Saturday, October 23, 2010
கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் .
சீமை நெருங்கி கொண்டிருந்தது . அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது . ராமேஸ்வரம் விரைவு வண்டி . அதிகாலை அவஸ்தை . அந்த சங்கிலியை இன்னும் கொஞ்சம் நீளமாகத்தான் வைத்தால் என்ன ? பர்ஸை திறந்து சில்லறையாக ரூ 200 இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன் . இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன் . வெளியில் கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் . பா .ரா என்னும் நிழலை . ம(ஹா) களின் திருமணம் .
சிவகங்கை சீமையில் கால் வைத்தோம் . நான் , பொன் .வாசுதேவன் , ராஜசுந்தர்ராஜன் ஐயா . மலர்ந்த முகத்தோடு சரவணன் , கும்க்கி , தோளோடு தோளாய் முத்துராமலிங்கம் ..அப்புறம் பா .ரா . எளிமையான சிரிப்போடு அணைத்துக்கொண்டார் மக்கா .
சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் . ஹோட்டல் அறைக்கு போனோம் . அதிரசம் , முறுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணும் வேலை மட்டுமே பாக்கியிருக்கிறது மக்கா என்றார் பா .ரா . கிட்ட தட்ட முக்கால் கிணறை தாண்டி விட்ட அவனை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையே வந்தது .
நீங்க வேலையை பாருங்க மக்கா .ஒரு வண்டி மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுங்க போதும் என்றோம். இதே சிவகங்கையில்தான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன் . ஒரு விஜயதசமி நாளில் மேளம் முழங்க மாலையுடன் என்னை அப்பா மன்னர் பள்ளிக்கு அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . உடன் அப்பாவுக்கு (தஞ்சை ) போன் போட்டேன் . 45 வயதில் 81 வயது அப்பாவிற்கு அதை நினைவுபடுத்தினேன் . அது இன்னும் ஒரு சந்தோஷம் . அதற்காக பா.ராவிற்கும் , மகாவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி
செட்டிநாடு வீடுகள் , கம்பர் சமாதி , காளையார் கோயில் எல்லாம் சுற்றி விட்டு பா .ரா வீட்டிற்கு போனோம் . இந்த தெருவில் எந்த இடத்தில் அந்த வறட்டியை தட்டியபடி முன் முடியை புறங்கையால் ஒதுக்கியபடி அந்த அம்மணி பேசியிருப்பார் என்று தேடிப்பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் மாசாவை ருசித்து விட்டு அடுத்த கட்டத்துக்கு தயாரானோம் . மக்கா ..சுக்கா என்று முன்பு எழுதியதை நினைவில் வைத்திருந்தான் தோழன் முத்துராமலிங்கம் . வள்ளாலாருக்கு ஒரு முன் மன்னிப்பு கடுதாசி எழுதி கொடுத்தேன் ...நீங்க முன்னாடி போங்க மக்கா..நான் பின்னாடியே வரேன் என்றார் பா.ரா . வந்தவுடன் கையில் வைத்திருந்தார் போனபார்ட்டை (நெப்போலியன்) ... தொடர்ந்து ஜீவகாருண்ய சங்க தலைவர் பழனியும் வந்தார் ... அம்மாவை தத்தம் மொழியில் அழைத்து உயிரை விட்டிருந்த ஜீவராசிகள் ஆவி பறக்க அடைப்பட்டிருந்தன...
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? சரக்கு உள்ளே போனது . அறை முழுவதும் பிரியங்களினால் நிரம்பி வழிந்தது . உண்டு , உறங்கி , விழித்து மீண்டும்.....
முகூர்த்தம் . குறித்த நேரத்திற்கு வண்டி வந்தது . முதல் நாள் இரவே வந்து அல்வா கொடுத்த அக்பரை விட்டு விடவில்லை என்பதை அவரிடம் சொல்லுங்கள். கா.பா . ஸ்ரீ , மதுரை சரவணன் , பாலா இவர்களிடமும் . மாதவ்ராஜ் சொன்னது போல் மண்டப திருமணங்கள் போல் இல்லாமல் வீட்டோடு நடந்த விசேஷம் .
எல்லாத் திசைகளிலிருந்தும் ஆசி வழங்குவதைப் போல் நண்பர்கள் அழைத்துக் கொண்டேயிருந்தனர் . ஒரு நண்பரிடம் நான் சரியாக பேச முடியாமல் நேர்ந்ததற்கு மன்னிக்கவும் . பாழாய் போன ...
மாது , கா மு இன்னும் வெற்றி, சிவாஜீ , ஜெர்ரீ மற்றும் நண்பர்களுடன் நடத்திய கச்சேரியை மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..
