Wednesday, September 30, 2009

உன்னைப்போல் ஒருவன்.........ரீமேக்

கூகுள் சவுத் இந்தியா ஹெட் ஆராவிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது

ஆரா..நான் சொல்றதை கவனமாக கேளுங்க..உங்க ஜாயிண்ட்ல இருக்கிற ஆறு பேர் பிளாக்கை நான் ஹேக் பண்ணியிருக்கேன்

வாட்..யார் நீ பிளாகரா?

பிளாகாட்...

அனானியா?மாடரேட்டரா?இல்லை டெரரிஸ்டா?

நான் ஒரு சாதாரண பின்னுட்டமிஸ்ட்

உன் டிமேண்ட் என்ன மேன்?

என் கிட்ட ஒரு சாப்ட்வேர் இருக்கு..அதை நீங்க இன்ஸ்டால் பண்ணனும்.

வொய்?அதெல்லாம் முடியாது..நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்...சரி அதை இன்ஸ்டால் பண்றதால உனக்கு என்ன யூஸ்?

எந்த லிங்கை கிளிக் பண்ணாலும் அது நான் கிரியேட் பண்ணப்போற பிளாக்குக்கு வந்துரும்..நிறைய விளம்பரம் வாங்கி அலெக்ஸா ரேங்கிங்கில சீக்கிரம் வந்துருவேன்..

அப்புறம் வேற என்ன ?

அந்த ஆறு பேரோட பிளாக்கையும் குளோஸ் பண்ணிடுவேன்..அவங்க வேற பிளாக் ஓப்பன் பண்ணக்கூடாது மிஸ்டர் ஆரா..

புல்ஷிட்..லாஜிக் இடிக்குது..உனக்குத்தெரியலையா?நம்ம ரெகவரி டீம்ல மூர்த்தியை கூப்பிடுங்க...அவர் இதை ஹேண்டில் பண்ணட்டும்

என்னது ..மூர்த்தியா?மிஸ்டர் ஆரா...அவனா?

எப்படி நாங்க பேசறது உனக்கு தெரியுது?

உங்க பக்கத்திலயே ஒரு ஜாலி காண்டு இருக்கான்.முடிஞ்சா கண்டுபிடிங்க.நான் குப்பனோ,சுப்பனோ இல்லை.தமிழுக்கு உண்மையானவன்.என்னோட சாப்ட்வேர்ல அதுக்கு புரொவிஷன் இருக்கு...அவங்க மீறி ஓப்பன் பண்ணா?

பண்ணா? எனன ஆகும்?

ஒன்னும் பெரிசா ஆகாது மிஸ்டர் ஆரா..கூகுள் சர்வர் அவுட்டாயிரும்..

மை காட்..யூ ஆர் தட் மச் டேன்சரஸ்?அப்ப எனக்கு வேலை போயிருமா?

மிஸ்டர் ஆரா..பீச்சுல நீங்க சுண்டல் விக்கலாம்...என்ன சொல்றீங்க?

யூ ஆர் எ சைபர்கிரிமினல்..

நோ..ஐயம் சைபர் இன் கிரைம்..சீக்கிரம் முடிவு பண்ணுங்க..

சரி..யார் அந்த ஆறு பேர்?

போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...

Tuesday, September 29, 2009

மானிட்டர் பக்கங்கள்........29/09/09

இடி இடிக்கும்,அனல் தகிக்கும் என்று எதிர்பார்த்த பதிவர் சந்திப்பு நீர்த்துபோயிற்று..உபயம்வருணபகவான்
(இந்துத்துவான்னுசாயம்பூசிடாதீங்க)நிறையபுதியபதிவர்கள் வந்திருந்தார்கள்.அறிமுகம்செய்துகொண்டார்கள்.வாழ்த்துக்கள்.அடுத்த முறை எதாவது ஒரு ஹாலில் நடத்தலாம் என்று அனைத்து மூத்த பதிவர்களூம் முடிவு
செய்திருக்கிறார்கள்.பதிவர் சந்திப்பை ஒருங்கினைத்த கேபிளுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.

