காலை நேரம்....நைட்டு மப்பு தெளியாமல் தூங்கிகொண்டிருக்கிறார் துரைமுருகன்...தொலைபேசி அடிக்கிறது...கரகரப்பான குரல்..என்னய்யா இன்னும் எந்திரிக்கலியா?தலைவர்தான்..
அய்யோ..தலைவா..நேத்து கேரள பொதுப்பணித்துறை அமைச்சரோட முல்லை பெரியார் பிரச்சனையை பேசிகிட்டிருந்தேன்..லேட்டாயிடுச்சு..
பிரச்சனை தீர்ந்ததா?
இல்ல தலைவரே ..சரக்கு தீர்ந்துச்சு..டாஸ்மாக்ல பிளாக்ல ..நமக்கு கட்டுபடியாகுமா?அப்புறம் கவுந்தடிச்சு படுத்தாச்சு..சொல்லுங்க தலைவரே?எதுனா முக்கியமான விஷயமா?ஆமாம்யா..நீ உடனே கிளம்பி ஜிஆர்டி ரிசார்ட்டுக்கு வந்துடு.இணைப்பு துண்டிக்கபட்டது..போச்சுடா எதுக்கு வர சொல்றார்..துரை குழம்பும்போது மீண்டும் அழைப்பு..ஆற்காடு..’முருகா ரெடியா இரு.தலைவர் வரசொல்லியிருக்காரு..நா வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..
ஜிஆர்டி. ... .துரை மந்திரிச்ச விட்ட கோழி மாதிரி அமர்ந்திருக்க,ஆற்காடு ஹியரிங் எய்டை கழட்டி நைசாக ஒளித்து வைக்க பார்க்கிறார்..நாயுடு இந்த இடைத்தேர்தல் வேலையெல்லாம் வேணாம்..ஒழுங்கா அதை மாட்டு..ஒரு முக்கியமான விழயத்தை பேசனும்...
என்ன தலைவரே...வீட்டுல எதாவது பிரச்சனையா?எந்த வீட்டுல?
அதெல்லாம் இல்லையா?கை அரிக்குது அதான்..
என்ன தலைவரே?கை அரிக்குதுன்னா காசு வரப்போகுதுன்னு அர்த்தம்..டிஆர் பாலுவுக்கு போன் போடவா?
நீ வேறயா? அந்த ஆளே அவர் நர்சரி ஸ்கூல்ல உட்கார்ந்து அட்மிஷன் பார்த்துகிட்டிருக்காரு..இது அது இல்லையா?ரொம்ப நாளாச்சு..அதான் ஒரு கதை எழுதலாம்னு..
தலைவரே என்ன சொல்றிங்க?நா பேரனை ஸ்கூல்ல கொண்டு விடனும்..விட்டுட்டு இளைஞர் அணி கூட்டம் இருக்கு..அதுக்கு போகணும் என்னைய விட்டுடுங்க.துரை நைசாக கழட்டி கொள்ள பார்க்கிறார்...
யோவ் மணல் லோடு ஏத்தின மாடு மாதிரி திமிராதே..”நீயின்றி நானில்லை”
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி தலைவரே..
யோவ் இதான் அடுத்த படத்தோட தலைப்பு...
ஆற்காடு”என்ன தலை தலைப்புலேயே வில்லங்கத்தை ஆரம்பிக்கிறிங்களே..நீ ன்னா யாரை சொல்றிங்கன்னு ஆறு பேர் சண்டைக்கு வருவாங்களே..என்ன பண்றது?
யோவ்..அது யாருங்கிறது படம் பார்த்தா தெரியும்..
இல்ல தலைவரே...இதுக்கு முன்னாடி பாசக் கிளிகள்,கண்ணம்மா,உளியினோசை இதெல்லாம் யாருமே பார்க்கலை..இதையும் பார்க்க மாட்டாங்க..
அதை அப்புறம் பார்த்துகலாம்..முதல்ல கதையை கேளு..
சரி மாட்டேன்னா விடவா போறிங்க.சொல்லுங்க..
