Wednesday, April 21, 2010


பார்வதி அம்மாள் திருப்பியனுப்பபட்ட விஷயத்தில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்ததே. பத்திரிக்கைகளும் எழுதியிருக்கிறார்கள். வழக்கம் போல் ஜீனியர் விகடன் வைகோவின் பேட்டியை போட்டு கொஞ்சம் அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதிவுலகம் அதற்கு மேல் பற்றி எரிகிறது. டோண்டு போட்ட ஒரு இடுகை அவருக்கு தமிழ்மண வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை வாங்கி கொடுத்திருக்கிறது. பாம்பையும், சாம்பையும் பார்த்தால் முதல்ல சாம்பை அடி என்பது போல் பின்னூட்டங்களும், எதிர் பதிவுகளும்..

டோண்டு என்ன அத்தாரிட்டியா? அவர் கருத்தை அவர் சொன்னார். ஆனால் சொன்ன தொனியில் தப்பு இருந்ததே தவிர, அதன் உள்ளடக்கம் இங்கு நடக்க கூடியதுதான். இதற்கு முன் கூட நிறைய முறை இதை நாம் அனுபவித்திருக்கிறோம். என்னவோ அந்தாள்தான் திருப்பி அனுப்பியது போல் இங்கு சீன் நடந்தது. மனிதாபிமான அடிப்படை என்று வாய்க்கு வாய் சொல்கிறார்கள். அப்புறம் ஏன்யா ரகசியமாய் வரவேண்டும்? இங்கு தலை யார்? வைகோவா, திருமாவா, நெடுமாறனா? மாநில, மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால் நீங்கள் யாரையா அணுக வேண்டும்? கருணாநிதியை.. அம்மாள் வருவது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் பார்வதியை அம்மையாரின் உடல்நிலையை இவர்கள் அரசியலாக்க நினைத்தார்கள். அது நடந்து விட்டது. ஆம் நண்பர்களே . அவரை அனுமதித்திருந்தால் இவர்களுக்கு என்ன பெயர் கிட்டியிருக்கும்? அந்த கிரெடிட் தமிழினத்தலைவருக்கு அல்லவா போயிருக்கும்? இப்போது பாருங்கள். வைகோ தியாகியாகி விட்டார். முக துரோகியாகி விட்டார். அவர்கள் எதிர்பார்த்தது அதுதான்.

இங்கு டோண்டுவும் அப்படித்தான். சோவின் தலையங்கத்தை ஒரு வாரம் முன்னாடியே இவர் போட்டு விட்டார். கிளம்பின ராக்கெட்டுகள். டோண்டுவின் பிறப்பு , வளர்ப்பு, நல்ல சாவா இல்லையா ஆராய்ச்சிகள். ஒருத்தருக்காவது கருணாநிதியையோ, சோனியாவையோ இது போல் சாடும் தைரியம் இருக்குமா என்று தெரியவில்லை.

முத்துகுமார் மரணத்துக்கு பின் யாரும் எழுதுவதை நிறுத்தவில்லை. அதை பற்றி எழுதி விருது வாங்கினவர் உட்பட. இலங்கை பிரச்சனை பற்றி திவீரமாக எழுதும் அதே விரல்கள் தான் இன்ன பிறவும் எழுதுகின்றன. யாரும் உங்கள் தமிழ் பற்றை தவறாக நினைக்க மாட்டார்கள் நண்பர்களே. நீங்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து எழுதுங்கள். ஒரு நண்பர் எழுதுகிறார் . டோண்டு சிங்கள விருந்தாளிக்கு பிறந்திருப்பாரோ என்று. நன்று நண்பரே.. சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.

ஒரு விஷயம். நான் மு.கவையோ, ஜெவையோ திட்டி போடும் இடுகைகளில் சிலர் பின்னூட்டம் கூட போட மாட்டார்கள். மாறாக என்னிடம் அலைபேசியில் அதை சொல்வார்கள். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் எல்லோரும் ஒரே மாதிரி குற்ற உணர்ச்சியில் யோசிப்பதுதான். உங்களால் என்ன தியாகம் இயலும் ? சொல்லுங்கள்.. அதற்கேற்ப நாம் ஒரு போராட்டம் அறிவிக்கலாம்.


93 comments:

மணிஜி said...

டோண்டுவின் தமிழ்மண சாதனையை முறியடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Unknown said...

//சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை//

சவுதில இருக்கிறவங்க எல்லாம் பச்சப்புள்ளைங்கைய்யா, உட்ருங்க :-)

ஈரோடு கதிர் said...

சொன்ன தொணியில் தப்பு இல்லை, வக்கிரம் இருந்தது மணிஜீ...

அதுக்குத்தான் கண்டனம்.

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி

//டோண்டுவின் தமிழ்மண சாதனையை முறியடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

இந்த வெளம்பரம் எதுக்கு!!!!

ஈரோடு கதிர் said...

//டோண்டு என்கிற பார்ப்பானும், பார்வதி அம்மாள் என்கிற தமிழச்சியும்//

பார்ப்பானை இழுக்காம இருக்க முடியலையே ஏன்?

டோண்டுவிற்கு எதிர் இடுகை போட்ட நான், ரோஸ்விக், பாலா என யாருமே சாதியை இழுக்காத போது..

நீங்கள் ஏன் இழுத்துவிடுகிறீர்கள்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் டோண்டுவின் சாதிக்காகத்தான் அத்தனை மைனஸ் ஓட்டுகளா?

மணிஜீ உங்களிடம் “டோண்டு என்கிற பார்ப்பானும்” இதை எதிர்பார்க்கவில்லை...

மணிஜி said...

எல்லாம் சரி.இந்த விஷயத்துக்கு நாம் என்ன செய்யலாம்னு சொல்லுங்கள். யார் இதற்கு காரணமோ அவர்களை உங்கள் இடுகைகளில் தோலுரியுங்கள். கருணாநிதி, சோனியா, செட்டிநாட்டு சீமான் சிதம்பரம். என்ன செய்யலாம்?

தமிழ் அமுதன் said...

///இப்போது பாருங்கள். வைகோ தியாகியாகி விட்டார். முக துரோகியாகி விட்டார். அவர்கள் எதிர்பார்த்தது அதுதான்.//

இதை இப்படியும் யோசிக்கலாம் ஒரு வேளை அந்த அம்மாவுக்கு இங்கே சிகிச்சை அளிக்க பட்டு இருந்தால் அதன் பலன் வைகோ வுக்கு கிடைத்திருக்கும் அதை தடுக்கவே அவர் திருப்பி அனுப்ப பட்டு இருக்க கூடும் தன்க்கு பெயர் கிடைகாவிடாலும் பரவாயில்லை அடுத்தவருக்கு பெயர் கிடைத்து விட கூடாது இதுதான் மு.க

மணிஜி said...

கதிர் நிச்சயமாக.. மட்டுறுத்திய உங்களுக்கு தெரிந்திருக்கும்.நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.எதற்கும் ஆதரவாக சொல்லவில்லை.எல்லாப்பதிவுகளின் பின்னூட்ட தொனியும் அப்படித்தான் இருந்தது.தலைப்பில் கொஞ்சம் சுயநலம் இருந்தது. உண்மைதான்..படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக.. நன்றி கதிர்

dondu(#11168674346665545885) said...

நன்றி மணீஜி. சரியாகவே புரிந்து கொண்டீர்கள்.

உண்மையில் பார்வதி அம்மாளின் நிலையைப் பகடைக்காயாக ஆக்கியவர்களைத்தான் சாட வேண்டும். அதை வைத்து சங்கடம் உருவாக்கி உள்ளே வந்து விடலாம் என நினைத்தார்கள். அது நடக்காமல் அவரை அலைக்கழித்ததுதான் மிச்சம்.

அப்படி உள்ளே விட்டிருந்தால் நான் சொன்னதும், சொல்லாததும்கூட நடந்திருக்கலாம்? இதற்கு முன்பே பாலசிங்கத்தை உள்ளே நுழைக்கும் முயற்சியும் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

மற்றப்படி எனக்கு பார்வதி அம்மாள் மீது என்ன தனிப்பட்ட கோபம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

யாரை வசைபாடியும் எதுவும் ஆகா போறது இல்லை...அரசியல் பண்ண நினைத்தார்கள் பண்ணிவிட்டார்கள்...மாறாக இப்போது நான் ஒரு பதிவு நீ ஒரு பதிவுன்னு போட்டி போட்டு நீ என்னை கும்மி அடி..நான் உன்னை கும்மி அடிகறேன்ன்னு ....... நாமும் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல...

ஹ்ம்ம்ம்..வேதனை...எதுவும்சொல்வதர்கில்லை...

