Wednesday, August 11, 2010

பஞ்சாயீ..........


பயணக்கட்டுரை எழுதும் அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை . அப்படியே எழுதினாலும் மடிப்பாக்கம் மகாவிஷ்ணு போன்ற ஜாம்பவான்களின் பகடிக்கு ஆளாகும் அபாயம் தொக்கி நிற்பதால் , அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் . (ளலாம் ) கடல் கடந்து முதல் பயணம் . நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாள் தான் பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது . கொஞ்சம் உதறல்தான் . இருந்தாலும் ஆர்வம் அதை விஞ்ச .... ஸ்வெய்ங்.....


கிட்ட தட்ட 16 மில்லியன் மக்கள் தொகை . அதில் பாங்காக்கில் மட்டும் 10 மில்லியன் பேர் வசிக்கிறார்கள் . 80 % வருமானம் சுற்றுலாவின் மூலம் . 70 % புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் . முஸ்லீம்கள் , இந்துக்கள் என்ற கலவையான தேசம் தாய்லாந்து . நம்மூரில் மு.க படம் தெருவெங்கும் தொங்குவதை போல் அங்கும் அந்நாட்டு ராஜா , ராணி படம் தென்படுகிறது . ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லை . 83 வயதாகிறது . சிகிச்சையில் இருக்கிறார் . ராணிக்கு 76 . பிரதம மந்திரியின் பெயர் ஏதோ சொன்னார்கள் . மறந்து விட்டேன் . அவரால்தான் நாடு குட்டி சுவராகிறது . மக்களுக்கு அவர் மேல் ஏக அதிருப்தி . தேர்தல் வந்தால் தோற்று விடுவார் என்று எங்கள் கைடு ஒரு மினி சொற்பொழிவாற்றினாள் . நாங்கள் போன போதும் ஏதோ கவுன்சிலர் தேர்தல் போல் நடந்து கொண்டிருந்தது . மூலைக்கு மூலை பேனர்கள் .
முதலில் பட்டயா . (உண்மையில் பட்டையை கழற்றும் ஊர்) . அவர்கள் பத்தையா என்றும் உச்சரிக்கிறார்கள் . அதே சப்பை மூக்குடன் , ஆனால் விதம் விதமான பெண்கள் . ஒரு சின்ன டிராயர் , லிப்ஸ்டிக் . கண்களில் ஒரு அலட்சியம் . சிகரெட் .
அங்கு சலூன்களில் நல்ல பிஸினஸ் . தலை முடியை (???? ) பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் . ஏராளமான மசாஜ் பார்லர்கள் . நமக்கு தேவை நிறைய வலியும் , பாட்களும் ( தாய் கரண்சி) . நீளமான , அழகான கடற்கரை சாலையில் “காய்”த்து தொங்குகிறார்கள் . அநேகமாக நுரை பஞ்சு கச்சை . ஒரு அடி டிராயர் . அவ்வளவுதான் . விஷயம் ரொம்ப சிம்பிளாக இருக்கிறது . தயக்கம் , தடங்கல் , குறுக்கீடுகள் எதுவும் இல்லை . அந்த இடத்திற்கு வாக்கிங் ஸ்ட்ரீட் என்று பெயர் . பொருத்தமான பெயர்தான் . வரிசையாக மதுபான விடுதிகள் . மசாஜ் பார்லர்கள் . மீன் மசாஜ் , ஆயில் , ஷாம்பூ மசாஜ் . சாண்ட்விச் மசாஜ் , பாரம்பரிய தாய் மசாஜ் இன்ன பிற ...பஞ்சவர்ண கிளி நீ பறந்த பின்னாலும்......

