Friday, April 2, 2010

பையா.............ஒரு பார்வை


கண்ணைக்கட்டி அழைத்து போகாத குறைதான். பெரிய கேட்டில் நுழைந்து,சில படிகள் ஏறி, பின் சில படிகள் இறங்கி, சிறிய கண்ணாடி கதவை திறந்து , உள்ளே சென்று உட்கார்ந்தால் அரேபியா டம்ளரில் தண்ணீர் வைத்தார்கள். கிராமத்து விருந்தாம். சாம்பார் சாதத்தில் சில கறித்துண்டுகள். பிரியாணியாம். கிரேவி இல்லியாம். முன்னூத்தி சொச்சம் பழுத்தது. வாட் வரி 12%. பகல் கொள்ளை . தயவு செய்து போய்விடாதீர்கள். எக்மோர் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் அய்யனார் ஓட்டல். ஆல்பட் தியேட்டரில் இடைவேளையில் பார்த்த விளம்பரத்தை பார்த்து விட்டு போய் நானும், கேபிளும் சிக்கிய கதை இது.

அந்த சிறிதளவு கதை கூட பையாவில் இல்லை. வழக்கம் போல் தடித்தடியாய் வில்லன்கள். முழுக்கோழியை சாப்பிடுகிறார்கள். ஒன்றும் தெரியாத அப்பாவிகளை துவம்சம் செய்கிறார்கள். ஒவ்வொருத்தனும் ஆறரை அடி இருக்கிறான். ஐந்தேமுக்காலடி ஹீரோ கார்த்தியிடம் வஞ்சனையில்லாமல் உதை வாங்குகிறார்கள். அத்தனை பேரிடமும் பிளம்பர்கள் போல் ஒரு பெரிய பைப் கையில் இருந்து கொண்டேயிருக்கிறது.

முதல் பாதி தங்க நாற்கர சாலையில் சொகுசு காரில் போவதைப் போல் படம் பயணிக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் ஸ்பீடு பிரேக்கர்கள் இருந்தாலும். இடைவேளைக்கு பின் வண்டி பிரேக் டவுன் ஆகிவிடுகிறது. ஓரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு என்பதைப்போல் திரைக்கதை. எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தை கூட அடுத்த காட்சியை சொல்லிவிடும்.

கார்த்தி. இதில் பேண்ட் போட்ட பருத்திவீரன். அவ்வளவுதான். அதே மானரிசம். அவர் பெயர் போடும்போது தியேட்டரில் கைத்தட்டல். விசில். அதை தக்க வைத்துக் கொள்ள இன்னும் மெனக்கெட வேண்டும் கார்த்தி.அவர் அப்பா சிவக்குமார் நடித்த “என் கண்மணி , என்காதலி” என்ற சிட்டுக்குருவி பாடல் வரும்போது கொஞ்சம் சுவாரசியமாய் செய்கிறார். மற்றபடி .....

கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல்.

மதியின் ஒளிப்பதிவு எக்ஸ்லண்ட். படம் முழுக்க காமிராவின் டிராவல் கிளாஸ். ஆண்டனி எடிட்டிங்கும் சாணை பிடித்த புது கத்தி(ரி) என் காதல் சொல்ல நேரமில்லை பாடல் ஓகே. பிண்ணனி இசையிலும் யுவன் ஸ்கோர் பண்ணுகிறார்.
ஆல்பட் தியேட்டர் சீட்டிங் கொஞ்சம் சுமார்தான். இல்லாவிட்டால் தூக்கம் வந்திருக்கும். லிங்குசாமி பழசை மறக்காமல் இருப்பது நல்லதுதான். அதற்காக அவரின் முந்தின படங்களை இன்னும் ஞாபகப் “படுத்த” வேண்டாம். இடைவேளையில் இன்னொரு கொடுமை. மாஞ்சா வேலு என்ற படத்தின் டிரெய்லர் . திருந்தவே மாட்டீங்களாடா?


21 comments:

Athisha said...

படம் புட்டுகிச்சா.. பாவம் லிங்கு..

உண்மைத்தமிழன் said...

போச்சா..? சந்தோஷம்..! எனக்குக் காசு மிச்சம்..!

Unknown said...

எனக்குந்தான் அண்ணாச்சி .....

அகநாழிகை said...

மணிஜி,

பாட்டு எல்லாம் நல்லாயிருக்கு. ஒரு வாரமா ‘பையா‘ பாட்டுதான் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தேன். யுவன் பாடின ‘என் காதல் சொல்ல நேரமில்லை‘ பாட்டுக்காக, ரொம்ப நாளா வைச்சிருந்த ஹலோ டியூன் கூட மாத்திட்டேன்.

அப்படியே இருந்திருக்கலாம். படத்தையும் பாக்கணும்னு நினைச்சது என் தப்பு.

‘ரன்‘ படத்தோட மாவையே வேற கலர் பக்கெட்ல போட்டு காட்டியிருக்கார் லிங்குசாமி.

மரா said...

