அம்மா எனக்கு கடைசியாக
வாங்கி தந்தது
அந்த ஆரஞ்சு கலர் சட்டை
வெளியில் போகும்போதெல்லாம்
அதைத்தான் போட்டுக்குவேன்
அம்மா செத்துபோன
அன்னிக்கு கூடத்தான்
அப்பா கூட சிலசமயம்
தோசை சாப்பிட போவேன்
சித்திக்கு தெரியாமல்
அந்த ஆரஞ்சு கலர் சட்டைக்கு
சாம்பார் ஊத்துப்பா...
அப்பாவை பெருமையாக
பார்த்துப்பேன்
இந்த சனியனை எங்கயாவது
ஒழிச்சுடுங்க
சித்தி திட்டும்போது..
ஆரஞ்சு சட்டையால்தான்
கண்ணை துடைத்துக்
கொண்டிருந்தேன்
பொருட்காட்சிக்கும்
அதே சட்டைதான்
அப்பாவுடன் எடுத்துக்கொண்ட
போட்டோவில்
சட்டை ஏனோ வெள்ளையாயிருந்தது
பேர் என்ன தம்பி?
ஆரஞ்சு கலர் சட்டைன்னு சொல்லுங்க
ஆரஞ்சு கலர் சட்டை பையன்
இங்கு இருக்கிறான்....
திரும்ப,திரும்ப
கேக்கும்போது எனக்கு
பெருமையாயிருந்தது
ஏனோஅப்பாதான்
வரவே இல்லை.....
31 comments:
தண்டோரா, நல்லா இருக்கு.
கவிதையை எழுதிட்டு இரண்டு மூன்று முறை படித்தால் அதிகப்படியான வரிகளை நீக்கிடலாம். உதா : இந்த வரிகள் :
/இந்த சனியனை எங்கயாவது
ஒழிச்சுடுங்க/
எனக்குப் பிடிச்சிருக்கு உங்க கவிதைகள். தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
vanthaachu.... vanthaachu....
அதென்னங்க.. அப்படி எழுதிடறீங்க? திடுக்கென்றே முடியும் படி?
--வித்யா
தூள் நைனா..!
//சித்தி திட்டும்போது..
ஆரஞ்சு சட்டையால்தான்
கண்ணை துடைத்துக்
கொண்டிருந்தேன்//
உள்ளுக்குள் ஏதோ உடைந்தது கண்ணுக்குள் நீர்.
//ஏனோஅப்பாதான்
வரவே இல்லை.....//
இப்படியெல்லாம் எழுதி மனச கஷ்டப்படுத்தக்கூடாது தண்டோரா.
தாயவிட ஒரு தகப்பனுக்கு தான் தன் குழந்தைங்க மேல பேரன்பு இருக்கும்.
இனிமேல் கதை கவிதைகளின் கூட குழந்தைகள் கஷ்டப்படகூடாது என்றே எண்ணுகிறேன்.
இதுவும் நல்லா இருக்கு..
அண்ணே,
உங்களது சிறந்த படைப்புகளில் ஒன்று.
கண்களில் கண்ணிர் துளிகள், படித்து முடித்தவுடன்.
கலக்குங்கள்...
பிரபாகர்.
தண்டாரோ,
மிகவும் அருமையான கவிதை.
ஒரு குறும்படமாக வடிக்கக்கூடிய அளவிற்கு காட்சி விரிகிறது.
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை.
படித்து முடித்தவுடன் கண்களில் கண்ணீர்...
கவிதையின் வரிகளைப்போலவே தலைப்பும் வலிக்கிறது.
romba nalla irukku sir intha kavithai
enakku romba pitichchirukku
en ti rajkumar- roda oru ammaa kavithai patichcha athee unarvu
arumai thandoora
/ஒரு குறும்படமாக வடிக்கக்கூடிய அளவிற்கு காட்சி விரிகிறது.
//
செலவு கொஞ்சம் ஆவுமே அகநாழிகை..:)
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
உங்கள் கவிதையை படித்தவுடன் மனம் கனக்கின்றது
நல்ல கவிதை.
கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லையா!?
பரவாயில்லை
அந்த ஆரஞ்சு சட்டைய காப்பாத்த காணமால் போவது!
வலிக்கிறது...
நானும் ஆரஞ்சு நிற சட்டையில் இருக்கிறேன்
:-(
ரொம்ப நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்.
அந்தரவெளிகளிலேயே வாசிச்சேன் மணி!ஆக சிறந்த கவிதை இது.அடிச்சு கலக்குங்க மக்கா!
மனதைப் பிசையும் சொற்சித்திரம். அருமை.
தண்டு அண்ணே....
ரொம்ப பெரிய ஆளா இருபிங்க போலருக்கு.
சே....ரொம்ப நாள் இந்த ப்லோக்கை மிஸ் பண்ணிட்டேன்.
கவிதை அற்புதம்.
அற்புதமான கவிதை!
வருகைகும்,வாசிப்புக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...
உண்மையிலேயே எளிமை... அருமை.
மற்றவர்கள் சொன்னதுபோல கடைசியில்தான் வைக்கிறீர்கள் குத்து.
அன்பின் தண்டோரா
கவிதை அருமை
ஆரஞ்சு சட்டை தான் கதாபாத்திரம்
அப்பா வரவே இல்லையே -ம்ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் தண்டோரா
Post a Comment