வானம்பாடிகள் சொன்னதுபோல் கொஞ்சம் மனிதனாய் இருக்க முயற்சிப்போமே...

dondu(#11168674346665545885) said...

//சொன்ன தொனியில் தப்பு இல்லை, வக்கிரம் இருந்தது //
அப்படி என்ன வக்கிரத்தைக் கண்டீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஈரோடு கதிர் said...

//dondu(#11168674346665545885) said...
அப்படி என்ன வக்கிரத்தைக் கண்டீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அய்யா சாமி..
என்ன சொன்னாலும்
நீங்க
//ஒன்று மட்டும் மறுபடியும் கூறுவேன். டோண்டு கூறியது கூறியதுதான். அதே சமயம் அதனால் எல்லாம் என்னை திட்ட முனைந்தால் I am least bothered. அது சம்பந்தப்பட்டவர் மனநலம் இல்லா பிரச்சினை.//

இதத்தான் திரும்ப திரும்ப சொல்வீங்க...

உங்களுக்கு எப்படி வெளக்கம் கொடுக்க முடியும்....

ஈரோடு கதிர் said...

//மணிஜீ...... said...
தலைப்பில் கொஞ்சம் சுயநலம் இருந்தது. உண்மைதான்..படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக/

அன்பு மணிஜீ..

எதன் பொருட்டேனும்... சாதியை இழுப்பது தவறான முன்னுதாரணமே, ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் பதிவுலகில் 5% அல்லது 10% சதவிகிதம் சாதியைக் கொண்டாடுவார்களா? அவர்களை ஈர்க்கவா நீங்களும் சாதியை தலைப்பில் போட்டுள்ளீர்கள்...

டோண்டுவின் இடுகையை நான் நோக்கியது பார்பானுக்கும் தமிழனுக்கும் பிரச்சனை என்றில்லை...

ஒரு படித்த வயதான மனிதனுக்கும், பயணம் செய்து வந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒரு நோயாளி, மனநிலை பிறழ்ந்த மூதாட்டிக்கும் என்றே!

அருள் said...

எச்சரிக்கை:

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டுருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

Unknown said...

கதிர் இதெல்லாம் ஒரு நாளில் நடந்தது இல்லை. அம்மையார் மலெசியாவில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின் சென்னைக்கு செல்லுமாறு வலியுறுத்தபடவில்லை.டோட்டல் பிளாக். வைகோ மற்றும் இன்ன பிறரும் திட்டமிட்டு மாநில அரசுக்கு சங்கடம் உண்டாக்க வேண்டும் என்பதற்காக இதை நடத்தியிருக்கிறார்கள்.திருச்சியில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டவர் அவர். அப்போதெல்லாம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.முழுவதும் அரசியல் சார்ந்த நிகழ்வு இது. நாம் இதை எதிர்த்து போராட வேண்டுமென்றால் ஆளுங்கட்சியைத்தான் எதிர்க்க வேண்டும். அதை விடுத்து..

vasu balaji said...

/சொன்ன தொனியில் தப்பு இருந்ததே/

திரும்பவும் சொல்கிறேன் தப்பில்லை. எள்ளல், கேலி, வக்கிரத்துடனான ஒரு சந்தோஷம்.

/தவிர, அதன் உள்ளடக்கம் இங்கு நடக்க கூடியதுதான்./

நடக்கக்கூடியதான உள்ளடக்கம் எது மணிஜீ. அல்சீமரும், பக்கவாதமும் உள்ள ஒரு மூதாட்டி அழுவாச்சி ப்ரஸ்மீட் வைப்பதா. சரி அப்படியே வைத்துக் கொள்ளுவோம். அந்த மூதாட்டியா ப்ரஸ்மீட் வைத்திருப்பார்? நம்ம ஆட்கள்தானே?

விசாவுக்கும், நல்லகாலம் பிரபாகரன் பிணத்தைக்காட்டலைக்கும், நினைவுச் சின்னத்துக்கும், ‘நல்லதுதானுக்கும்’ என்ன சார் சம்பந்தம்.

/பார்வதி அம்மாள் திருப்பியனுப்பபட்ட விஷயத்தில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்ததே./

அப்படியானால் அரசியலை மட்டுமே அல்லவா விமரிசித்திருக்க வேண்டும்.

/அந்த கிரெடிட் தமிழினத்தலைவருக்கு அல்லவா போயிருக்கும்? இப்போது பாருங்கள். வைகோ தியாகியாகி விட்டார். முக துரோகியாகி விட்டார். அவர்கள் எதிர்பார்த்தது அதுதான்./

யார் சொன்னது? பேப்பர் கடையில் டீக்குடித்துக் கொண்டே படிக்கக் கூடத் தெரியாதவன் சொல்கிறான். வைகோவையும், நெடுமாறனையும், முகவையும் சேர்த்தேதான் பொதுஜனம் திட்டுகிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை. வயசான அம்மாவை அலைய உட்டுட்டானுங்களே என்றுதான் திட்டுகிறார்கள்.

/எல்லோரும் ஒரே மாதிரி குற்ற உணர்ச்சியில் யோசிப்பதுதான். /

ஆமாம் சார். கொஞ்சம் பொறுங்கள். ஒரு இடுகை போடுகிறேன். குற்ற உணர்வின் தாக்கம் புரியும்.

மணிஜி said...

அருள் சார்.. இது மூன்றாம் தலைமுறை. இன்னும் நீங்கள்தான் ஜாதி அது ,இது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒருவகையில் நாம்/நான் மாடுதான். கல்லடி பட்ட இடம் மட்டும் ரியாக்‌ஷன் காட்டுகிறதோ? தமிழன்னா யாரு சார்? கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவரும், அவர் வளர்ப்பு பிள்ளையுமா? தமிழ்தாத்தா இல்லையா?

VISA said...

மணிஜீ உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்.

நான் சொல்ல நினைப்பது இது தான்......

"டோண்டூ சொன்ன கருத்துக்கள் உண்மை ஞாயம்...ஆனால் அவர் சொன்ன தீர்ப்பு தவறு...அது மனிதாபிமானம் அற்றதென்பதால்
இங்கே பலர் கொதித்து போனார்கள். ஆனால் அப்படி கொதித்த நல் உள்ளங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

ஒருவர் அருந்ததி ராயை திட்டி இருந்தார். அவர் வாழ்க.

போரிலும் அரசியலிலும் மனிதாபிமானம் பின்னுக்கு தள்ளப்படும் என்பதை ஏன் இங்குள்ளவர்கள் அறியவில்லை.
டோண்டூவை நோக்கி தங்கள் அதிகார எதிர்ப்பு அம்புகளை எய்வதன் மர்மம் என்னவோ.

கபீஷ் said...

//ஒருத்தருக்காவது கருணாநிதியையோ, சோனியாவையோ இது போல் சாடும் தைரியம் இருக்குமா என்று தெரியவில்லை.//

கருணானிதியைச் சாடிய பதிவு:

http://muranthodai.blogspot.com/2010/04/blog-post.html

vasu balaji said...

என் வீட்டுக்கு ஒருவர் வருகிறார். ஏதோ காரணம் அனுமதி மறுக்கப் படுகிறது. என் தம்பி காமுகன், என் அண்ணன் முடிச்சவுக்கி, என் சித்தப்பா கொலைகாரன் நல்லகாலம் அந்தம்மாவை வரவிடவில்லை. இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு, ஒரு கொள்ளை, ஒரு கொலை நடந்திருக்கும். என் சொந்தக்காரனெல்லாம் குற்றவாளியாகியிருப்பான். நல்லகாலம் வரவிடவில்லை என்று சந்தோஷப்படுவது எவ்வளவு சரியோ டோண்டுவின் உள்ளடக்கமும் அவ்வளவு சரி.

மணிஜி said...

பாலா சார் ..நானும் டீக்கடைக்கு போவதுண்டு. தினமலரின் டீக்கடை பெஞ்சு இல்லை. நிறைய பெருக்கு இந்த நிகழ்வே தெரியவில்லை. இன்று காலை முதல் எங்கள் குழுவினர் சர்வே எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் லில் ஃபிக்ஸிங் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறார்கள். இது பாதிக்க வில்லை சார்..நம்மை போல் அறிவு ஜீவிகள்தான் அதிகமாக பேசுகிறோம்..

VISA said...

//கருணானிதியைச் சாடிய பதிவு://

யாரை சாடினாலும் ஒன்றும் நடக்காது.
அருந்ததி ராய் சொன்னார் இந்தியா ஒரு போலி ஜனநாயக நாடு என்று.

