Tuesday, November 9, 2010

மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10


சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் . திருச்செந்தூருக்கு போயிருக்கிறேன். ஒரு முறை மட்டுமே கோயிலின் உள்ளே சென்றேன் . அதுவே அலர்ஜியாகி விட்டது . கடலில் கால் நனைத்தல் , மானசீகமாக முருக தரிசனம் அவ்வளவுதான் . காரணம் ? கோயில் வாசலில் இருக்கும் லைசன் ரெப்ரசண்டட்டிவ்கள்தான் . டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டுசார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை .சரி விஷயத்து வருவோம் . வரும் 18ஆம் தேதி சல்லிப்ப்பயலுக்கு கல்யாணம் . காதலர்களாக இருந்தவர்கள் மணமக்களாக மாறுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னைப்போன்றவர்களுக்கு தெரியும் .(பொண்டாட்டி பிளாக் படிப்பாங்க இல்ல) .செல்வேந்திரன் கேண்டியின் கைத்தலம் பற்றுகிறார் முருகன் ஸ்தலத்தில் . மஹா திருமணத்திற்கு பிறகு நடக்கும் இன்னொரு பதிவுலக நிகழ்வு . கோவை , திருப்பூர், ஈரோடு , மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பதிவுலக நண்பர்களும் , இலக்கிய ஜாம்பவான்களும் சங்கமிக்க இருக்கிறார்கள் . பா.ராவும் வருவதாக சொல்லியிருக்கிறார் . அவர் வீட்டு விசேஷத்தை தவற விட்டவர்கள் , இந்த நிகழ்வை மிஸ் பண்ணாதீர்கள் .

நான் பதிவுலகம் வந்த புதிதில் கேபிள் மட்டுமே நன்கு அறிமுகம் . ஒரு மாலை செல்லடித்தார் . ஒரு சந்திப்பு இருக்கிறது . வருகிறீர்களா ? என்றார் . செல்வா விஜய் டிவியின் நீயா , நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . பாஸ்கர் சக்தியின் வீட்டில் சந்திப்பு . நர்சிம் , இரவுப்பாடகன் ரமேஷ் வைத்யா . மிக இனிமையான சந்திப்பு . அப்போதுதான் செல்வா அறிமுகம் . அதன் பின் இரண்டொரு முறை சந்தித்திருப்போம் . குறிப்பிட்ட இடைவெளியில் அலைபேசி உரையாடல்கள் உண்டு . சொல்லுங்க தண்டோரா அண்ணே என்று வாய் நிறைய அழைப்பார் . மழை பெய்த பின் காளான் முளைக்கும் . செல்வாவின் மனக்காளான் படித்துப் பாருங்கள் . மனதிற்குள் மழையடிக்கும் . மண் சட்டியில் ஆக்கிய மீன் குழம்பை போன்ற எழுத்துக்கு சொந்தக்காரன் . வச்சிருந்து சுவைக்கலாம் . அப்புறம் திருச்செந்தூர் தீர்த்தவாரியில் சந்திக்கலாமா?

நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் . மிஸ் பண்ணலாமா என்று வா ..குவார்ட்டர் கட்டிங் பார்த்தேன் . புஷ்கர் , காயத்ரி ஜோடிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் . அவர்களிடம் பேசியிருக்கிறேன் . சந்தானம் நடிக்கும் அக்சார்செம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள் . அது அவர்கள் இயக்கியதுதான். ஆனால் "வ" வில் போதையே வரவில்லை . 90 நிமிடங்களில் அந்த கதையை சொல்லியிருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் .


ஒரு முக்கிய தகவல் . கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . கூட்டம் ஜே..ஜேதான் . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர் மஃப்டியில் இருப்பார் . என்னை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தால் , நான் கொஞ்சம் சுவாரசியபடுத்தியிருப்பேன் .சரி உடுங்க..நம்ம அப்பன் வீட்டு காசுதானே ?.

ஜொள்ளர்கள் என்றால் ஆண்கள் மட்டும்தானா என்ன ? விஜய் மல்லையாவின் நிறுவன காலண்டர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . எல்லாம் அழகை ரசிக்கத்தான் . இப்போது பெண்களுக்கும் அந்த வாய்ப்பு . சகோதரம் என்ற அமைப்பு . ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ் .(பஞ்சாயத்து உண்டா? )

சின்ன வயதில் யானை சாணத்தை மிதிக்க போட்டியே நடக்கும் . நல்லது என்று என் பாட்டி சொல்வார் . இப்போது யானை சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கிறார்களாம் . பஞ்சாப்பில் .

“பிள்ளையார் சுழி “ போட்டு விட்டு எழுத ஆரம்பிப்போமா?

காலண்டர் மேட்டர் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

யாணை சாணம் : தினமலர்

காப்பி & பேஸ்ட் இல்லைப்பா . இன்ஃபர்மேஷன் .



பட்டுவேட்டித் தலைவரின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்ட வெற்றிகொண்டான் திருக்கடையூரில் பீமரதசாந்தி செய்து கொண்டு மனைவிக்கு மங்களநாண் பூட்டினாராம் . தலைவர் தலைமையில் செய்து கொண்டிருக்கலாமே...


சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்

25 comments:

Katz said...

இப்பதான் யானை சாணி மேட்டர பேப்பரில் படித்தேன். அதுக்குள்ளே பதிவுல போட்டாச்சா.

Katz said...

//ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ்//

இந்த காலேண்டர் போட்டோ சூட்டுக்கு எப்படி அப்ளை பண்றது?

Katz said...
This comment has been removed by the author.
Kumky said...

ஸ்பீட்...

Jackiesekar said...

அப்ப வரும் 18ம்தேதி....திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் தீர்ததவாரி அரசாங்கமா?

butterfly Surya said...

ஜாக்கி,, திருச்செந்தூரின் கடலோரத்தில்.....

நையாண்டி நைனா said...

/*.(பொண்டட்டி பிளாக் படிப்பாங்க இல்ல)*/

பொண்டாட்டி காலை உடைத்த மாவீரன் தண்டோரா.

நையாண்டி நைனா said...

"அதுக்கு" பஞ்சாயத்து கிடையாது...

பொண்டாட்டி காலை உடைச்சதுக்கு தான் பஞ்சாயத்து உண்டு.

R.Gopi said...

//பட்டுவேட்டித் தலைவரின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட வெற்றிக்கொண்டான் திருக்கடையூரில் பீமரதசாந்தி செய்து கொண்டு மனைவிக்கு மங்கநாண் பூட்டினாராம் . தலைவர் தலைமையில் செய்து கொண்டிருக்கலாமே...

சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்//

**********

”தல”

நீ மெய்யாலுமே தில்லுதுர தான்...

'பரிவை' சே.குமார் said...

Thiruchendur marriage, pathivar santhippukku advance vazhththukkal anna.

matra thagavalkal kalakkal.

கலகலப்ரியா said...

||நானும் கொஞ்சம் பேசுகிறேன்....||

அதுக்காக இப்டியா ராக்கெட் வேகத்தில வாய் ஓயாம பேசறது... நமக்கு மூச்சு வாங்குது...

கலக்கல்..

Ganesan said...

செல்வாவின் திருமணத்தை மிஸ் பண்னுவேன் போல இருக்கிறது. வருத்தமாயிருக்கு.

வர இயலாமல் போகலாம் , மருத்துவ காரணங்களுக்காக..

செல்வா--வாழ்த்துக்கள்..நீ என் வீட்டு விருந்துக்கு வாடா ந்னு உரிமையோட அழைக்கிறேன்.

மணிஜி said...

நைனா காலுக்கு கட்டு போட்டுட்டேன்

பத்மா said...

சரி சரி

vinthaimanithan said...

கலக்ஸ்! '90' நிமிஷத்துல படமா?! அக்மார்க் மணிஜி குத்து!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதம்ப மாலை போல இருக்கு..
படித்து முடித்ததும், ‘பாரு’க்குள்ளே
நல்ல நாடு பாட்டு ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

vasu balaji said...

//வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்//

அக்ஷர லக்ஷம்:))

பா.ராஜாராம் said...

செல்வேந்திரன்,

கூடுதலா, குவாட்டர் நெப்போலியன் ஒண்ணு... சூடா!

மஹா கல்யாணத்துல பாக்க வச்சு குடிச்சீர்ல ஓய், மணிஜி?

வர்ரண்டி... தயாரா இரும்.

கும்க்கி, பயணப் பையை தூக்கிட்டீரா?

அட்வான்ஸ் வாழ்த்துகள்,.. மக்கா செல்வேந்திரன்!

ரிஷபன்Meena said...

//அவன் பெயர் (அவன் என்று சொல்லலாமா என்று தெரிய வில்லை...) மோகன கிருஷணன்..ட்”தீர” விசாரித்து எழுதும் வினவு உட்பட எல்லோரும் மோகன்ராஜ் என்றே
குறிப்பிடுகிறார்கள்//

சரியா சொன்னீங்க, அவரை தியாகின்னு சொன்னாலும் சொல்வார்கள்

CS. Mohan Kumar said...

//ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர்
மஃப்டியில் இருப்பார்//

இதனை படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியுமா? :))அசத்தல் மணிஜி

Unknown said...

//டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டு “சார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை//

Nice!! :))

செ.சரவணக்குமார் said...

திருச்செந்தூர் தீர்த்தவாரிக்கு வாழ்த்துகள் தலைவரே.

//டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டு “சார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை//

நிஜம் தான் தலைவரே. பல முறை இந்த இம்சையை அனுபவித்திருக்கிறோம்.

R.Gopi said...

தல....

உங்களுக்கு பிடிக்கும்னு நெனக்கறேன்.. வந்து பார்த்துட்டு சொல்லுங்க....

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம் http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html

selventhiran said...

இன்றுதான் படித்தேன். அன்பிற்கு நன்றி தண்டோராண்ணே...!

பெசொவி said...

வடகரை வேலன் அண்ணாச்சி, பா.ரா., ரமேஷ் வைத்யா, butterfly சூர்யா மற்றும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, மணிஜி!