Tuesday, October 12, 2010

அர்த்தமில்லாத கதைகள் ...5அந்த தெருவில் நுழையும் போது முதல் வீட்டில் இருந்து வந்த வாசனை மூக்கை துளைத்தது . சாப்பிடவே வேண்டாம் . சும்மா சமைக்கறவங்களை பார்த்தாலே போதும் என்று தோன்றியது . பொடுகு வேறு அரித்து தொலைக்க வறட்டு , வறட்டு என்று சொறிந்து கொண்டாள் . வழக்கமாக எல்லோரைம் போல் அம்மா தாயே என்று அவள் ஆரம்பிக்க மாட்டாள் . ரொம்ப உரிமையுடன் என்ன சமையல் நடக்குதா ? என்று பத்து வருட பழக்கக் காரியை போல் கேட்பாள் . அப்படியே தான் பிச்சை எடுக்க வந்த கதை ... எந்த ஊரில் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறேன் ..யார் , யாரிடம் எப்படி பிச்சை கேட்பது ? என்றெல்லாம் சுவாரசியமாக விளக்குவாள் . வீட்டுக்காரர்களுக்கும் ஒரு சுவாரசியம் வந்து விடும் . அவர்களும் தாங்கள் என்ன என்ன மெனு என்றெல்லாம் அவளிடம் விளக்குவார்கள் . ஒரு விஷயம் . அவளலால் சாப்பிடாமல் கூட இருக்க முடியும் . ஆனால் பிச்சையெடுக்காமல் இருக்க முடியாது . ஆனால் இது நடந்தது எல்லாம் வேறு ஊரில் . இப்போது அந்த ஊரில் பிச்சைகாரர்கள் ஒழிப்புக்கு குழு அமைத்து கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்கள் . அதனால் தொழில் நிமித்தம் இப்போது வேறு ஊர் . இந்த தெருதான் முதல் போணி.


வழக்கம் போல் தன் பாணியில் யாசகத்தை ஆரம்பித்தாள் . எல்லாருமா அப்படி இருப்பார்கள் .

முதல் வீட்டில் பழைய சோறுதான் இருக்கிறது என்றார்கள் . வேண்டுமென்றால் பக்கத்து பாய் வீட்டில் முந்தா நாள் பிரியாணி போடுவார்கள் என்று பரிந்துரை வேறு . ஆனால் அதையும் கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் தெரு நாய்க்கு போட்டார்களாம் . கொஞ்சம் முந்தி வந்தி ருக்க கூடாதா என்று விசனப்பட்டார்கள் . இவள் கேட்டாள் . அந்த நாய் எந்த வழியாக போனது என்று ?

இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் இதே பிரச்சனை .. அந்த ஊரில் ஒரு மடம் இருந்தது . ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம் அது . அதில் ஒரு திண்ணை காலியாக இருந்தது . பக்கத்து திண்ணையில் ஒரு பைத்தியக்காரன் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . அவளை பார்த்ததும் அவனுக்கு என்னவோ தோன்றியது . நிச்சயம் இவள் பிச்சைக்காரி இல்லை . தன்னைப்போல்தான் என்று நினைத்தான் . அவளை அழைத்து என்னம்மா பிரச்சனை என்றான் ?

அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .
பொழைப்பு இப்போதைக்கு நல்லா ஓடுதாம் . எழவு எங்கயோ இருக்கட்டும் . இந்த பக்கம் வராம இருந்தா சரி..

15 comments:

சங்கவி said...

நச்சுன்னு இருக்கு....

முகிலன் said...

ரைட்டு

Vidhoosh said...

ரைட்டோ ரைட்டு

கே.ஆர்.பி.செந்தில் said...

உள்குத்து..

ஜாக்கி சேகர் said...

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள்---//

அவனக்கு புரிஞ்சிது...மணிஜி உனக்கு புரிஞ்சிதா???

அகல்விளக்கு said...

சூப்பர்.......

நளினா லாவண்யா said...

இந்தக் கதை இத்தணை பேருக்கும் புரிஞ்சுவிட்டடா?
மீ டோன்ட் நோ!

Sabarinathan Arthanari said...

மறுபடியும் முதல்ல இருந்தா ... ? கண்ணை கட்டுதுங்க.

இது ஏதோ செத்து செத்து விளையாடுவது போல இருக்கிறது. :(

நன்மையை விளைவிக்கும் பயணமாக இருக்கட்டும்.

வால்பையன் said...

//பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல்//


அண்டான்னா பெருசா இருக்குமே அதுவா தல!?

மூடி உள்ளே போகுமா, இல்ல வெளியவே நிக்குமா,?

இப்படி பல சந்தேகங்கள் எனக்கு இருக்கு, எப்போ தீர்த்து வைக்கிறீங்க!?

சே.குமார் said...

அது சரி... நல்லாயிருக்கட்டும் அதுக்கு எதுக்கு எழவெல்லாம்..?
நச்சுன்னு இருக்கு ஜீ...

"உழவன்" "Uzhavan" said...

அது சரி.. எப்படியோ பொழப்பு நடந்தா சரி :-)

V.Radhakrishnan said...

தலைப்புக்கு ஏற்ற கதைதான்.

Gopi Ramamoorthy said...

சூப்பர்

குத்தாலத்தான் said...

தல அருமையா இருக்கு !

கலகலப்ரியா said...

ஹ்ம்ம்... அர்த்தமில்லா கதைகள்ன்னு சொன்னதுக்கப்புறம் அர்த்தத்த கேட்டென்ன.... வந்ததுக்கு மொய்யெழுதிட்டு போவோம்..