அங்க தேடிப்பாருப்பா
இங்கதானே வச்சிருந்தேன்
அன்னிக்கு கொல்லையில
எரிச்சீங்களே அந்த
பழைய மரப்பொட்டி
அதுல இருந்துச்சோ?
எதுக்கும் பரண் மேல
ஒரு தடவை பாரேன்
கொஞ்சம் மூக்குப்பொடியை
உறிஞ்சியபடி
நிணைவு அடுக்குகளில்
துழாவுகிறார் அப்பா
அவர் தொலைத்தது
எதுவென அறிந்துகொள்ள
இன்னும் கொஞ்சம் நாளாகும்
எனக்கு என்பது மட்டும் புரிந்தது
.........................................................
உனக்கு ஒன்னுமே தெரியலை
அப்பா என்கிறான் மகன்
உனக்கு இப்போது
புரிந்திருக்குமே
என்பது போலிருந்தது
அப்பாவின் பார்வை
20 comments:
அப்டியா கதை...
ஆமா அண்ணாச்சி உங்களுக்கும் வயசாயிடிச்சி..
:)
இங்கயும் அப்படியே...
உண்மைதான் !
எனக்குப் புரியுது மணிஜீ. பயம்மாவும் இருக்கு:(. இப்பல்லாம் 35 வயசுலயே வருதாம்.
தொலைத்தது இளமை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
நல்லாருக்கு மணிஜி. :-)
அப்புறம்,
பொக்கிஷங்களுக்கு நன்றி.அன்புசார் பொட்டலங்களுக்கும்...
நல்லாருக்கு மணிஜி.
நலலாருக்கு மணிஜீ.
சரிதான்
எனக்கு புருஞ்சிடுச்சி!
எனக்கு புரிஞ்சிடுச்சி!
என்ன சொல்வது , நெகிழ்ந்தேன்
என்பதை தவிர.
//நிணைவு //
கொஞ்சம் பெரிய நினைவோ மாமா? :)
புதுமை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
புரிந்ததா?
இரண்டாவது அருமை.
ரைட்டு மணிஜீ.
புரிஞ்சதுண்ணே..! எனக்கும் இப்போல்லாம் அப்படித்தான் இருக்கு..!
2-vathu kavithai pidichchirukku!
Post a Comment