Tuesday, June 16, 2009

மானிட்டர் பக்கங்கள்....3

அந்த குடும்பம் அப்போது மதுரையில் வசித்தார்கள்..வறுமை வாட்டி வதைத்தது...ஏற்கனவே மூன்று பிள்ளைகள்..குடும்பத்தலைவி மீண்டும் கருவுற்றார்.வறுமையின் காரணமாக அக்கருவை கலைக்க முடிவு செய்து மருத்துவரிடம் போனார்கள்..காலதாமதம் ஆகிவிட்டதால் முடியாது என்று மருத்துவர் கை விரித்துவிட்டார்.வேறு வழி தெரியாமல் தெய்வத்திடம் போனார் அக்குடும்பத் தலைவி.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தினமும் காலை,மாலை அங்கபிரதட்சணம் செய்தார்.கரு தானாக கலைந்துவிடும் என்று நம்பினார்.ஆனால் கரு கலையவில்லை....சரி..தெய்வம் நம்மை சோதிக்கிறது என்று விட்டு விட்டார்.குழந்தையும் பிறந்தது..அக்குழந்தை யார் ?பிரபல திரைப்பட இயக்குனர் திரு.மணிரத்னம் தான்..அவர் படம் போலவே வாழ்க்கை கதையும்..

மணிரத்னமும்,வைரமுத்துவும் ஒரு பாடல் கம்போஸிங்கில் இருந்தார்கள்.லஞ்ச் பிரேக் விட்டதும்,மணி வீட்டுக்கு கிளம்பினார்...வைரமுத்து மணி வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்கு..சேர்ந்து சாப்பிடலாமே என்று கூற..சரி..நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்னுட்டு வீட்டுக்கு போன் பண்ணி நா சாப்பிட வரலபோனை வைத்து விட்டிருக்கிறார்.வைரமுத்துக்கு ஆச்சர்யம்..மணீ இவ்ளொ சுருக்கமா பேசி முடிச்சுட்டாரேன்னு..வாயை விட்டு கேட்டும் விட்டார்..ஏன் சார் வேற எதுவுமெ பேசறதுக்கு இல்லையா?வேற எதாவது கால்,விசிட்டர் வந்தாங்களா?மணி சொன்னார்.நானாவது மூணு வார்த்தை சொன்னேன்.எதிர் முனையில் என்ன பதில் சொன்னார் தெரியுமா?ம்ம்....

ஒரு குறும்படம் பார்த்தேன்.மகளிர் கிறித்துவ கல்லூரி விஸ்காம் மாணவி இயக்கிய படம்.தலைப்பு “முடிவு”கதை இதுதான்..சூரியும்,ரெனியும் காதலர்கள்...வெவ்வேறு மதம்.காதலுக்கு கடும் எதிர்ப்பு.தீவிரமாக யோசித்து அந்த முடிவை எடுக்கிறார்கள்..வீட்டுக்கு திரும்புகிறார்கள்.இரவாகிறது.உணவு முடிந்தவுடன் பால் வருகிறது.செல்போனில் பேசுகிறார்கள்.”பயம் இல்லியே?ம்ம்..பயமாத்தான் இருக்கு..ரெனி...நம்ம காதல் ஜெயிக்கணும்” அவங்களுக்கு இது பாடமா இருக்கணும்...இருவரும் பாலில் தூக்க மாத்திரைகளை கலக்குகிறார்கள்.மீண்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டே பாலை எடுத்து.................நான் நிச்சயம் குடிக்க மாட்டார்கள் நன்று நம்பினேன்..அதுதான் நடந்தது..ஆனால் அதன்பின் அவர்கள் செய்த காரியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..”பாலை” இருவரும் தத்தம் தந்தையிடம் கொடுத்து குடிக்க செய்கிறார்கள்....

அந்த மாணவியிடம் உன் காதலுக்கு உன் தந்தை சம்மதிக்காவிட்டால் இப்படித்தான் செய்வாயா?என்று கேட்டேன்..”சான்ஸே இல்லை”எவனோ ஒரு மடையனுக்காக அப்பாவை போய்..இது சும்மா ஒரு வித்தியாசமா இருக்கட்டும்னு இப்படி முடிச்சேன்...


நண்பர் ஒருவர் வீடு பார்க்க சொன்னார்..பெரிசா இல்லாவிட்டாலும் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான்களை எதாவது ரூமில் போட்டு விட்டு நான் எதாவது மேன்ஷனில் தங்கி கொள்வேன் என்றார்.ஒரு வீடு காலியாக இருந்தது.விசாரித்தேன்”ஏங்க வீடு வாடகைக்கு வேணும்” எத்தனை பேர்”....ஆள் தங்க மாட்டாங்க” பொருளையெல்லாம் போட்டு வைக்க இடம் வேணும்”... சாரி..”சாமான் போட இடம் தர மாட்டோம்..வேணும்னா குடித்தனம் நடத்திக்கலாம்”” இதில் ஏதோ தப்பு இருப்பதாக மனசு சொல்கிறது..புத்தி மறுக்கிறது.."(நன்றி லக்கி”குறியீடுகள்”பதிவு)

ஒரு டவுட்(மொக்கையா)....

நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?

22 comments:

Raju said...

செம போதை மானிட்டர்.
கடைசி டவுட்டு சூப்பரு.

butterfly Surya said...

கொத்து புரோட்டாவும் மானிட்டரும் பதிவுலகையே கலக்குது..

சூப்பர்.

தொடருங்கள்.

நையாண்டி நைனா said...

/*
நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?
*/
"பிராண்டி" வைக்க வந்திருக்கீங்கன்னு நெனச்சுகுவாங்க...

