Friday, July 23, 2010

கிளியுடன் ஒரு இரவு





சின்ன முருகனுக்கு அவன் சொந்த பெயரே மறந்து போய்விட்டது.காரணம் ’கிளி” என்றே அவன் பெரும்பாலும் அழைக்கப்படுவதுதான். அவனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் பக்கமாம்.சித்தி கொடுமை தாங்காமல் 14 வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான். பசி தாங்காமல் நின்றிருந்த ஒரு லாரியில் பின்னால் ஏறி படுத்து தூங்கிவிட்டானாம். லாரி டிரைவர் கன்னியப்பன் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்து தனது லாரியில் கிளினர் வேலைக்கு வைத்து கொண்டார்.அன்று முதல் முருகன் ”கிளி” யானான்.

தாம்பரம் விரைவு பேருந்து நிலையத்தில் நெல்லை போவதற்காக நண்பனுடன் காத்திருந்தேன். எல்லா வண்டியும் நிரம்பி வழிந்தது. ஆம்னி பஸ் நிற்கவேயில்லை. நண்பன் சொன்னான். மச்சான் லாரில போலாம். தாம்பரம் செக்போஸ்ட் அருகில் தான் லாரிக்கு டிக்கெட் ? போடுகிறார்கள். சின்ன முருகன் என்ற கிளியை அங்குதான் சந்தித்தேன். நாகர்கோயில் போகும் லாரி அது.(ஆண்டவன் அருள்). அண்ணே ..உள்ள கேபின் 100 ரூபா..5 பேர் ஏத்துவோம். பின்னால தார்பாய் மேல படுக்கலாம் 25 ரூபா ஆகும். ஆனா காத்து பிச்சுகிட்டு அடிக்கும் என்றான். சரி 500 ரூபா நானே தர்றேன்.. வேற டிக்கெட் ஏத்தாதே என்றேன். அவன் சட்டென்று பயந்து போய் டிரைவரை கேளுங்க என்றான். கன்னியப்பன் என்கிற டிரைவர் செக் போஸ்டில் வரி மற்றும் "தண்டம் "அழுது” விட்டு வந்தவர் எங்களை சற்று சந்தேகித்து பின் சம்மதிக்க என் முதல் லாரி பயணம்(நீண்ட) தொடங்கியது.

ஏற்கனவே கால்புட்டி உள்ளே போயிருந்தாலும் பயணத்தின் போது இருப்பு வைத்திருப்பது என்
ப(வ)ழக்கம்..கன்னியப்பனிடம் அடிக்கலாமா என்று அனுமதி கேட்க சார் இதை போய் கேட்பாங்களா... என்ன நா அடிக்க மாட்டேன். அடிச்சா வண்டி ஓட்ட மாட்டேன்...சரக்கு உள்ளே போக போக மன நிலை மாற தொடங்கியது. கொடைக்கானல் மலை ஏறும் போது இரண்டு கொண்டை வளைவுகளுக்கு ஒரு முறை சீதோஷ்ண மாற்றத்தை உணர முடியும். சரக்கும் அதே போல்தான். பேச்சு கன்னியப்பனின் சொந்த கதைக்கு திரும்பிற்று. சொந்த ஊர் சோழவந்தான். மனைவி ,2 குழந்தைகள்..மனைவியின் தங்கை வள்ளியூரில் நர்சாக இருக்கிறாள். போக வர தொடுப்பு ஏற்பட சேர்த்து கொண்டு விட்டார். குழந்தை இல்லை. அதற்கு அவள் அக்காவின் சாபம்தான் காரணம் என்றார். வண்டி செங்கல்பட்டு தாண்டி ஒரு ரோட்டு கடையில் சாப்பாட்டுக்கு போட பட்டது. மிச்சமிருந்த சரக்கை நானும் நண்பனும் ஒரே மூச்சில் காலி செய்து விட்டு அவர்களுடன் சாப்பிட போனோம்.

புரோட்டா,வருத்த கரி பிறை (அப்படித்தான் எழுதி இருந்தார்கள்), கல் தோசை, புல் பாயில் அவர்கள் இருவரும் பின்னி எடுக்க போதையில் பில்லை நாந்தான் கொடுப்பேன் என்று குழற.. கிளி யின் முகத்தில் தெரிந்திருந்தால் இன்னும் நாலு புரொட்டாவை தின்னிருக்கலாமே என்ற வருத்தம் ..

திடிரென்று கண் முழித்துப் பார்த்தால் வண்டி ஒரு அத்துவான காட்டின் நின்றிருந்தது. கன்னியப்பனை காணோம். கிளி மட்டும் கீழ் நின்று பீடியை ரசித்து பிடித்து கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் பீடியை அணைக்க ..கிளி..வண்டி ஏன் நிக்குது? டிரைவர் எங்கே?அண்ணே.தோ .உள்ளார போயிருக்காரு ..வந்துடுவாரு..சொல்லும் போது கன்னியப்பன் வந்து விட்டான். கிளி ..நீ போறியாடா? கிளிக்கு வெட்கம். இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே. .நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா? இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார். அப்பா என்னை விட்டுடு நா இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஆனால் நண்பனுக்கு சபலம்தான்.அவனை அடக்கி வண்டியை கிளப்பினோம்.

