Wednesday, November 3, 2010

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10


ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது என்றால் ஏதோ நடந்தது என்று அர்த்தமா?


காமல்வெல்த் கல்மாடியை இனி , கம்மணாட்டி என்று அழைக்கலாமா ?# டவுட்டு (இப்ப இதான் லேட்டஸ்ட் !!)


ஞாயிறு அன்று தா.பாண்டியனின் ஜெயா டிவி பேட்டியில் அரசை பற்றிய சொன்ன குற்றசாட்டுகள்...நேற்று சன்நியூஸின் தமிழகம் செய்தி தொகுப்பில்..விரிவாக அலசினார்கள் . இன்னும் சொல்லப்போனால் ஜெயாவை விட கடுமையாக . எந்திரர்களுக்கு மக்கள் மேல் அக்கறை வர சான்ஸே இல்லை . என்ன நடக்கிறது ? வரும் முன் காப்போம் திட்டமா?


சமீபத்திய குழந்தை கடத்தல் , கொலை , பாலியல் குற்றங்களுக்கு அஞ்சாதே , நான் மகான் அல்ல போன்ற படங்கள்தான் முக்கிய காரணம் என்கிறார் நண்பர் . உண்மைதானோ என்றும் தோன்றுகிறது...

மைனா திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் .... அடுத்த தீபாவளிக்கு “மைனா” ரிட்டி அரசு இருக்குமா ? # டவுட்டு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி சீசன் ... ஓணான் அடிக்கும் (எத்தனை நாளைக்குத்தான் ஆணி ?) வேலை அதிகம் . பதிவு எழுதவே முடிவதில்லை . (மேட்டரும் சிக்க வில்லை என்பது ஓணானுக்குத்தான் தெரியும் ) அவ்வப்போது பஸ்சில் வித்தவுட்டில் (அட..டிக்கெட் வாங்காமல் போறதை சொன்னேன் . பப்பி ஷேம் இல்லை ) பயணித்து விட்டு இறங்கி ஓடி விடுகிறேன் . ஒன்றும் “குடி” மூழ்கி விடாது என்பது வேறு விஷயம் . அதனால் கொஞ்சம் பஸ்சியதும் , ட்விட்டியதும் கலந்து கொஞ்சம் ரீமிக்ஸ் .


தாளிக்கும் ஓசை..பொறிக்கும் ஓசை..உன் குரல்தான் எத்தனை இனிமை ....முடிப்பதற்குள் அப்படியா என்றாள் ? சாப்பிடும்போது மங்கேஷ்கர் நினைவில் வந்ததை தவிர்க்க இயலவில்லை

மானிடராய் பிறத்தல் அரிது . கூன் , குருடு , செவிடின்றி பிறத்தல் அரிதிலும் அரிது என்கிறாள் ஒளவையார் . ஊமையாய் , குருடாய் , செவிடாய் இருப்பது எப்பேற்ப்பட்ட பாக்கியம் என்கிறான் பாரதி


கவிதை எழுதலாம்னு தேடினால் , கழுதை... கிடைக்கவேயில்லை ஒரு காகிதம் கூட

ஒரு காகத்துடன் வாக்கிங் போன அனுபவம் பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்..அநேகமாக அடுத்த அம்மாவாசைக்குள் வெளி வரலாம்..(கையடி என்ற ஊரில் முகாம்)

104 பேர்களிடம் வில் இருந்தது......ஒருவனிடம் மட்டுமே இருந்தது....காண்டீபம்


கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


சூட்சுமம் சுண்டுவதில் இருக்கிறது...காற்றை வசப்படுத்தும் கயிறும்.


திடீரென்று கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்திருந்தது அந்த குட்டி , இத்துணுண்டு ஜீவன் . ஊர்வதாக தெரியவில்லை. கால் பாவாமல் , காற்றில் மிதப்பது போல் இருந்தது . கடிக்கவில்லை..லேசாக கிச்சு ,கிச்சு மூட்டியது. மனைவிதான் சொன்னாள் .பிள்ளையார் சதுர்த்தி வருதுல்ல ..அதான் என்றாள் .இருந்தாலும் சர்வ சுதந்திரத்துடன் எல்லா இடங்களிலும் அது வியாபிக்க தொடங்கியது . மனைவி யோசித்து விட்டு சொன்னாள் . ரெட்டை பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு , உண்டியல்ல காசு போட்டுட்டு வாங்க..அதுவா போயிரும் . செய்தும் பலனில்லை. உடைத்த தேங்காய் துண்டு ஒன்றை பூஜையறையில் வைத்தோம் . பூசாரி சொன்னது . வீட்ல நாலு கேலண்டர் இருக்கு . பிள்ளையார் சதுர்த்தின்னு கொட்டை எழுத்துல இருக்கு . அப்புறம் ஏன் இது கூட்டமா வந்து நினைவூட்டுதுன்னு எனக்கு டவுட்டு . ஹிட் அடிக்கலாமான்னு கேட்டேன். கொன்னுடுவேன் என்றாள் தங்கமணி .கொஞ்சம் , கொஞ்சமாக அதுவே மறைந்து போனது . அந்த தேங்காய் துண்டை மறந்து விட்டோம் . அதிலும் இப்போது இன்னொரு ஜீவன் . ஆனால் சிகப்பாய்..சுள்ளென்று கடிக்கிறது


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்


கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்செம்மொழி வேந்தே ! செகப்புத் தோல் சிங்கமே ! முத்தமிழே ! அம்மாவே ! ஐயாவே ! மருத்துவரே ! கேப்டனே ! புயலே ! சேரி தங்கமே ! தஞ்சை வேந்தரே !.ஈரோட்டு சிங்கமே ! இத்தாலிய தியாகியே ! அப்புறம் எனக்கு கடன் கொடுக்க வேண்டியவர்களே !