வால்பையன் said...

//மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தினமும் காலை,மாலை அங்கபிரதட்சணம் செய்தார்.கரு தானாக கலைந்துவிடும் என்று நம்பினார்.ஆனால் கரு கலையவில்லை....சரி..தெய்வம் நம்மை சோதிக்கிறது என்று விட்டு விட்டார்.குழந்தையும் பிறந்தது..அக்குழந்தை யார் ?பிரபல திரைப்பட இயக்குனர் திரு.மணிரத்னம்//

மீனாட்சி இப்படி சோதிப்பான்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்கல்ல!

வால்பையன் said...

//நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?//

வீட்ல துப்பினா வீடு திவாலா போகும்!
நம்ம நாட்ல துப்பினோமே நாடு திவலா போயிருச்சா என்ன?

கலையரசன் said...

//”சான்ஸே இல்லை”எவனோ ஒரு
மடையனுக்காக அப்பாவை போய்..//

இப்டி சொல்லற டுபாங்காஞ்சி தான்
முதல்ல அப்பனுக்கு வெடி வைக்கும்!!

எனக்கு ஒரு டவுட்(மொக்கையா)....
மானிட்டர் மானிட்டருன்னு சொல்ராங்களே?
17 இன்ச்சா 19 இன்ச்சா?

கலையரசன் said...

ஓட்டு போட்டாசு தல..
நைசா எட்டி பாருங்க!
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

மணிஜி said...

/செம போதை மானிட்டர்.
கடைசி டவுட்டு சூப்பரு//

டக்ளஸ்...அடிக்கடி வா..(அடிக்க இல்ல)

மணிஜி said...

//கொத்து புரோட்டாவும் மானிட்டரும் பதிவுலகையே கலக்குது..

சூப்பர்.

தொடருங்கள்//

சூர்யா...டிவிடி என்னாச்சு?

மணிஜி said...

//*
நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?
*/
"பிராண்டி" வைக்க வந்திருக்கீங்கன்னு நெனச்சுகுவாங்க//

தட்ஸ் நைனா..நன்றி

மணிஜி said...

///மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தினமும் காலை,மாலை அங்கபிரதட்சணம் செய்தார்.கரு தானாக கலைந்துவிடும் என்று நம்பினார்.ஆனால் கரு கலையவில்லை....சரி..தெய்வம் நம்மை சோதிக்கிறது என்று விட்டு விட்டார்.குழந்தையும் பிறந்தது..அக்குழந்தை யார் ?பிரபல திரைப்பட இயக்குனர் திரு.மணிரத்னம்//

மீனாட்சி இப்படி சோதிப்பான்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்கல்ல//


வாலு...ஏன் மணியை புடிக்காதோ?

மணிஜி said...

///”சான்ஸே இல்லை”எவனோ ஒரு
மடையனுக்காக அப்பாவை போய்..//

இப்டி சொல்லற டுபாங்காஞ்சி தான்
முதல்ல அப்பனுக்கு வெடி வைக்கும்!!

எனக்கு ஒரு டவுட்(மொக்கையா)....
மானிட்டர் மானிட்டருன்னு சொல்ராங்களே?
17 இன்ச்சா 19 இன்ச்சா//


கலை..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?..இன்ச் இல்ல அவுன்ஸ் கணக்கு....

Vishnu - விஷ்ணு said...

//நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?//

எதுக்கும் டிரை பண்ணி பார்ப்போம்.

மணிஜி said...

///நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?//

எதுக்கும் டிரை பண்ணி பார்ப்போம்//

அதுக்கு முன்னாடி உங்க அக்கவுண்ட்ல பணம் இருந்தா எடுதுடுங்க..

Jackiesekar said...

நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?--//

போதை ஏறிப்போச்சு தலைவா???

Cable சங்கர் said...

கடைசி கேள்வி மாறி புத்திசாலிதனமான கேள்வியெல்லாம் நம்மள் மாதிரி புத்திசாலிங்களுக்குதான் வரும் :)

முரளிகண்ணன் said...

மணி மேட்டர், நகம் மேட்டர் சூப்பர்.

வீடு மேட்டர் :-)))

Unknown said...

பதிவு நல்லாருக்கு.ரசித்தேன்.

//நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா//

ஸ்டேட் பாங்க் ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாம் நகத்தை கடிச்சுத் துப்பிட்டா பேங்க் திவாலாயிடும்

மணிஜி said...

//நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?--//

போதை ஏறிப்போச்சு தலைவா???//

சண்டை முடிஞ்சுதா.. ஜாக்கி..

மணிஜி said...

//கடைசி கேள்வி மாறி புத்திசாலிதனமான கேள்வியெல்லாம் நம்மள் மாதிரி புத்திசாலிங்களுக்குதான் வரும் :)//

இதைத்தான் எங்க ஊருல சந்துல பேந்தான்னு சொல்வாங்க...

மணிஜி said...

//மணி மேட்டர், நகம் மேட்டர் சூப்பர்.

வீடு மேட்டர் :-)))//
முரளி..நா அந்த பதிவையே டெலிட் பண்ணிட்டேன்..சும்மா பயப்படாம வாங்க

மணிஜி said...

//பதிவு நல்லாருக்கு.ரசித்தேன்.

//நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா//

ஸ்டேட் பாங்க் ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாம் நகத்தை கடிச்சுத் துப்பிட்டா பேங்க் திவாலாயிடும்///


அண்ணே...நீங்க “வர்ஜின்”மொபைலா(மாத்தி யோசிக்கிறிங்களே)