எந்த நாடு என்று கேட்டேன்
ஈரான் என்றாள் .
இரேன் என்றேன் .
சிரித்தாள்
தமிழ் தெரியாது
அழகாய் இருக்கிறாய் என்றேன் ஆங்கிலத்தில்
உண்மை என்றால்
நன்றி என்றாள்


மதுபான விடுதிகளில் பெண்கள் கிட்ட தட்ட அம்மணம்தான் . ஆட்டம்தான் . விடிய , விடிய களிநடனங்கள் . பயந்து , பயந்து இங்கு சிடியில் பார்க்கும் சங்கதிகள் அங்கு அப்பட்டமாய் மேடையில் . நல்ல வெளிச்சத்தில் . யாரும் அதை பொருட்படுத்துவதேயில்லை . நிறைய இந்திய பெண்களும் கொஞ்சம் பண்பாட்டு , கலாசார முகமூடிகளை கழற்றி வைத்து விட்டு , ஜோதியில் ஐக்கியம் . என்ன முதலில் கொஞ்சம் அதிர்ச்சியை காட்டினாலும் , ரசிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது .


வைகோவின் தம்பியாம் . பொடாவுல பிடிச்சு போடுங்கப்பா


கலாசார ஷோக்கள் , மிருக காட்சி சாலைகள் , பாரா செய்லிங் என்று நிறைய சமாசாரங்கள் இருந்தாலும் , உலகின் புராதான தொழிலுக்குத்தான் அங்கு மவுசு இருக்கிறது .


அங்கிருக்கும் உணவு பண்டங்களின் பெயர்களே வாயில் நுழையவில்லை. உணவும் அப்படித்தான் . ஆனால் ரசித்து சமைக்கிறார்கள் . ருசித்து சாப்பிடுகிறார்கள் . பாம்பை அவர்கள் அறுத்து சமைக்கும் விதமே அலாதி . நாம் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளிப்பதோடு சரி .சைனா டவுன் என்று ஒரு ஏரியா . பெளரத் என்று அழைக்கிறார்கள் . மினி கூவம் போல் ஒன்று ஓடுகிறது . அங்கு பத்துக்கு பத்து கடைகளில் அமர்ந்திருக்கும் சீக்கியர்கள் . சாம்சங் , சோனி எல்.சி.டிக்களை ஷோரூம் விலையை விட குறைவாய் கொடுப்பது ஆச்சர்யமூட்டுகிறது . அங்கு ஒரு பர்மா ஆசாமி ஓட்டல் வைத்திருக்கிறார் . எங்களை பார்த்தவுடன் தமிழில் கோழிக்கறி , மீனுக்கறி சோறு , வெண்டைக்காய் இருக்கிறது . சாப்பிட வாங்க என்று அழைத்தார் . நளபாகம் . ஆனால் ஐந்து நாள் தான் தாங்க முடிகிறது . அதற்கு பிறகு வத்தக்குழம்புக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது


ஆர்யாஸ் என்று ஒரு ஓட்டல் . அங்கு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம் .(கிட்ட , தட்ட அப்பன் , முப்பாட்டன் சம்பாத்தித்த பாட்களை எழுதி கொடுக்க வேண்டும்) . எதிரில் வந்தாள் அழகிய தாய் பெண்ணொருத்தி . சற்றே மோதுவதை போல் வந்து “நமஸ்தே “ என்றாள் . என் காதில் "how much you pay ? " என்று விழுந்தது . தாய்லாந்து..........


21 comments:

இராமசாமி கண்ணண் said...

பஞ்சவர்ணக்கிளி சூப்பராக்கீது :)

விந்தைமனிதன் said...

ஆமா... மடிப்பாக்கம் மகாவிஷ்ணுனு பட்டம் குடுத்தா மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு கோச்சுக்க மாட்டாரா?

யுவகிருஷ்ணா said...

really interesting :-)

அகல்விளக்கு said...

Thalaivare Enjoyyyyyyyyyyyy ...........

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

video உண்டா தலைவரே! :)

விந்தைமனிதன் said...

//அநேகமாக நுரை பஞ்சு கச்சை//
நம்மூரு ஈரோயினுங்க கிட்ட கத்துட்டுருப்பாங்களோ?!

வானம்பாடிகள் said...

பஞ்சு பஞ்சாவலையே:))

செ.சரவணக்குமார் said...

வணக்கம் தலைவா..

