Saturday, July 3, 2010

சொங்கியார் பராக்...பராக்..


சொன்ன நேரத்துக்கு சொங்கியார் வரவில்லை. வானம் மப்பும் , மந்தாரமுமாக இருந்தது . போச்சுடா ..என்று நொந்து கொண்டோம் . செல்லடித்தால் எடுக்க வில்லை . இனி அவர் வர மாட்டார் . நாம் தான் தேடி போக வேண்டும் . பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

சிந்தாதிரிபேட்டை கூவம் ஓரமாக ஒரு டாஸ்மாக் கடை உண்டு . சொங்கியாரின் மாமூல் ஸ்பாட் . அங்கு அவருக்கு அக்கவுண்ட் கூட உண்டு . உள்ளே நுழைந்து பார்த்தால் அரை மயக்கத்தில் இருந்தார் சொங்கியார் . பக்கத்தில் ஒருவன் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான் . சொங்கியாரின் அபிமான எழுத்தாளர் ஒருவர் உண்டு . புரியாத பஃப் பெயர்களை பற்றியும் , அங்கு கிடைக்கும் ஃபாரின் சரக்குகளை பற்றியும் விலாவாரியாக எழுதி தள்ளுவார் . சொங்கியாரும் , அவரும் ஒரு முறை இதே பாரில் சரக்கு அடித்ததை பற்றி சொல்லியிருக்கிறார் . அன்றும் இதே போல் ஒருவன் வாந்தி எடுத்தானாம் . ம்ம்.. அவர் ஒரு ”மனங்கொத்தி பறவை “


சொங்கியார் மட்டையாகி விட்டால் அவ்வளவு சீக்கிரம் எழுப்ப முடியாது . இதழ் வேறு அச்சுக்கு போக வேண்டும் . வேறு வழியில்லை . ஒரு ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி பிரித்து , மூக்கில் வாசம் காட்டினோம். அனிச்சையாய் கண் விழித்தவர் , கிளாசை நீட்டினார் . புரிந்தது . குவார்ட்டர் ஆர்டர் செய்தோம் . சொங்கியாரின் முகத்தில் செய்தி களை வந்து விட்டது . அப்பாடா..

முதலில் அம்மாவின் அறிக்கையை பற்றி சொல்லுங்கள் சொங்கியாரே


வர, வர அம்மாவின் அறிக்கைகளில் அனல் பறக்கிறது . கொஞ்ச நாள் முன்பு , அண்ணா அறிவாலயத்துக்கு சீட்டு விளையாடவும் , கேளிக்கைகளில் ஈடுபடவுமே செய்கிறார்கள் என்று சொன்னவர் . நேற்றைய அறிக்கையில் முதல்வரை போர் குற்றவாளி என்று கடுமையாக சாடியிருக்கிறார் . முதல்வரும் அதற்கு பதில் சொல்லிவிட்டார் . கூடவே ஒரு காமெடியும் செய்திருக்கிறார் .

“தனி ஈழம் கிடைக்குமென்றால் நான் ஆட்சியையையும் காவு கொடுக்க தயாராக இருந்தேன் என்று சொல்லியிருக்கிறார் . வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் இது என்று எல்லோரும் சொல்கிறார்கள் (உன் கிட்ட யார்டா சொன்னது . எதை வேணுமினா எழுதுவியா ?)

சரி மேல என்றோம் .

ஒரு ஆஃப்பாயில் ப்ளீஸ் என்றார் சொங்கியார் . வந்தது . அப்படியே உடையாமல் சாப்பிடுவேன் பாருங்கள் என்றார் .

எதோ பொடி இருக்கிறது என்று புரிந்து கொண்டோம் .

சும்மா ஒன்னு , ரெண்டா கூட்டிகிட்டு வராம ,கொத்தோடு பிரித்து , அம்மாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகிவிட்டதாம் ஆளுங்கட்சி .

அம்மா சும்மாவா இருப்பார் ?

அவர் எங்க சும்மா இருக்கிறார் . கொடநாட்டில் மேஸ்திரி வேலையில் இருக்கிறார் . இங்கு அதிமுகவின் பேஸ்மெண்ட் வீக்காகி கொண்டிருக்கிறது . அவர் அங்கு கொடநாட்டில் பில்டிங்கை ஸ்ட்ராங் பண்ணி கொண்டிருக்கிறார் .


சரி தேர்தல் எப்போது வரும் ? சொல்லுங்கள் .

செம்மொழி மாநாட்டு வெற்றி களிப்பில் தலைவர் இருக்கிறார் . ஆனால் அடுத்த முறையும் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று வீட்டில் பிரஷராம் . துணை முதல்வர்தான் இதை ரசிக்க வில்லை . மதுரைக்காரர்தான் இந்த உறுதி மொழியை வாங்கியிருக்கிறாராம் . இல்லையென்ரால் எலெக்‌ஷன் சமயத்தில் தன் அதிருப்தியை காட்டலாம் என்ற அச்சமாம் ..

தலைவருக்கு ஒரு தொண்டர் கோயில் கட்டியிருக்கிறாரே ? பிரசாதம் உமக்கு வந்ததா ?

