ஒரு வெள்ளை தாளை
வீணடிப்பதை விட
இந்த கவிதை
வேறு என்ன உணர்த்துகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது
எதை பற்றியும்
எழுதியாகிவிட்டது
மாறுபட்ட தளங்கள்
மனித உணர்வின்
அடர்த்தியான வடிவங்கள்
அத்தனையும்
பதிவு செய்யபட்டு விட்டன
நுட்பங்கள்..நுணுக்கங்கள்
துல்லியமாக சொல்லபட்டு
விட்டது..
ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்
இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?
அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?
ஒரு ஆறுதல்
பின் பக்கம்
வெறுமையாய் இருப்பதுதான்
19 comments:
நீங்க சின்ன வயசுலேயிருந்தே இப்படித்தானா...?
நித்யன்
//
ஒரு ஆறுதல்
பின் பக்கம்
வெறுமையாய் இருப்பதுதான்//
நானெல்லாம் ரெண்டு பக்கமும் வெறுமையாக தான் வைத்திருக்கிறேன்!
//நானெல்லாம் ரெண்டு பக்கமும் வெறுமையாக தான் வைத்திருக்கிறேன்!//
நல்லவேளை.... நம்ம கிட்ட தாளே இல்லை... ஏதோ பூமிக்கு நம்மால ஆன உதவி... :)
பட்டறை கொஞ்சம் வெறுப்பு வரவழைத்து விட்டதோ??
:))
வித்யா
//ஒரு ஆறுதல்
பின் பக்கம்
வெறுமையாய் இருப்பதுதான்//
ஆஹா... இதம் தண்டோரா
// வால்பையன் said...
நானெல்லாம் ரெண்டு பக்கமும் வெறுமையாக தான் வைத்திருக்கிறேன்!//
அட குடுங்க அருண்... எங்க பாப்பா படம் வரைய பேப்பர் வேண்டுமென்றது
சும்மா சிரிக்க
உஹூம், பேனாவத்தான் புடுங்கனும்னு நெனைச்சேன், பேப்பரைத்தான் புடுங்கனும் போலயே..!
என்னைய புடுங்கியாக்காம வுடமாட்டீங்க போலயே..!
எழுதி தீர்ப்பதற்கு
அவள் நினைவலைகள் துணையிருக்க
ஒற்றைப்பக்கம் மீதமாகவே இருக்கும்
நாட்கள் மிகச்சிலவே
என் இனிய வலை மக்களே மற்றும் அண்ணன் தண்டோரா அவர்களே... இதனோட உண்மை வடிவம் நம்ம பக்கத்திலே இருக்கு....
நாங்க பேப்பரல்லாம் use பண்றதில்லீங்க.. only word document ஹிஹிஹி...
Jokes apart
கவித அருமை தண்டோரா...
//அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?//
முயற்சிகள் தொடரட்டும்... :))
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!
ஏன் இவ்வளவு வெறுமை..?
ம்ம்...
ஆகா கலக்கறீங்களே.
கவிதை நன்று.
மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கின்றீர்கள்..
தல
இந்த பதிவோட ஓப்பனிங், சென்டரிங், பினிஷிங் அல்லாமே சூப்பருபா... அதுவும் பினிஷிங்ல வர்ற இந்த லைன் சூப்பரோ சூப்பர்.
//ஒரு ஆறுதல்
பின் பக்கம்
வெறுமையாய் இருப்பதுதான்//
கலக்குங்க தல....
வாழ்த்துக்கள்...
வருகைக்கும்,வாசிப்புக்கும்
கருத்து பகிர்ந்தமைக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்
//இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?//
எதையும் காட்ட முடியாது. ஒருவருக்கு சிறப்பாகத் தோன்றுவது மற்றவருக்கு..?
நல்ல கவிதை.
வால்பையன் பின்னூட்டத்தை ரசித்தேன்:))!
Post a Comment