Wednesday, November 24, 2010

மானிட்டர் பக்கங்கள்.....24/11/10




கொஞ்சம் சினிமா . அண்ணன் உண்மைத்தமிழன் போனில் அழைத்தார் . நம் மேலான கருத்துக்களை இயக்குனர் திரு கரு . பழனியப்பன் எதிர்பார்க்கிறார் . நமக்காக சிறப்பு காட்சி என்றார் . படம் மந்திரப்புன்னகை . கிட்ட , தட்ட அனைத்து முன்னணி பிராண்டுகளும் சாரி ... பதிவர்களும் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் . ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார் உ.த . அட ! மிஸ் பண்ணிட்டமோ என்கிற ஏக்கம் ஜாக்கி சேகரின் முகத்தில் தோன்றியது . வாய் விட்டும் சொன்னார் . நான் ஜாக்கிக்கு அலெக்ஸாண்டர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன் . பக்கத்திலிருந்த ரமேஷ் வைத்யா “நெப்போலியன்” வைங்க.. நமக்கு எதுனா யூஸ் ஆகும் என்றார் .

மிக அடர்த்தியான கதையமைப்பு . இயக்குநரே துணிந்து நாயகனாகி விட்டார் . தன் பாத்திர படைப்பு இதுதான் . இதற்கான உடல்மொழி , உச்சரிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத முன் தீர்மானத்தில் அவர் இருந்திருக்க வேண்டும் . இறுகிய முகம் , கறுத்த உதடுகள் (இவ்வளவு சிகரெட் பிடித்தால் தமன்னா உதடா வரும்) , மிலிட்டரி நடை , படத்தில் அவர் ஒரு ட்ல்யூஷன் நோயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் . இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து , மாறுபட்ட நடவடிக்கைகளை செய்யும் குணாதிசயம் .


பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . படமும் கொஞ்சம் நீளம் . படத்துக்கு கத்திரி . கதாபாத்திரங்களுக்கு வாயில் பிளாஸ்திரி . படம் முழுக்க நகைச்சுவை என்கிற பெயரில் நோகடிக்கும் சந்தானமும் , தம்பிராமையாவும் திடீரென்று குணசித்திரமாக மாறி சாகடிக்கிறார்கள் . இரட்டை அர்த்த வசனத்தை சத்தமாக கூச்சமின்றி பேசும் சந்தானத்தால் , ஒரு கடையில் ஆணுறையை வாய் திறந்து கேட்க முடியவில்லையாம்.

“இயக்குநர் சொல்கிறார் : உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுவை வாய் விட்டு கேட்கிறோம் . ஆனால் நல்லது செய்யும் காண்டத்தை கேட்க முடியவில்லை . ஆங்காங்கே இது போல் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கிறது . ஆனால் பல இடங்களில் நீளமாக . அதை இயக்குநர் ஒரே முக் பாவனையுடன் , மாடுலேஷன் இன்றி பேசுவது எரிச்சலை உண்டாக்குகிறது (எனக்கு) . பாரதி , திருவள்ளூவர் , ஒளவையார் இவர்களது பாடல்களும் தப்ப வில்லை .


நடிக்க வருதோ இல்லையோ ? நன்றாக குடிக்க வருகிறது . காந்தி சிலை , கடற்கறை , கடைகள் , பப்ப்கள் எல்லா இடங்களிலும் குடிக்கிறார் . மீனாட்சியை நன்றாக அடிக்கவும் செய்தார்.


சைக்கியாட்ரிக்காக வருபவரும் , நகுலன் பொன்னுசாமியும் நன்றாக செய்திருக்கிரார்கள் . ஒரு காட்சியில் மருத்துவர் மீனாட்சியிடம் சொல்கிறார் .

உனக்கும் , கதிருக்கும் இருப்பது காதல்னு நீ சொல்ற.. நாங்க கெமிஸ்ட்ரின்னு சொல்வோம் . எனக்கு கலா மாஸ்டரும் , மானாட மயிலாடவும் நியாபகம் வந்தது

விஜயகாந்த் வெறும் எஸ். ஐயாகத்தான் இருப்பார் ஆனால் டிஐஜிக்கள் கூட்டத்தில் அவர்தான் எப்படி அதிகாரமாக பேசுவார் ? இதில் நாயகனும் அப்படித்தான் . மருத்துவமனையையே அடிமை போல் பேசுகிறார் . என்னதான் வியாதி என்றாலும் கொஞ்சம் த்ரீ மச்சுப்பா . அந்த நர்சுக்கு யார் கு(உ)ரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.


மீனாட்சி . ஹோண்டா ஷோரூமின் ஷோகேஸ் பொம்மை . முகம் கொஞ்ச்ஃஅம் முற்றலாக இருப்பது போல் தெரிகிறது . ஆனால் வளைவுகள் அபா(யக)ரம் . கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . ஸ்ரீகாந்தோடு பின்னி பிணைகிறார் ஒரு முறை . அதை நமக்கு பத்து முறை காட்டுகிறார்கள் . வருத்தம் ஒன்றும் இல்லை . வயித்தெறிச்சல்தான் .

அம்மாவை அழகாகவும் , பாடகியாகவும் காட்டும்போது துரோகம் செய்யப்போகிறார் என்று தெரிகிறது . கண்ணாடியில் மீனாட்சியும் , அம்மாவும் கதிருக்கு தலைசீவுவது கீளிஷே .

