திருவையாறு என்றால் தியாகராஜர் நினைவுக்கு வரலாம் . எங்களுக்கு .. ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால் அசோகாதான் முதலில் . மாதம் ஒரு முறையாவது நானும் , ரவியும் அங்கு போய் விடுவோம் . சூடாக இலையில் அசோகா . சொர்க்கம் . எங்களுக்கு தியாகராஜர் உற்சவம் சங்கீத திருவிழா இல்லை . அது சங்கீதம் அரசல் புரசலாகவாவது அறிந்தவர்களுக்கு .. எங்களுக்கு அது தாவணித்திருவிழா .. சைட்டோற்சவம் . அங்குதான் அவளை பார்த்தேன் . ஒரு தியாகராஜ ஆராதனையின் போது .
ரவி இவதாண்டா .. இவதான் என் கூட வரப்போறவ .
மாப்ளை அப்ப ராஜி என்றான் ரவிகண்களில் கேள்விக்குறியுடன் . அவனும் ராஜியை லவ்விக்கொண்டிருந்தான் . இந்த இடத்தில் ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும் . ராஜிக்கு இதெல்லாம் தெரியாது . எங்கள் இருவரையும் கூட
உண்மையில் அவள் ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால் அசோகா போலத்தான் இருந்தாள் . ஏனோ அந்த உவமையை தாண்டி வரமுடியவில்லை . ஷாம்பெயின் யெல்லோ என்று ஒரு கலர் உண்டு . தெரியுமா ? கிராமத்து பையனுக்கு அந்த கலர்லாம் எப்படி தெரியும் என்று யோசிக்க வேண்டாம் . அந்த கலரில் தாவணி அணிந்திருந்தாள் என்னவள் . அவ்வளவுதான் . மற்றபடி அவள் வர்ணனைகளை கடந்தவள் . நான் மனதுக்குள் வர்ணித்தவைகளை விவரிக்க முடியாது . அது எனக்கேயான ரகசியங்கள் .
நான் இவளை பார்த்திருக்கேண்டா .. ராஜா ஸ்கூல் . + 2 . மூலை அனுமார் கோயில் பின்னாடி வீடுன்னு நினைக்கிறேன் .
ரவி இதிலெல்லாம் ஜித்தன் . ஃபிகர்கள் வசிக்கும் தெரு வஸ்தாதுகளை நண்பனாக்குவது உட்பட .
குழந்தை என்னமா பாடறா ? பாகேஸ்ரீ என்ன சரளம் . எனக்கு அப்போது தெரிஞ்சதெல்லாம் ஒருதலைராகம்தான் . பக்கத்துல பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன்
ஆத்துக்கு போனவுடனே திருஷ்டி சுத்தி போடுறி என்றவர் என் வருங்கால மாமனார் . அவளுக்கு அதாவது ரஞ்சனி .குரல் அற்புதமாக இருந்தது . என் மாமனார் பார்க்கும்போது ரஞ்சு பாடியதை அபரிதமாக ரசித்தேன். யாரோ நீட்டிய குங்குமம் என் நெற்றியில் பாந்தமாக இருந்தது . ரஞ்சனிக்கு அன்று ஒரு எஸ்கார்ட் கிடைத்தான் . நாலு வீதியிலும் இருக்கும் நண்பர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டது . இன்னார், இன்னாருடைய என்று . நிறைய பேருக்கு பொறாமை . போங்கடான்னு சொல்லிட்டேன் . லுங்கி கட்டுவதே இல்லை . வேஷ்டிதான் . வெறும் நெற்றி இல்லவே இல்லை. அம்மாவுக்கு ஆச்சர்யம்தான் . என்னடா இது மாயம் என்றாள் .
எல்லாம் உன் மருமகள் பண்ண மாயம் தான் என்றேன் லேசான சீட்டியுடன் . அவளுக்கு பயம் வந்துவிட்டது .
வியாழக்கிழமை பாத்தியா ஓதிகிட்டு வரலாமாடா என்றாள் .