வெளியே நனைந்தபின் உள் என்ன பாவம் செய்தது என்று மனசாட்சி உறுத்தியதால் பாருக்கு போய் ஏற்றிக் கொண்டோம்.அருமையான விவாதம்..மிகவும் இனிமையாய் கழிந்தது ஞாயிறு மாலை.நண்பர்களுக்கு நன்றி

புதிய தலைமுறை இதழ் காசு கொடுத்து வாங்கி படித்தேன்.விலை ரூ5/- மட்டும்தான்..இலக்கியமும் இல்லாமல் வெகுஜன விசயங்களூம் இல்லாமல் இடைப்பட்டு இருக்கிறது...தொலைக்காட்சிகளில் விளம்பரம் தூள் பரத்துகிறார்கள்.பசையுள்ள பப்ளிஷர்..குங்குமம் போல் சோப்பு,சீப்பு,சீயக்காய் என்று இலவச அன்பளிப்புகளும் கொடுக்கலாம்.நிருபர்களாக பணிபுரியும் நம் வலை உலக சகாக்கள் லக்கிக்கும்,அதிஷாவிற்கும் என் வாழ்த்துக்கள்.(காலும் கை கொடுக்கும் என்ற தலைப்பின் வசீகரம் லக்கியின் ஸ்பெஷல் டச்)

சொத்து வெளியில் போககூடாது என்று சிலர் உறவுக்குள் பெண் கொடுத்து எடுத்துக் கொள்வர்.நமது தலைவரும் அப்படித்தான்.அண்ணா மற்றும் பெரியார் விருதுகளை அவர்களுக்குள் பறிமாறி கொண்டனர்.அன்பழகன் எந்த விருதுக்கும் தகுதியில்லை போலும்.சாய்பாபா விருதும் ஏற்படுத்தி துரைமுருகனுக்கு ஒரு கனையாழி கொடுத்திருக்கலாம்.தா.மோ.அன்பரசன் என்ற அமைச்சர் தன்
மாமியார் வீட்டில் சீதனமாக கிடைத்ததை உருக்கி 100 சவரன் தங்க நாணயம் முதல்வருக்கு பரிசளித்தார்.அண்ணன் அழகிரிக்கு முதல்வர் 51 சவரன் செயினை அணிவித்து மகிழ்ந்தார்.கண்கொள்ளா காட்சி..

இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை
சொல்வதாயில்லை...
யாருமே.....

அந்த நீலக்கலர் ஓயரையும்,சிகப்பு கலர் ஒயரையும் இணைங்க.பச்சை கலரை கட் பண்ணுங்க.பாம் வெடிக்காது..உ.போ.ஒருவனில் காமன் மேன் சொல்லும் வசனம் இது.சிகப்பும்,நீலமும் கலந்தால் ஆரஞ்சு கலர் டோன் கிடக்கும்.இது ஒரு குறியீடு.பச்சை நிறம் இன்னும் ஒரு குறியீடு.இது எப்படி நம் அறிவு ஜீவிகள் விமர்சனத்தில் விடுபட்டது என்று தெரியவில்லை..கமலை கேட்டால்
அவர் என்ன சொல்லுவார்..அவர் மட்டுமல்ல எந்த சினிமாக்காரனை கேட்டாலும் சொல்வார்கள்.சினிமாவில் டோன்/கலர் என்றால் அது RGB தான்..அதனால்தான் அந்த வசனம்.இதைப்போல்தான் இவர்கள் சொன்ன மற்ற உதாரணங்களும்..

60 ரூ சரக்கு இல்லை..70 தான் இருக்கு...
மச்சான் 80 ரூபாதான் இருக்கு.
சரி வாங்கிடு
இல்லைடா.காலைல பாலுக்கு வேணும்டா.
அப்ப குடிக்காத..வீட்டுக்கு போ...

டாஸ்மாக்கில் நான் சரக்கு வாங்கும் போது கேட்ட உரையாடல்..அவன் வீட்டுக்கு போகவில்லை..அவனுக்கு நான் 20ரூ கொடுக்கலாம்னு நினைச்சு அப்புறம் ஒரு குடிகாரனுக்கு இன்னொரு குடிகாரன் உதவி செய்வது குடி கெடுக்கும் செயலாகும் என்பதால்....

டிஸ்கி :இன்னொரு பெரிய ஜோக்..சிவாஜி சிறந்த படம்..இரண்டாவது மொழி..அதக்கூட விட்டு தள்ளுங்க..சிறந்த வசனகர்த்தா கருணாநிதி..படம் உளியின் ஓசை.பின்ன கஞ்சா கருப்புக்கே கலைமாமணி கொடுக்கும்போது இது ஒன்னும் ....

