Wednesday, September 23, 2009

கரப்பான் தின்னும் கோழிகள்.........




முத்திய முருங்கைகள்
பத்து பறித்து கொள்ளுங்கள்
முக்கியம் அதை
மொகல் தோட்டத்தில்
பறிக்காதீர்கள்
மதசார்பின்மைக்கு
மானபங்கம் வந்துவிடலாம்

க.வ.சு ஐயர் வீட்டு
மாமியிடம் கேளுங்கள்
பத்து என்ன?
அவுத்தே கொடுத்துவிடுவார்
கன்னடத்தை தாய்மொழியாக
கொண்ட ஈரோட்டு தமிழர்
ஆன்மா அமைதியடைய
வேண்டுமல்லவா?

முருங்கைகாய்
பச்சை நிறமாய்
இருக்ககூடாது
குறியீடு என்று
கூப்பாடு போடுவார்கள்
விபூதியோ நாமக் கலரோ
சாலப்பொருத்தம்
எவ்வளவு அடித்தாலும்
தாங்கும் ..திருப்பி
தாக்காது..உத்தரவாதம்
உண்டு....

திண்ணை கதைகள் பேசும்
வெண்ணெய்களை சமையல்
வேலைக்கு அமர்த்தாதீர்
விஷத்தை கலப்பார்கள்
உங்களிடம் வாங்கிய
சம்பளத்தில் அது
வாங்கபட்டிருக்கும்

பத்தாம் நம்பர்
பட்டாக்கத்தி ஒன்று
வாங்கி கொள்ளுங்கள்
பாரிமுனையில் கிடைக்கும்.
கோழி வெட்ட அது
மிக சிறந்தது

அடுத்து சமையலறைக்கு
போவோம்..
பேகான் ஸ்பிரே
நிச்சயம் வேண்டும்
கரப்பான் பூச்சி
தொல்லை அதிகம்
உணவில் விழலாம்

கோழி வாங்கும்போது கவனம்
நாட்டுக்கோழியாக இருத்தல்
நலம்...கொடுந்தீனி
தின்று வளரும்
பிராய்லரை தவிர்த்து
விடுங்கள்..முக்கியமாக
விளம்பரங்களில்
நீங்கள் அதிகம்
பார்த்த பிராண்ட் கோழி

இனி சமைக்கலாம்
தின்று பார்த்துவிட்டு
காத்திருக்கிறது
குறை கண்டுபிடிக்க
ஒரு கூட்டமே

36 comments:

வால்பையன் said...

//தின்று பார்த்துவிட்டு
காத்திருக்கிறது
குறை கண்டுபிடிக்க
ஒரு கூட்டமே//


இது தான் மேட்டரே!


//அவுத்தே கொடுத்துவிடுவார்//

இதில் உள்ளர்த்தம் ஏதும் இருக்கா!?

தேவன் மாயம் said...

இனி சமைக்கலாம்
தின்று பார்த்துவிட்டு
காத்திருக்கிறது
குறை கண்டுபிடிக்க
ஒரு கூட்டமே
///

உங்க சமையல் வாசமே தூக்குதே!

தேவன் மாயம் said...

இந்த சமையல் திண்ணோம்!! தொலைந்தோம்!!

Beski said...

//அவுத்தே கொடுத்துவிடுவார்//
எனக்கும் இதுல சந்தேகம்.

கடைசியில (ஒரு வழியா) புரிஞ்சு போச்சு.

பாலா said...

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

நீங்க எங்கயோ.........போய்ட்டீங்க!

கிருஷ்ண மூர்த்தி S said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......யப்பா! காரம் தாங்கலையே?!
பின்னூட்டத்துல கும்முகும்முன்னு குத்துவாங்கினா இப்படிக் கவுஜ வருமா என்ன!
குத்தினாலும் கவுஜ வருது, வராமப் போனாலும்,ஏன் வரலைன்னு எதிர்க்கவுஜ வருது!

குத்தினது தண்டோராவுல இல்ல? அதான் இப்படி டம டம டமார்னு சத்தமா எதிர் கவுஜ வருது:-)))

நையாண்டி நைனா said...

present sir.

butterfly Surya said...

ஜீ. கலக்கல்.

Raju said...

அண்ணே, இது இன்னுமா முடியல...?

ஈரோடு கதிர் said...

சீக்கிரம் அந்தக் கோழிய தின்னு கழிச்சிருவோம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//விபூதியோ நாமக் கலரோ
சாலப்பொருத்தம்
எவ்வளவு அடித்தாலும்
தாங்கும் ..திருப்பி
தாக்காது..உத்தரவாதம்
உண்டு....//

கண்டிப்பாக .......... வேற எடமா இருந்தா வம்புதான்.பேசுகிற ஆட்கள் எல்லோருமே எவன் திருப்பி பேசமாட்டான்னு பார்த்து பேசுற ஆளுங்கதான்.