தலைவர் தொண்டையை செருமி”இது கடமை தவறாத ஒரு மந்திரியை பத்தின கதை..
நல்ல வேளை..எங்களை பத்தின உண்மை கதை இல்ல.
குறுக்க பேசின “ரெண்டு வாட்டி கதை கேட்க வேண்டியிருக்கும்”நீதிக்கும்,பாசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்யா இது..
அய்யா...பாசம் பலவிதமா தெரியும்..அதென்ன நீதி..”
நீங்க நெஞ்சுக்கு நீதி படிச்சேன்னு பொய் சொன்னீங்களா?அழகிரிட்ட சொல்லி...
தலைவரே வேணாம் நீங்க கதை சொல்லுங்க..தொலைபேசி ஒலிக்கிறது..துரைமுருகன் எடுத்து பேசுகிறார்.”ஆமாம்மா..ஐயா இங்கதான் இருக்கார்..சரிங்கம்மா...
யார்யா போன்ல?
ஐயா உங்க வீட்டுலேர்ந்துதான்..காலைல வீட்டுல சொல்லாம வந்துட்டீங்களாம்..வழக்கமா சொல்லாம போனா அண்ணா சமாதிக்கு உண்ணாவிரதம் இருக்கத்தான் போவீங்கன்னு அவங்க காபி,டிபன் எல்லாம் எடுத்துகிட்டு அங்க போயிருக்காங்க..தலைவரே பால் பணியாரமாம்..இங்க கொண்டு வரட்டுமான்னு கேக்கறாங்க?
யோவ்..அவுங்க தொந்தரவு தாங்காமத்தான் தமிழ்த்தொண்டாற்றலாம்னு இங்க வந்தேன்..சரி ..கதையை எங்க விட்டேன்?சரி முதல்லேர்ந்து சொல்றேன்..ஆற்காடு வயிற்றிலிருந்து பெரிய சத்தம் வருகிறது..
”தலைவரே..நைட்டு இருட்டுல வேர்கடலைன்னு நினைச்சு மொச்சை கொட்டையை தின்னுட்டேன்..கொஞ்சம் பின்னாடி போயிட்டு வந்துடறேன்....
துரைமுருகன் சே..அரசியல் அனுபவம் அவருக்கு அதிகம்னு காட்டிட்டார்...நம்மதான் இன்னைக்கு அடிமை சிக்கினோம் போல..”
முருகா....ஆற்காடு வரட்டும் அதுக்குள்ள நீ போய் முரசொலி வாங்கிட்டு வந்திடு....மாநில சுயாட்சியை பத்தி ஒரு கட்டுரையும்,முறுக்கு பிழியறதை பத்தி ஒரு கவிதையும் எழுதியிருக்கேன்.துரை போய்விடுகிறார்..அரை மணி ஆச்சு..நாயுடுக்கு பியூஸ் புடுங்கிச்சா..இன்னும் காணும் என்று பாத்ரூமில் பார்த்தால் ஆற்காட்டாரின் வேட்டி வெண்டிலேட்டரில் தொங்கி கொண்டிருக்க அரை டிராயரோடு அவர் எஸ்கேப்...அடடா..அப்ப துரையும் செக்போஸ்ட்ல தப்பிச்சு போன மண்லாரிதான்..என்ன செய்ய என்று முகவாயில் கை வத்து முத்தமிழ் அறிஞர் சிந்திக்க.....டிரஸ்ட்புரத்தில் வைரமுத்துவின் வீட்டில் தொலைபேசி ஒலிக்கிறது...கவிஞரே...கலைஞர் பேசறேன்...செம்மொழியில் சில சந்தேகம்...உடன் விரைந்து மகாலிபுரம் மணலோரம் வா.....
19 comments:
:))))
Very nice. Could have been little longer.
நல்லா இருந்ததுங்க...
ஹா ஹா.. :-)
//நைட்டு மப்பு தெளியாமல் தூங்கிகொண்டிருக்கிறார் துரைமுருகன்//
Startingey pattaiya kelappudhu THALA....
