Thursday, August 12, 2010

ஜோரா கை தட்டுங்கப்பா.....


மூன்றாயிரம் பாராட்டு விழா கண்ட
மு.கவிற்கு மீண்டும் ஒரு கூத்து
சீத்தலை சாத்தானார்தான்
சிறப்பு அழைப்பாளர்
வார்த்தைகள் அனைத்தையும்
வாலியும் , வைரமுத்துவும்
வாயிலெடுத்து விட்டார்களாம்
செப்டிக் ஆனது
சாத்தானாரின் மண்டை

கொடநாடு லாயத்தில்
ஜான்சிராணியின் குதிரை
கொள்ளு வாங்கியதில் ஊழலாம்
குற்றப்பத்திரிக்கை நகல்
தமிழில் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்
முன்னாள் நிரந்தர முதல்வர்
மனுத்தாக்கல்
பாவம் ஜான்சிராணி
பச்சை சேலையில் வாள்வித்தை
பழகி கொண்டிருக்கிறாள்


அடுத்த வம்சவிளக்கும்
அரிதாரம் பூசி விட்டது
தாத்தாவுக்கு புளகாங்கிதம்
கலை சேவைக்கு இன்னொரு
கழக வாரிசு
இருப்பவனுக்கு ஒரு வீடு
ஒரு வீட்டையும் கொடுத்தவருக்கு
உலகமே வீடாம்
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
அட..”.பணம்” இல்லையப்பா


யார் தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை
தைலாபுரத்தில்
பேரக்குழந்தைகள்
தமிழ் கற்றுக் கொள்கிறார்கள்
எட்டு தலைமுறைக்கு
விறகுக்கு பஞ்சமில்லையாம்
அடுப்பெரிக்க
மண் பயனுற வேண்டும்
மர(ண)மில்லா பெருவாழ்வு
வேண்டும்


பெரியாரின் பொடி டப்பாவில்
இன்னும் காரம் மிச்சமிருக்கிறது
ஈரோட்டில் போட்டால்
கோபாலபுரத்தில் தும்மல்
கதர் சட்டைக்குக் கூட கொஞ்சம்
இருக்குப்பா..நம்புங்க
கருப்பு சிவப்புக்கு நடுவில்
வெள்ளை வந்துடுமோ ?


காங்கிரஸ் தொப்புளில்
பம்பரம் விடப் பார்க்கிறார்
சின்னக் கவுண்டர்
விருதகிரிக்கு விமோசனம்
வருமா ? ஜாட்டையை சுழட்டுங்கப்பா


டாக்டர் ஃபீஸ் மிச்சமாம்
கட்சி வளர்ச்சிக்கு அதையும்
கொடுத்தார் கலிங்கப்பட்டியார்
நடவாத காரியங்களுக்கு
நடைபயணம் ..நல்லதே நடக்கும்
என்று அக்டோபஸ் சொல்கிறது
துண்டு மட்டும்தான் மிச்சம்
நாஞ்சில் சம்பத்துக்கு


நமத்துப்போன கேப்பை
சுத்தியல் தட்டிக் கொண்டிருக்கிறது
போயஸ் தோட்டத்து அம்மியில்
அரிவாளை சாணை பிடிக்கிறார்
தா.பா.
சைனா சாக்லேட்டுனா
ரொம்ப இஷ்டமாம்
ரெண்டு சாக்கை கொடுங்கய்யா
காம்ரேட்கள் குப்பை பொறுக்கட்டும்
பூத் செலவுக்கு ஆகட்டும்


இன்னுமா தூக்கம் ..?
தமிழா ! இருப்பாய் செருப்பாய் !
இருந்தது போதும் நெருப்பாய் ...
எதுகையும் , மோனையும் பேசியே
தமிழ் வளர்த்த கூட்டம்
அணி வகுக்கிறது
சுண்ணாம்பில் மஞ்சளை குழை
ஆரத்தி ரெடி
ஐநூறு நிச்சயம் கேரண்டி
எந்திரி... எந்திரன் வருகிறான்
கள்ள மார்க்கெட் டிக்கெட்
ஐநூறு ரூபாயாம்
எது உன்னுடையதோ
அது உன்னுடையதல்ல..
எல்லாம் அவர்களுக்கே


இன்னும் இரண்டு கைகள்
இலவசம்
தேர்தல் அறிக்கையில்
தலைவர் உத்தரவாதம்
நல்லா...நல்லா...
ஜோரா தட்டுங்கப்பா

30 comments:

விந்தைமனிதன் said...
This comment has been removed by the author.
Ŝ₤Ω..™ said...

//எது உன்னுடையதோ
அது உன்னுடையதல்ல..
எல்லாம் அவர்களுக்கே//

:)))

விந்தைமனிதன் said...

//துண்டு மட்டும்தான் மிச்சம்
நாஞ்சில் சம்பத்துக்கு//
ஒருமேடை இறங்கி அடுத்த மேடை ஏறுறதுக்குள்ள அயர்ன் வண்டிக்காரன் தாவு தீருதாம்ல!

Ŝ₤Ω..™ said...

அண்ணே.. ஆட்டோ வருது.. ஆட்டோ வருது.. மன்னிக்கவும்.. லாரியே வருது..

:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//கருப்பு சிவப்புக்கு நடுவில்
வெள்ளை வந்துடுமோ //

பட்டாயா பவ்டர் மசாஜ் பட்டய கிளப்புது!!

