உனக்கு வேண்டுமானால்
வெறும் பெயராயிருக்கலாம்
எனக்கு அது
கையெழுத்தாயிற்றே
குளிக்க அடம்
குழந்தைக்கு
மழையில் ஆனந்தம்
அந்த சிகப்புப்புடவை
இன்னும் உன்னிடம்
உள்ளதா?
என் மனைவிக்கு
அதே போல் ஒன்று
வாங்கி கொடுத்திருக்கிறேன்
புரிவதும்,சேர்வதும்
பின் புரிவதும்
பிரிவதும்
சரிதானே
கனவுகளில்
அடிக்கடி ஒரு
கேள்வி கேட்கப்படுகிறேன்
நல்ல தூக்கமா?
நலமா என்று
பரஸ்பரம் கேட்டுகொண்டோம்
நலம்தான் என்று
நீ பொய் சொன்னாய்
இல்லை என்று
நான் உண்மையை
சொன்னேன்
15 comments:
///குளிக்க அடம்
குழந்தைக்கு
மழையில் ஆனந்தம்///
///புரிவதும்,சேர்வதும்
பின் புரிவதும்
பிரிவதும்
சரிதானே//
நினைவில் தங்கும் வரிகள்...!!!
நன்றி...!!!
///புரிவதும்,சேர்வதும்
பின் புரிவதும்
பிரிவதும்
சரிதானே//
excellent.
கவிதை நல்லா இருக்கு
டூப்ளிகெட் சரக்கு இங்கே
/நலமா என்று
பரஸ்பரம் கேட்டுகொண்டோம்
நலம்தான் என்று
நீ பொய் சொன்னாய்
இல்லை என்று
நான் உண்மையை
சொன்னேன்//
இதுதான் டாப்பு..
//குளிக்க அடம்
குழந்தைக்கு
மழையில் ஆனந்தம்//
அருமை.
//அந்த சிகப்புப்புடவை
இன்னும் உன்னிடம்
உள்ளதா?
என் மனைவிக்கு
அதே போல் ஒன்று
வாங்கி கொடுத்திருக்கிறேன்//
அப்ப வீட்டுக்காரம்மாவுக்கு வாங்கி கொடுத்த எல்லா கலர் புடவைக்கும் இப்படி ஒரு பலபலா காரணம் இருக்கா... ??!! :))
அண்ணே.. எங்கேயோ போய்ட்டீங்க...
நல்லாருக்கு அண்ணே..!
//நீ பொய் சொன்னாய்
இல்லை என்று
நான் உண்மையை
சொன்னேன்//
சரியாகத்தான் சொல்றீங்க
கவிதை அருமை
அண்ணே உங்களுக்கு "யதார்த்த கவி" எனும் பட்டம் கொடுக்கிறேன்.
அன்பு அண்ணன் "யதார்த்த கவி தண்டோரா"வின் இக்கவிதை மிகவும் அருமை.
பிரபாகர்.
இன்னாங்க இப்படி
கலக்குங்க கலக்குங்க
அருமை
யதார்த்த கவி.. வாழ்க்.. வாழ்க..
//அந்த சிகப்புப்புடவை
இன்னும் உன்னிடம்
உள்ளதா?
என் மனைவிக்கு
அதே போல் ஒன்று
வாங்கி கொடுத்திருக்கிறேன்//
நான் எல்லா கலரிலும் வாங்கி கொடுடுதிருக்கிறேன்!
நான் எப்படி ஆரம்பிப்பது!
அந்த கலர் புடவை இன்னும்
உங்களிடம் உள்ளதா!?
சரியாக இருக்குமா!?
ஆன் ரைட்டு...
//குளிக்க அடம்
குழந்தைக்கு
மழையில் ஆனந்தம்//
அருமை.
Post a Comment