Monday, September 7, 2009

சாமி..ஒரு சங்கதி.....கவிதை


சாமி ஒரு சங்கதி
சத்த காது கொடுக்கணும்

பொழப்பு ஒண்ணும்
பெரிசா இல்ல
நல்ல சோத்தை பாத்து
நொம்ப நாளாச்சு
நாய் கடிச்சு வச்சதுதான்
நல்ல துணியாச்சு

தெக்கேந்து பங்காளி
வந்தான்..பளபளன்னு
எப்படிராண்ணேன்

திருவிழாவாம் அங்கிட்டு
கையை மோந்து பாத்தேன்

கறிவாசம் அடிக்குது
ஆறுமாசமாச்சாம்
வாசம் போவலையாம்

ஆறடிக்கு இலை
ஆட்டு கறி சோறு
அதுக்குள்ள
காப்பவுன் கம்மலாம்
இலைக்கடியில
ஆட்டுப்பால் குடிச்சவரு
சிரிச்சாராம்
பொருமலா இருந்துச்சு

பொஞ்சாதிக்கு சீலை
மல்லு வேட்டியாம் இவனுக்கு
குண்டி நோவாம
குந்த வச்சு
வண்டியில கூட்டி போனாங்களாம்
விரல்ல மை வைக்க

சாமி போறாமையா இருக்கு
நம்மூர்லயயும் திருவிழா
வந்தாக்க சொகமா கிடக்கும்தானே

ஊர் தலை சொம்மாத்தானே
கிடக்கு..அதுக்கு
செத்தாவது
சீதக்காதியாவட்டுமே

24 comments:

na.jothi said...

பயமா தான் இருக்குங்க
இந்த கவிதையின் உண்மை எங்கும்
நிறைந்து விடுமோ என்று

பிரபாகர் said...

தண்டோடாஜி...

யதார்த்தங்களை தெளிவாய் தெளித்திரிக்கிறீர்கள்.

//நாய் கடிச்சு வச்சதுதான்
நல்ல துணியாச்சு//

//குண்டி நோவாம
குந்த வச்சு
வண்டியில கூட்டி போனாங்களாம்
விரல்ல மை வைக்க//

//செத்தாவது
சீதக்காதியாவட்டுமே//

ஆதங்கங்கள் அருமை. மிகவும் நன்றாக இருக்கிறது.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//செத்தாவது
சீதக்காதியாவட்டுமே//

ஆவட்டுமே!

கார்க்கிபவா said...

ரைட்டு..

Raju said...

\\நல்ல சோத்தை பாத்து
நொம்ப நாளாச்சு
நாய் கடிச்சு வச்சதுதான்
நல்ல துணியாச்சு\\

நல்ல சோத்தப் பாத்து நாலு நாள் ஆச்சுன்னு எழுதாம, கவிதையின் எதுகை, மோனை மரபை கட்டுடைத்த‌
உங்க நேர்மை எனக்கு புடுச்சுருக்கு தலைவரே..!

உண்மைத்தமிழன் said...

கவிஞரே..

வெளுத்துக் கட்டுகிறீர்கள்..!

இரும்புத்திரை said...

அடுத்த ஆச்சரியம் தண்டோரா. 32 கேள்விபதில் தொடர்களை எழுதி சிரிக்க வைத்தவர்.சமீப காலமாக கவிதைகள் எழுதி குவிக்கிறார்.அண்ணனுக்குள்ள இருந்த இலக்கியவாதிய யாரோ உசுப்பி விட்டு இருக்காங்க.

இப்போ என் பதிவுல இப்படி எழுதினேன்

கவிஞர் தண்டோரா வாழ்க

தராசு said...

ஒரு வரி நல்லாருந்தா மேற்கோள் காட்டலாம்.

முழு கவிதையையும் பின்னூட்டத்துல போட்டு, அப்புறம் அடைப்புக் குறி போட்டு, எதுக்கண்ணே இத்தனை வேலை,

கலக்கல் கவிதைன்னு ஒரே வரியில சொல்லீட்டு போறேன்.

அகநாழிகை said...

தண்டாரோ,
வழக்கம் போலவே கவிதைகளில் உங்கள் தொனி இதிலும் தெரிகிறது. நன்றாக இருக்கிறது.

R.Gopi said...

தண்டோரா... நான் எப்போவுமே சொல்றா போல... இந்த கவிதையும் பட்டைய கெளப்புது தல...

அதுவும், கடைசி இரு வரிகள்..ம்ம்ம்... பின்னுது...

Vidhoosh said...

சாமியோவ் -- தெறிக்கிறது கவிதை. :)


--வித்யா

Ashok D said...

:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

வால்பையன் said...

//வண்டியில கூட்டி போனாங்களாம்
விரல்ல மை வைக்க//

இந்த டுவிஸ்டை கடைசியில் வச்சிருந்திருக்கலாம்!

Anonymous said...

//செத்தாவது
சீதக்காதியாவட்டுமே //

”வலி”மையான வரிகள்.

Anonymous said...

//செத்தாவது
சீதக்காதியாவட்டுமே //

”வலி”மையான வரிகள்.

குடந்தை அன்புமணி said...

ம்... ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...

மணிஜி said...

ஜோதி
பிரபா
கதிர்
கார்க்கி
ராஜீ
உண்மைத்தமிழன்
அரவிந்த்
தராசு
வாசு
கோபி
வித்யா
அஷோக்
வால்பையன்
வடகரைவேலன்
அன்புமணி

மேலான வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்

Unknown said...

ன்னா.... இப்படியே எழுதுங்கன்னா.... அப்பத்தான் ஆட்டோல ஆளனுப்பனும்னு நெனைக்கிறவங்களுக்கெல்லாம் ஒரு டெம்ப்ட்டு வரும்...

Mahesh said...

என்னண்ணே ஆச்சு? ஒரே அய்யனார் கவிதையா இருக்கு !! எளிமையா இருக்கு... நல்லா இருக்கு.

கலையரசன் said...

ஐய்யோ.. ஐய்யோ.. ஐய்யோ..
லேட்டா வந்துட்டனே!
நல்லாயிருக்குண்ணே!!

யாத்ரா said...

அருமையான கவிதை.

ஷங்கி said...

உங்களையும் இனிமே கவிஞரேன்னுதான் கூப்பிடணும். அற்புதம் தலைவரே, ஸாரி கவிஞரே!

நித்யன் said...

தலைவரே...

கலக்கலான வார்த்தைப் பிரயோகம்.

நிதர்சனம் கவிதையெங்கும் நின்று நர்த்தனம் புரிவதால் இந்த வார்த்தைகள் நிலைத்து நிற்கும்.

பிரமாதப்படுத்திட்டீங்க...

அன்பு
நித்யகுமாரன்