மக்கா... தீபாவளி நெருங்குகிறது . மஹாவுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் . பால்யத்தில் தீபாவளி முடிந்தவுடன் கூட அந்த கடந்து போன திருவிழா ஏக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும் . இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன் ..சொன்னது போல் அடுத்த மாதம் ....ஏழுகடை...பாற்கடல் ... கொண்டாட்டம்.. அதுவரை .....
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
மணிஜீ டச் பகிர்வு:)
அண்ணே மிக்க நன்றி பகிர்வுக்கு...
பர்ஸை திறந்து சில்லறையாக ரூ 200 இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்
எதுக்கு?
வாசு பொண்ணோட கல்யாணத்துக்குன்னு சொல்லி, அவரையும் உங்களமாதிரி பெருசுங்க லிஸ்டுல சேர்க்கலாமா :)
தலைவரே,
படிக்கையில் கல்யாணத்தில் கலந்து கொண்டது போல உணர்வு ஏற்படுகிறது.
பாராவின் மகள் எல்லா செல்வமும், வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.
எழுத்தாளன்யா நீங்க ...!
good good
//செட்டிநாடு வீடுகள் , கம்பர் சமாதி , காளையார் கோயில் எல்லாம் சுற்றி விட்டு பா .ரா வீட்டிற்கு போனோம் . இந்த தெருவில் எந்த இடத்தில் அந்த வறட்டியை தட்டியபடி முன் முடியை புறங்கையால் ஒதுக்கியபடி அந்த அம்மணி பேசியிருப்பார் என்று தேடிப்பார்த்துக் கொண்டேன்.//
ஆகா! நேரில் கண்ட இடத்திலும் இலக்கியகர்த்தா பா.ரா.வை நினைவில் எழுப்பி, அவரது கவிதை மாந்தர்களைத் காணத் தேடிய நீங்கள் ஒரு கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிதான். அந்த அம்மணி அவருக்கு சித்தி என்றதாய் ஞாபகம். அழகான சித்தி.
//45 வயதில் 81 வயது அப்பாவிற்கு அதை நினைவுபடுத்தினேன். அது இன்னும் ஒரு சந்தோஷம்.// நீங்கள் உங்கள் அப்பாவோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுக்கொண்டிருந்த நானும் நெகிழ்ந்தேன்.
//மக்கா ..சுக்கா ... தோழன் முத்துராமலிங்கம்.. வள்ளாலாருக்கு ஒரு முன் மன்னிப்பு...போனபார்ட்(நெப்போலியன்) ... ஜீவகாருண்ய சங்க தலைவர் பழனி... அம்மாவை தத்தம் மொழியில் அழைத்து உயிரை விட்டிருந்த ஜீவராசிகள் ஆவி பறக்க...//
Class!
//மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..//
அப்படியே ஆகட்டும். வாழ்க!
என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து வருத்தமே. மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
ப்ரமாதம்..
நீங்க பகிரும் ஸ்டைலே தனிதான்..!
சுவாரஸ்யமாய் இருக்கிறது..!
அன்பின் மணிஜீ....
இருந்தா அப்டி இருக்கனும்.
எழுதுனா இப்டி எழுதனும்.
மெல்லிசா ஒரு புல்லாங்குழல் இசைவருட
காட்சிகள் ஜன்னல்வழியே நகர்கிறது இந்த எழுத்தில்.
அழகு மணிஜீ.. அழகு.
அழகு :)
//எல்லாத் திசைகளிலிருந்தும் ஆசி வழங்குவதைப் போல் நண்பர்கள் அழைத்துக் கொண்டேயிருந்தனர் .//
unmai. vaalththukkal . touching ji ...
அவர் ஒரு பிரபல ரவுடி.
அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் அதிரடியான பதிவுகளாகட்டும் ஈய வியாபாரமாகட்டும் அவருக்கு நிகர் அவரேதான்.
பிரபல ரவுடி சும்மாயிராமல் தனது தோஸ்த்துகளில் நம்பிக்கையான ஒருவரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்..
வந்ததோ கிராமத்தில் நடந்த எளிமையான திருவிழா..
விழாக்கூட்டத்தில் புகுந்த இருவரும் கிளப்பிய ஆட்டங்களின் தூசு அடங்கவே பலநாட்கள் ஆகிவிட்டதென பேசிக்கொள்கிறார்கள் கிராம பெரிசுகள்.
அவ்வப்போது கேள்விப்பட்ட தமது தூர தேச குலதெய்வத்தின் மீது ஏக பக்தி வந்திருந்தவர்களுக்கு...
நேரில் பார்க்கையில் சொல்லவும் வேண்டுமா...