ஆனால் எனக்கு வியாழக்கிழமை வேறு வேலையிருந்தது . முதல் முறையாக ரஞ்சனியை தனியாக சந்திக்கப்போகிறேன் . பெரிய கோயிலில் .
எல்லாக் காதலிகளும் சொல்லும் அதே வசனங்கள் . எனக்கு பயமாக இருக்கிறது . எங்க ஆத்துல தெரிஞ்சா கொன்னு போட்ருவா. நல்ல சங்கீதம் தெரிஞ்சவனுக்குத்தான் கொடுப்பேன்னு எங்கப்பா சொல்லியிருக்கார் . உனக்கு படிப்பே சரியா வரலையே .
அப்புறம் அந்த காட்பரீஸ் என்றவன் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டேன் .
என்ன காட்பரீஸ் சொல்லுங்க
நான் ஒரு சிகரெட் பிடிக்கலாமா என்றேன்
ஓ யெஸ் .
கன்னியர்தம் கடைக்கண்ணை காட்டிவிட்டால் ,
காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம்...
என்று கணீரென்று ஆரம்பித்தான் அவன் .
இண்டர்காலேஜ் கல்ட்சுரல்ஸ் .. நல்ல உயரம் . வாலிபால் ப்ளேயராக இருக்க வேண்டும் . சிகரெட் பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன் . ரோஸ் நிற உதடுகள் . பாரதியை போல் தீர்க்கமான நாசியும் , பார்வையும் . முதன் முறையாக அவனை சந்தித்தேன் .
உங்க அளவுக்கு டிடெய்லா இல்லாவிட்டாலும் , ஞாபகத்தில் உள்ளதை சொல்கிறேன் என்றாள் அவள் .
இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன் . எங்கள் முதல் இரவு விடிந்து கொண்டிருந்தது
30 comments:
அடங்கப்பா சாமி!! கையக்குடும்ம்ம்ம்ம்ம்ம்ம்
மணிஜீ..ம்..ம்.ம்
class ...
but konjam valichirukkum illa?
ம்ம்ம் நைஸ்
தஞ்சை நகரின் பெயர்கள் சில படிக்க நல்லாருக்கு
Good Maniji :))
லாஸ்ட் சீன் ஜம்ப் கட் அருமை.
அண்ணா,
நன்னா இருக்கேளா?
ச்சே.. இனிமே முழுசும் படிக்காம பிளஸ் ஓட்டு யாருக்கும் குத்தக் கூடாது..! ஒண்ணுமே புரியாத ஒரு மேட்டருக்கு எனது பொன்னான ஓட்டு போச்சு..!
உண்மைதமிழன் அண்ணே... உங்களுக்கு தெரியாத மாதிரி நடிக்காதிங்க..
உங்க அளவுக்கு டிடேயில் இல்லாட்டியும் ஞாபகத்தில் இருப்பதை சொல்கின்றேன் என்று சொல்லும் இடம் வாவ்....
[[[ஜாக்கி சேகர் said...
உண்மைதமிழன் அண்ணே. உங்களுக்கு தெரியாத மாதிரி நடிக்காதிங்க.]]]
இதுல நீ புரிஞ்சுக்கிட்டதை கொஞ்சம் சொல்லு தம்பி.. நானும் தெரிஞ்சுக்குறேன்..!
அன்பு மணிஜி,
அருமையான பகிர்வு... இது... உங்களுக்கு தஞ்சாவூர் போல, ஆண்டவர் ஸ்டால் அசோகா... எனக்கு ஆண்டாள் கோவில் வெங்கடேஸ்வர ஸ்வீட் ஸ்டால் வாழை இலையில் வழியும் அல்வா. பெயரை சொல்லும் போதே மூளைக்குள் வழுக்கி கொண்டு இறங்கும் தித்திப்பு அவள். அந்த பெயரில் இருக்கும் எல்லோரும் அழகானவர்களாய் இருந்தார்கள். எல்லோர் மீதும் ஒரு இனம் புரியாது பிரியம் பொங்கும். சலூனில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதை பேர் பண்ணிக் கொண்டு இருக்கும்போது, கடப்பால் ஒரு நீல சுவாலையாய். பொசுங்கி எரிவேன் நானும்...
too good...