பஞ்சவர்ணக்கிளி பட்டயக் கெளப்புது.. மயிலும் வந்ததாச் சொன்னாங்க?

நாலு நாளைக்கே நாக்கு வத்தக்கொழம்புக்கு ஏங்குதா?? உங்களயெல்லாம் சவுதியில பிடிச்சுப் போட்டாத்தான் அடங்குவீங்க..

ஆமா, எப்ப இங்க வர்றீங்க??

ச.முத்துவேல் said...

சரி ட்ரவுசர் பாண்டி அவர்களே! பஞ்சாயீன்னா என்னான்னு சொல்லுங்க.அப்புறம்,புலி குடிப்பதும் சரக்குதானா?

விறுவிறு சுறுசுறு!

சங்கவி said...

தல கிளி சூப்பருருருருருருருரு...........

ஜாக்கி சேகர் said...
This comment has been removed by the author.
ஜாக்கி சேகர் said...

என்னவோ...பாங்காக்கில் ஆயில் சர்விஸ்க்கு ஈடு இணையே இல்லை என்று என் நண்பர் சொல்லி இருக்கின்றார்....உண்மையா????

VISA said...

//என்னவோ...பாங்காக்கில் ஆயில் சர்விஸ்க்கு ஈடு இணையே இல்லை என்று என் நண்பர் சொல்லி இருக்கின்றார்....உண்மையா???? //

YES THEY USE GOLD WINNER :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எண்ணிக்கை விபரங்கள் எல்லாம் தெளிவா இருக்கு தல இன்னும் சில புகைப்படங்களை இணைத்திருந்தால் கண்களுக்கும் குளிர்ச்சியாக இருந்திருக்கும் .

Cable Sankar said...

ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம்

sriram said...

மணிஜீ
அதுதான் மடிப்பாக்கம் மகாவிஷ்ணுவே இண்டெரிஸ்டிங்கா இருக்குன்னு சொல்லிட்டாரே, பயணக் கட்டுரைன்னே போட்டு பத்து பாகம் எழுதுங்க..

பெருசு பெருமூச்சு விடுது பாருங்க, பெருசையும் உடன் அழைத்துப் போயிருக்கலாமில்ல??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கலாநேசன் said...

//அதே சப்பை மூக்குடன் , ஆனால் விதம் விதமான பெண்கள்//

அதனால் தான் அந்த ஊர் பேர் "பட்டையா"

மணிஜீ...... said...

நன்றி முதல்வன் ராமசாமி (எங்க பார்த்தாலும் உங்க பேர்தான் மீ த பர்ஸ்ட்)

நன்றி ராஜாராம்

நன்றி யுவா

ஓகே அகல்

வீடியோ இருக்கு..ஆனா பலானது இல்லை பட்டறை

பாலா சார்..புரியலை..சின்னப்பையன் சார்

சரவணா ஸ்பான்சர் பண்ணுங்க .வரேன்

முத்துவேல்..பஞ்சாயீ..உ.சு.வாலிபனபாட்டு..பாங்காக்கில் எடுத்தார்கள்

நன்றி சங்கவி

ஜாக்கி...பப்ளிக் ப்ளேஸ்

நன்றி கிரைம் மன்னன் விசா

நன்றி பனித்துளி சங்கர்

கேபிள் எங்க ஓடிட போகுது

ஸ்ரீராம்.. பெருசு வரமுடியலையாம்

உண்மைதான் கலாநேசன்

மோகன் குமார் said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என எண்ண வைக்கும் எழுத்து; தஞ்சாவூர் குசும்பு/ கிண்டல் கட்டுரை முழுதும் ரசிக்க முடிகிறது. வாசு புகை படம் கலக்கல்

butterfly Surya said...

இன்னும் நிறைய புகைப்படங்களை இடுங்கள்.

வழக்கம் போல் உங்கள் எழுத்து கலக்க்ல தான்.

சரி.. என்ன வாங்கி வந்தீங்க..

மாலை எங்கு வரவேண்டும்..??

ரோஸ்விக் said...

இந்த விஷயம் தெரியாமப் போச்சே அண்ணே! :-)