இன்று பார்வதி அம்மாளுக்காக சட்டசபையில் எதிர்த்து குரல் கொடுக்க ஆளிருந்தது.
கலைஞரும் சுதாரித்து அறிக்கை விட்டார்.
ஒரு வேளை 234 தொகுதியிலும் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் யார் எதிர்த்து கேட்பது அப்போது அது போலி ஜனநாயகம் தானே.

மீடியா என்ற ஜனநாயகத்தின் இன்னொரு தூண் சேலை கட்டி வலம் வருவது கூசுகிறது.

உண்மைத்தமிழன் said...

திருமாவே இந்திய அரசின் சதி என்று மட்டும் சொல்லிவிட்டு எஸ்கேப்பாகும்போது நம்மாளுகளை மட்டும் குத்தம் சொல்வது நியாயமில்லை..!

எல்லாருக்கும் ஒருவித எச்சரிக்கை உணர்வு இருக்கிறது..!

கருணாநிதி, சோனியா, சிதம்பரம், பிரணாப்முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா என்று வரிசையாக வரிந்து கட்டித் திட்டலாம்தான்..

ஆனால் ஆரம்பித்தால் அதனைத் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அரசியலே கசப்பாக இருப்பவர்கள் எதுக்கு வம்பு என்று சொல்லி ஒதுங்கிப் போகிறார்கள்..!

2003-ல் ஜெயலலிதாவின் கடிதத்தை வைத்துத்தான் பிளாக் லிஸ்ட்டில் சேர்த்தார்களாம். அப்போது வைகோகூட மத்திய அரசின் கூட்டணியில் இருந்ததாகத்தான் எனக்கு நினைவு..!

இவர்களுக்கே தெரியாமல் அதிகாரிகள் பேப்பர் வொர்க்காக இதனைச் செய்திருக்கலாம்..! ஆனால் பார்வதியம்மாவை திருப்பியனுப்ப இவர்கள் எடுத்த நாடக முடிவுக்கு அந்த பேப்பர் வொர்க்கை பயன்படுத்திக் கொண்டதுதான் கேவலமானது..!

உள்ளே அனுமதித்துவிட்டு பின்பு இதனைச் சொல்லியிருந்தால் கருணாநிதிக்கு கொஞ்சமாச்சும் மருவாதை கிடைச்சிருக்கும்..!

மணிஜி said...

கபிஷ்.வருகைக்கு நன்றி.. நான் சொல வந்தது.. டோண்டுவை பின்னுக்கு தள்ளுங்கள். அவர் பேச்சை கேட்டா இந்திய இமிகிரேஷன் செயல்படுகிறது. தடி கேளுங்கள். அரசாங்கத்தை.. காரசாரமாக எழுதுங்கள்.இங்க இருந்து கொண்டு. நிச்சயம் இவர்களால் முடியாது. பெரியாரின் அதி தீவிர தொண்டர்களால் கூட..சும்மா வாய்தான்..உதார்தான்..

கபீஷ் said...

@VISA
//யாரை சாடினாலும் ஒன்றும் நடக்காது.//

அதுக்குன்னு எதிர்ப்பு கூட தெரிவிக்காம இருக்கறது நல்லதா? ஒண்ணு ரெண்டு தைரியசாலிங்க தமிழ்ப் பதிவு எழுதிட்டுருக்காங்கன்னு சந்தோசப்படலாமே, அதுசரி, மணிஜி மாதிரி.

மணிஜி said...

கருணாநிதியிடம் முன்பே அனுமதி கேட்டிருந்தால் அவர் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு தமிழினத்துரோகி என்ற பட்டம் கிடைத்து விட்டது. அவரின் வெற்றியை அது இம்மியளவும் பாதிக்கவில்ல என்பதுதான் விஷயம். நாலு பேர் எழுதி ,நாற்பது பேர்கள் படிக்கும் இந்த செய்திகள் சும்மா பொழுதுபோக்கும், ஏதோ நம்மால் முடிந்ததை செய்தொம் என்ற அற்ப திருப்தியும் தரும்..அவ்வளவுதான்

கபீஷ் said...

@மணிஜி,

நீங்க சொன்னது புரிஞ்சது, அதுசரி எழுதின பதிவு நீங்க மற்றும் பலர் படிக்காம இருக்க சாத்தியங்கள் இருக்கு(காரணம் :-) ) அதனால FYI மாதிரி சொன்னேன். எனக்குத்தெரிஞ்சு ரொம்ப தைரியமா அதிகார மையத்துக்கு எதிரா குரல் கொடுக்கறார். ஒருவேளை இந்தியாவுல அவர் இல்லாததும் காரணமா இருக்கலாம் :-):-)

மணிஜி said...

ஒரு கண்டன கூட்டம் ஏற்பாடு செய்வொம் பதிவர்கள் சார்பில்.. அறிவிப்பு வெளியிடுவோம். எத்தனை பேர் வருவாங்க.பேசுவாங்கன்னு நினைக்கறீங்க?

VISA said...

// ஏற்கனவே அவருக்கு தமிழினத்துரோகி என்ற பட்டம் கிடைத்து விட்டது. அவரின் வெற்றியை அது இம்மியளவும் பாதிக்கவில்ல //

தமிழின துரோகி என்ற இழுக்கு கலைஞருக்கு இல்லை என்பதல்ல.
அதே நேரம் ஈழ விடுதலை எண்ணங்கள் தமிழர்களிடம் மங்கிவிட்டதென்றும் இல்லை.

அவரது அன்றைய வெற்றிக்கு காரணம் மக்களின் பகுத்தறிவு. எதிர்கட்சிகள் ஈழ பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்துக்கு
எப்படியெல்லாம் திரித்தும் முறித்தும் பயன்படுத்தினார்கள் என்பதை உணர்ந்த பகுத்தறிவு. ஜெயலலிதா கூட எப்படி பல்டி அடித்தார்
என்பதை உற்று உணர்ந்த பகுத்தறிவு அது தான் அந்த எதிர்கட்சிகளை மொத்தமாக ஓரங்கட்டும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே கலைஞரின் வெற்றி.

மேலும் இது போன்ற குருட்டு அரசியலால் அங்கு வாழும் மக்களுக்கு எந்Tஹ விதத்திலும் விடுதலை வாங்கி தர முடியாதென்பதையும்
மக்கள் நன்கு உணர்ந்திருந்ததால் தான் கலைஞருக்கு வெற்றி கிடைததே தவிர கலைஞரின் நிலைப்பாட்டை ஆதரித்தோ விடுதலை புலிகளின் மேல் அனுதாபம் குறைந்தோ அல்ல.

பிரபாகர் said...

விரோதி நாடு என எண்ணும் பாகிஸ்தானிலிருந்து போர்மேகம் சூழும் சமயத்தில் கூட இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கிறார்கள்... அதை எல்லா ஊடகங்களும் பெரிது படுத்து புகைப்படங்களுடன் வெளியிடுகிறார்கள். நெடுகாலம் தமிழகத்தில் இருந்த ஒருவர், அனுமதிபெற்று வந்தும், திருப்பி அனுப்பியதை வலுவாய் ஆதரித்து, கதிர் சொன்னது போல் கருத்து சொல்பவர்கள் எல்லாம் கேணைகள் என சொன்னால் கோபம் வருமா வராதா அண்ணா! உங்களிடமிருந்து வந்திருக்கும் இந்த இடுகையால் மனம் வலிக்கிறது அண்ணா!

பிரபாகர்.

கபீஷ் said...

//இங்க இருந்து கொண்டு. நிச்சயம் இவர்களால் முடியாது.பெரியாரின் அதி தீவிர தொண்டர்களால் கூட//

காமிடி பண்ணிட்டீங்க மணிஜி,இவங்க ஆட்சியில இருக்கறவங்களை என்னிக்கு எதித்துருக்காங்க

vasu balaji said...

மணிஜீ...... said...

கருணாநிதியிடம் முன்பே அனுமதி கேட்டிருந்தால் அவர் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு தமிழினத்துரோகி என்ற பட்டம் கிடைத்து விட்டது. அவரின் வெற்றியை அது இம்மியளவும் பாதிக்கவில்ல என்பதுதான் விஷயம். நாலு பேர் எழுதி ,நாற்பது பேர்கள் படிக்கும் இந்த செய்திகள் சும்மா பொழுதுபோக்கும், ஏதோ நம்மால் முடிந்ததை செய்தொம் என்ற அற்ப திருப்தியும் தரும்..அவ்வளவுதான்//

அவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை. நினைத்திருந்தால் அனுமதிக்க வைக்கவோ, அல்லது அதில் உள்ள சங்கடம் குறித்தோ பேசி அறிவித்திருக்க முடியும். அனுமதித்திருந்தால் அத்தனை பேரும் ஓரம் கட்டப்பட்டிருப்பார்கள். கலைஞரை புகழ வார்த்தைகள் இருந்திருக்காது. அனுமதிக்கவியலாத காரணத்தைச் சொல்ல முடிந்திருந்தால் தமிழக அரசின் பங்கு இதில் இல்லை என்பதும் சாமினியனைப் போல் அரசும் கையைப் பிசைந்து கொண்டு தலைகுனிந்திருக்கலாம்.

