1997 ஆம் வருடம் . கோவை ஷீலா நர்சிங்ஹோம் . நண்பரின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார் . தலைப்பிரசவம் . டென்ஷன் . குழந்தை பிறந்தாயிற்று . அங்கிருந்த செவிலியர்கள் சொன்னது . “ சார் .. எடுத்துகிட்டு போறீங்களா....வேண்டாம் . உங்களால் வளர்க்க முடியாது . mere vegetable.. இங்க நாங்க பார்த்துக்கறோம்.. நண்பரும் , அவர் மனைவியும் உறவினர்கள்.. இரத்த சம்பந்தங்களுக்குள் திருமணம் என்றால் இந்த ரிஸ்க் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள் . நண்பரும் , அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள் . நமக்கு கிடைக்க கொடுத்து வைத்தது இது . மனமுவந்து ஏற்றுக்கொள்வோம் என்றார்கள் .
விதம் , விதமான வியாதிகளின் பெயர்கள் . 8 சர்ஜரிகள் . முகசீரமைப்பு நிபுணர் டாக்டர் பாலாஜி .. “ஷீ ஈஸ் மை சைல்ட்” என்றார். இடுப்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்து , முகவாய் கட்டையில் பொருத்தி கொஞ்சம் சீர் செய்தார் . கண்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க ஒரு சர்ஜரி . குழந்தையின் உடம்பில் போதுமான சக்தி இல்லை . இடைவெளி விட்டு ஆபரேஷன்கள் . சளைக்காமல் போராடினார்கள் இருவரும் . பணப் பற்றாக்குறை வேறு . இதற்கிடையில் குழந்தைக்கு எந்த காம்ப்ளெக்சும் ஏற்படகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் . ஏன் மற்றவர்கள் போல் நான் இல்லை என்று அவள் நினைப்பதற்கு பதில் . ஏன் மற்றவர்கள் என்னைப்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள் . இதற்கிடையில் இரண்டாவது குழந்தையும் . அது இவளுக்கு நேர் எதிர் . கொள்ளை அழகு . பயங்கர சேட்டை . எங்கே , எப்படி , யாரால் வாழ்க்கையின் கணக்குகள் வகுக்கப்படுகின்றன என்பதில்தான் எவ்வளவு ரகசிய சுவாரசியங்கள்.. முதல் குழந்தையின் பெயர் பவித்ரா .. யூரின் பிளாடரில் பிரச்ச்னை..ஒரு நாளைக்கு நான்கு ஜட்டிகளை நணைத்து விடுவாள் ஸ்கூலில் .. அதற்கு ஒரு அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட்..அந்த மருத்துவர் 60 நாள் அவகாசம் கேட்டார் .. நண்பர் அரவிந்த அன்னையின் பக்தர் .. அர்ப்பணம் பன்ணி விட்டேன் அவளை மணி என்றார் . டாக்டர்கள் நம்பவில்லை . அவள் ஸ்கூலுக்கு எடுத்து செல்லும் ஸ்பேர் ஜட்டிகள் அப்படியே திரும்ப கொண்டு வருகிறாள் . 45 நாள் ட்ரீட்மெண்ட்டில் .. ஹார்மோன் குறைபாடு நிறைய.. எதாவது மிராக்கிள் நடந்தால் மட்டுமே என்றார்கள் ஸ்பெஷலிஸ்ட்கள்..
நண்பர் ஒரு விளம்பர ஏஜன்சியின் உரிமையாளர் . நான் அவருக்கு கிரியேடிவ் டைரக்டர் . ஈரோடு கிளையண்ட் மீட்டிங் முடித்து விட்டு கோவை செல்ல ஆயத்தமானோம் .. நண்பருக்கு அழைப்பு வந்தது .. குழந்தை பெரியவளாகி விட்டாள் . கைனகாலஜிஸ்ட்டும் உறுதி செய்து விட்டார்கள் .. ஆனால் அவர்களால்நம்பவே முடியவில்லையாம் .. எங்கிருக்கிறது சூத்திர கயிறு ? சுண்டுவது யார் ? நண்பருக்குள் இருந்த வியாபாரி மறைந்தான் .. தகப்பன் விழித்துக் கொண்டான் “மணி..இப்பயே அவளை பார்க்கணும்யா என்றார்.. அதான் இப்ப முதல்ல..என்றேன்.. சென்னை...
ஹெப்சிகா ஏசுதாசனின் “அநாதை” நாவலைப்பற்றி ரமேஷ் வைத்யா மிகவும் சிலாகித்தார் .. ஆனால் கிடைக்கவில்லை.. புத்தம் வீடு கிடைத்தது..இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. 1964 ல் எழுதப்பட்ட நாவல்.. ஆனால் இன்னும் ஃப்ரெஷாக இருக்கிறது .. திரைப்படமாக உகந்த கதை.. நமக்கு அதிர்ஷடமிருக்கிறதா ..பார்ப்போம்...
அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.. நெற்றியை சுருக்கியபடி “நீங்க....அவர்தானே..என்றார் .. ஆமாம் என்றேன்..அவர் கரங்கள் நடுங்கின.. உதடுகள் துடித்தன.. கண்களில் நதிப்பிரவாகம்.. ஆனந்தமா..அழுகையா தெரியவில்லை..நாக்கில் அதை ருசித்துப் பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன்.. ஆனந்த கண்ணீர் கொஞ்சம் இஞ்சி மரப்பா சுவையில் இருக்குமாம்.. ஒரு எதிர்பாரா தருணத்தில் காதலியை இழுத்து , உதடு கவ்விப் பாருங்கள்.. அப்போது அவள் கண்ளில் வரும் நீர் இஞ்சி முரப்பாவின் ருசியை ஒத்திருக்கும்.. புன்னகைப்பூ என்ற திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு. நந்தாவும் ,காவிரியும்..நல்ல படம்.. சரி மேட்டருக்கு வருவோம்.. என் கைகளை கண்ணில் ஒற்றிக்கொண்டார் .. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சார் என்றேன்..குழந்தையாய் தேம்பியபடி.” இன்னிக்கு நான் இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானியாக இருக்கிறேன் என்றால் , அதற்கு நீங்களும் , உங்கள் பிளாக்கும்தான் காரணம் என்றார்..
நான் இப்படி சொன்னால் நீங்கள் அடிக்க வருவீர்கள்.. ஆனால் ஒரு நண்பர் கேட்டார்..ஏன் தண்டோராங்கிற பேரை மாத்திகிட்டீங்க ?
பதிவுலக நண்பர் ஒருவர் ..அவர் வீட்டிலும் எல்லோரையும் எனக்கு தெரியும்..மனைவி, மாமியார் வகையாறக்கள்.. ஆனால் தண்டோராவாக.. அவர்களழைப்பதும் அப்படியே.. நண்பரின் வீடு எங்கள் பகுதியில்தான்.. ஒரு நாள் மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தேன்.. ஒரு குரல் ..சத்தமாக “தண்டோரா சார் “ ஒட்டு மொத்த கூட்டமும் வேடிக்கை பார்க்க, நான் வண்டியை நிறுத்தினேன்.. என் மகள் தலையில் அடித்துக்கொண்டாள்.. நண்பரின் மாமியார்தான் அழைத்தது.. நான் அருகில் சென்று என் பெயர் மணிகண்டன்.. மணின்னு கூப்பிடுங்க என்றேன்..
சரிங்க தண்டோரா சார் என்றார் அவர்..
எல்லாம் கொடுத்தாயிற்று.. அடுத்த ஆட்சியில் தூக்கு சட்டியில் சோறே வீட்டிற்கு வந்துவிடும்..அதான் கழக, கலைஞரின் ஆட்சி என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒரு அமைச்சர் பெருமான்.... அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி , கறுப்பு சாயம் தடவி உலா வரும் பொதுப்பணி பிடுங்கப்பட்ட அமைச்சர் அவர் .. சோற்றால் அடித்த பிண்டங்களே.. ஓசி வாங்கி தின்னுபுட்டு , சந்ததிகளை பெருக்கி கொண்டு வீட்டோடு இருங்கள்.. நாங்கள் ஊரை அடிக்கிறோம்... ஒரு ரூபாய்க்கு உங்கள் உலைக்கு அரிசி கொடுக்கிறோம்..அப்படியே எங்கள் சந்ததிகளுக்கு பெருக்கி கொள்கிறோம் என்கிறார்கள் .. பார்க்கலாம்..பந்து எந்தப் பக்கம் என்று ...
கடவுள் வருவார் காத்திரு
எனக்குள் ஏதோ சொல்லியது
கையில் கிடைத்த காகிதத்தில்
கடவுள் போல்தான் தெரிந்தது
புருவமும் , கோடான நாசியும்
சிலுவையைப்போல்.
இன்னொரு கோணத்தில்
பள்ளி கொண்ட பெருமாளாகவும்..
உனக்கான கோதுமையில்
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்ற குரான் வாசகமும் மங்கலாய்
குரலில் சலிப்பும்
கன்னக்கதுப்பில் கவலையுமாக
சார் நேரமாகிறது ..காசு கொடுங்கள்
என்றான் சுண்டல்கார சிறுவன்..
கடைசித்தாளை எடுத்து நீட்டும்போது
இருவரும் ஒருங்கே கண்டோம்
கடவுளை...
16 comments:
//கடைசித் தாளை எடுத்து
நீட்டும்போது
இருவரும் ஒருங்கே கண்டோம்
கடவுளை...//
கடைசி இருப்பை நீட்டிப் பொருட் புரிதல் கொள்கையில், ஆஹா!
