Friday, June 12, 2009

அன்புமணி ராமதாசிடம் 32 கேள்விகள்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

அன்புமணி..அய்யா வச்ச பேர்..அப்புறம் அந்த காட்டையெல்லாம் அழிச்சப்புறம்”பசுமை நாயகன்”..சின்னய்யான்னு கூப்பிடுவாங்க....என் தலையெழுத்து..இப்போ முன்னாள் அமைச்சர்..


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சிரிச்சது எப்போன்னு கேள்வியை மாத்தி கேளுங்க...முச்சுடூம் அழுதுகிட்டுத்தான் இருக்கேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எய்ம்ஸ்ல வேணுகோபால தூக்கறதுக்கு போட்ட கையெழுத்து பிடிக்கும்...ஆனா இப்ப பாருங்க..அதே எய்ம்ஸ்ல செக்யூரிட்டி என்னைய உள்ளே விடறதுக்கு பேர் எழுதி கையெழுத்து போட சொல்றான்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

கூழ்தான்...சின்ன வயசுல எங்க வீட்டுல விறகடுப்புதான்..நாந்தான் போய் சுள்ளி பொறுக்கிட்டு வருவேன்..எங்கம்மா அதை எரிச்சுத்தான் கூழ் காய்ச்சுவாங்க..அப்புறம் கொஞ்சம் பெரியவனா ஆன உடனே எங்க ஆளுங்கல்லாம் மரத்தையே வெட்டி எங்க வீட்டுல போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டாங்க....நாங்க அதை கொளுத்தி குளிர் காய்வோம்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சின்ன வயசுல எங்க வீட்டுக்கு கோடாரி செய்றவங்க நிறைய பேர் வருவாங்க...ஆனா எங்க அய்யா “நீ அவங்க கூட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லிடுவாரு...சீட்டு மட்டும் தரேன்னு சொன்னா நா கண்டக்டர் கிட்ட கூட நட்பு உடனே வச்சுக்குவேன்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அதை பற்றி அடுத்த வாரம் பாமக பொதுக்குழுவில் இரண்டு பொட்டி வச்சு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்போம்....


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

காலை...ஏன்னா...வாரி விடறதுக்கு வசதியா இருக்கா..இல்லையான்னு தெரியணும் இல்ல.....


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நான் யார் வீட்டுக்கு போறதா இருந்தாலும் கொல்லை பக்கமா சுவரேறி குதிச்சு போய் ஒரு 5 நிமிஷத்திலே அங்க இருக்கறதை வழிச்சு சாப்பிட்டுட்டு ஓடியாந்துடறது ரொம்ப..ரொம்ப பிடிக்கும்...
பிடிக்காத விஷயம் : எங்கய்யா...எப்ப பாரு..தம்மடிக்காதே..தண்ணியடிக்காதே..அப்படி சொல்றது பிடிக்காது..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு அரசியல்வாதியின் மகளாக அவர் இருந்தும்..எனக்கு அரசியல் பற்றி ஒண்ணுமே தெரியாதுங்கறதை கண்டுக்காம இருக்கிறது..பிடிக்கும்..தொணத் தொணன்னு தமிழ்லேயே பேசிகிட்டு இருப்பாங்க..அது பிடிக்காது....


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு கோட்டு,சூட்டு தச்சு கொடுக்குற டைலர்...அவர் டில்லில இருக்கார்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வேட்டிய தார்பாச்சு கட்டி..தலைல துண்டு கட்டியிருக்கேன்....எங்கய்யா கட்சி வேலையை கவனின்னு சொல்லிட்டாரு..அதான் மரம் வெட்ட கிளம்பிட்டிருந்தேன் ..நீங்க வந்துட்டீங்க..போய் ஊர் பூரா “தண்டோரா” போடுங்க...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஊரோரம் புளியமரம்....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அநேகமா ஒரு வருஷத்துக்கு பச்சைதான்....மஞ்சள் பிடிக்கவும் ஆசை..அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியல...(இதுல உங்க கேள்விக்கு பதில் இருந்தா எடுத்துகங்க...இல்லன்னா புலம்பறார்னு வுட்டுடுங்க)


14.பிடித்த மணம்?

வாக்ஸின் வாசனை ரொம்ப பிடிக்கும்..இன்னும் அனைத்து மருந்து வாசனையும்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இரா.வேலு அண்ணன்...டில்லிலேர்ந்து ரயில்ல திரும்பி வரும்போது லாப்-டாப்பில் எழுதி போஸ்ட் பண்ணது..”சனிப் பொணம்..தனிப் போகாது”ங்கிற தலைப்புல எழுதுனது..ஒரே தத்து(பித்து)வமா இருந்தது...
17. பிடித்த விளையாட்டு?