Monday, September 28, 2009

அன்புமணி ராமதாசிடம் ஏடாகூடமான கேள்விகள்

சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் மிகவும் வேதனையுடன் ஒரு பேட்டியளித்திருந்தார்.எதைப்பற்றி? இலங்கை பிரச்சனையோ இல்லை விலைவாசி உயர்வை பற்றியோ இல்லை..அதாவது பதவியில் இல்லை என்றால் பத்திரிக்கையாளர்கள் கண்டு கொள்வது இல்லை..தன்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை என்று புலம்பி தள்ளி இருந்தார்.பிளாகர் என்ற முறையில் நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று என்னை நானாகவே கருதிக்கொண்டு அவர் பேட்டியை வெளியிடுகிறேன்..முன்னரே எடுத்த பேட்டிதான்..மீள் பதிவாக இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

அன்புமணி..அய்யா வச்ச பேர்..அப்புறம் அந்த காட்டையெல்லாம் அழிச்சப்புறம்”பசுமை நாயகன்”..சின்னய்யான்னு கூப்பிடுவாங்க....என் தலையெழுத்து..இப்போ முன்னாள் அமைச்சர்..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சிரிச்சது எப்போன்னு கேள்வியை மாத்தி கேளுங்க...முச்சுடூம் அழுதுகிட்டுத்தான் இருக்கேன்..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எய்ம்ஸ்ல வேணுகோபால தூக்கறதுக்கு போட்ட கையெழுத்து பிடிக்கும்...ஆனா இப்ப பாருங்க..அதே எய்ம்ஸ்ல செக்யூரிட்டி என்னைய உள்ளே விடறதுக்கு பேர் எழுதி கையெழுத்து போட சொல்றான்..

4).பிடித்த மதிய உணவு என்ன?

கூழ்தான்...சின்ன வயசுல எங்க வீட்டுல விறகடுப்புதான்..நாந்தான் போய் சுள்ளி பொறுக்கிட்டு வருவேன்..எங்கம்மா அதை எரிச்சுத்தான் கூழ் காய்ச்சுவாங்க..அப்புறம் கொஞ்சம் பெரியவனா ஆன உடனே எங்க ஆளுங்கல்லாம் மரத்தையே வெட்டி எங்க வீட்டுல போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டாங்க....நாங்க அதை கொளுத்தி குளிர் காய்வோம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சின்ன வயசுல எங்க வீட்டுக்கு கோடாரி செய்றவங்க நிறைய பேர் வருவாங்க...ஆனா எங்க அய்யா “நீ அவங்க கூட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லிடுவாரு...சீட்டு மட்டும் தரேன்னு சொன்னா நா கண்டக்டர் கிட்ட கூட நட்பு உடனே வச்சுக்குவேன்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அதை பற்றி அடுத்த வாரம் பாமக பொதுக்குழுவில் இரண்டு பொட்டி வச்சு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்போம்....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

காலை...ஏன்னா...வாரி விடறதுக்கு வசதியா இருக்கா..இல்லையான்னு தெரியணும் இல்ல.....

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நான் யார் வீட்டுக்கு போறதா இருந்தாலும் கொல்லை பக்கமா சுவரேறி குதிச்சு போய் ஒரு 5 நிமிஷத்திலே அங்க இருக்கறதை வழிச்சு சாப்பிட்டுட்டு ஓடியாந்துடறது ரொம்ப..ரொம்ப பிடிக்கும்...

பிடிக்காத விஷயம் : எங்கய்யா...எப்ப பாரு..தம்மடிக்காதே..தண்ணியடிக்காதே..அப்படி சொல்றது பிடிக்காது..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு அரசியல்வாதியின் மகளாக அவர் இருந்தும்..எனக்கு அரசியல் பற்றி ஒண்ணுமே தெரியாதுங்கறதை கண்டுக்காம இருக்கிறது..பிடிக்கும்..தொணத் தொணன்னு தமிழ்லேயே பேசிகிட்டு இருப்பாங்க..அது பிடிக்காது....