இரண்டும் இல்லாமல் இந்த நாடகம் ஏன்? ஒரு வேளை அந்தம்மாவுக்கு ஏதாவது ஆனால் என்பது காரணமாயின், திரும்பும் பயணத்திலேயே அப்படி ஆனால் என்ற கேள்வியும் எழாமல் இருக்கமுடியாது. அப்படி இருப்பின் தமிழக அரசு எங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் கூறியிருக்க முடியும். பலிகடா யார்? மத்திய அரசா? கலைஞருக்கு இது லாபமா? இப்போதும் கூட தனிச்சையாகக் கேட்டு காரணத்தைச் சொல்லுவதில் என்ன தயக்கம் சார்?

மணிஜி said...

//ஈரோடு கதிர் said...

//மணிஜீ...... said...
தலைப்பில் கொஞ்சம் சுயநலம் இருந்தது. உண்மைதான்..படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக/

அன்பு மணிஜீ..

எதன் பொருட்டேனும்... சாதியை இழுப்பது தவறான முன்னுதாரணமே, ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் பதிவுலகில் 5% அல்லது 10% சதவிகிதம் சாதியைக் கொண்டாடுவார்களா? அவர்களை ஈர்க்கவா நீங்களும் சாதியை தலைப்பில் போட்டுள்ளீர்கள்...

டோண்டுவின் இடுகையை நான் நோக்கியது பார்பானுக்கும் தமிழனுக்கும் பிரச்சனை என்றில்லை...

ஒரு படித்த வயதான மனிதனுக்கும், பயணம் செய்து வந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒரு நோயாளி, மனநிலை பிறழ்ந்த மூதாட்டிக்கும் என்றே!
April 21, 2010 1:28 PM //


கதிர் நானெல்லாம் branded cows... நான் தலைப்பிட்டா விட்டாலும் அப்படித்தான் சொல்லப்போகிறார்கள்.. கிட்ட தட்ட நாமெல்லாம் ஒருவரையொருவர் நன்கு அறிவோம்..அதான் தைரியமாக..

மணிஜி said...

பிரபா..பேசி ரொம்ப நாட்களாயிற்று. வலிகள் குறைந்திருக்கும் என்ரு நினைக்கிறேன். காரியத்தின் வீரியம் தெரியாமல் நீங்கள் ஏன் எழுத வேண்டும்? யாரை எதிர்க்க வேண்டுமோ ,அதை விடுத்து அந்தாளை எதிர்த்து எழுதி என்ன பயண்டா தம்பி?நான் டோண்டுவை ஆதரிக்கவில்லை. என் பின்னூட்டங்களை அங்கு படித்து பாருங்கள்..நேற்று இரவு ஒரு பெரிய விவாதமே ஓடியது. நான்கு பதிவுலக நண்பர்கள்.. எல்லோருக்கும் நிதர்சனம் புரிந்திருக்கிறது. மனசுதான் கேட்கவில்லை..

மணிஜி said...

கபிஷ் நான் சொல்ல வந்தது இங்கு பதிவுலக பகுத்தறிவு சூரியன்களை..

கபீஷ் said...

@மணிஜி,

//டோண்டுவை பின்னுக்கு தள்ளுங்கள். அவர் பேச்சை கேட்டா இந்திய இமிகிரேஷன் செயல்படுகிறது.//

நான் கருணாநிதிய எதித்தும் பதிவு போட ஆள் இருக்குன்னுதான் சொல்லவந்தேன்.
டோண்டுவை எதிர்த்து பதிவு போடறது ரிஸ்க் இல்லாத ஒன்னு. :):) அதனால அப்படி செய்யறாங்களோ?:):)

மணிஜி said...

நில மோசடியில் நித்தியானதா கைதாம்

VISA said...

DISC: நான் இந்த பின்னூட்டத்தை அனானியாக போட்டிருக்கலாம்.


மனிதாபிமானம் மனிதாபிமானம் என்று பிதற்றும் என் அருமை வலை தமிழ் மக்களே நீங்கள் என்னுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.நிஜமாகவே எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாததால் தான் கேட்கிறேன். இதில் அறிவு ஜீவித்தனம் இல்லை. அறிவிலித்தனத்தால் கேட்கிறேன்.



1. மாயோயிஸ்டுகளை இந்திய அரசாங்கம் தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்குகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கைது செய்து வருடக்கணக்கில் ஒரு மனித உரிமை ஆர்வலர் கூட சிறையில் இருந்தார் . இந்திய அரசாங்கத்தை பொறுத்த வரை மாயோயிஸ்டுகள் தீவிரவாதிகள்....

இப்போது தமிழர்களில் மாயோயிஸ்டுகளுக்கு ஆதரவளிப்பவர்கள் எத்தனை பேர் கை தூக்குங்கள்......எஸ்...5%.


2. காஷ்மீர் பாகிஸ்தான் அங்கும் தீவிரவாதிகள் உண்டு. அவர்களும் இந்திய அரசாங்கத்தை பொறுத்த வரை தீவிரவாதிகள். உலக அரங்கிலும் தீவிரவாதிகளே....ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதிகளை பொறுத்தவரை அவர்கள் போராளிகள். சரியா? இப்போது தமிழ்நாட்டில் அந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளவர்கள் கை உயர்த்துங்கள்....எஸ்.....0.001%.

3. விடுதலை புலிகள், ராஜபக்ஷே அரசை பொறுத்தவரை தீவிரவாதிகள். அவர்களை வதைக்கிறார். கொல்கிறார். கொடூரமாய் கொல்கிறார். இங்கே வீரப்பனை தேடிப்போன அதிரடிப்படை செய்த அட்டூழியத்தை விடவும் அதிகமாக சித்தரவதை செய்கிறார். இப்போது தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கு ஆதவராளர்கள் எத்தனை பேர்? என்னையும் சேர்த்து 90%.


இங்கே நான் இலங்கை போராளிகளை தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்ய எழுதவில்லை.

நான் சொல்ல வருவது இது தான் விடுதலை புலிகளின் போராட்டத்தை நாம் மனிதாபிமான முறையில் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் போராட்டமாக பாவித்து ஆதரிப்பதை விட தமிழன் என்ற உணர்வு பூர்வமாகத்தான் ஆதரிக்கிறோம்?

மனிதாபிமான முறையில் நாம் இலங்கை தமிழர்களின் வாழ்வுக்கு கை கொடுப்பவர்களாக இருந்தால் மாயோயிஸ்டுகளுக்கும் கை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.



எல்லா போராட்டங்களும் உரிமைக்கானதும் நிலத்திற்கானதும் தான்.

இங்கே மாயோயிஸ்டுகளை துப்பி தூஷித்து பின்னூட்டம் போடும் சிலர் விடுதலை புலிகளை ஆதரிப்பது (என்னையும் சேர்த்து) இனத்தின் வெளிப்பாடே அன்றி மனிதாபிமானத்தின் வெளிப்பாடு அல்ல.

என் கேள்வி இது தான். விடுதலை புலிகளை நாம் ஆதரிப்பது அவர்களின் போராட்டத்தின் ஞாயத்திற்காகவா மனிதாபிமானத்திற்காகவா....?இல்லை இனம் என்ற உணர்விற்காகவா?

VISA said...

//நில மோசடியில் நித்தியானதா கைதாம்//

hot news. adutha postku matter ready!!!

sathishsangkavi.blogspot.com said...

தலை....

ரெண்டு நாளா இதே மேட்டரை படிச்சு படிச்சு போரடிச்சிருச்சு.....

நாம என்ன பதிவு போட்டாலும் யார் யாரைத் திட்டினாலும் இந்த விசயத்தில் நாம் நினைப்பது போல் ஒன்னும் நடக்காது.....

அதனால சங்கத்த கலைச்சு அடுத்து நித்தியானந்தாவ கைது பன்னிட்டாங்கலாம்....

இனி அதைப்பார்ப்போம்....

மகேந்திரன் எட்டப்பராசன் said...