சும்மா கட்டுவாரா ? எதாவது ”வேண்டுதல்” இருக்கும் . அதில் துரைமுருகன் , வேலூர் மாவட்ட செயலாளர் படங்களும் வரையப்பட்டிருந்தது . ஆனால் அதை அகற்றி விட்டார்கள் குங்குமம் வழிந்ததை ரத்தமா என்று கிண்டலடித்தவராயிற்றே முதல்வர் . பத்திரிக்கள் கிண்டலடிக்கும் . இந்த அம்மா வேறு அறிக்கையில் சாடும் . அதனால்தான் இடித்து விட்டார்கள் போல .

என் நண்பர் ஒருவர் பழைய கிழிந்த துணிகளை தைக்கும் தொழில் செய்து வந்தார் . நேற்று அவரைப் பார்த்தேன் . டாடா சுமோவில் வருகிறார் .

நல்ல முன்னேற்றம்தான் . யார் அவர் என்றோம் .

சத்தியமூர்த்தி பவன் வாசலில்தான் கடை போட்டிருக்கிறாராம் .

புரிகிறது . தமிழ்நாடு காங்கிரஸ் என்று இழுத்தோம் .

ஆமாம் . சுதர்சனம் வகித்த பதவிகளுக்கு போட்டி ஆரம்பமாகி விட்டது . அடுத்து அடி , தடி , வேஷ்டி கிழிப்புகள்தானே . சரி பா.மா.க ?

தமிழ்குடிதாங்கி சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் . தங்கள் சாதி எண்ணிக்கை துல்லியமாக தெரிந்து கொண்டால் பேரத்துக்கு உதவும் என்று நினைக்கிறாரோ என்னவோ ?

அவங்க சாதி சனம் அப்படியே , இவர்களை ஆதரிப்பார்களா என்ன?

அவங்க நினைப்பு அப்படி ? மொத்த எண்ணிக்கை தெரிந்துவிட்டால் ., எதாவது போராட்டம் ,குருமா என்று பொழுதை ஓட்டும் எண்னம் கூட இருக்கலாம் . பாவம் மக்கள் தொலைக்காட்சி .

ஏன் ? நன்றாக தெரிகிறதே .

விளம்பரம் பற்றி சொல்கிறேன் . சீரியல் ஆரம்பித்து விட்டார்கள். தமிழில் பெயர் பலகைகள் முழுவதும் இல்லை என்று கொஞ்ச நாட்கள் முன்பு ராமதாசு போராட்டம் நடத்தினார் . அது ஒரு பெரிய காமெடி .

தமிழ் குடிதாங்கி தமிழுக்காக போராட்டம் நடத்துவது தவறா ?


மக்கள் தொலைக்காட்சி . புலி பசித்தால் புழுக்கையை கூட சாப்பிடும் என்பது போல் ஆகி விட்டது . நீரே நிகழ்ச்சிகளை பார்த்து தெரிந்து கொள்ளும் . இன்னொரு கட்டிங் ப்ளீஸ் .

தொலையுங்கள் . எதாவது கடைசி பிட்ஸ் ..

கேப்டனுடன் கொடநாடு சேராமலிருக்க வழி செய்யும்படி , மன்னார்குடிக்கு கோரிக்கை போயிருக்கிறதாம் . அவர்களுக்கும் நிறைய நன்றி கடன் பாக்கியிருப்பதை நினைவூட்டியிருக்கிறார்களாம் .

வாய் குழறி சாயத் தொடங்கினார் சொங்கியார் . சரக்கு புது சரக்காம் . ஆளுங்கட்சி ஆலையிலிருந்தாம் . மயங்குவதற்கு முன் சொங்கியாரின் அப்டேட்ஸ் ...

12 comments:

உண்மைத்தமிழன் said...

ரைட்டு..

சொங்கியாரின் லேட்டஸ்ட்டு பொலிட்டிக்கல் அப்டேட்ஸை நானும் அப்டேட் பண்ணிக்கிட்டேன்..!

நன்றிண்ணே..!

பெசொவி said...

எவ்வளவு சரக்கடிச்சாலும் சொங்கியார் சோடை போக மாட்டார் போலிருக்கே!

முரளிகண்ணன் said...

அசத்தல் மணிஜி.

CS. Mohan Kumar said...

:))

vasu balaji said...

/தனி ஈழம் கிடைக்குமென்றால் நான் ஆட்சியையையும் காவு கொடுக்க தயாராக இருந்தேன் என்று சொல்லியிருக்கிறார் ./

அப்படின்னா கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் கூட்டணி வச்சி உறுதிப் படுத்திக்கிட்டேன்னு இல்ல அர்த்தமாகுது. தேவுடா.

ரமேஷ் வைத்யா said...

ஆஹா... அப்பிடியே இருக்கே..!

butterfly Surya said...

ஆஹா... பேஷ்.. பேஷ்..

செ.சரவணக்குமார் said...

நடத்துங்க.

விளம்பரப் பணிகள் எல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது தலைவரே.

அத்திரி said...

நடக்கட்டும்

Beski said...

testing...

CS. Mohan Kumar said...

மணிஜி, உங்களின் இந்த இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/

மதுரை சரவணன் said...

மணிஜீ அருமை எப்படிங்க.... ஆப் குடுத்து இவ்வளவு மேட்டர்.. ரெம்ப அசத்தலான அரசியல் பார்வை.. வாழ்த்துக்கள்