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு கோட்டு,சூட்டு தச்சு கொடுக்குற டைலர்...அவர் டில்லில இருக்கார்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வேட்டிய தார்பாச்சு கட்டி..தலைல துண்டு கட்டியிருக்கேன்....எங்கய்யா கட்சி வேலையை கவனின்னு சொல்லிட்டாரு..அதான் மரம் வெட்ட கிளம்பிட்டிருந்தேன் ..நீங்க வந்துட்டீங்க..போய் ஊர் பூரா “தண்டோரா” போடுங்க...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஊரோரம் புளியமரம்....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அநேகமா ஒரு வருஷத்துக்கு பச்சைதான்....மஞ்சள் பிடிக்கவும் ஆசை..அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியல...(இதுல உங்க கேள்விக்கு பதில் இருந்தா எடுத்துகங்க...இல்லன்னா புலம்பறார்னு வுட்டுடுங்க)

14.பிடித்த மணம்?

வாக்ஸின் வாசனை ரொம்ப பிடிக்கும்..இன்னும் அனைத்து மருந்து வாசனையும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இரா.வேலு அண்ணன்...டில்லிலேர்ந்து ரயில்ல திரும்பி வரும்போது லாப்-டாப்பில் எழுதி போஸ்ட் பண்ணது..”சனிப் பொணம்..தனிப் போகாது”ங்கிற தலைப்புல எழுதுனது..ஒரே தத்து(பித்து)வமா இருந்தது...

17. பிடித்த விளையாட்டு?

நானு,மணி அண்ணன்,குரு அண்ணன் எல்லாரும் மரத்துக்கு மரம் தாவி விளையாடுவோம்...அது பிடிக்கும்..ஆனா எங்கய்யா சரியா தாவத் தெரியலைன்னா “சாட்டை” யால அடிப்பாரு....

18.கண்ணாடி அணிபவரா?

ஸ்விஸ் அகெளண்ட் நம்பர் ரொம்ப பொடிசா இருக்கும்..அதை கரெக்டா எழுதலைன்னா பணம் கிரெடிட் ஆகாது..அப்ப மட்டும் கண்ணாடி போடுவேன்....

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காக்கி டிரெஸ் போட்டு கிட்டு (புள்ளி)விவரமா வசனம் பேசற படம் பிடிக்கும்.ஒரு தடவை விருதாசலத்துல நேராவே ஷூட்டிங் பார்க்க போய் முதுகுல லத்தி அடி வாங்கிட்டு வந்தோம்....

20.கடைசியாகப் பார்த்த படம்?

தங்கப்பதக்கம்..அதுல ஒரு பாட்டு ..நல்லதோர்குடும்பம்...பல்கலைகழகம்...இருந்தா அந்த குடும்பம் மாதிரி இருக்கணும்...

21.பிடித்த பருவ காலம் எது?

”எய்ம்ஸ்” ல அதாவது ஒரு குறிக்கோளோடு இருந்த காலங்கள்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

2016 ஆம் ஆண்டுக்கு எங்கய்யா ஒரு மாதிரி பட்ஜெட் போட்டிருக்காரு...அதை படிக்க சொல்லி கொடுத்தார்...ஆனா நா சும்மா படிக்கிற மாதிரி நடிக்கிறேன்....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கா டெஸ்க்-டாப்பையே மாத்திக்கிட்டிருந்தோம்...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

ஊசி போடும்போது குழந்தைங்க அழற சத்தம் புடிக்கும்...அழுவுதென்னு ஊசி போடாட்டி காசு யார் கொடுப்பாங்க.....

பிடிக்காத சத்தம்?

”வேணுகோபாலாட” கார் சத்தம் பிடிக்காது

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமேசான் காட்டுக்கு ஒரு முறை அய்யா கூட டிரெயினிங் போனேன்.....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படின்னா??...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு வருஷத்துக்கு இன்னும் 365 நாள்தான் முட்டாள்தனமா சொல்றதை ஏத்துக்கிட முடியல...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஆபரேஷன் பண்ற கத்தியை ஒரு வாட்டி முழுங்கிட்டேன்...அதுவா இருக்குமோ..?

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சகாரா...அங்கதான் மரமே இருக்காது....

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மேல இருக்கிற “29” பதில்லேர்ந்து உன்னால அதை கண்டு பிடிக்க முடியலன்னா..நீ என்னைய விட முட்டாள்.......

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சர்க்கஸூக்கு போறது....

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இனிமே கஷ்டம்தான்

Saturday, September 26, 2009

ம்ம்ம்ம்...அப்படித்தான்..கவிதைகள்

.காலடி சத்தத்திற்கே

காணாமல் போகும்

பூனைகள் நின்று

முறைக்கிறது

இப்போதெல்லாம்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அன்னியரிடம்

வாலாட்டும்

நாய்கள்….

