ஒரு “சிட்டி” கை போட்டால் நாட்டுக்கு நல்லதையே செய்யும் சாஃப்ட்வேர் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மந்திரித்த தகடு...அதாங்க எந்திரம்..இரும்பை கரும்புக்கு அறிமுகப்படுத்த , அது இளக ஆரம்பிக்கிறது. வசீகரமான ஆரம்பம்..அப்புறம் ஆரம்பம்..அங்கங்கே மானே..தேனே மாதிரி..அப்பாஸ்டுபி . டபுள் கோட்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணிக்கங்க..ஐஸ்வர்யா ராவணன் கடத்தலில் இருந்து மீண்ட பிறகு மெருகேறியிருப்பதாக எனக்கு பட்டது. அசுரன் கடைந்ததில் வெளியான ஆலகாலம் உஜாலா சேர்த்த எஃபெக்ட்...நூலிடை....அதன் கீழ் ஆலிலை...அமிதாப்பின் கபர்தார் ...ரஜினி என்கிற காந்தம்.
அடிக்கடி படத்தில் வரும் மானிட்டரில் மேக்னட் என்ற வார்த்தையை பார்த்ததாக நியாபகம்.. பிரசவத்துக்கு இலவசம் ஆட்டோக்காரன் பாட்ஷா மட்டுமல்ல..ஆட்டோமேட்டிக்காரனும் கூட.. ஐஸ் சிட்டியை கிஸ்ஸடிக்கும் காட்சியில் , உண்மையில் ரஜினியின் ரியாக்ஷன் மால்வேர் தாக்கின எஃபெக்ட் இருந்தது.. லேசாக வலது புருவம்.. என் பார்வையில் இடது புருவம்...உயர... இருவரில் அவளை நினைத்து..இடம் சரியாக நினைவில் இல்லை.. ஆலகாலம்.
அப்புறம் ஷங்கர்...இறையருள் பெற்றவர்.. ஆசிர்வதிக்கப்பட்டவர் ... ராசியான கலைஞர்.....(மஞ்ச துண்டு இல்லைங்க...)
பழசை மறக்காதவர் ரஜினி என்று சொல்வார்கள் . வில்லனாய் அவர் குழையும் போது அது உண்மைதான் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் ஐஸ்சுடன் ரத்தம் நிரப்பப் பட்ட பியுரெட் இதயத்துடன் , குறைவான எடை கொண்ட காதல் மொழிகளை இன்குபேட்டரில் பொத்தி , பொறித்து கொடுக்கும் போது....லேப்பில் ராஜலக்ஷ்மி எதிரில் என்னை திட்டிய பி. வி. வெங்கட்ராமனை மன்னித்து விட்டேன். (அவர் எஸ்.வி. சேகரின் மாமனார்..தஞ்சை)
இறுதியில் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள்.. பொது சொத்து 200 கோடி நாசம்... அது யாருடையது ? கம்மியாக சொல்கிறார்களோ?
சானா.....சீட்டாட்டத்தில் 12 கேம் முடிந்தவுடன் , கட்ஃபார் போடுவார்கள். மீண்டும் சீட்டு எடுத்து இடம் மாறி உட்கார வேண்டும்.. ராவணனில் விட்டதை.... 66 கிலோ எடை.. மீண்டும் ஒரு தேவதையுடன் டெம்ப்ரவரி கனவு..எந்திரம் துப்பிய சீட்டு ...ஒரு ரூபா காயின் இல்லை முழுசா..... அமவுண்ட் வேண்டாம்... ஒரு 10 ஓட்டு வாங்க ஆகும் செலவு. காசா முக்கியம்... அப்ப வேற எது முக்கியம்னு சொல்றவங்களுக்கு......கிளிமாஞ்சாரோ...கரும்பு சாரோ...உண்டு.....
24 comments:
கருத்துக் கிண்டல் :)
பிரியலையே இரு ஒரு கட்டிங் உட்டிக்கினு வந்து படிக்கிறேன்
இன்னாதிது:(
சரி அண்ணே.. நீங்களுமா இந்திரன் மோகத்திலே..
//எந்திரன்/எளக்கியம்//
என்னையா சொல்ல வாறீங்க
சார் நேரா சொல்லுங்க படம் ஓடுமா ? பார்க்கலாமா? இப்படி பின் நவீன கவிதை மாதிரியா விமர்சனம் எழுதறது? என்னை போல் பாமரரும் புரியும் படி சொல்லுங்க சார்
தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறாப்ல இருக்கு.
ரைட்டு... (புரியலன்னா இப்டித்தான்..)
நீங்களுமா !?
ஜில்லு, ஜ்வ்வு, இரைச்சல்..
அருமை மணிஜி.
(விமர்சனத்தை சொன்னேன்)
:))))))))
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது... :)))) அவ்வ்வ்வவ்வ்
போய்யா நீயும் உன் விமர்சனமும்....
எப்பவும் போல குழப்பம்தான்???????!!!!!
enna kodumainne..
கடேசி வரில ஏதோ புரிஞ்சமாரி இருக்கு :)
நீங்களுமா !?
ஆஹா....
எலக்கியம்..... எலே... இது எலக்கியம்லே....
இது போலவே நாலு பதிவு எலக்கியம் எயிதி நாங்க படிச்சா வெளங்கிடும்...
ஒலகத்தின் ஒரே எலக்கிய விமர்சனம் எழுதிய ஒரே எலக்கியவாதி வாய்க....
ரைட்டு.
பி. வி. வெங்கட்ராமனை//
you mean PVR botany? my HM? kalyana murungai. aanaa sv sekar maamanaru mattum idikuthu..
ஹலோ...
எல்லாரும் நல்லா பாத்துக்கோங்க...
அண்ணன் “மணிஜீ”யும் “எந்திரன்” படத்துக்கு விமர்சனம் எழுதிட்டாருன்னு “தண்டோரா” போட்டு சொல்லிக்கறேன்..
திட்டினியா கோபி?
//மணிஜீ...... said...
திட்டினியா கோபி?//
உங்கள திட்டுவேனா “மணிஜீ”!!?
Post a Comment