இதுல என்ன அண்ணே சந்தோஷம் ...
நல்லா இல்லைனா அந்த படத்த பதியாம விட்டுரலாமுங்கிறது என் சொந்த கருத்து.எம்புட்டு பணம் புரள்ற பிசினஸ் ..நன்றி.

Kumky said...

கடமைய ஆத்திட்டீங்க....

நல்லது.

நேசமித்ரன் said...

விமர்சன ஸ்டைல் க்ளாஸ்

சாணை பிடிக்கும் போது கையில் கிடைக்கும் அதிர்வு மாதிரி

vasu balaji said...

ஊத்தி மூடியாச்சா:)) ரைட்டு:)

கலகலப்ரியா said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

போச்சா..? சந்தோஷம்..! எனக்குக் காசு மிச்சம்..!//

எனக்கு கண்ணு மிச்சம்... (நெட்ல பார்ப்போமில்ல..)

ரோஸ்விக் said...

நல்லவேளை இந்த இயக்குனர் டவுசர் அவுக்குரதப் பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை :-)))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! //

ஓஹோ ........

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திருந்தவே மாட்டீங்களாடா?//

:-))))

Raju said...

@மாஞ்சா வேலு
அறிவுஜீவிகளாக தங்களை பறைசாற்றிக்கொள்ளும் டயரடக்கர்கள் மத்தியில், ஏ.வெங்கடேஷ் மாதிரியான் ஆட்கள் கொண்ட நிலைப்பாடில் ஜொலிப்பது சந்தோஷமே...!

மாஞ்சாவேலு ஹிட்டாகும் பாருங்கண்ணே.அட்லீஸ்ட் போட்ட காசை எடுத்துருவாங்க..!

radhu said...

நீங்கள் எல்லாம் மிக அருமை எண்றூ
கூறிய அஙகாடி தெருவை(அதன் ஹிமாலய வெற்றிக்கு பிறகும்) குப்பை எண்றூ கூறும் சாரு ”பையா” படத்தை
சூப்பர் எண்று கூறும் நானள மிக விரைவில் எதிர் பாற்கிறேன்.

ரவி said...

superapppu...

எறும்பு said...

@மாஞ்சா வேலு
சிறந்த படங்களை தரும் இயக்குனர்கள் ரெண்டாவது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்க முக்கும் போது, அதிக ஹிட் தராத இயக்குனர் A.வெங்கடேஷ்கு தொடர்ந்து படங்கள் கிடைப்பது எப்படி?!!!?

அண்ணே என் சந்தேகத்த கொஞ்சம் தீத்து வைங்கன்னே

R.Gopi said...

//அந்த சிறிதளவு கதை கூட பையாவில் இல்லை//

ஹா...ஹா...ஹா... ஆரம்பமே அசத்தலா!!! சரி...சரி நல்லா அடிச்சு ஆடுங்க....

//ஒவ்வொருத்தனும் ஆறரை அடி இருக்கிறான். ஐந்தேமுக்காலடி ஹீரோ கார்த்தியிடம் வஞ்சனையில்லாமல் உதை வாங்குகிறார்கள். அத்தனை பேரிடமும் பிளம்பர்கள் போல் ஒரு பெரிய பைப் கையில் இருந்து கொண்டேயிருக்கிறது.//

கோழிய உறிச்சு மசாலா தடவற மாதிரி.... காட்சிய போட்டு உரிச்சுட்டீங்களே தல....

//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல். //

ஹா...ஹா...ஹா.... அதானே.....இத விட “பிரம்மாண்டத்துக்கு” எல்லாம் சம்பளம் கொறச்சல் தானே!!

//இடைவேளையில் இன்னொரு கொடுமை. மாஞ்சா வேலு என்ற படத்தின் டிரெய்லர் . திருந்தவே மாட்டீங்களாடா?//

தல... ஒங்கள அப்படி எல்லாம் விட்டுடுவோமா!!! கொல பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு.... நல்லா மாஞ்சா போட்டு அறுக்க வேண்டாமா??

ஸ்ரீ.... said...

தலைவரே,

நன்றி. காசு மிச்சம்.

ஸ்ரீ....

butterfly Surya said...

உங்களுக்கா மேட்டர் இல்லை எழுதறதுக்கு..??

வர வர மொக்கை படத்துக்கு கூட விமர்சனம் எழுதணுமா..??

இல்லை.. காலத்தின் கட்டாயமா..??

போங்க மணிஜீ..

pichaikaaran said...

"எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தை கூட அடுத்த காட்சியை சொல்லிவிடும்."

வழி மொழியிறேன்

//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல். //
வொர்த் தானுங்கண்ணா... படம் டெபாசிட் வாங்குவது இவரால்தான்... இயக்குனர் சம்பளத்தையும் சேர்த்து இவருக்கே கொடுத்து இருக்கலாம்

pichaikaaran said...

ஒட்டு மொத்தமா, வலை பதிவுலகம் படத்தை பத்தி என்ன சொல்லுது.. இங்கே பாருங்க

http://pichaikaaran.blogspot.com/2010/04/blog-post_821.html