கடிக்க

பாய்க்கிறது

எஜமானர்களை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

குறுஞ்செய்தி

வரும்போது

மட்டுமே

கேட்கிறது

சிட்டுக்குருவியின்

குரல்...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உண்மையில்

என்னிடம் இல்லை

என்பதை நம்பாமல்

முகம் திருப்பி

கொள்கிறான்

நண்பன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முதுகுகள்

தேடி

வன்மத்துடன்

அலைகிறோம் நாம்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நாளைய திட்டங்களை

வகுக்கும் போதெல்லாம்

கண்ணில் பட்டு

நிணைவூட்டுகிறது....

“கண்ணீர்அஞ்சலி

சுவரொட்டிகள்..

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பதிவர் திருவிழா.....சந்திப்பு

வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்(MERINA BEACH GANDHI STATUE BACK SIDE) மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும்,மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு கும்மியடிக்க வேண்டுகிறேன்..மேல் விபரங்களுக்கு

லக்கிலுக்9841354308
அதிஷா 9884881824
கேபிள் சங்கர் 9840332666
முரளி கண்ணன் 9444884964
நர்சிம் 9841888663
மணிஜி 9340089989

ஜெயாவிடம் 32 கேள்விகள்(எடாகூடமாய்)

டிஸ்கி: அப்பளம் சுடறதை பற்றி பதிவு போடலாம்னு நினைச்சேன்..ஆனா இங்க நம்மாளுங்க அப்பளத்தை துப்பாக்கியால சுட்டுகிட்டு இருக்காங்க..அதனால நான் பார்ப்பனனுக்கு ஜால்ரா இல்லை என்பதை நண்பர்களுக்கு தெரியப்படுத்த சில மாற்றங்களுடன் ஒரு மீள் பதிவு
தமிழ்மணத்தில் ஏதோ எனக்கு பிரச்சனை..அதனால் தலைப்பில் சிறிய மாற்றத்துடன் இணைக்கிறேன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

சொந்தப்பெயர்கோமளவல்லி...சினிமாவுக்குஜெயலலிதா.செல்லமாஅம்மு..அப்புறம் புரட்சித்தலைவி,இதயதெய்வம்,நிரந்தரமுதல்வர்,காளி,கன்னிகாபரமேஸ்வரி,கன்னிமேரி,டான்சிசீ ..சீ..ஜான்சிராணி,அம்மா...
ஆனா எனக்கு பெயர் வாங்கறதை விட அதை கெடுத்துக்கறதுதான் ரொம்பபிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மே 16 ம் தேதி.தேர்தல் முடிவு புட்டுகிட்ட அன்னிக்கு

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும்.ஆனா சில சமயம் அது என் கையெழுத்தே இல்லைன்னு சொல்றது இன்னும் பிடிக்கும்..அதை கோர்ட்லயே சொன்னேன்.மைனாரிட்டி கருணாநிதி சொல்வாரா?

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ரொம்ப ஏழை..மதியம் சாப்பாடு இல்லை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

யாராவது வீடியோ கேசட் கொடுக்க வந்தா அவங்களோடு நட்பு வச்சுக்குவேன்.ஆனா அந்தம்மா புருஷன் கூட சண்டைதான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சொந்தமா ஒரு கடல் வாங்கிட்டு அப்புறம் சொல்றேன்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தலையை.ஏன்னா அவங்க என் கால்ல விழுந்திருக்கும்போது அதுதான் தெரியும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: ஒண்ணுமில்லே
பிடிக்காத விஷயம் : சொல்ல முடியாது..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆடிட்டர் ராஜசேகரை அடிச்ச செருப்பு இன்னும் இருக்கு..கொண்டு வர சொல்லட்டுமா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தலைமை செயலாளர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பச்சை கரண்சியில் தைக்கப்பட்ட பட்டு புடவை..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒப்பாரி

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

திமிரா?சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது தெரியாதா?உனக்கு..ஓடிடு

14.பிடித்த மணம்?