நானு,மணி அண்ணன்,குரு அண்ணன் எல்லாரும் மரத்துக்கு மரம் தாவி விளையாடுவோம்...அது பிடிக்கும்..ஆனா எங்கய்யா சரியா தாவத் தெரியலைன்னா “சாட்டை” யால அடிப்பாரு....


18.கண்ணாடி அணிபவரா?


ஸ்விஸ் அகெளண்ட் நம்பர் ரொம்ப பொடிசா இருக்கும்..அதை கரெக்டா எழுதலைன்னா பணம் கிரெடிட் ஆகாது..அப்ப மட்டும் கண்ணாடி போடுவேன்....


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காக்கி டிரெஸ் போட்டு கிட்டு (புள்ளி)விவரமா வசனம் பேசற படம் பிடிக்கும்.ஒரு தடவை விருதாசலத்துல நேராவே ஷூட்டிங் பார்க்க போய் முதுகுல லத்தி அடி வாங்கிட்டு வந்தோம்....

20.கடைசியாகப் பார்த்த படம்?

தங்கப்பதக்கம்..அதுல ஒரு பாட்டு ..நல்லதோர்குடும்பம்...பல்கலைகழகம்...இருந்தா அந்த குடும்பம் மாதிரி இருக்கணும்...


21.பிடித்த பருவ காலம் எது?

”எய்ம்ஸ்” ல அதாவது ஒரு குறிக்கோளோடு இருந்த காலங்கள்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

2016 ஆம் ஆண்டுக்கு எங்கய்யா ஒரு மாதிரி பட்ஜெட் போட்டிருக்காரு...அதை படிக்க சொல்லி கொடுத்தார்...ஆனா நா சும்மா படிக்கிற மாதிரி நடிக்கிறேன்....


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அஞ்சு வருஷமா டெய்லி டெஸ்க்-டாப்பையே மாத்திக்கிட்டிருந்தோம்...


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

ஊசி போடும்போது குழந்தைங்க அழற சத்தம் புடிக்கும்...அழுவுதென்னு ஊசி போடாட்டி காசு யார் கொடுப்பாங்க.....
பிடிக்காத சத்தம்?

”வேணுகோபாலாட” கார் சத்தம் பிடிக்காது


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமேசான் காட்டுக்கு ஒரு முறை அய்யா கூட டிரெயினிங் போனேன்.....
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படின்னா??...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு வருஷத்துக்கு இன்னும் 365 நாள்தான் முட்டாள்தனமா சொல்றதை ஏத்துக்கிட முடியல...


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஆபரேஷன் பண்ற கத்தியை ஒரு வாட்டி முழுங்கிட்டேன்...அதுவா இருக்குமோ..?


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சகாரா...அங்கதான் மரமே இருக்காது....


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மேல இருக்கிற “29” பதில்லேர்ந்து உன்னால அதை கண்டு பிடிக்க முடியலன்னா..நீ என்னைய விட முட்டாள்.......

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சர்க்கஸூக்கு போறது....


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இனிமே கஷ்டம்தான் ...

23 comments:

முரளிகண்ணன் said...

செமை கலக்கல். ஜெவுக்கும் இதுக்கும்
நல்ல போட்டி. அடுத்து யாரு?

கேப்டனா?

ப்ரியமுடன் வசந்த் said...

//15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...//



நைய்யாண்டி மேளம் கொட்டிவிட்டீர்கள்

Unknown said...

அண்ணே சூப்பர்!நல்ல கற்பனை.
பாத்துண்ணே ஆட்டோல ஆள் வருவாங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுவும் சூப்பர் :)

அக்னி பார்வை said...

கன்பார்ம் ஆட்டோ தான்

வால்பையன் said...

//காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...//

இது தான் நச்சு!

தனக்கு தானே ஆப்பு வச்சிகிட்ட குரங்கு ஞாபகத்துக்கு வருது!

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு அத அடிச்சு உங்க நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்

மணிஜி said...

ஆட்டோ வருதோ..சுமோ வருதோ..நீங்க வந்ததுல சந்தோஷம்...

butterfly Surya said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அய்யா.. முடியலை.

அந்த அய்யாவை சொல்லலை.

Cable சங்கர் said...

தைரியமிருந்தா கலைஞரை கேள்வி கேளுங்களேன்.

(எப்படி உசுப்பேத்தி விட்டேன் பாத்தீங்களா..)

Raju said...

\\கேப்டனா?\\
என்னாமா கொளுத்தி போடுறீங்க அண்ணே..!

மணிஜி said...

//தைரியமிருந்தா கலைஞரை கேள்வி கேளுங்களேன்.

(எப்படி உசுப்பேத்தி விட்டேன் பாத்தீங்களா..)//

உடம்பை புண்ணாக்காம உட மாட்டிங்க..ஒரு முடிவோடத்தான்யா திரியிராங்க...

