மெயின் மேட்டர் :
இந்த இடுகையில் உள்குத்து இருக்கிறது என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்..
டிஸ்கி :
உங்கள் வீட்டில் நாய் வளர்த்தாலும் சரி, நாய் வளர்க்க ஆசைப்பட்டாலும் சரி இதை முதலில் படியுங்கள்.
பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.
நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவதும் உண்டு.
நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.
நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. வீட்டில் வளர்க்கும் நாயை பூங்கா அல்லது புற்கள் இருக்கும் பகுதிகளுக்கு நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும்.
நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரும்பாலும் அசைவ உணவுகள்தான் நாய்களுக்குப் பிரியம்.
தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.
நாய் குட்டியை ஈனும் வரை ஒரே இடத்தில் வசிக்கும். குட்டியை ஈன்றதும் உடனடியாக மற்றொரு இடத்திற்கு மாற்றிவிடும் பழக்கம் கொண்டது.
எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏன் என்றால், காற்று மூலமாக வரும் வாசனையைக் கொண்டு எந்த விஷயத்தையும் மோப்ப சக்தியாலே கண்டறிந்து கொள்வதற்காக.
நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.
குருவியின் நன்றி உணர்வு
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.
அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது.
அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.
அந்த நேரத்தில் அந்த பக்கம் பறந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது.
இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார்.
நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார்.
41 comments:
உருப்புட்டவனுக்கு வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உருப்புடாதவன்.
:)
இந்த உருப்படாதவங்க உருப்படும்படியா இறைவனை வேண்டுகிறேன்.
சூப்பர்..
நாயை பற்றிய விவரங்கள் .. உம்.. சூப்பருங்கோ..
உருப்பிட்டீங்களா..?:(
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
உருப்பட்ட மாதிரிதான் தெரியுது..!
இவ்வளவு சிறிய மெயின் மேட்டருக்கு அவ்ளோ பெரிய டிஸ்கி.
கின்னஸ் ரெக்கார்ட்தான்!!
என்ன ஆச்சு மணிஜீ..??
நல்ல தகவல் பதிவு மணிஜீ.
உருப்படியா இன்று கோயம்பேடு காய்கறி விலை விவரம் போட்டிருக்கலாம்.:)
அருமை நண்பரே வாழ்த்துகள்
:-))))))))))
நீங்க சங்கத்துல இருக்கீங்களா இல்லையா? அதை பற்றி எழுதி இருக்கலாம்.
super
super
யார் என்ன சொன்னாலும் நாய் பற்றின செய்திகள் எனக்குப் புதிதுதான் !நன்றி மணிஜீ.
நாய் பற்றிய தகவல்கள் புதியவை நன்றி
அடுத்து பூனை, எலி, கொசு, சுண்டலி முதலான கதைகளையும் தகவல்களையும் எதிர்பார்க்கிறேன் .
அருமையான பதிவு :))
பகிர்வுக்கு நன்றி:))
நிறைய எழுதுங்கள்:)) :)) :))
மொத்தம் இருபது உருப்படி சார்.
ஷர்ட் 6
பேன்ட் 6
புடவை 6
9 கஜம் பட்டுப் புடவை 2
குருவி வெட்டுக்கிளியை விழுங்கிய தகவல் ரொம்ப உபயோகமாய் இருந்தது. மேலும் இதுபோன்ற கருத்து செறிவுடன் நல்ல தகவல்களை பகிரவும்.
குருவி கத்துனதுக்கு நபிகள் பதில் சொன்னார்!
அது சரியா என யார் சொல்வது?
குருவிக்கிட்ட பேசறவங்க யாராவது இங்க இருக்கிங்களா?
நம்மளுக்கு அவ்வளவு அறிவெல்லாம் இல்லைங்க சாமி !
புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்
உபயோகமாய் - - - தகவல்களை தொகுத்து இருக்கீங்க. :-)
ஸ்ஸ்ஸ்ஸபா... உடம்புக்கு எதுவும் ஆகலையே மணிஜி...
இது எங்கள் வள் வள் வள் நாய் சமூகத்தை கேவலப்படுத்தும் வள் வள் வள் ஒரு முயற்சியாகவே கருதுகிறோம்.
வள் வள் வள்.
இதற்கு அண்ணன் வள் வள் வள் தண்டோரா மானசீக பொறுபெடுத்து வள் வள் வள் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் வள் வள் வள்.