R.Gopi said...

த‌ல‌...

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.... அதுல‌யும் இது சூப்ப‌ர்...

திண்ணை கதைகள் பேசும்
வெண்ணெய்களை சமையல்
வேலைக்கு அமர்த்தாதீர்
விஷத்தை கலப்பார்கள்
உங்களிடம் வாங்கிய
சம்பளத்தில் அது
வாங்கபட்டிருக்கும்

ஜூப்ப‌ரு த‌லீவாஆஆஆஅ.....

Unknown said...

கோழிக்கறி போதுங்க, இன்னைல இருந்து வேற ஏதாவது சாப்பிட்டு பார்க்கலாமே..

..??!!

Mahesh said...

நல்ல வேளை... வெஜிடேரியனா இருந்ததால தப்பிச்சேன்.... :)))

உள்குத்து... குத்தோ குத்து !!

அமுதா கிருஷ்ணா said...

புரட்டாசி மாதம் நோ N.V

Barari said...

niram maarinaalum kunam maaraathu ethu paarppana kunam.

தமிழ் அமுதன் said...

//தின்று பார்த்துவிட்டு
காத்திருக்கிறது
குறை கண்டுபிடிக்க
ஒரு கூட்டமே//
;;))

மணிஜி said...

தமிழ்மணம் பரிந்துரை : 9/11

மணிஜி said...

/தமிழ்மணம் பரிந்துரை : 9/11//

எதாவது அர்த்தம் இருக்கா?

மணிஜி said...

/niram maarinaalum kunam maaraathu ethu paarppana kunam//

aamaangaka

Cable சங்கர் said...

இது அதை பத்தியில்லை இல்ல தானே.? தண்டோரா..

Cable சங்கர் said...

ஆனா அதை பத்தி தான் மாதிரி தோணுது.. நல்லாருக்கு..

Mahesh said...

//எவனோ ஒருவன் September 23, 2009 10:32 AM
//அவுத்தே கொடுத்துவிடுவார்//
எனக்கும் இதுல சந்தேகம்.
//

என்னண்ணே புரிஞ்சுது? எனக்கு மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்...

Mahesh said...

// Cable Sankar said...
இது அதை பத்தியில்லை இல்ல தானே.? தண்டோரா..
//

சேச்சே... இது அதைப் பத்தியெல்லாம் இல்லை... ஆக்சுவலா 'அதை'ப் பத்தி... தெளிவாயிடுச்சா?

மணிஜி said...

பத்தியும் இல்லை
வத்தியும் இல்லை
அதைப்பற்றியேதான்

DHANA said...

சபாஷ் சரியான
போட்டி!

சாட்டையடி

DHANA said...

சபாஷ் சரியான
போட்டி!

சாட்டையடி

DHANA said...

சபாஷ் சரியான
போட்டி!

சாட்டையடி

பாலா said...

////////
பத்தியும் இல்லை
வத்தியும் இல்லை
அதைப்பற்றியேதான்
/////////

??????? நான் என்னமோ... ‘உ.போ.ஒ’ படத்து விமர்சனங்கள் பத்தின்னு நினைச்சேன்.

ஓ.. இது அதை “பத்தி” இல்லையா? வேறு எதை பத்தி? பின்னூட்டம்-ன்னு எல்லாம் பேசறாங்க?!

வேறு எதோ... பாலிடிக்ஸ்-னு நினைக்கிறேன்.!!!

எது எப்படியோ...., கவுஜ ஜூப்பரு தல..!!!!

கலையரசன் said...

ம்.. அட்ரா சக்கை!

க.பாலாசி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்...........

நீங்க சமைச்ச கோழி நல்லாருக்கு....ஆனாலும் இறக்கையோட சமைச்சிட்டீங்களே?

மணிஜி said...

மதுவுடன் மாட்டுக்கறி தின்னும் நாத்திக பார்ப்பான் சமைத்தால் கோழிக்கறி அப்படித்தான் இருக்கும் நண்பரே...

ஆரூரன் விசுவநாதன் said...

//முக்கியமாக
விளம்பரங்களில்
நீங்கள் அதிகம்
பார்த்த பிராண்ட் கோழி///


super....

anbudan
aruran

அன்புடன் நான் said...

ரொம்ப காரமா இருக்குங்க.

செந்தில் நாதன் Senthil Nathan said...

அந்நியாயம் யா!! ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடியா இருக்கு.. விட மாட்டீர் போல... எப்படியோ போங்க.. கவிதை technicala சூப்பர்.. functionality wise no comments...:-)

அகநாழிகை said...

தண்டாரோ,
நல்லாயிருக்கு. நடத்துங்க...