கன்னத்தில் போட்டுக்கொண்டவர் பலர்..
கண்ணீர் கசிந்தவர் சிலர்..
கிராமத்திருவிழா காண வெளியூர்களிலிருந்து வந்திருந்த அப்பாவிகள் பலரை பிணைய கைதிகளாக பிடித்துவைத்து விட்டனர் இரண்டு நாட்கள்.
பயத்தில் வெலவெலத்து நடுங்கியவர்களுக்கு தனது இயல்பு அன்பு முகம் காண்பித்து உற்சாகமூட்டினர் இருவரும்.,.
இருப்பினும் சிறு சிறு தயக்கங்களினூடே வாய் திறந்த பிணைக்கைதிகளின் நிலை உற்சாக ஊற்றெடுத்தது கால வரம்பின்றி..
திருவிழாவினை நடத்திய ஊர்பெரிசுக்கு இரட்டை மகிழ்வு.
திருவிழாவின் மீது ஒரு கண்ணும், அப்பாவிகளின் மீது ஒரு கண்ணுமாக சந்தோஷமாக கழிந்தது அவருக்கு..
ஊரில் பெரும் மரியாதை கொண்டிருந்த பெருசுக்கு உலகெங்கும் கணக்கப்பிள்ளைகள்..
திருவிழா குறித்த கணக்கப்பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஓய்ந்துபோனார் பெரிசு..
சிலரை மக்கா என்றார் சிலரை மகா என்றார்...எல்லாருமே அவருக்கு மகா போலத்தான் போல...
திருவிழாக்கள் எப்போதும் நடந்தவண்ணம் இருக்கின்றன...ஆனாலும் அந்த கிராமத்திற்க்கு ஈடாகுமா என்ற புலம்பலுடன் ஊர் திரும்பினர் தூரதேசங்களிலிருந்து வந்திருந்த அப்பாவிகள்..
மணிஜியின் எழுத்துக்களும் அதற்கான பின்னூட்டுங்களும் கூட அழகுஅழகு கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் வாசித்ததில் மகிழ்ச்சி
கல்யாண சந்தோசம் உங்கள் பதிவில்............
24மணி நேரப் பணியால் என்னால் வர முடியாமல் போய்விட்டது. நல்ல சந்தர்ப்பம்!
அட்டகாசமான பகிர்வு....
மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று நீடுடி வாழ வாழ்த்துகள்!
கும்க்கி அப்பாவி! நல்லா இருக்கே உங்க பின்னூட்டமும் !
பா ரா பாஷையிலே ..ரொம்ப மகிழ்ச்சி மக்கா!!
i mean it !
புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
நிறைய மிஸ் பண்றேன் மணிஜீ..
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் !!!!
க்ளாஸ் !
இப்படியும் அப்பப்போ எழுதுங்க :)
மகா - மற்றும் அவர் கணவருக்கு வாழ்த்துக்கள்.
மிக அழகிய பதிவு மணிஜி. பா. ரா எந்த இடங்கள் பற்றி எழுதினாரோ அதே இடங்கள் சென்ற போது அவரது கவிதைகள் பற்றி நினைத்ததை எழுதினீர்களே... அருமை .
ராஜாராம்... போனில் சொன்னபடி அலுவல் வேலையால் வர இயல வில்லை மன்னிக்க
மணீஜீ, அற்புதமான நிகழ்வு. சந்திப்பு. அதையொட்டிய நினைவோட்டங்கள்.
மறக்க முடியாத நிகழ்வு...மறக்க முடியாத அன்பு பின்னூட்டங்களும்...நன்றி நண்பர்களே...
நல்ல பகிர்வு...
சிவகெங்கை சீமையை கலக்கி வந்திருக்கிறீர்கள் மணியண்ணா...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
சிவகங்கையில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நெகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் மனதில் நிலைத்திருக்கும்.
வணக்கம் பாஸு....
//மாது , கா மு இன்னும் வெற்றி, சிவாஜீ , ஜெர்ரீ மற்றும் நண்பர்களுடன் நடத்திய கச்சேரியை மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..//
யோவ்.. கண்ணில் நீர் கட்டிப் போச்சுய்யா..
சீக்கிரம் வாரும். ஆற அமர உக்காருவோம். சரியாடா பயலே?
நன்றி மணிஜீ!
நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றி மக்களே!
ராஜசுந்தரராஜன் அண்ணே, தோழர் கும்க்கி,
:-))
மிகவும் அற்புதமான தருணங்கள்,, எதையெதையோ இழந்த ஏக்கம் தருகிறது இந்த அழகான பகிர்வு....
தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்
Post a Comment