சார் 2 மணிக்கு வண்டியை ஓரம் போற்றுவேன். .திரும்ப கிளம்ப 6 மணியாயிடும். நீங்க நல்லா தூங்குங்க என்றான் கன்னியப்பன். என் சந்தேகத்தை கேட்டேன். "ஒன்னுக்கு ரெண்டு பொண்ட்டாட்டி இருக்குல்ல. பின்ன ஏன் இப்படி? அட போங்க சார் இது நெதம் வோணும்..நான் உறை கூட போட மாட்டேன். அருகிலிருந்த கிளி"அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும். அப்பாதான் திருப்தியாம்.கன்னியப்பன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கிளியை வெட்கத்துடன் அடித்தான்.

திரும்ப காலை லாரி கிளம்பி நாங்கள் நெல்லை போய் சேர இரவு 8 மணியாகி விட்டது. சுவாரசியமான பயணம். கேமரா கையில் இல்லாமல் போய் விட்டது. லாரி ஓட்டுனருக்கும்,கிளினருக்கும் உள்ள உறவு ஒரு அன்னியோன்னியமான தாம்பத்யம் போலவே இருக்கிறது. கிளி நிறைய அடி வாங்குகிறான். ஆனால் கன்னியப்பனுக்கு எதுனா ஒண்ணுன்னா முதல் ஆளாய் இறங்கி விடுவானாம். கன்னியப்பன் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கிளியிடம் சொல்கிறான். கிளி ஆறுதல் சொல்லும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அண்ணன் அடிச்சா அடுத்த நாள் பிரியாணி,புது துணி, விஜய் படம்னு அன்பை கொட்டி விடுவாரு. அந்த அன்புக்குகாகவே எத்தனை அடியும் வாங்கலாம். கிளி சொல்லும் போதே மீண்டும் எதையோ எடுத்து வீசுகிறான் கன்னியப்பன்.. கன்னியப்பன் அவுட்சைட் போகும் போது கூட அருகில் கிளி இருக்க வேண்டுமாம்.. பீடி,கால் கழுவ தண்ணி கொடுத்து சிஷ்ய பணிவிடை..கிளியின் லட்சியம்...ஒரு லாரிக்கு டிரைவர் மற்றும் முதலாளியாவதுதான்.பின் தன்னை போல் ஒரு கிளியை தேடி கண்டு பிடித்து கிளினராக வைத்து கொள்வதுதான்.

நான் விடைபெறும் போது கன்னியப்பன் காசு வாங்க மறுத்து விட்டான். நான் கட்டாயப் படுத்தி கொடுத்து விட்டு சின்ன முருகா என்று அழைத்து அவன் கையில் ஒரு 100 திணிக்க அவன் கன்னியப்பனை பார்க்க..அவன் தலை அசைக்க சந்தோஷத்துடன் வாங்கி கொண்டான் சின்ன முருகன் என்கிற"கிளி"

பின் குறிப்பு: எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி.......யாராவது துணைக்கு வருகிறிர்களா

13 comments:

மணிஜி said...

கை அரிக்குது . வேற வழியில்லை

அகநாழிகை said...

மணிஜி.. மீள் பதிவுதானே?

vasu balaji said...

:))

ஈஸ்வரி said...

(யாராவது துணைக்கு வருகிறிர்களா......)
கூட வர கன்னியப்பனும் கிளியும் ரெடியாம். நீங்க ரெடியா?

கலகலப்ரியா said...

வானம்பாடி சார் சிரிக்கறத பார்த்தா ரெடின்னு சொல்ற மாதிரி இருக்கே...

நேசமித்ரன் said...

டிஸ்கி சூப்பர் :)

பத்மா said...

joot

Cable சங்கர் said...

நான் வர்றேன். நீங்க போவும் போது கூட்டிட்டுபோங்க..

Unknown said...

அடுப்புல வைக்கும்போது சூடா இருக்கும்... ஆனா பின்னாடி எப்படி இருந்தா நான் இப்படி ஆயிட்டேன்னு விவேக் டயலாக் பேசவேண்டி வரும்..

டிஸ்கிக்கு நான் ரெடி...

ராம்ஜி_யாஹூ said...

அபூர்வ சகோதரர்கள் - வாழ வைக்கும் காதலுக்கு ஜெ பாடலும் செங்கம்ரவி , ஜனகராஜ் யும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

செ.சரவணக்குமார் said...

ஹி ஹி..

அண்ணே எது எழுதுனாலும் இந்த புட்டிய விடமாட்டேங்கிறீங்களே..

ஊர்ல இருந்தா நானும் ரெடின்னு சொல்லிருப்பேன்.. ஹும்ம்ம்..

இந்த கை அரிப்புக்கு மருந்தே இல்லியாண்ணே..

Kumky said...

:))))

%&$#^#&*(&*^..
ஆமாம்...சொல்லிபுட்டேன்.

பெசொவி said...

//Cable Sankar said...

நான் வர்றேன். நீங்க போவும் போது கூட்டிட்டுபோங்க.. //
இதுக்கும்
//நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா? இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார்//


இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா கேபிளாரே?