இப்படிக்கு
இப்படிக்கு
நாய்கள் வள் வள் வள் முன்னேற்ற வள் வள் வள் சங்கம் வள் வள் வள்
நாய்பேரி
டாக்ஹூத் (Dogwood)
ஐக்கிய அமெரிக்க சபை
ஏங்க எவ்வளவு உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்கிறேன். சில பேர் மனசாட்சி இல்லாமல் ...
யோவ்..நையாண்டி..எங்கய்யா இருக்க? சென்னையா?
அப்துல்லா அண்ணே..ஆஹா...
விதூஷ் ..அர்ஜெண்டா ? ஆர்டினரியா?
சங்கத்துல நான் இருக்கேன்பா..ஆனா சங்கம்தான் இருக்கான்னு தெரியலை..
மற்றபடி வழக்கம் போல் நன்றிகள்..வருகைக்கு..
ஏங்க எவ்வளவு உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்கிறேன். சில பேர் மனசாட்சி இல்லாமல் ...
யோவ்..நையாண்டி..எங்கய்யா இருக்க? சென்னையா?
அப்துல்லா அண்ணே..ஆஹா...
விதூஷ் ..அர்ஜெண்டா ? ஆர்டினரியா?
சங்கத்துல நான் இருக்கேன்பா..ஆனா சங்கம்தான் இருக்கான்னு தெரியலை..
மற்றபடி வழக்கம் போல் நன்றிகள்..வருகைக்கு
குருவியின் நன்றியுணர்வு என்று போட்டு விட்டு எங்கள் இளைய தளபதி, நாளைய முதவரைப் பற்றி எதவும் கூறாததால் நான் இரண்டு நிமிடங்களிலேயே வெளிநடப்பு செய்கிறேன்.
வாழ்க மருத்துவர் விஜய், ஒடுக அவர் படங்கள்.
//உபயோகமாய் எதுவும் எழுதுவதில்லை என்று மின்னஞ்சலிலும், கைப்பேசியிலும் புகார்கள் குவிவதால் , கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தேன். நன்றி.//
அதுக்கு எதுக்குண்ணே இவ்வளவு பெரிய பக்கத்த வேஸ்ட் செஞ்சிங்க.
ஒரே வரியில “உபயோகம்” அப்பிடின்னு எழுதியிருக்கலாமே?
என்னாச்சு அண்ணே, நாய் வளர்ப்பு பத்தி கிளாஸ் எடுக்கிறீங்க,
ம்ஹூம் இது சரியில்லை.., சொல்லிட்டேன்.
”குருவி”யை பற்றி எழுதிய மணிஜீ.. அடுத்து “சுறா” பற்றியும் எழுத வேண்டும் என்று எங்கள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது...
(அகில உலக டெர்ரர் “சுறா” ரசிகர்கள் சங்கம்)
நல்ல தகவல்
நாயை பற்றிய விவரங்கள் ( மணிஜீ )
அருமை நண்பரே ............
நல்லா தானே எழுதிக்கிட்டு இருந்திங்க!! ஏன் இப்படி?
சே... இது தெரியாம நாய் வளக்க முடியாமப் போச்சேப்பா..... :)
எங்க வீட்டுல நாய் இல்ல, பூனைதான் இருக்கு! அதைப் பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?
ரொம்பபபபபபபபபபபப உபயோகமாக பதிவு போட சொல்லி, உபத்திரவம் பண்ணினவங்களை, குண்டர் சட்டத்தில போட சொல்லி பரிந்துரைக்கிறேன்!
உருப்படியான தகவல்கள்.......உருப்பட விடாத பின்னூட்டங்கள்.....நன்றி, அனைவருக்கும்!
இப்படிக்கு
உருப்படறவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்வோர் சங்கம்.
//வாழ்க மருத்துவர் விஜய், ஒடுக அவர் படங்கள்//
ஓடுகன்னா.......தியேட்டரை விட்டேவா....
tasty........[ss...pachchai muzhakaavai kaduchchutten...:)...]
உங்க தகவல்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு!..நீங்க இப்படியே எப்பவும் இருக்கணுன்னு மனசார வாழ்த்துறேன்!.........
http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
மறக்காம ஓட்டு போடுங்க
அண்ணே மானிட்டர் சாப்பிடறத நிப்பாட்டாதீங்கன்னா கேட்கலை.இப்ப பாருங்க ’கண்டதைச் சொல்கிறீர்கள்’!!!!
//மெயின் மேட்டர் :
இந்த இடுகையில் உள்குத்து இருக்கிறது என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்..///
சத்தியமா நான் நம்பவில்லை
Post a Comment