இந்த தகவலை எல்லோருக்கும் சொல்லுவதில் இருக்கிற சிக்கலை நண்பர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.முன்னதாகவே பார்வதியம்மா வருவதை வெளியிட்டிருந்தால் கலைஞரே காங்கிரஸ் கயவாளிகள் இளங்கோவன்,ஞானசேகரன்,சுதர்சனம் போன்றவர்களைவிட்டு அறிக்கை விடவைத்திருப்பார்.இல்லாவிட்டால் ராஜிவின் ஆன்மாவைக்காக்கும் காவியத்தலைவி போயஸ் தோட்ட செல்வி நானாயிருந்தால் அனுமதிக்க விட்டிருப்பேனா என்று அறிக்கை விட்டு தன்பங்குக்கு பீதியூட்டியிருப்பார்.கடைசி வரை அந்த அம்மாவை திருப்பி அனுப்பியது தெரியாமல் வைகோ நெடுமாறனிடம் போலிஸ் கஸ்டடியில் எடுத்து நானே பாத்துக்கிறேன்னு சொல்லுவாரு கருணாநிதி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.யாரும் நம்பவில்லை திருப்பியனுப்புவர்கள் என்று .

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்//

மணிஜீ...
சென்னையில் இருந்தால் ம‌ட்டும் என்ன‌ செய்து விட‌ போகிறோம் ப‌திவு எழுதுவ‌தைத் த‌விர‌....

பனித்துளி சங்கர் said...

இப்படி எழுதியதற்கு மாற்றாக , அவர் இன்னும் பல சிறப்புகளை சொல்லி சிந்திக்க வைத்திருக்கலாம் . மீண்டும் சற்று அவரின் வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள் . உங்களுக்கு நன்றாகத் தெரியும் ., அதன் நோக்கம் என்னவென்று .

தவறும் செய்துவிட்டு அதை வேறு விதமாக திசை திருப்பும் மற்ற ஊடகங்களுக்கும் நமக்கு பின்பு என்ன வித்தியாசம் இருக்கிறது மணிஜீ ????

யுவா said...

:-|

பனித்துளி சங்கர் said...

////மணிஜீ...... said...
டோண்டுவின் தமிழ்மண சாதனையை முறியடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது./////////


இந்த வாடகை விளம்பரத்திர்க்காகவா நமது விவாதங்கள் ??

யுவகிருஷ்ணா said...

தண்டோரா!

ஒரே ஒரு கருத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பார்ப்பனீயத்தில் இருந்து முழுமையாக வெளிவந்து விட்டதாக நம்பினால், பார்ப்பனன் என்ற சொல்லைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமேயில்லை :-)

மாறாக 'தமிழ், இடஒதுக்கீடு, பெரியார், கலைஞர்' - இந்த வார்த்தைகளை கேட்டதுமே அடிவயிற்றில் இருந்து எரிகிறதா?

நோ கமெண்ட்ஸ்! :-)

பனித்துளி சங்கர் said...

இதுபோன்று ஒரே வீட்டின் கூரையில் எந்த பக்கத்தில் தீ வைத்தாலும் அதில் பாதிக்கப்படுவது நமது பதிவர்கள்தான் .,
எனவே சற்று நமது பார்வைகளை இன்னும் அழுத்தமாக நமது அரசியல் நரிகளின் மீது பதிய செய்து .

அவர்களை கண்காணிக்க நாமும் இருக்கிறோம் என்ற ஒன்றை அவர்களின் மனத்தில் ஏற்படுத்துவோம் வாருங்கள் .

பழமைபேசி said...

இடுகையில் உள்ளீடு! தலைப்பில் குரூரம்!!

ramalingam said...

சோ. டோண்டு போன்றவர்கள் விஷ(ம)ம் நிறைந்தவர்கள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. என் உள்ளுணர்வு இதைக் கூறுகிறது.

Sabarinathan Arthanari said...

1. டோண்டு எழுதிய பதிவு எவ்வளவு தூரம் நிராகரிக்க வேண்டியது, கண்டனம் தெரிவிக்க பட வேண்டியது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

2. ஆனால் இந்த எதிர்ப்பு நிலையை கொண்டு சம்பந்தமேயில்லாத ஒரு குறிப்பிட்ட மக்களை கொஞ்சமும் வருத்தமில்லாமல் தாக்கும் போக்கு வருந்த தக்கது.

சாதியை ஒழிப்போம் என்று கூறுபவர்களும் இதில் அடக்கம் எனும் போது வருத்தம் அதிகரிக்கிறது.

சாதி வெறி ஒழிய இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் போல.

3. நியாயமாக நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஆட்கள் வேறு இடத்தில் இருக்கிறார்கள் என்பது எளிதில் புரிய கூடீயது தான். சிலர் வேண்டுமென்ற கவனத்தை திசை திருப்புகின்றனர் என்பது உணர தக்கதே.

இதைதான் நீங்களும் கூற வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

ரோஸ்விக் said...

நல்ல பொருள் பொதிந்த பதிவு... தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை அண்ணா... :-)

எனது பதிவில் நம் திருவாளர்களையும், நம்மையும் சேர்த்து தான் புகழ்ந்து இருக்கிறேன் என நம்புகிறேன்.

Jackiesekar said...

டோண்டுவின் இடுகையை நான் நோக்கியது பார்பானுக்கும் தமிழனுக்கும் பிரச்சனை என்றில்லை...

ஒரு படித்த வயதான மனிதனுக்கும், பயணம் செய்து வந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒரு நோயாளி, மனநிலை பிறழ்ந்த மூதாட்டிக்கும் என்றே!--//

தண்டேரா கதிர் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கார்...

கையலாகத தனத்தில் எல்லோரும் பதறிக்கொண்டு இருக்கும் போது அனுப்பியது நியயாம் என்றால் என்ன அர்த்தம்.....


கலைஞர் சோனியாவை... இதற்க்குமுன் யாரும் திட்டவில்லையா? 4ம் கட்ட ஈழ போருன் போது பதிவுலகம் அதைதானே செய்தது...

எங்கள் தலைவர் உண்மைதமிழன் மு.க வை திட்டாத நாளே இல்லை..//

பாலா சார் ..நானும் டீக்கடைக்கு போவதுண்டு. தினமலரின் டீக்கடை பெஞ்சு இல்லை. நிறைய பெருக்கு இந்த நிகழ்வே தெரியவில்லை. இன்று காலை முதல் எங்கள் குழுவினர் சர்வே எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் லில் ஃபிக்ஸிங் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறார்கள். இது பாதிக்க வில்லை சார்..நம்மை போல் அறிவு ஜீவிகள்தான் அதிகமாக பேசுகிறோம்..//

உங்க எரியாவுல சர்வே எடுக்காதிங்க... தமிழ்நாடு முழுவதுமா எடுத்துட்டு பேசுங்க...

இதில் கண்டிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் டோன்டு சொன்னதற்க்கு எதிர்கருத்து சொல்லாம்.. ஆனால் சிங்களவனுக்கு பொறந்தவன் என்று சொல்வது எல்லாம் டூமச்...

Unknown said...

//உண்மையில் பார்வதி அம்மாளின் நிலையைப் பகடைக்காயாக ஆக்கியவர்களைத்தான் சாட வேண்டும்//
சாடி இருக்கலாமே ஆனால் உங்கள் பதிவில் அப்படி தெயர்யவில்லையே.. அவர்களை சாடுவதை விட்டு, அந்த அம்மா உள்ளே வரக்கூடாது என்று தானே இருந்தது.. !

மணிஜீ - இங்கே வந்து பாருங்கள்
http://myownscribblings.blogspot.com/2010/04/80-86-78-60.html

உண்மைத்தமிழன் said...

[[எங்கள் தலைவர் உண்மைதமிழன் மு.க வை திட்டாத நாளே இல்லை..//

இதுதான் சாக்குன்னு சொல்லி போட்டுத் தாக்குறியா..?

மணிஜி said...

முதலில் தலைப்பு மேட்டர். டோண்டுவின் இடுகைக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட இடுகைகளில் வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில்தான் தலைப்பு. இந்த பிரச்சனையையே திசை மாற்றி நாறடித்தார்கள்.(இதே போன்று நானும் முன்பு செய்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாய்த்தான் இருக்கிறது.இனி அப்படி இருக்காது)

லக்கி@யுவகிருஷ்ணா...

நீங்கள் சொன்ன பாயிண்ட்டுகளில் எதை கேட்டாலும் எனக்கு பற்றிக் கொண்டு வராது. ஒரு வேளை கலைஞர் என்று கேட்டால் வரலாம். அதுவும் இப்போதெல்லாம் வருவதில்லை.அது சரி கருத்தை சொல்லிய பின் அது என்ன “நோ கமெண்ட்ஸ்”

கரிசல்காரன்....

சிங்கை,சவுதி என்று சொன்னது ஆள்பவரை எதிர்த்து எழுதுவதற்கு. சென்னையிலிருந்தாலும் ஒரு பதிவு மட்டுமே போடமுடியும் என்று நீங்கள் சொன்னனது நூற்றுக்கு நூறு உண்மை.