//இன்னுமா தூக்கம் ..?தமிழா ! இருப்பாய் செருப்பாய் !இருந்தது போதும் நெருப்பாய் ...எதுகையும் , மோனையும் பேசியேதமிழ் வளர்த்த கூட்டம்//

கொன்னுட்டியே தல!

விந்தைமனிதன் said...

//இன்னும் இரண்டு கைகள்
இலவசம்//
என்னது... காங்கிரஸ இன்னும் ரெண்டு பீஸா உடைக்கப் போறாரா? உசாருய்யா... உசாரு....
ஓரஞ்சாரம் உசாரு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பேக் டூ தி பார்ம்..!

கே.ஆர்.பி.செந்தில் said...

//இன்னுமா தூக்கம் ..?
தமிழா ! இருப்பாய் செருப்பாய் !
இருந்தது போதும் நெருப்பாய் ...//

சும்மா கிண்டல் பண்ணாதீங்க அண்ணே. தமிழன் செருப்பாகதான் இருக்கிறான்..
நெருப்பாக இருந்தவன்.. இப்போதில்லை ...

ரமேஷ் வைத்யா said...

bayangaram thambi!
superb!!!!

சங்கவி said...

//காங்கிரஸ் தொப்புளில்
பம்பரம் விடப் பார்க்கிறார்
சின்னக் கவுண்டர்
விருதகிரிக்கு விமோசனம்
வருமா ? ஜாட்டையை சுழட்டுங்கப்பா//

:))

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....

விந்தைமனிதன் said...

//சீத்தலை சாத்தானார்தான்
சிறப்பு அழைப்பாளர்//
அதாரு? சிவத்தம்பியோட அண்ணனா?!

வானம்பாடிகள் said...

யப்பே சாமியாட்டம்! டூட்டி ஃப்ரீ எஃபக்டா:)).

விந்தைமனிதன் said...

//கதர் சட்டைக்குக் கூட கொஞ்சம்
இருக்குப்பா..நம்புங்க//

பின்ன?? நாங்களும் எத்தன நாளா சும்மா உள்ளங்கைய சொறிஞ்சுகிட்டு இருக்குறது!!!! நாலு காசுகப்பு சேத்தாத்தானே வீட்டுக்காரி மதிக்கிறா?

R.Gopi said...

”தல”யின் புதிய கீதை வாசகம்

//எது உன்னுடையதோ
அது உன்னுடையதல்ல..
எல்லாம் அவர்களுக்கே//

வழிப்போக்கன் said...

இம்ம் நடக்கட்டும்.


///நானும் கொஞ்சம் பேசுகிறேன்....//

ரொம்ப அதிகமாகவே பேசறிங்க.

பார்த்து பாதுகாப்பா இருங்க.

காவேரி கணேஷ் said...

அருமை.. அருமை..

கவிதைய படித்து நாலு பேரு மீசை முறுக்கவில்லையென்றால் தமிழனே கிடையாது.

Mahi_Granny said...

ஜோரா கைதட்டிட்டோம் .

செ.சரவணக்குமார் said...

ஜோரா கையத் தட்டிட்டோம்..

உங்கள யாரு தட்டப்போறாங்கன்னுதான் தெரியல?

சே.குமார் said...

அருமை.. அருமை..!

ஜோரா கைதட்டிட்டோம் .

சத்ரியன் said...

//எது உன்னுடையதோ
அது உன்னுடையதல்ல.//

ஐய்யா,

ஞ்ஜைய்ங் ஜக்.

( ஜால்றா நல்லா அடிக்கிறோம்ல?)

butterfly Surya said...

ஜோரா கைதட்டியாச்சு.

பட்டைய கிளப்பிடீங்க ஜி..

சூப்பர்.

மங்குனி அமைசர் said...

இம்ஹூம் , பாரேன் என்திரன் டிக்கெட் இலவசமா கிடைக்கலைன்னு கோபத்தை

மயில்ராவணன் said...

ஜோரா கைதட்டியாச்சு.

பட்டைய கிளப்பிடீங்க ஜி..

சூப்பர் ஜி..

மயில்ராவணன் said...

ஜோரா கைதட்டியாச்சு.

பட்டைய கிளப்பிடீங்க ஜி..

சூப்பர் ஜி..

ஜெரி ஈசானந்தன். said...

தமிழா ! இருப்பாய் செருப்பாய் !
இருந்தது போதும் நெருப்பாய் ...

நீர்ப்புலி said...

தட்டி தட்டி வலிக்குதுங்க.
அட, கைதான்.

மதுரை சரவணன் said...

//என்னத்த சொல்ல.... கவிதை வார்த்தை என்றும் புரியாது ....இன்னும் செம்மொழி களிப்பில் இருந்து மீளாததால்...

சவுக்கடிக்கு வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

அண்ணே! இந்த எழுத்து நடை அளவுக்கு வைகோ நடை இருந்திருந்தா இந்நேரம் அவரு அமெரிக்க போயிருக்கலாம். அவ்வளவு வேகம்.
நக்கல் புடிச்ச ஆளுண்ணே நீங்க.
ஆமா, பவுடர் மசாஜ், டூட்டி ஃப்ரீ-ன்னு என்ன என்னமோ பேச்சு அடிபடுது... கொஞ்சநாள் பதிவுலகம் வரலையினா நிறையவிஷயம் தெரியாமப் போயிடுதே!!!! :-)))

S.M.Raj said...

அண்ணே.. ஆட்டோ வருது.. ஆட்டோ வருது.. மன்னிக்கவும்.. லாரியே வருது..

:)