Thursday, June 4, 2009

தொடர் /இடர் பதிவு



1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

இயற்பெயர் மணிகண்டன்.சுருக்கமா மணி..பதிவு உலகத்தில் நுழைஞ்வுடனே தண்டோரா ந்னு வச்சுகிட்டேன்.தண்டமா ஒரு ஓரமா உக்கார்ந்தவனை கேபிள்,அக்னி,ஜாக்கி எல்லாம் சேர்ந்து தேரை இழுத்து தெருவில வுட்டாங்க

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வாரம் இரண்டு தடவை அழுவேன்..மப்புல.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டுமில்ல...யாருக்கும்மே பிடிக்காது.கோழி.குப்பைதொட்டி எல்லாம் ஞாபகம் வரும்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

வாழைப்பூ மசியல்,மிதிபாகற்காய் காரக்குழம்பு,கொள்ளுரசம்...அசைவத்துல நண்டு...
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கேள்வியே புரியல...சாதாரணமா நான் ரொம்ப பிரெண்ட்லிதான்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பம்பு செட்ல....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எங்கு பார்க்கிறார்களோ அங்கு..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: சிரிப்பு வருது..
பிடிக்காத விஷயம் : சும்மா தொட்டதுக்கு எல்லாம் சிரிக்கிறதுதான்..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னைய போய் லவ் பண்ணாளே அது பிடிக்கும்?பிடிக்காதது வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு தடை போடறதுதான்

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா..அவங்க இங்க வரமுடியாது.நாந்தான் அங்க போகணும்(மேல)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அரை மனிதனாக ...சும்மா சொன்னேன் ..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

காற்றில் வரும் கீதமே..
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம்?
தமிழ்மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

பாவம் விட்டுடுவோம்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
???????????????????????????????

17. பிடித்த விளையாட்டு?
ரம்மி

18.கண்ணாடி அணிபவரா?
படிக்க மட்டும்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
கமலின் படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
கோபிகிருஷ்ணன்..கிரா வின் மறைவாய் சொன்ன கதைகள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படமே இல்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
செக் ரெடி..பிடித்தது..பிடிக்காதது..இன்னுமா வேலை முடியல

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அந்தமான்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தண்ணி திறமை இருக்கு

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கழகம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் வீட்டு வெஸ்டர்ன் டாயிலட்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறா மாதிரிதான்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஸ்கூல் படிக்கும்போது செஞ்சதுதான்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
யாருக்கு வந்த வாழ்வு பற்றி கேக்கறிங்க

9 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னைய போய் லவ் பண்ணாளே அது பிடிக்கும்?பிடிக்காதது வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு தடை போடறதுதான்//

-:)

தினேஷ் said...

//ஸ்கூல் படிக்கும்போது செஞ்சதுதான்//

ஹி ஹி ஹி

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

வரிக்கு வரி கிண்டல்தான் போங்க..!!!

இராகவன் நைஜிரியா said...

// 32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
யாருக்கு வந்த வாழ்வு பற்றி கேக்கறிங்க //

கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.. திருப்பி கேள்வி கேட்கக் கூடது...

Jackiesekar said...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னைய போய் லவ் பண்ணாளே அது பிடிக்கும்?பிடிக்காதது வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு தடை போடறதுதான்//

உனக்கு சோத்துல உப்பை குறைச்சா எல்லாம் சரியாயிடும்டியே...

Cable சங்கர் said...

உண்மைய எழுத போறேன்னீங்க..?

மணிஜி said...

தலைவரே..முடிந்தவரை உண்மையைதான் எழுத முயற்சித்திருக்கிறேன்...வருகைக்கு மிக்க நன்றி..நண்பர்களே..ஜாக்கி.ஏற்கனவே உப்பு கம்மிதான்..கொழுப்புதான் ஜாஸ்தி

butterfly Surya said...

கலக்கல்..

சர வெடி....

முரளிகண்ணன் said...

:-)))

செமை நக்கல் பதில்கள்