நிறைய பேசாமல் , உடல் மொழியில் சைக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம் . என்னோட சாய்ஸ் விக்ரம் . கரு .பழனியப்பன் இயக்கம் மட்டும் செய்திருந்தால் , நிச்சயம் இவ்வளவு தொய்வு கதையில் இருந்திருக்காது என்பது என் அபிப்ராயம் . ஆஃப்டர் ஆல் ஆடியன்ஸ்தானே எல்லாம் .

பார்த்திபன் மீண்டும் கனவு காணட்டும் . சதுரங்கம் என்னவாயிற்று ? பிரிவோம் ..சந்திப்போம் சார் ..


டிஸ்கி : (சம்பந்தமில்லாத)

7 ஜி. ரெயின்போ காலனியாம் ..அப்ப

2 ஜி. சி.ஐ.டி காலனியா?

டிஸ்கி : 2 கேப்டனுக்கு டாக்டர் பட்டமாம் . செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா...

24 comments:

மணிஜி said...

டெஸ்ட்...1..22..33

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..

Muthukumar said...

rightuuuuuu....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் .
//

குசும்புண்ணே உங்களுக்கு...

Unknown said...

//செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா//

super! :)

Ganesan said...

அண்ணே,

உங்க விமர்சனம் படிக்கும் பொழுது , ஜேம்ஸ் பாண்ட் படம் சேசிங் காட்சி போல படிக்க பிடிக்குது.

அப்படி ஒரு ஸ்பீட் உங்க எழுத்தில்...

செ.சரவணக்குமார் said...

காலை வணக்கம் தலைவரே.. இதென்ன மானிட்டர் பக்கங்கள்னு போட்டுட்டு மந்திரப்புன்னகை விமர்சனம் மட்டும்தானா?

திருச்செந்தூர் கதைய சொல்லவேயில்லையே தல?

யுவா said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

CS. Mohan Kumar said...

இலவசமா படம் பார்த்தாலாவது நாலு வார்த்தை நல்லா எழுதுவாங்கலோன்னு யூனிட் சைடில் பதிவர்கள் பத்தி யாரவது நினைச்சிருந்தால் இந்த பதிவை பார்த்து அந்த முடிவை மாத்திப்பாங்க. இனிமே பதிவர்களுக்கு நோ ப்ரீ ஷோ??? :))

Jackiesekar said...

உன் பங்குக்கு நீயும் பத்தவச்சிட்டியா?

ராகவன் said...

அன்பு மணிஜி,
ரொம்ப நல்லாயிருந்தது விமர்சனம்... இத்தனை கிண்டல் இருந்தாலும்... குறைந்த இடங்களில் சின்ன சின்ன ஷொட்டும் வைத்திருப்பது அழகாய் இருக்கிறது... எனக்கும் இப்படித்தான் தோன்றியது... நமக்கு தான் படம் பாக்காமயே கத சொல்ல வருமே...

ரசித்தேன்...
அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

உண்மையான விமர்சனம். எங்கே பதிவர் ஷோ எல்லாம் கொடுத்திருக்காரு என்ற அன்பில் நல்லாயிருக்குன்னு எழுதியிருப்பீங்களோன்னு நினைச்சேன்.... உள்ளது உள்ளபடி... இது எனக்கு பிடிச்சிருக்கு.

வினோ said...

அண்ணா, படம் பார்கவா வேண்டாமா? ஏதோ ஒன்னு சொல்லுங்க...

Unknown said...

//ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார் உ.த //

படத்தோட பேர் என்னன்னு சொல்லவே இல்லை ;-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

vinthaimanithan said...

புன்னகை முனகலா மாறிடிச்சோ?!

vinthaimanithan said...

இனிமே பதிவர் ஷோன்னு யாரும் கூப்பிடுவாய்ங்க?!

க.பாலாசி said...

சரிங்க தலைவரே.

vasu balaji said...

ரைட்ணா:))

அம்பிகா said...

பேசும்போது தெறித்து விழும் அதே கேலியும் கிண்டலும், அப்படியே எழுத்திலும். மிக ரசித்தேன்.

உண்மைத்தமிழன் said...

எதிர்பார்க்கலே.. மானிட்டர் பக்கத்துல சினிமா விமர்சனத்துக்கு இடம் கொடுப்பீங்கன்னு..!

உங்க ஐடியா சக்ஸஸ்..!

மணிஜி said...

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...

அம்பிகாவுக்கு சிறப்பு நன்றிகள்..(மண்சட்டியில் வைத்த மீன் குழம்பாய் இன்னும் மனசுக்குள் மணந்து கொண்டிருக்கிறது..ஆறுமுகனேரி நிகழ்வுகள்..)

R.Gopi said...

//
டிஸ்கி : 2 கேப்டனுக்கு டாக்டர் பட்டமாம் . செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா...//

***********

யேய் பரதேசி.... என்னிய கிண்டல் பண்ணுற அளவுக்கு ஒனக்கு தகிரியம் வந்துடுச்சா.... மவனே, நீயி என் கையில மாட்டுன... பெண்டு எடுத்திடுவேன்....

(டாக்டர் கேப்டன் விஜயகாந்த்)...

pichaikaaran said...

எனக்கு படம் பிடித்து இருந்தது..