Sunday, October 10, 2010

மானிட்டர் பக்கங்கள்.....10/10/10

(வால் , ஜாஃபர் , கதிர்...அப்புறம் )

சென்ற வாரம் ஈரோடு போயிருந்தேன் . சில விளம்பர விவாதங்களுக்காக .

1 . வாகனமும் , அறையும் ஏற்பாடு செய்து கொடுத்த அன்பன் ஆரூரானுக்கு நன்றி .

2 . சரக்கு.. உபயம் வால் . ஆச்சர்யம் குடிப்பதை விட்டு விட்டதாம் வால் . அதனால் தலை கொஞ்சம் ஓவராக போக நேர்ந்தது . வால் குடிக்காததற்கு காரணம் .காதலாம் .. தோல்வியென்றால் குடிக்கலாம் . வெற்றியென்றால் விட்டு விடலாமா ?

3 . எளிமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரன் அன்பு தம்பி பாலாசி ..(பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?) . வயிற்றில் புளியை கரைக்காமல் . காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு பேடண்ட் ரைட் வாங்காத அகல் விளக்கு .

4 . ஜாஃபர் தம்பி...அன்புக்கு மிக்க நன்றி..கொஞ்சம் ஓவராத்தான் போனோமோ ? சென்னை வரும்போது அவசியம் சந்திக்க தண்டோரா ஆபீசுக்கு வர வேண்டும் . அது பதிவுலக அறிவாலயமாம் . ( நன்றி வெயிலான் )

5 . கார்த்திக் . நந்தாவில் ராஜ்கிரண் சூர்யாவிடம் சொல்லும் வசனம் ஒன்று உண்டு . என்னைய பார்க்கிறாப்ல இருக்கு . கார்த்திக் .. நானும் அப்படி உணர்ந்தேன் . ஹோட்டல் வாசலில் நாம் உரையாடியது ...இன்னும்....

6. கதிர் . கிராமத்து வேர் . நான் இவரது ஜெயா தொலைக்காட்சி பேட்டியை ஈரோட்டில்தான் பார்த்தேன் . 9.30 மணிக்கு வரேன் அண்ணே ! என்றவர் 9.40 க்கு வந்தார் . அதுவா முக்கியம் .உண்மையில் பேட்டி . அந்த சமூக அக்கறை . வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் சிறக்க ..சரக்குல பேசியதையெல்லாம் சாக்குல போட்டு மூட்டை கட்டணும் .. புரியுதா ?




ப்ரிபெய்டு உலகம் . மளிகை கடை வைத்திருந்த நண்பரின் கடையில் சரக்கே இல்லை . (மளிகை சாமான்களை சொல்றேன் ) பதிலாக எங்கும் செல்போன் மயம் . விரல் நுனி ரேகைகள் அநேகமாக அழிந்து போயிருந்தன . (ஈ சார்ஜாம் )

இட்லி மாவு மட்டும் விற்கறேன் . உங்களை மாதிரி சில நண்பர்களுக்காக என்றார் .

மக்களால் பேசாம இருக்கவே முடியாது . 200 ரூ சம்பாதிக்கற ஒருத்தர் டெய்லி 50 ரூபாய்க்கு டாப் - அப் பண்ணுகிறாராம் . பிஸினஸ் சூப்பரா போயிட்டிருக்கு என்றார் . பின்னூட்டமும் , ஓட்டும் போடறதுக்கு எதாவது ப்ரிபெய்டு ஸ்கீம் கொண்டு வரலாமா ? இந்த மாதிரி எல்லாம் அச்சு , பிச்சு கேள்வியெல்லாம் வினவ கூடாது . (ஈரோட்டு நண்பர்கள் ஃபேஸ் புக்கில் சில புகைப்படங்களும் , மற்றவைகளும் காட்டினார்கள் .. பார்த்தேன் ... வியர்த்தேன் ) காமெடி ஃபீஸ்களை பற்றி என்னத்த பேச ? ஈரோடு , கோவை எல்லா இடங்களிலும் இந்த நகைச்சுவை திரைப்படம் சூப்பர் ஹிட் .


கோவையில் அன்புடன் வந்து சூடாக இட்லியும் , தோசையும் (தானே ) வாங்கி கொடுத்த அண்ணாச்சிக்கும் , காங்கிரசின் நம்பிக்”கை” நட்சத்திரம் சஞ்சய் மாப்ளைக்கும் நன்றி .


அடுத்த வாரம் சிவகங்கையில் மட்டன் சுக்கா சாப்பிட போகிறேன் . அன்பு மக்கா பா . ரா வின் மஹாவிற்கு திருமணம் . ஏதோ என் மிக நெருங்கிய சொந்தம் வீட்டு திருமணத்திற்கு போக இருக்கும் உணர்வில் இருக்கிறேன் . காரணம் பா . ரா . எளிமையான மனுஷன் . ஆனால் மனுஷன் இப்பல்லாம் என் வேலையை எடுத்து கிட்டாரு . சரக்கு போட்டா , குரல் கேக்கணும்னு ....நீ எப்ப வேணா கூப்பிடு மக்கா ..நாங்க எல்லாம் இரவு பாடகனையே பார்த்தவன் ..(ர . வை) ..உப்புமா இல்லை .


