெஷின் என்னிக்கு வந்துச்சு? அன்னிலேர்ந்துதான்.

அப்படியே இன்னொரு மேட்டர்.

என்ன?

உங்க அண்ணன் பொண்டாட்டி வந்தாங்க. ரொம்பத்தான் திமிரு ஏறிப் போச்சு. எல்லாம் உங்களாலத்தான். நீங்க என்னை விட்டு கொடுக்காம பேசினா இப்படியெல்லாம் நடக்குமா?

என்ன சொன்னாங்க அண்ணி? அதை மட்டும் சொல்லு!

புதுசா வைரத்தோடு வாங்கினாங்களாம். அதை காட்டி என்னை வெறுப்பேத்திட்டு போகத்தான் வந்தாங்க. ஆனால் கேட்டா உன் கிட்ட காட்டி எப்படியிருக்குன்னு கேக்கத்தான் வந்தேன்னு புளுகு!


சாலையில் பெருங்கூட்டம்!
வகுந்து முன்னேறினேன்.
பைக்கிலிருந்து கீழே
விழுந்து கிடந்தான் அவன்.
யாரோ தண்ணீர்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை”
பெரிசா ஒன்னும் இல்லை!
வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!

21 comments:

சங்கர் said...

தல, போன வார மானிட்டரிலேயும் இதே கவித தானே போட்டீங்க

Vidhoosh said...

///சாலையில் பெருங்கூட்டம்!
வகுந்து முன்னேறினேன்.
பைக்கிலிருந்து கீழே
விழுந்து கிடந்தான் அவன்.
யாரோ தண்ணீர்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை”
பெரிசா ஒன்னும் இல்லை!
வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!///

இதே மாதிரி எங்கயோ படிச்சிருக்கேன். ????

Vidhoosh said...

சைகாலஜி அரத பழசு கிளிஷே.

sathishsangkavi.blogspot.com said...

எல்லா வீட்டிலியும் இதே பிரச்சனை தான் தல....

vasu balaji said...

:). ஆமாம். நானும் படிச்சிருக்கேன்:)

மரா said...

//வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!//
என்னா வில்லத்தனம்..

மணிஜி said...

/Vidhoosh said...
///சாலையில் பெருங்கூட்டம்!
வகுந்து முன்னேறினேன்.
பைக்கிலிருந்து கீழே
விழுந்து கிடந்தான் அவன்.
யாரோ தண்ணீர்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை”
பெரிசா ஒன்னும் இல்லை!
வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!///

இதே மாதிரி எங்கயோ படிச்சிருக்கேன். ????//

சொந்தமா எழுதினதுதான்!! அங்கன விழுந்து கிடந்தவன் மேல்!!(இது யாருக்கும் தோணலாம்)

மணிஜி said...

ஒரு பட்டிமன்றதில் )லியோனி என்று நினைக்கிறேன்) நகைச்சுவை துணுக்காய் கேட்ட நியாபகம். சைகாலஜி என்று தலைப்புக்கு பொருந்தவே, அதை கொஞ்சம் மாற்றீனேன்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

butterfly Surya said...

நல்ல சைகாலஜி... Simple.

R.Gopi said...

தலைவா

இந்த “சைகாலஜி” ல உங்க “பயாலஜி”யும் “கெமிஸ்ட்ரி”யும் நல்லா கீது........

கண்ணகி said...

உங்க சைக்காலஜியை உங்க வீட்டுக்காரம்மாகிட்ட தெரிஞசுக்கிறோம்.

செ.சரவணக்குமார் said...

நல்ல சைகாலஜி தலைவரே.

Paleo God said...

தலைவரே இது 'ஜிலாகாசை' மாதிரி இருக்கே ??

ஆனா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்..:))

வைரதோடு பர்ச்சேஸ தனி பதிவா போடுங்க..:)

Romeoboy said...

\\வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!//

என்ன ஒரு கொலைவெறி !!!!!

Radhakrishnan said...

இந்த சைகாலஜி புரியவே இல்லை. ;)

பா.ராஜாராம் said...

இது புதுசா இருக்கே தல..

ஒரு "வீட்டு மேட்டர்".அதை கவிதையோடு இணைப்பது.

நல்லாருக்கு மணிஜி.

கலகலப்ரியா said...

superb maniji.. =))

மணிஜி said...

/சங்கர் said...
தல, போன வார மானிட்டரிலேயும் இதே கவித தானே போட்டீங்க//

சாரி சங்கர். காலையில் தவறாய் மறுத்து விட்டேன். அதையேத்தான் போட்டிருக்கிறேன். திருத்தியதற்கு நன்றி.அதனால்தான் எல்லோரும் எங்கயோ படித்தேன்னு சொல்லியிருக்கிறார்கள்..(ஞாபகமறதி ஜாஸ்தியாயிடுச்சு..சரக்கு அடிக்கிறதை...இல்லை..இல்லை ..பிராண்டை மாத்தணும்!!)

Kumky said...

:--))

ஆக சரக்க விடமாட்டீங்க...
ஆனா சரக்கு விடுவீங்க.....

மணிஜி said...

பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள்!!