கவிதையும் எழுதுவீர்களா? (உங்கள் பழைய பதிவுகளை எல்லாம் படிக்கவேண்டும் போலிருக்கே!)
//புருவமும் , கோடான நாசியும் சிலுவையைப்போல்//
//இன்னொரு கோணத்தில்
பள்ளி கொண்ட பெருமாளாகவும்..
உனக்கான கோதுமையில்
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்ற குரான் வாசகமும்//
இப்படி, ஒரு சமன்செய்து சீர்தூக்கல்; இறுதி அடிகளின் கருத்துப் பாய்ச்சலுக்கான வீடுகட்டல்!
உங்கள் மானிட்டரின் க்டைசிப் பத்தி, மணிஜீ, வெறும் ஒரு பத்திதானா, அல்லது எனக்குத் தோன்றுவது போல் ஒரு கவிதையா?
*
இந்த இடுகைக்கு முந்திய 'கால்கள்' என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அதை மனதில் உருட்டிக்கொண்டே இருந்தேன், அதற்குள் அடுத்ததைப் பதிவேற்றிவிட்டீர்கள். அம்மா, அப்பா கால்களில் வணங்கித் தொடங்கி, பூரணியின் பிஞ்சுக் கால்களில் கொஞ்சி, மெட்டி, கொலுசு என உலகவிசயம் தொட்டு, இழப்பு, பிறவி என நமது கலை-ஞானப் புரிதலைப் பழிப்புக்காட்டி... என்ன சொல்ல... ('நடத்தை', 'ஒழுக்கம்' 'பயணம்' 'உறுதிப்பாடு' இன்னபலவற்றின் குறியீடாக அறியலாம் என்றாலும்) 'கால்கள்' சூத்திரச்சாதிக் குறியீடாகக் கோணல்பட்டுக் கிடக்கிற கோளாறான நம் பாரத மூளையழுக்குப் பரப்பில், இப்படிக் கால்களை உயர்த்தி விட்டீர்கள்!
maanittar pakkangal arumai...
ungal nanparin kuzhanthai vivaram migavum pathiththtathu...
வாழ்க வளமுடன் !!! பவித்ரா
சீரியஸாகவும் அங்கதமாகவும் ஓர் அதியற்புதக் கலவை.
அன்பு நித்யன்
முந்தைய கால் பதிவுக்கு பின்னூட்டலாம்னு வந்தா அதுக்குள்ள மானிட்டர் பக்கங்கள் வந்துருச்சி. இஸ்ரோ விஞ்ஞானி மேட்டர் கலக்கல்.
'தண்டோரா' பெயர் மாறிய கதையை ஏற்கனவே நேரில் கேட்டிருந்தாலும் பதிவில் படிக்கும்போது அதே பழைய சிரிப்பு வந்ததுங்க தண்டோரா சார்.
ஹெப்சிபாவின் புத்தம் வீடு அதிர்ஷ்டம் உங்களுக்கே கிடைக்கட்டும். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கண்ணே. ஆவலோடு காத்திருக்கிறேன். வாழ்த்துகள்.
சரிங்க தண்டோரா சார்...
ஒரு தடவை படிச்சவுடனேயே புரியறமாதிரி எழுதக்கூடாதா? அட்லீஸ்ட் விளக்கவுரை ஏதாவது....! மூணு தடவை படிச்சுதுக்குப்பறம், லைட்டா கொஞ்சூண்டு புரியறாப்ல இருக்கு! :-)))
கலக்கல் தண்டோரா சார்.....!
அண்ணா நலம் தானே?
கவிதையின் கடைசி வரிகள் செம :)
கலக்கல்
கவிதையின் கடைசி வரி தூக்கிவாரி போட வைத்தது. இது கவித. அற்புதம்.
//முந்தைய கால் பதிவுக்கு பின்னூட்டலாம்னு வந்தா அதுக்குள்ள மானிட்டர் பக்கங்கள் வந்துருச்சி//
Athaanae!! Ezhuthunaa adathaduthu ezhuthuruthu! Illaatti ezhuthaamale irukkirathu!!
//ஆனந்த கண்ணீர் கொஞ்சம் இஞ்சி மரப்பா சுவையில் இருக்குமாம்//
தாயோளி..
விடுங்க ஓய் என்னை.
வருகைக்கு நன்றி..பா.ரா.உமக்கு தெரியாததா?
ராஜசுந்தரராஜன் அண்ணா...தினுசு ,தினுசா அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்க..நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லையண்ணா..நன்ரி
மணிஜி! இவர் ஏன் உனக்கு நண்பர் என்ற கேள்வி வந்தது !இதனால் தான் என்று உங்கள் எழுத்தை காட்டுகிறேன் இப்போது ..
கிளாஸ்
Post a Comment