ப..சி...க்..கு....தய்யா


நாய் , பூனை குட்டிகளை தத்தெடுக்கும்படி த்ரிஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் . நான் இரண்டு முயல் குட்டிகளை தத்தெடுக்கலாம்னு இருக்கிறேன்..(சாக்குப் பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா)


கடந்து சென்றவள்
பறித்து சென்றாள் இதயத்தை
கடவுள் மீது கோபம் வந்தது
பின்னால் வருகிறாளே இன்னொருத்தி
அவளுக்கு எதை கொடுப்பது?

இமைகளை இப்படி இப்படி
திறந்தாள்
மின்னல் வெட்டியது
சிரிப்பினால் குழிகள்
பறித்தாள்
தவறாமல் விழுந்தேன்
குழியில்
ஓ...லைலா.


உயிர் போய்
உயிர் வருகிறது
ஒவ்வொரு முறையும்
எப்படி உயிர் போய்
உயிர் வருகிறது
என்பதை சொல்வதற்குள்கொஞ்சம் காமெடி .. (வேற யாரு பட்டு வேட்டி வகையறாத்தான்)


காட்சி-1 எஸ்வி சேகரை பத்து அடி அடிக்கிறார்கள் .சந்திரசேகர் சொல்கிறார். இப்படி கேட்டா சொல்லமாட்டே ! இன்னொரு அடி அடிக்கிறார். சொல்லிவிடுகிறார்.

காட்சி-2 சுகுமாரி ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறார். அவர் முன்னால் ஒரு பாம்பு படம் எடுக்கிறது. உள்ளே வரும் சுகாசினி தன் கையை பாம்பின் முன் நீட்ட, பாம்பு சுகாவை கொத்தி விட்டு போய் விடுகிறது.

காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது.”டயாலிசிஸ் ரூம்” கலைஞர் டிவி மேட்னி!


ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை, அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''சிங்- சாங்-பங்'' குன்னு பேர் வச்சாங்க.
இரண்டாவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''ரீங்- சாங்- சிங்''குன்னு பேர் வச்சாங்க.
ஆனா... மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

''தெரியலையே''
''சம்- திங்-ராங்''குன்னு.


பிரபல பதிவர் : நான் எழுதிய “அதிகாலை விடியல் “ கவிதை படிச்சிருக்கீங்களா?

பேட்டியாளர் : ஏன் சார் ? அதிகாலைன்னாலே விடியல்தானே ..

பி .ப : படிச்சீங்களா ? இல்லையா ?

பே : இல்லீங்க ..தூங்கிட்டேன் .புதுப்பித்துக் கொள்.. நித்தம் புதிய மலர்கள்..பழைய செடியில்


தீபாவளி மற்றும் “விடுமுறை தின” வாழ்த்துக்கள் .


டிஸ்கி : நாளை புதிய தலைமுறை மறக்காமல் வாங்கி உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்

29 comments:

நேசமித்ரன் said...

பதிவுப் பட்டாசே..! தீபாவளி வாழ்த்துகள் :)))

க ரா said...

கவிதை தூவல் மழை மாதிரி இருந்தது.. மானிட்டர் நல்ல காக்டெயில்..

தீபாவளி வாழ்த்துகள் மணிஜீ...

Ganesan said...

ஜி,

அடை மழையிலும், கனமழை பொழிந்துள்ளீர்கள்..

ஓ, புதிய தலைமுறையில் உங்கள் பெயர் வந்துள்ளதா?

தீபாவளி வாழ்த்துக்கள்..

Paleo God said...

வாழ்த்துகள் தல! ;)

vasu balaji said...

தீபாவளி ‘மருந்து’ சூப்பர். வாழ்த்துக்கள்ணா:))

எறும்பு said...

செம..

எறும்பு said...

//புதிய தலைமுறையில் உங்கள் பெயர் வந்துள்ளதா?//

இவரு போன தலைமுறைங்க..

அரவிந்தன் said...

//குட்டிகளை தத்தெடுக்கும்படி த்ரிஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் . நான் இரண்டு முயல் குட்டிகளை தத்தெடுக்கலாம்னு இருக்கிறேன்..(சாக்குப் பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா)//

மகா குறும்பு. :-)

மணிஜி said...

புதிய தலைமுறை இன்னும் நான் படிக்கவில்லை..பெயர் வந்துள்ளதா என்று தெரியாது. லக்கியின் பதிவு படித்து டிஸ்கி போட்டேன்..நன்றி

@எறும்பு...குறும்பு

dondu(#11168674346665545885) said...

//காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது. ”டயாலிசிஸ் ரூம்” கலைஞர் டிவி மேட்னி!//
தவறில்லை. பாம்பின் விஷம் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும். ஆகவே டயாலிசிஸ் ரூம் சரிதான்.

ஆனால் இதையெல்லாம் சினிமாக்காரர்கள் யோசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை என்பதையும் நாம் ரூம் போட்டு யோசிப்பது நலம் என்று யோசனையுடன் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jackiesekar said...

கடவுள் கான்வர்சேஷன் ரசிச்சேன்...
கடைசி ஜோக் செம.....

கலைஞர் மேட்னி காமெடி...

ஓட்டு டன்..

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா...

THOPPITHOPPI said...

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10

********************************

முதல் வருகை. கலக்கிட்டீங்க

♫வாழ்த்துக்கள்♫

'பரிவை' சே.குமார் said...

மானிட்டர் ரொம்ப நல்லா இருக்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

பதிவு நன்றாக இருந்தது.

Unknown said...

தீபாவளி சரவெடியால்ல இருக்கு ,.. பத்த வச்சுட்டு பவிசா இருக்கீங்களே அண்ணாச்சி ...

அப்புறம் " புதிய தலைமுறையில்" இந்த வாரம் என் பெயர் இல்லை ...

மணிஜி said...

டோண்டு சார்..பாம்புக்கடிக்கு முதல் வைத்தியம் தேவையில்லையா? நேரா டயலாசிசுக்கு போயிட்டீங்க..சர்..நங்கநல்லூர் பஞ்சாமிரதத்தில் பாம்புக்கடிக்கு பலன் போட்டிருக்கா?

dondu(#11168674346665545885) said...

அந்த உள்ளேயே வச்சு பண்ணுவாங்களா இருக்கும்.

இல்லேன்னாக்க மகுடி ஊதி அந்த பாம்பையே வரவழைத்து விஷத்தை எடுக்க வச்சாலும் வச்சிருக்கலாம்.

அதான் சொன்னேனே, இவ்வளவெல்லாம் அவங்க ரோசிச்சிருந்தா ஆச்சச்சரியம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ராகவன் said...

Grreat Mr.Mani... ellaame irundhadhu...

naanum PETA amaippai saarnthavan...

Regards,
Ragavan

விஷாலி said...

திபாவளி வாழ்த்துக்கள்

நன்றி

CS. Mohan Kumar said...

தீபாவளி வாழ்த்துகள் மணிஜீ.

புதிய தலைமுறை பார்க்கலை; லக்கி கொஞ்சம் தான் எழுதியிருந்தார் யாரேனும் முழுதாய் பகிர்ந்தால் நல்லாயிருக்கும் :))

மணிஜி said...

லக்கி அவரே பகிர்வார்....இன்னும் கொஞ்சம் நாள் கழித்து ..காப்பி & பேஸ்ட் செய்து....ஆனால் தலைவனின் உண்மைத்தொண்டன் அவர்தான்...என்ன அருமையாக அவரைப் பற்றியும் எழுதியுள்ளார் தெரியுமா? (அண்ணன் சொன்னதிலிருந்து)..நான் இன்னும் படிக்கவில்லை..நாளைதான் வாங்க வேண்டும்..ஆனால் ஒன்று .பதிவர்களை பற்றி எழுதியவுடன் 55 காப்பிகள் எக்ஸ்ட்ராவாக விற்றிருக்கிறதாம்

மதுரை சரவணன் said...

அண்ணே ராவா கலக்கிட்டிங்க... படிச்சதும் புல் போதை... சூப்பர்... இதுக்காக மதுரை வாங்க... தீபாவளி நல் வாழ்த்துக்கள். பட்டாசு மாதிரி சடசடன்னு வெடிச்சு தள்ளிட்டீங்க...

butterfly Surya said...

தீபாவளி வாழ்த்துக்கள்..
ஊருக்கு போயிட்டீங்களா...??

a said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

R.Gopi said...

பட்டாசு பதிவரே....

எவ்ளோ லேட்டா வந்தாலும் படு லேட்டஸ்டா வர்றீரே அய்யா.. அதற்காக உமக்கு ஒரு சபாஷு...

புதிய தலைமுறையில் உங்கள் பெயர் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி...

//நங்கநல்லூர் பஞ்சாமிரதத்தில் பாம்புக்கடிக்கு பலன் போட்டிருக்கா?//

யப்பா... பதிவுல வந்தத விட படு சூப்பர் பஞ்ச் ஆச்சே இது.... ரைட்டு.. நடத்துங்க தல....

மணிஜீ... குடும்பத்தார்... வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

என் வாழ்த்து இதோ :

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

அப்படியே இங்க இன்னொரு வலையில் மற்றுமொரு லேட்டஸ்ட் பதிவு :

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

கதிர்கா said...

/*கவிதை எழுதலாம்னு தேடினால் , கழுதை... கிடைக்கவேயில்லை ஒரு காகிதம் கூட*/

:-)

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown said...

//பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா//
:))