ஜாக்கி ..என் ஏரியாவில் மட்டும் நோக்குபவன் நானில்லை என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?திருப்பியனுப்பிய நிகழ்வுக்கு காரணமானவர்களை கண்டித்து எழுதப் படவேண்டும் என்பதுதான் என் கருத்தும். வினவுத்தோழர்கள், உண்மைத்தமிழன் இன்னும் அயல்நாடு பதிவு நண்பர்கள் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை. எல்லோரும் பூசி மெழுகுவார்கள். இந்த இடத்தில் ஒரு அமைப்பாய் இருந்தால் தைரியமாக எழுதமுடியும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்..

பாலா சார்..விவகாரம் கருணாநிதியை பொறுத்தவரை முடிந்துபோன ஒன்று. அவர் அறிக்கையும் கொடுத்து விட்டார்.நமக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம்தான் இறங்க வேண்டும். சும்மா தமிழ் என்று சுயகழிவிரக்கம் ஒன்றும் செய்யாது. சில ஆயிரம் பேர்களின் அனுதாபத்தை தவிர

மணிஜி said...

நண்பர்களின் கருத்துக்கு தலை வணங்கி தலைப்பை தூக்குகிறேன்..

-/பெயரிலி. said...

நடக்கும் பிரச்சனையை வைத்து சொல்வதற்கு எதுவுமேயில்லை. அந்த அம்மாள் இந்தியாவுக்கு எதற்கு வரவேண்டும்? இந்தியா என்ன அவருடைய தாய்நாடா? தந்தைநாடா? சிறீலங்கா தமிழர்கள் குற்றம் புரிந்ததாலேயே அவர்கள் இத்தனை பேர் கொல்லப்பட்டுத் தர்மம் இறுதியிலே வென்றிருக்கின்றது. அப்படியாக சிறிலங்காவிலே அமைதி முப்பது ஆண்டுகளின் பின்னாலே வருவதற்கு இந்திய அரசும் தொடரும் எல்லாத்தமிழக அரசுத்தலைவர்களும் எத்துணை முனைந்து உழைக்கவேண்டியிருந்தது? டாக்டர் கலைஞர் செம்மொழி மகாநாட்டினைத் தமிழினைக் காலத்துடன் முன்னெடுக்கும் நோக்குடன் நடத்தி, தமிழகமும் உலகமும் பரந்த தமிழுக்கு விசுவாசமான ஆனால் இதுவரை உலகம் அறியாத கணணித்தமிழ்ப்பேரறிஞர், வணிகர்கள், புலம்பெயர்தமிழரசியல்வாதிகள் இவர்களுக்குக் களம் தர முயற்சிக்கும்வேளையிலே விடுதலைப்புலிகளின் தலைவரை நினைவுபடுத்தும்வகையிலே அவரின் தாயார் வைகாசி பிறக்கும்வேளையிலே தமிழகம் வருவது, முதுபரிதி டாக்டர் கலைஞர் மீண்டும் தமிழினத்தலைவர் என்ற பெயரினை உலகத்தமிழர்களிடையே பெறச்செய்யும் விழாவினைப் பிரபாகரன் என்ற பெயரினாலே முற்றாக மங்கச்செய்யும் காரியமேயல்லாது வேறென்ன? இதையே டோண்டுவும் எழுதியிருக்கின்றார். அந்த அம்மா வந்து பேசாமல், தானே மெல்லக் கண்கலங்கினாலும் அந்த அழுவாச்சி தமிழிளைஞர்களிடையே காவியமாகிப் போனால், இத்தனை செலவு செய்து கலிஞர் மீண்டும் தமிழ்த்தலைவரென்று இருபத்தைந்தாண்டு வனவாசம் முடிந்து மகுடாபிஷேகம் செய்யும் அமோகவிழா முற்றாகப் பயனற்றுப்போகுமே? புலம்பெயர்ந்து வாழும் எத்தனை பேருக்கு விளம்பரம் தருகின்ற விழா? ஐந்து நிமிடமேடைநிற்றலுக்காகத் தமிழையே திருகிப்போட்டு விற்க, முதுபெரும் தமிழ்ப்பற்றாளர்களும் உத்தமத்தமிழக்கணி கைகளும் திரண்டு வருகின்றனர். இப்போதுதானா இந்த அம்மாளுக்கு இந்தியாவிலே அதுவும் தமிழ்நாட்டிலே மருத்துவம் தேவைப்படுகின்றது? மகள்வாழும் கனடாவுக்கோ மகன் வாழும் ஸ்கண்டிநேவியாவுக்கோ போகாமால் இங்கே வருவதொன்றும் எதேச்சையாக நடந்ததல்ல. டோண்டு சாரும் ஹானரபிள் சுப்பிரமணியசாமியும் சொல்வதுபோல இந்தியா என்ன தர்மசாலையா? அதற்காக அதர்மசாலை என்று அவர் சொல்கின்றாரென நீங்கள் அர்த்தம் கொண்டால், அஃது அவர் தவறல்ல.

மணிஜி said...

எதிர் இடுகை எழுதிய எந்த பதிவரையும்( பாலா சார், ரோஸ்விக், ஈரோடு கதிர் யாரையும் நான் தவறாக சொல்லவில்லை.)அப்படி ஒரு தொனி இந்த இடுகையிலிருந்தால் மன்னிக்கவும்.

மணிஜி said...

//'தமிழ், இடஒதுக்கீடு, பெரியார், கலைஞர்' -///

இதில் பெரியார் பெயர் வேண்டாமே.கலைஞர் மட்டும் போதும்

மணிஜி said...

ஒரு இடுகையாக ஆகியிருக்க வேண்டியது உங்கள் பின்னூட்டங்கள் விசா... நல்ல கருத்து பகிர்வு..(தலைவரே..உங்க பேரை மறந்திட்டேன்)

நாமக்கல் சிபி said...

தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் ஒரு கண்டனக் கூட்டம் போடலாம்!

அனைவரும் கையொழுத்திட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கலாம்!

Unknown said...

aakkapoorvamana onerai nokki selkirigal.keep it up.

Hai said...

அப்படி என்ன வக்கிரத்தைக் கண்டீர்கள்?

மற்றப்படி எனக்கு பார்வதி அம்மாள் மீது என்ன தனிப்பட்ட கோபம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.

இவை உங்கள் வரிகள் டோண்டு அவர்களே.
இங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் (ராஜீவ் கொலைக்கு முன்புவரை)அனைவரும் இந்து ராம் உட்பட பிரபாகரனை ஆதரித்தவர்கள்தானே எனவே அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டப்பட்டவை என எவ்வாறு வரையறுப்பது.
தற்சமயம் ஒரு பின்னூட்டத்தில் நண்பரொருவர் குறிப்பிட்டிருந்தாரே தமிழும் தமிழனும் அவரோடு சம்பந்தப்பட்டதுதானே.

smart said...

உங்கள் கருத்தை முழுதும் ஆதரிக்கிறேன்.

smart said...

//ஈரோடு கதிர் said...சொன்ன தொணியில் தப்பு இல்லை, வக்கிரம் இருந்தது மணிஜீ..//
வார்த்தை வக்கிரத்திலேயே பொங்கி எழுந்த தாங்கள், செயல் வக்கிரத்தில் சாதனைப் புரிந்த அதிகாரவர்கத்தின் மீது எப்படியெல்லாமோ பாய்ப்போகிரீர்கள் என நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. கதிர் sir

smart said...

//எதன் பொருட்டேனும்... சாதியை இழுப்பது தவறான முன்னுதாரணமே, ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் பதிவுலகில் 5% அல்லது 10% சதவிகிதம் சாதியைக் கொண்டாடுவார்களா? அவர்களை ஈர்க்கவா நீங்களும் சாதியை தலைப்பில் போட்டுள்ளீர்கள்...//

நீங்க வைத்தது சுயநல தலைப்பானாலும், பதிவுலகில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டியுள்ளது மணிஜீ

செ.சரவணக்குமார் said...

அண்ணே, டோண்டுவோடு பதிவுக்கு எதிர்பதிவு போட்ட நண்பர்களை உங்களின் இந்தப் பதிவு காயப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நேற்று அந்தப் பதிவுகளிலெல்லாம் உடன்படுவதாக இருந்த உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன்.

மற்றொரு விஷயம், இந்தப் பதிவிற்கு முன்னர் கொடுத்திருந்த தலைப்பை நீக்கியதற்கு மிக்க நன்றி. இப்படியெல்லாம் தலைப்பு வைத்தால் தான் நாங்கள் உங்களை வாசிப்போமா என்ன?

Sanjai Gandhi said...