இளநீர்ல ஜின்னை கலந்தா வருமே அது..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

வைகோ..அவர் அழும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா ஒண்ணு..அவர் என்ன பதில் சொல்லனும்.அதையும் நானே எழுதி அனுப்பிவிடுவேன்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சுப்பிரமணியசாமி...நான் அவருக்கு விருந்து வச்சப்ப உப்பு வேணாம்னு சொன்னதையும்,உயர்நீதிமன்றத்துல எங்க மகளிரணி தூக்கி காட்டினதையும் நகைச்சுவையா எழுதியிருந்தாரு

17. பிடித்த விளையாட்டு?

ரம்மி..அதைதான் இப்ப கலைச்சு போட முடியும்..

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை..ஆமாம்..இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

இன்னும் நீ போகலையா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

பறக்கும் பாவை

21.பிடித்த பருவ காலம் எது?

ஆட்சிக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சொத்துகுவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நமது எம்.ஜி.ஆர் ல சொல்றேன்.படிச்சுக்கோ

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

அம்மா தாயே....

பிடிக்காத சத்தம்?

சோறு போடும்மா?

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

நான் ரொம்ப தூரம் வந்துட்டேன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆட்டோ அனுப்பனுமா

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருணாநிதி

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரப்பா அங்கே?ஆதிராஜாராமை கூப்பிடு

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடநாட்டுல என் சொந்தகாரர் ஒருத்தர் வாட்சுமேனா இருக்காரு.அவரோட முதாலாளி ஊருக்கு போகும்பொது நான் அவர் குடிசையில அங்கே போய் தங்குவேன்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இந்த கேள்வியை நீங்க கால்ல விழுந்துதான் கேக்கணும்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சசி..இங்கே வாம்மா..இந்த தண்டோராவை டின் கட்ட சொல்லு..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முடிச்சுடு சசி இவனை

ஜெயலலிதாவிடம் நான் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்

முடிச்சுடு சசி இவனை..

Friday, September 25, 2009

நாயும்...குருவியும்

நாய் வளர்ப்பு முறைகள்

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில‌் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது.

அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.

அந்த நேரத்தில் அந்த பக்கம் பந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது.

இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார்.

நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார்.

இந்த பதிவிற்கு உள்/வெளி/சைடு நோக்கங்கள் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்....அப்பளம் சுடுவது எப்படி என்ற என் அடுத்த பதிவிற்கும் உங்கள் பேராதரவை நாடும் ......................

Wednesday, September 23, 2009

கரப்பான் தின்னும் கோழிகள்.........

முத்திய முருங்கைகள்
பத்து பறித்து கொள்ளுங்கள்
முக்கியம் அதை
மொகல் தோட்டத்தில்
பறிக்காதீர்கள்
மதசார்பின்மைக்கு
மானபங்கம் வந்துவிடலாம்

க.வ.சு ஐயர் வீட்டு
மாமியிடம் கேளுங்கள்
பத்து என்ன?
அவுத்தே கொடுத்துவிடுவார்
கன்னடத்தை தாய்மொழியாக
கொண்ட ஈரோட்டு தமிழர்
ஆன்மா அமைதியடைய
வேண்டுமல்லவா?

முருங்கைகாய்
பச்சை நிறமாய்
இருக்ககூடாது
குறியீடு என்று
கூப்பாடு போடுவார்கள்
விபூதியோ நாமக் கலரோ
சாலப்பொருத்தம்
எவ்வளவு அடித்தாலும்
தாங்கும் ..திருப்பி
தாக்காது..உத்தரவாதம்
உண்டு....

திண்ணை கதைகள் பேசும்
வெண்ணெய்களை சமையல்
வேலைக்கு அமர்த்தாதீர்
விஷத்தை கலப்பார்கள்
உங்களிடம் வாங்கிய
சம்பளத்தில் அது
வாங்கபட்டிருக்கும்

பத்தாம் நம்பர்
பட்டாக்கத்தி ஒன்று
வாங்கி கொள்ளுங்கள்
பாரிமுனையில் கிடைக்கும்.
கோழி வெட்ட அது
மிக சிறந்தது

அடுத்து சமையலறைக்கு
போவோம்..
பேகான் ஸ்பிரே
நிச்சயம் வேண்டும்
கரப்பான் பூச்சி
தொல்லை அதிகம்
உணவில் விழலாம்

கோழி வாங்கும்போது கவனம்
நாட்டுக்கோழியாக இருத்தல்
நலம்...கொடுந்தீனி
தின்று வளரும்
பிராய்லரை தவிர்த்து
விடுங்கள்..முக்கியமாக
விளம்பரங்களில்
நீங்கள் அதிகம்
பார்த்த பிராண்ட் கோழி