அன்புடன்
ராகவன்
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ஒரு ரங்கோலிப் போட்டி நடந்தது. சிக்கலான சித்திரங்கள் பலவற்றை வென்று, ஓர் எளிமையான சித்தரிப்பு முதற் பரிசு பெற்றிருந்தது: வண்ண வண்ணக் கோடுகளால் ஆனதொரு கார்பெட்; அதன் ஒரு மூலை நுனி மட்டும் சற்றே புரண்டு அடிப்பக்க வர்ணம் கொஞ்சமே கொஞ்சம் தெரிகிறாற்போல.
சூப்பர்ப் மணிஜி! :-)
உண்மைத்தமிழன், ஒரு க்ளு தர்றேன்..
இந்த கதாநாயகன், மணிஜி எனில் உண்மைத்தமிழன் இவர்தான்!
(இதுக்கு மணிஜி கதையே தேவலாம்?) :-)
எத்தன flash back க்கு...
கலக்கல்...
***உண்மைத்தமிழன்
February 13, 2011 7:27 PM
ச்சே.. இனிமே முழுசும் படிக்காம பிளஸ் ஓட்டு யாருக்கும் குத்தக் கூடாது..! ஒண்ணுமே புரியாத ஒரு மேட்டருக்கு எனது பொன்னான ஓட்டு போச்சு..!***
நான் இன்னும் ஓட்டுப்போடலை! :)
உங்களுக்கும் புரியலையா? நான் மட்டும்தான் மக்குனு நெனச்சேன். ஜானகிராமன் சிறுக்கதைகூட எனக்கு நல்லாவே புரியும் (சொன்னதும் சொல்லாமல் சொன்னதும்) ஆனா மணிஜீ கதை!:(
புரிஞ்சு என்ன ஆகப்போகுது விடுங்க! :)
மணிஜி, கதை நல்லாயிருக்கு. திருவையாறுல நாம போனமே அந்த அல்வா கடையா ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால்? அல்வா, தயிர் சாதம் சூப்பர்.
கதையிலயும் உங்களுக்கு அல்வா, ரஞ்சனிக்கு தயிர் சாதம்.. :))
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..
வாசு ..அதே கடைதான்..
அடேயப்ப ஒரு சினிமா பாத்தமாதிரி இருக்கு.பிடிச்ச சினிமா மணிஜீ.
ஆண்டவர் கடை அசோகாவும், அல்வாவும் போலவே ரஞ்சனியும்.. என்னா.. ரசனை.. என்னா ரசனை...
அண்ணெ,
நீங்க நல்லவரா, கெட்டவரா????
அருமையான பகிர்வு...
மணிஜீ.....
அசத்தல்....
இரண்டு முறை அனுபவித்து படித்தேன்...
மணிஜீ உ.த அண்ணாச்சிக்கு வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லி தாங்க முதல்ல :)
நடக்கட்டும் நடக்கட்டும் நாடகம்.
நெறய ப்ளாஷ் - பேக்குகளை கிளறி விடறாப்பில இருக்கே...
நன்றாக இருக்கிறது மணிஜி!!
ரஞ்சனி தியாகையர் உற்சவத்தில் பாடினதா இருந்தா 'பாகேஸ்ரீ' ராகம் சரி வராது - ஏனென்றால் தியாகையர் அந்த ராகத்தில் எந்த கீர்த்தனையும் இயற்றவில்லை. கதை சொல்லிக்கு சங்கீதம் தெரியாதுன்னு சொல்லிடறதால இது பெரிய விஷயம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம் - இருந்தாலும் சொல்லத் தோன்றியது :-)
பாலா இரண்டாவது முறை ..நீங்கள் பிழையை சுட்டி காட்டியிருக்கிறிர்கள்,,,நன்றி..இனி கவனமாக இருப்பேன்
உங்களுக்கு மட்டும் எப்படிணா இப்புடி எழுத வருது? பொறாமையா இருக்கு சாமி...
Post a Comment