//உங்களால் என்ன தியாகம் இயலும் ? சொல்லுங்கள்.. அதற்கேற்ப நாம் ஒரு போராட்டம் அறிவிக்கலாம்.//

கேள்வி கேட்பது சுலபம் சார்வாள்.. நீங்க கேட்கிறீர்கள் என்பதற்காக என்னால் வெறுமனே ----கத் தான் முடியும் என்று சொல்லிவிடுவேன் என மனப்பால் குடிக வேண்டாம்..

விசா.. அந்த பாயிண்டுகளுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்..

மகேந்திரன் எட்டப்பராசன், உங்க பெயரே உங்கள் தரத்தை சொல்கிறது.. நீங்க எல்லாம் அடுத்தவரை கயவாளின்னு சொல்றிங்க.. பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இந்த அப்பாவியை மன்னியும்..இன்ஷா கிருஷ்ணா..

மகேந்திரன் எட்டப்பராசன் said...

எட்டப்பரசன் என்பது என் அப்பா பெயர்.இதிலென்ன தரமற்ற செயல் இருக்கு சஞ்சய் .உங்க பேரு கூட சஞ்சய் காந்தின்னு இருக்கு நீங்க ஸ்த்ரிலோலனா? இல்ல உள்குத்து வேல பாப்பீங்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது என்ன சார் தலைப்பு!?

KANTHANAAR said...

பிரச்சனையே... டோண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுதான்.. ஒருவர் பெரும் சோகத்தில் இருந்தால் மேலும் அவனை சோகப் படுத்துதல் என்பது என்னவகை மனிதாபிமானம் என்பதை வயது முதிர்ந்த டோண்டு புரிந்து கொள்ளவில்லை என்றால்... தன்னுடைய கருத்து என்று அசந்தர்ப்மாக சொல்வது அவரது வழக்கம் என்றால் கடும் வசவுகள் வந்துதான் சேரும்...’பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே ’ என்றான் பாரதி.. அகிம்சையை போதிக்கும் காந்தி நாடு என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா... இந்தியா இதுவரை எந்த நாட்டையும் படையெடுத்துச் செல்லவில்லை என்று மார் தட்டிக் கொள்வதில் என்ன பயன்..? எகிப்து ஈரான் என்று பலரும் வந்து சென்னை அப்போலாவில் பல சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லையா..? தடை செய்யப்ப்டட இயக்கதின் பாலசிங்கத்தை தடுத்தது கூட ஒரு வகையில் நியாயமாக இருந்தாலும் இலங்கையில் ‘எல்லாம்’ முடிந்த பின்னர் ஒரு வயதான தமிழ் பேசும் பெண்மணிக்கு அனுமதி கிடையாது என்றால் சீரணிக்கவே முடியவில்லை.. அதைவிட அதை ஆதரிப்பது நிச்சயமாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலே.. முன்னது கூட மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது..
கந்தசாமி

மகேந்திரன் எட்டப்பராசன் said...

விசா அவர்களே விடுதலைக்கு ஆதரவு தருவது என்று முடிவு செய்து விட்டால் அதிலே இனம் மொழி சாதி அடையாளங்கள் பார்க்கக்கூடாது என்பது என் தரப்பு.புலிகளை ஆதரிக்கும் நான் வடகிழக்கு ,காஷ்மீர் போராளிகளையும் ஆதரிக்கிறேன் .அடக்குமுறை இந்திய அரசுக்கு பதிலடி தருவோர் என்ற வகையில் மாவோயிச்டுகளையும் ஆதரிக்கலாம்.

Unknown said...

நான் ஏற்கனவே எழுதிய ஒரு இடுகையை இங்கே பின்னூட்டமாகப் போடுகிறேன்..

//தப்பு
சரி
சரி
தப்பு
தப்பு தப்பு
சரி சரி
தப்பு சரி
சரி தப்பு
...
...
கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு.//

Unknown said...

மணிஜீ...

ஒருவர் சொன்னக் கருத்தை விவாதம் செய்வதை விடுத்து அவர் இனத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நான் ஆதரிக்கவில்லை.

அதே நேரம் மேலே உள்ள கருத்தை சொல்ல வந்த நீங்கள் அதைச் சொன்ன தொனி, அந்த மனிதர் சொல்லிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அமைந்துவிட்டமை இங்கு வேதனை தரக் கூடியது..

Unknown said...

//சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்//

சென்னையிலிருந்து எழுதுவதைக் காட்டிலும் சிங்கையிலோ சவுதியிலோ இருந்து எழுதுவதில் தான் ரிஸ்க் அதிகம் தலைவரே...

சென்னையில் இருந்தால் ஆட்டோ வரலாம்.. அங்கே கூட நாலு அடி வாங்கி தப்பித்து விடலாம்.

வெளிநாட்டிலிருந்து எழுதுபவர், இந்தியா வரும்போது ஒரு பெட்டிகேஸ் போட்டு பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டால் போதும்.. வெளிநாட்டு வேலை, அங்கு இருக்கும் வீடு, கார் இன்ன பிற சொத்து அத்தனையும் கோவிந்தா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

1.ஈழப் பிரச்சனைக்கு.. ஈழம் போய் பேசுவதுதான் அழகு...
2.ஆஸ்திரேலியா.. இந்தியர் அடி..
போடுங்க டிக்கெட்டை ஆஸ்திரேலியாவுக்கு..

( சாரிங்க..... வீரம் இருந்தால்...)


புரிதலுக்கு நன்றி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger pillaival said...

aakkapoorvamana onerai nokki selkirigal.keep it up.
//

நன்றி சுரேஸ் பிள்ளவாள்.. ( மணிஜீ சார்பாக..)

Unknown said...

அண்ணே பின்னூட்டம் ரொம்ப நீளமாக இருப்பதால் தனிப்பதிவா போட்டுட்டேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது கேள்விகள்
மணிஜீ, டோண்டுவின், கருத்துக்களில் உடன்பாடு இல்லை என அழகாச் சொல்லி
கடைசியா வைத்தார் பாருங்கள் அவரது Twist-யை, ’சிங்கையில் இருந்து வீரமா பேசினால் போதுமா?’-யென..
அங்கதான் சார் பார்த்தேன் அவரது திறமையை..

டோண்டு, பதிவர் சங்கம்பற்றிய கூட்டத்தில, பேப்பர் மட்டும், பேனாவுடன் சுற்றிய காட்சி...அதற்குபிறகு நடந்த விவாதத்தில், போட்டார் பாருங்க ஒரு போடு..சே.. யாராலும் நினைச்சு பார்க்கமுடியாதபடி..”ம்யூசிகல் சேர் வெச்சாங்க..அதுல ஜெயிச்சவங்க எல்லாம் பார்ப்பானு’..

அவர்மேல், தனிமனித தாக்குதல்னு பலபேர் சொல்லிகிட்டு இருக்காங்க..
ஏன்..நினைத்துப்பாருங்கள்..சங்கம் ஆரம்பிக்க, குழுமும் பதிவர்களில் இவரும் ஒருவர்..
ஒரு சாதாரண காருக்கு( வாகனம் ).. கொடுக்கும் மரியாதையை..மனிதனுக்கு கொடுக்கமுடிந்ததா அவரால்?

ஒருவேளை , இவர் சங்கத்து தலைவராகவோ இல்லை ஏதாவது பொறுப்பிலோ இருந்தால், என்ன நடக்கும் ?

ஒரு குழுவை வழி நடத்தப்பார்க்கும், ஆர்வலர்கள்..குழுவின் மனங்களை
படிக்கத்தெரிந்திருக்கவேண்டும்..அல்லது.. அவர்களின் கருத்தை, அந்த குழுவினர் ஏற்றுக்கொள்ளும்படியான திறமையிருக்கவேண்டும்.. இருக்கிறதா?

இது அவரின் தனிப்பட்டகருத்து என, யாரும் ஜல்லியடிக்கவேண்டாம்..

மேலும்..பதிவர் சங்கம் , சென்னைவாசிகளுக்கு மட்டுமே என்றால்..தயவுசெய்து நேராகவே அறிவித்துவிடுங்கள்..
விவாதத்தை, இத்துடன் முடித்துக்கொள்ளலாம்...

நன்றி..
பட்டாபட்டி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
மனிதாபிமான அடிப்படை என்று வாய்க்கு வாய் சொல்கிறார்கள். அப்புறம் ஏன்யா ரகசியமாய் வரவேண்டும்?
//

பிரபாகரனின் தாய் தந்தையர் , தமிழகத்தில் இருந்த போது..எவ்வளவு பிரபலமாக இருந்தார்கள்..?
தினசரி ஊர்வலம்..
உண்ணாவிரதம்..
வன்முறை என பிரபலமாக இருந்துவிட்டு , ரகசியமா வருவது.. உலக மகா தப்புதான் சார்..