இனி சமைக்கலாம்
தின்று பார்த்துவிட்டு
காத்திருக்கிறது
குறை கண்டுபிடிக்க
ஒரு கூட்டமே

Monday, September 21, 2009

மானிட்டர் பக்கங்கள்........21/09/09

உன்னை போல் ஒருவனை பெரிய.... பதிவர்களில் முக்கியமானவர்கள் (அதாவது மோசமானவர்களில் முக்கியமானவர்கள்) கும்மி,குதறி தீர்த்து விட்டார்கள்..அதாவது தாங்கள் எழுதும் பதிவுகளில் எந்த சமூக அக்கறையையும் காட்டாதவர்கள்..பேசி வைத்துக் கொண்டு சர்ச்சையான பதிவு எழுதி பின்னூட்டங்களில் விவாதிப்பார்கள்.திரைப்படம் வெகுஜன மீடியாதான்.அதில் சொல்லப்படும் ஒரு தவறான கருத்து நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை..ஆனால் அப்படி என்ன தவறான கருத்து உ.போ ஒருவனில் சொல்லப்பட்டு விட்டிருக்கிறது?

இஸ்லாமீயர்களை தீவிரவாதியாக காட்டி விட்டார்களாம்.இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்றா சொல்லி விட்டார்கள்.சமீபத்தில் விடுதலை செய்யபட்ட கைதிகள் கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள்தான்.ஆனால் அவர்கள் விடுதலை யார் எதிர்த்தார்கள்?25 நாளில் அவர்கள் தண்டனை காலமே முடிய இருக்கும் நிலையில் அரசு சுய விளம்பரத்திற்காக மட்டுமே இதை செய்தது

பெண்சிங்கம் திரைபடத்திற்காக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட 50 லட்சத்தை ஒரு பிரிவினருக்கு கொடுத்து விட்டார்.அதற்கு விளம்பரம் செய்த வகையில் சுமார் 25 லட்சம் செலவாகியிருக்கும்.அதுதான் இந்த அரசின் விளம்பர மோகம்.
அதை விடுஙகள்.இந்த பதிவு உன்னை போல் ஒருவனை நியாயபடுத்திதான்.
இவர்கள் அதை விமர்சிக்க ஒரே காரணம் பார்ப்பனிய துவேஷம் மட்டுமே.இந்துத்துவாவை படம் பூசி கொண்டிருக்கிறது என்று கூற வேறு காரணம் இல்லை.நடந்த நிகழ்வுகளில் சிறிது கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம்தான் அது.இத்தனைக்கும் கமலின் ஜாதி மறுப்பு ஊரறிந்த விஷயம்.நாத்திகவாதியாக தன்னை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறார்
ஆனால் அவர் வேண்டுமென்றே விஷத்தை விதைத்திருக்கிறார் என்ற வாதம் கேலிக்குறியது.

என்னை புருட்டஸாக வர்ணித்த ஒரு அன்பு நெஞ்சத்தின் கடந்த கால திருவிளையாடல்கள் சமீபகாலமாக பதிவுலகில் விவாதிக்க பட்டு வருவது தினம் இணையத்தை மேயும் சுமார் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தெரிந்தே இருக்கிறது.

ஒரு சினிமாவை கலைவடிவமாக பாருங்கள்.அதன் நேர்மையை தயவு செய்து திரித்து எழுதவேண்டாம்.பூடக்கண்ணாடி வைத்து தேடினால் எதுவும் விமர்சனத்திற்கு தப்பமுடியாது என்று எண்ணுகிறேன்.

சுகுணாதிவாகரின் பதிவில் நான் இட்டிருந்த ஒரு பின்னூட்டம் எந்த உள் நோக்கமும் இல்லாமல் இட்டதுதான்.ஆனால் அதற்கு வேறு ஒரு தொனியும் இருப்பதாக உணர்ந்ததால் அதை டெலிட் செய்து விட்டேன்.லக்கியின் பதிவில் இட்ட பின்னூட்டமும் அப்படித்தான்.யோக்கியன் வரான்.சொம்பை எடுத்து உள்ளே வை என்ற ரீதியில் அவர் பதிலளித்திருக்கிறார்.நன்றி ”ஆளப்பிறந்தவரே”