மணிஜி said...

வண்ணத்துபூச்சியார்,டக்ளஸ்..வருகைக்கு நன்றி....

மணிஜி said...

//இதுவும் சூப்பர் :)//

மோதிரக்கை..நன்றி,,சுந்தர்ஜி...

மணிஜி said...

//செமை கலக்கல். ஜெவுக்கும் இதுக்கும்
நல்ல போட்டி. அடுத்து யாரு?//

முரளி..நன்றி.....

மணிஜி said...

//அண்ணே சூப்பர்!நல்ல கற்பனை.
பாத்துண்ணே ஆட்டோல ஆள் வருவாங்க.//

ஓடிடுவோமில்லே...அடிக்கடி வாங்க..(அடி,கிடி வாங்கறனான்னு பார்த்துட்டு போகத்தான்)

மணிஜி said...

தல..(வால்)..நன்றி.(நைட்டு எத்தனை மணிக்கு முடிஞ்சுது?)

வால்பையன் said...

//தல..(வால்)..நன்றி.(நைட்டு எத்தனை மணிக்கு முடிஞ்சுது?) //

நைட்டு 12 மணியாச்சு! பத்தாம வீட்ல இருந்த ஒரு காலும் முடிஞ்சது!

selventhiran said...

அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் அவர் பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த ஐ.எம்.ஏவின் பழம் பெருச்சாளிகளை எதிர்த்தார் ஏனெனில் அவர் மருத்துவ வசதிகள் முற்றிலும் மறுக்கப்பட்ட கிராமத்து மக்களின் நிலை குறித்து கவலைப்பட்டார் ஏனெனில் அவர் பொது இடங்களில் புகைப் பிடிக்கும் ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க முயற்சித்தார் ஏனெனில் அவர் சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கப் போவதில்லை என அறிவிக்க வைத்தார் ஏனெனில் அவர் மது எனும் சாத்தானை அழிக்கத் துடிக்கிறார் ஏனெனில் அவர் புகையிலையின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க நினைக்கிறார் ஏனெனில் மிக அரிதாகவே சாத்தியப்படும் துறை சார்ந்த அறிவும் கல்வியும் அக்கறையும் உள்ள அமைச்சராக அவர் இருக்கிறார். (பிகு: இந்தியா டூடேயில் காலம்காலமாக இப்படி 'ஏனெனில்' போடுகிறார்களே... அதான் நானும் கொஞ்சம் முயற்சித்தேன்)

போன ஜென்மத்தில் அன்புமணி பற்றி எழுதிய குறிப்பு... சும்மா ஒரு வெளம்பரத்துக்காக கமெண்டா போட்டுட்டேன்.

selventhiran said...

அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் அவர் பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த ஐ.எம்.ஏவின் பழம் பெருச்சாளிகளை எதிர்த்தார் ஏனெனில் அவர் மருத்துவ வசதிகள் முற்றிலும் மறுக்கப்பட்ட கிராமத்து மக்களின் நிலை குறித்து கவலைப்பட்டார் ஏனெனில் அவர் பொது இடங்களில் புகைப் பிடிக்கும் ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க முயற்சித்தார் ஏனெனில் அவர் சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கப் போவதில்லை என அறிவிக்க வைத்தார் ஏனெனில் அவர் மது எனும் சாத்தானை அழிக்கத் துடிக்கிறார் ஏனெனில் அவர் புகையிலையின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க நினைக்கிறார் ஏனெனில் மிக அரிதாகவே சாத்தியப்படும் துறை சார்ந்த அறிவும் கல்வியும் அக்கறையும் உள்ள அமைச்சராக அவர் இருக்கிறார். (பிகு: இந்தியா டூடேயில் காலம்காலமாக இப்படி 'ஏனெனில்' போடுகிறார்களே... அதான் நானும் கொஞ்சம் முயற்சித்தேன்)

போன ஜென்மத்தில் அன்புமணி பற்றி எழுதிய குறிப்பு... சும்மா ஒரு வெளம்பரத்துக்காக கமெண்டா போட்டுட்டேன்.

Jackiesekar said...

.கடைசியாக அழுதது எப்பொழுது?

சிரிச்சது எப்போன்னு கேள்வியை மாத்தி கேளுங்க...முச்சுடூம் அழுதுகிட்டுத்தான் இருக்கேன்..

இந்தக்கேள்விக்கான பதிலை ரசித்தேன் தண்டோரா

R.Gopi said...

//15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...//

***********

Thala, this is ULTIMATE comedy from u...........

உண்மைத்தமிழன் said...

தூள்.. தூள்.. தூள்..

அசத்தல் தண்டோரா ஸார்..!

இதையும் ஏதாவது எதிர்ப்பு வந்துச்சுன்னு சொல்லி நீக்கிராதீங்க..!