Saturday, September 26, 2009

ஜெயாவிடம் 32 கேள்விகள்(எடாகூடமாய்)

டிஸ்கி: அப்பளம் சுடறதை பற்றி பதிவு போடலாம்னு நினைச்சேன்..ஆனா இங்க நம்மாளுங்க அப்பளத்தை துப்பாக்கியால சுட்டுகிட்டு இருக்காங்க..அதனால நான் பார்ப்பனனுக்கு ஜால்ரா இல்லை என்பதை நண்பர்களுக்கு தெரியப்படுத்த சில மாற்றங்களுடன் ஒரு மீள் பதிவு
தமிழ்மணத்தில் ஏதோ எனக்கு பிரச்சனை..அதனால் தலைப்பில் சிறிய மாற்றத்துடன் இணைக்கிறேன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

சொந்தப்பெயர்கோமளவல்லி...சினிமாவுக்குஜெயலலிதா.செல்லமாஅம்மு..அப்புறம் புரட்சித்தலைவி,இதயதெய்வம்,நிரந்தரமுதல்வர்,காளி,கன்னிகாபரமேஸ்வரி,கன்னிமேரி,டான்சிசீ ..சீ..ஜான்சிராணி,அம்மா...
ஆனா எனக்கு பெயர் வாங்கறதை விட அதை கெடுத்துக்கறதுதான் ரொம்பபிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மே 16 ம் தேதி.தேர்தல் முடிவு புட்டுகிட்ட அன்னிக்கு

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும்.ஆனா சில சமயம் அது என் கையெழுத்தே இல்லைன்னு சொல்றது இன்னும் பிடிக்கும்..அதை கோர்ட்லயே சொன்னேன்.மைனாரிட்டி கருணாநிதி சொல்வாரா?

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ரொம்ப ஏழை..மதியம் சாப்பாடு இல்லை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

யாராவது வீடியோ கேசட் கொடுக்க வந்தா அவங்களோடு நட்பு வச்சுக்குவேன்.ஆனா அந்தம்மா புருஷன் கூட சண்டைதான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சொந்தமா ஒரு கடல் வாங்கிட்டு அப்புறம் சொல்றேன்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தலையை.ஏன்னா அவங்க என் கால்ல விழுந்திருக்கும்போது அதுதான் தெரியும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: ஒண்ணுமில்லே
பிடிக்காத விஷயம் : சொல்ல முடியாது..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆடிட்டர் ராஜசேகரை அடிச்ச செருப்பு இன்னும் இருக்கு..கொண்டு வர சொல்லட்டுமா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தலைமை செயலாளர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பச்சை கரண்சியில் தைக்கப்பட்ட பட்டு புடவை..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒப்பாரி

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

திமிரா?சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது தெரியாதா?உனக்கு..ஓடிடு

14.பிடித்த மணம்?

இளநீர்ல ஜின்னை கலந்தா வருமே அது..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

வைகோ..அவர் அழும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா ஒண்ணு..அவர் என்ன பதில் சொல்லனும்.அதையும் நானே எழுதி அனுப்பிவிடுவேன்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சுப்பிரமணியசாமி...நான் அவருக்கு விருந்து வச்சப்ப உப்பு வேணாம்னு சொன்னதையும்,உயர்நீதிமன்றத்துல எங்க மகளிரணி தூக்கி காட்டினதையும் நகைச்சுவையா எழுதியிருந்தாரு

17. பிடித்த விளையாட்டு?

ரம்மி..அதைதான் இப்ப கலைச்சு போட முடியும்..

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை..ஆமாம்..இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

இன்னும் நீ போகலையா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

பறக்கும் பாவை

21.பிடித்த பருவ காலம் எது?

ஆட்சிக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சொத்துகுவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நமது எம்.ஜி.ஆர் ல சொல்றேன்.படிச்சுக்கோ

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

அம்மா தாயே....

பிடிக்காத சத்தம்?

சோறு போடும்மா?


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

நான் ரொம்ப தூரம் வந்துட்டேன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆட்டோ அனுப்பனுமா

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருணாநிதி

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரப்பா அங்கே?ஆதிராஜாராமை கூப்பிடு

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடநாட்டுல என் சொந்தகாரர் ஒருத்தர் வாட்சுமேனா இருக்காரு.அவரோட முதாலாளி ஊருக்கு போகும்பொது நான் அவர் குடிசையில அங்கே போய் தங்குவேன்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இந்த கேள்வியை நீங்க கால்ல விழுந்துதான் கேக்கணும்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சசி..இங்கே வாம்மா..இந்த தண்டோராவை டின் கட்ட சொல்லு..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முடிச்சுடு சசி இவனை

7 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

லக்கி உங்களை ஒரு கேள்வி கேட்டாரே,"அது யோக்கியமா இருக்கறவுங்க கேக்க வேண்டியது, நாம கேக்கலாமா?"

இப்பக் கூட ஒரு பாப்பாத்தியைத் திட்டித் தான், அப்பளம் சுடறதிலேயிருந்து உங்களால தப்பிக்க முடிகிறது!

What an irony:-((

Unknown said...

<<<
சொந்தமா ஒரு கடல் வாங்கிட்டு அப்புறம் சொல்றேன்
>>>
ஹஹஹ ...

எல்லாம் சொந்ததுலதானா??

க.பாலாசி said...

//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடநாட்டுல என் சொந்தகாரர் ஒருத்தர் வாட்சுமேனா இருக்காரு.அவரோட முதாலாளி ஊருக்கு போகும்பொது நான் அவர் குடிசையில அங்கே போய் தங்குவேன்//

நல்ல காமெடி...

பேசாம டிஸ்கியை கடைசியிலேயே போட்டிருக்கலாம்...

அத்திரி said...

அண்ணே அனைத்தும் கலக்கல்

புல் பார்ம்ல இருக்கீங்க போல.......பாத்துண்ணே ஆட்டோ வரப்போவுது

Unknown said...

32 ம் அருமை..
32 ... எகிராம இருந்தா சரிதான்.. :-)

Prathap Kumar S. said...

// 1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சொந்தப்பெயர்கோமளவல்லி...சினிமாவுக்குஜெயலலிதா.செல்லமாஅம்மு..அப்புறம்புரட்சித்தலைவி,இதயதெய்வம்,நிரந்தரமுதல்வர்,காளி,கன்னிகாபரமேஸ்வரி,கன்னிமேரி,டான்சிசீ ..சீ..ஜான்சிராணி,அம்மா...//

ஒரு பெயரை விட்டுட்டீங்க... ரஜீனி வச்ச பேரு... தைரிய லட்சுமி...
நல்லா கும்மியிருக்கீங்க??? பார்த்து வெளியே போகும்போது கவனம்.

தேவன் மாயம் said...

தண்டோரா சாமி!! நடத்துங்க!!!செய்யவேண்டியதைச் செய்தாச்சு!!