//ஆற்காடு ஹியரிங் எய்டை கழட்டி நைசாக ஒளித்து வைக்க பார்க்கிறார்//
idhuvum super.......
//என்ன தலைவரே?கை அரிக்குதுன்னா காசு வரப்போகுதுன்னு அர்த்தம்..டிஆர் பாலுவுக்கு போன் போடவா?//
ha ha ha ha
//வழக்கமா சொல்லாம போனா அண்ணா சமாதிக்கு உண்ணாவிரதம் இருக்கத்தான் போவீங்கன்னு அவங்க காபி,டிபன் எல்லாம் எடுத்துகிட்டு அங்க போயிருக்காங்க..தலைவரே பால் பணியாரமாம்..இங்க கொண்டு வரட்டுமான்னு கேக்கறாங்க?//
Thala mudiyalaa.......
Opening nallaa irundhadhu.... aanaa finishing illeyeppaa....
Matter ennannaa, innum konjam perusaa irundhaa nallaa irukkum.
//”தலைவரே..நைட்டு இருட்டுல வேர்கடலைன்னு நினைச்சு மொச்சை கொட்டையை தின்னுட்டேன்..கொஞ்சம் பின்னாடி போயிட்டு வந்துடறேன்....//
ஒன்னும் புரியல தல :((((
ஹா ஹா ஹா
செக கலக்கல்!
//Very nice. Could have been little longer.//
still more to come
//நல்லா இருந்ததுங்க...//
நன்றி நைனா...
//ஹா ஹா.. :-)//
வாங்க கடைக்குட்டி...
//Thala mudiyalaa.......
Opening nallaa irundhadhu.... aanaa finishing illeyeppaa....
Matter ennannaa, innum konjam perusaa irundhaa nallaa irukkum.//
இன்னும் முடியல ஜோக்கிரி..அடுத்து வைரமுத்து,பா.விஜய் எல்லாம் வர்றாங்க...
//ஒன்னும் புரியல தல :((((//
சில விஷயங்கள் புரியாம இருக்கிறது நல்லதுதானே...
//ஹா ஹா ஹா
செக கலக்கல்!//
வருக வால்...நன்றி
நல்ல சிச்சுவேஷன் காமெடி. கலக்கல்
:-) சிச்சுவேஷன் காமெடி...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
முரளி கருத்துக்கு நன்றி...தோழர் பைத்தியக்காரன் நன்றி..முதல் கருத்துக்கும்,வருகைக்கும்
இந்த மாதிரி நீங்க அதிகமா அவரை தாக்குறீங்க அதனால அநேகமா உங்கள தான் அடுத்த தடவை கதை விவாதத்துக்கு கூப்பிட போறாரு.
ஒரு சின்ன யோசனை, Archive பகுதியை நீங்கள் தேதி வாரியாக பிரிக்காமல் வெறும் மாத வாரியாக பிரித்தால் அந்தந்த மாதத்தில் நீங்கள் எழுதியதை படிக்க வசதியாக இருக்கும்.
//இந்த மாதிரி நீங்க அதிகமா அவரை தாக்குறீங்க அதனால அநேகமா உங்கள தான் அடுத்த தடவை கதை விவாதத்துக்கு கூப்பிட போறாரு.
ஒரு சின்ன யோசனை, Archive பகுதியை நீங்கள் தேதி வாரியாக பிரிக்காமல் வெறும் மாத வாரியாக பிரித்தால் அந்தந்த மாதத்தில் நீங்கள் எழுதியதை படிக்க வசதியாக இருக்கும்.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சித்து..
ஏங்க .. இந்த மாதிரி பதிவ எல்லாம் வார கடைசியிலோ இல்ல நைட்டோ எழுதுங்க.. ஆஃபிஸ்ல இருந்து சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராங்க!!!
//ஏங்க .. இந்த மாதிரி பதிவ எல்லாம் வார கடைசியிலோ இல்ல நைட்டோ எழுதுங்க.. ஆஃபிஸ்ல இருந்து சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராங்க!!!///
நன்றி..(என் காலர் ட்யூன் குறை ஒன்றும் இல்லைதான்)
Post a Comment