முடிஞ்சால், தூக்கிலும் போடலாம்..

மணிஜி said...

பட்டாபட்டி.. நான் நீங்கள் சிங்கயிலிருந்து பதிவு போட்டதை குறிப்பிடவில்லை. அரசை எதிர்த்து இங்கிருந்து எழுதுங்கள் என்று சொல்கிறேன். மற்றப்டி குழுமம் என்றால் நாம்தான் நண்பரே..கருத்து மோதல் இருக்கலாம். ஆனாலும் நட்பு என்றும் உண்டு. உங்கள் இடுகையை வாசித்தேன். கொஞ்சம் காரம்தான்,,வாழ்த்துக்கள் நண்பரே...

dondu(#11168674346665545885) said...

//சரக்குக்காக அலஞ்சுட்டு லேட்டாக வந்து (நன்றி கேபிள் சங்கர்) முதல் வரிசை சீட் இல்லை என புலம்பின ஒருவரின் உளறலுக்கு போட்ட கிண்டலான பதில் அது. அது பிடிக்கவில்லை அந்த பதிலை வரவழைத்தவரை போய் சாடவும்.

அது சரி, என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டத்தையே எனது பின்னூட்டமாக காட்டி தன் பதிவில் சீன் காட்டிய டோமருக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

டோண்டு ராகவன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது சரி, என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டத்தையே எனது பின்னூட்டமாக காட்டி தன் பதிவில் சீன் காட்டிய டோமருக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?
//

ஆங்.. நாங்கதான் tamlish-ல இருந்து,’உங்கள் பதிவு முன்னனியில் உள்ளது’ என்று வந்த மெயிலை..ஒரு கமென்ஸா போட்டுகிட்டு..

”நான் ஹிட் ரேட்டுக்காக எழுதவில்லை”
என சொல்லிக்கொண்டு திரிகிறோம்..டோண்டு அவர்களே..

( நன்றி.. பட்டாபட்டியாக டோமர்..)


( ஹிட் ரேட் வைத்து.. அரை ப்ளேடு கூட வாங்க முடியாது..என்று எனக்கு புரிகிறது..)

dondu(#11168674346665545885) said...

//ஆங்.. நாங்கதான் tamlish-ல இருந்து,’உங்கள் பதிவு முன்னனியில் உள்ளது’ என்று வந்த மெயிலை..ஒரு கமென்ஸா போட்டுகிட்டு..

”நான் ஹிட் ரேட்டுக்காக எழுதவில்லை”
என சொல்லிக்கொண்டு திரிகிறோம்..டோண்டு அவர்களே..//
அது எனக்கு நிஜமாகவே தமிழிசிலிருந்து வந்தது, நன்றி நவிலலுக்காக போட்டது. அது உண்மையா என்பதை அதில் உள்ள சுட்டி மூலம் ஒரு நிமிடத்தில் கண்டறிய முடியும்.

அதர் ஆப்ஷனில் உங்களாலோ அல்லது உங்க அல்லக்கைகளாலோ போடப்பட்ட என் பெயரில் வந்த பின்னூட்டமும் இதுவும் ஒன்றாகுமா?

டோண்டு ராகவன்

selventhiran said...

அன்பின் தண்டோரா, இந்தப் பதிவு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஒரு சேர அளிக்கின்றது :(

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதர் ஆப்ஷனில் உங்களாலோ அல்லது உங்க அல்லக்கைகளாலோ போடப்பட்ட என் பெயரில் வந்த பின்னூட்டமும் இதுவும் ஒன்றாகுமா?
//

பிள்ளையை கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும்.?!!!
.
.
அனானிகளில்.. 90% , உங்களவர்களிடம் இருந்துதான் வருகிறதென்பது.. பதிவுலக்கே தெரியுமே..

Chittoor Murugesan said...

//உங்களால் என்ன தியாகம் இயலும் ? சொல்லுங்கள்.. அதற்கேற்ப நாம் ஒரு போராட்டம் அறிவிக்கலாம்.//

நெத்தியடி.. இதே கேள்விய வேற யாரையாவது கேட்டிருந்தா இன்னேரத்துக்கு ஒரு பத்து ஐட்டத்தையாவது சொல்லி பதில் வந்திருக்கும்.. இவிக மவுடீகத்தை மண்ணாக்க ஒரு கன்னடியன் வர வேண்டியதாச்சு.

இதெல்லாம் ஆகறதா போகறதா? வேலைய பாருங்க அண்ணாச்சி. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்..

பெசொவி said...

அரசு நிர்வாகத் திறமை(யின்மை) பற்றி என் எண்ணங்கள்:
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_22.html

மகேந்திரன் எட்டப்பராசன் said...

சித்தூர்.எஸ்.முருகேசன் said
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்..
அது ஏன் தருமத்த கவ்வனும் ,சீட்டாடி தொதுட்டு பேசற வசனமெல்லாம் வேணாங்க அண்ணாச்சி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மணிஜீ
@dondu(#11168674346665545885)
@பதிவர்கள்
//ஆங்.. நாங்கதான் tamlish-ல இருந்து,’உங்கள் பதிவு முன்னனியில் உள்ளது’ என்று வந்த மெயிலை..ஒரு கமென்ஸா போட்டுகிட்டு..

”நான் ஹிட் ரேட்டுக்காக எழுதவில்லை”
என சொல்லிக்கொண்டு திரிகிறோம்..டோண்டு அவர்களே..//
அது எனக்கு நிஜமாகவே தமிழிசிலிருந்து வந்தது, நன்றி நவிலலுக்காக போட்டது. அது உண்மையா என்பதை அதில் உள்ள சுட்டி மூலம் ஒரு நிமிடத்தில் கண்டறிய முடியும்.
//


பட்டாபட்டி இப்ப கேக்குறான் பகிங்கர மன்னிப்பை..( மணிஜீ சாரிடமும், மற்ற பதிவர்களிடமும்..)

ஏன்
பச்ச மண்ணிடம் சண்டை போட்டதற்க்காக...

இப்ப பாருங்க.. யாரோ.. அந்த Tamilish ஆபிஸ்ல இருந்து, அவருக்கு மெயில் அனுப்பறதா நினைச்சுட்டு, அதையும் கமென்ஸ்சா போட்டுகிட்டு இருக்கார்..

கேட்டா.. அவருக்கு... அங்கிருந்து மெயில் அனுப்புனாங்கனு சொல்றாரு..ஆதாரமா சுட்டி இருக்குனு சொல்றாரு..

சே..இதுக்கு காரணம் மணிஜீ சார்..ஏன் சார்.. அவருக்கு எடுத்து சொல்லக்கூடாது..இப்படி..tamilish-ல இவ்வளவு ஓட்டு விழுந்தா, மெயில்
வரும்..ஆனா, அது Auto- trigger Scriptனு ..

பச்ச மண்ணா இருக்காரு,.. இவருகிட்ட போயி.. கேள்வி கேட்டது என்னுடைய தவறுதான் ...

( இதையும் காப்பி பண்ணி , பதிவில் பேஸ்ட் செய்துகொள்ள முழு உரிமை அளிக்கிறோம்..
இப்படிக்கு
டோமர் பட்டாபட்டி)

dondu(#11168674346665545885) said...

டோமர் பட்டாபட்டி,

நான் சொன்னதும் அதைத்தான். ஆட்டோ ட்ரிக்கரோ டாக்சி ட்ரிக்கரோ அது தமிழிசிலிருந்து வருகிறது என்பது நிஜம்.

அதுல கொடுத்த சுட்டியை அழுத்தினா சம்பந்தப்பட்ட பதிவை ஓட்டுகளோட பாக்கலாம்.

இதுல பச்ச மண்ணு எங்கேயிருந்து வந்தது? தமிழிசில் சம்பந்தப்பட்ட பதிவு பாப்புக்லர் ஆச்சுங்கறதை நானும் எனது வாசகர் கிட்டே சொல்லறேன். இதுல யாருக்கு என்ன கஷ்டம்?

பை தி வே அதர் ஆப்ஷ்ன்னா என்னன்னு தெரியுமா? டோண்டுவின் புகழ்பெற்ற எலிக்குட்டி கண்டிஷன்கள் பற்றியாவது தெரியுமா?

டோண்டு ராகவன்

smart said...

பட்டாப்பட்டி அவர்களே,
உங்கள் பிளாக்கில் தமிளிஷ் ஓட்டுப் பட்டை வைத்துள்ளீர் ஆனால் டோண்டு அவர்களிடம் அது இல்லாத பொது மெயிலை பயன்படுத்துவதில் என்னதப்பு?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இப்ப, நல்லா புரிஞ்சிடுச்சு ராகவன்..

”உங்களுக்கு தற்பெருமை கிடையாது”