என்னதான் இறுக்கமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
உன் உதடுகளின் வழியே
கசியும் அந்த ஒரு துளி
மெளனத்தில் எனக்கான
சம்மதம் ஒளிந்திருக்கிறது


(கதிரின் பாதிப்பு )



சென்னை விமான நிலையத்தில் சொக்க வைக்கும் அம்மையாரை சந்தித்தாராம் பட்டு வேட்டி தலைவர் . ( சும்மா எத்தனை நாளைக்குத்தான் மஞ்சள் துண்டையே அடையாளம் சொல்றது ) . இலங்கை தமிழர் பிரச்ச்னை..கோரிக்கை மனு .. கூட்டணிக்கு உத்தரவாதம்..

ஆமாம்...உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா ?

போய்யா...நாங்க சோத்துலயே உப்பு சேர்க்கறது இல்ல.. (இது தமிழ்குடிதாங்கியின் வசனம்பா ...விரைவில் விருதகிரிக்கு சாமரம் வீச நேரலாம் )

18 comments:

VISA said...

ம்...ரைட்டே...

எஸ்.கே said...

அனுபவம், உணர்வு, தகவல்....
அருமை! இனிமை!

vasu balaji said...

நல்ல ப்ளெண்ட்:))

Prathap Kumar S. said...

:))அண்ணே போட்டோவுல நீங்க இருக்கற கன்டிஷனே பல கதைகள் சொல்லுதே....:)))

பனித்துளி சங்கர் said...

//////என்னதான் இறுக்கமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
உன் உதடுகளின் வழியே
கசியும் அந்த ஒரு துளி
மெளனத்தில் எனக்கான
சம்மதம் ஒளிந்திருக்கிறது////////////

கவிதை அருமை தல .

Romeoboy said...

\\அது பதிவுலக அறிவாலயமாம்//

அந்த அறிவாலயத்தில் நானும் சென்று வரலாம் என்று இருக்கிறேன்..

a said...

//அது பதிவுலக அறிவாலயமாம்//

வூருக்கு வரும்போது கண்டிப்பாக அறிவாலய விசிட் உண்டு.........

க.பாலாசி said...

‘கசியும்’ங்கிற வார்த்தை வந்தப்பவே தெரியும் இது கதிர் சாரோட பாதிப்புதான்னு...

உங்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சிங்க...

//பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?//

ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

அகல்விளக்கு said...

பதிவுலக அறிவாலயத்தில் இருக்கும் தலைவரே....

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....

கவிதை :-)

ஈரோடு கதிர் said...

அண்ணே வியர்த்ததோடு இருக்ககூடாதா, அதை வேற கடை பரப்பனுமா?

கேபிளுக்கு ஏதும் நிகழ்ந்தால் நீங்கதான் முழுப்பொறுப்பு

Radhakrishnan said...

அருமையான விசயங்கள்.

ஜாபர் ஈரோடு said...

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தலைவரே...

Ganesan said...

முதலில் வாலுக்கு வாழ்த்துக்கள்.


ஆமாம்...உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா ?

போய்யா...நாங்க சோத்துலயே உப்பு சேர்க்கறது இல்ல.. (இது தமிழ்குடிதாங்கியின் வசனம்பா ...விரைவில் விருதகிரிக்கு சாமரம் வீச நேரலாம் )


ரசித்தேன்.


கதிரின் பேட்டி அருமை..ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பேட்டி.

வால்பையன் said...

சரக்கை விட்டுட்டேன்னு சொன்னா பத்தாதா!? அதுக்கு காரணம் யாரும் கேட்டாங்களா!

நீங்க எதையோ விளையாட்டா சொல்ல, வினவுல பஞ்சாயத்து கூட்டிறப்போறாங்க தல!

வால்பையன் said...

உங்களை கூட்டிகிட்டு போய் கூட்டுப்பொறியல் வாங்கி கொடுக்காதது என் தப்பு தான், அதுக்காக இப்படியா!?

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு தலைவரே..

// வால்பையன் said...

உங்களை கூட்டிகிட்டு போய் கூட்டுப்பொறியல் வாங்கி கொடுக்காதது என் தப்பு தான், அதுக்காக இப்படியா!?//

ஆஹா.. ஜெரி அண்ணன ஞாபகப்படுத்துறீங்களே தல.. இந்த கூட்டுப் பொரியல் மேட்டர் தமிழ்நாடு முழுதும் பிரபலமாயிடுச்சா??

காப்பி ரைட் வாங்கி வச்சுக்கோங்க ஜெரி அண்ணே!!

முரளிகண்ணன் said...

நல்ல பகிர்வு மணிஜீ