Thursday, January 27, 2011

ஜெயா அண்ட் கோ


போயஸ் கார்டன் . நேற்றைய , நாளைய ? நிரந்தர முதல்வரின் இல்லம் . தேர்தல் ஆலோசனை கூட்டம் தொடங்க இருக்கிறது . தலையில் முண்டாசு கட்டி ஓ.பி.எஸ் ப்ளக்ஸ் பேனர்களை கட்டிக்கொண்டிருக்கிறார் .

“மாடியிலிருந்து இறங்கும் மங்கா தங்கமே”

ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தர உள்ள அனலே..கனலே..தணலே..”


ம்ம் ..சீக்கிரம் ஆகட்டும்.. ராகுகாலம் போனவுடனே , அம்மா வந்துடுவாங்க.. மேளம் ,வாத்தியம் எல்லாம் ரெடியா ?

ஜெயபேரிகை ஒலிக்கிறது . அம்மா ச(சி)கல பரிவாரங்களுடன் இறங்கி வருகிறார் .

கார்ப்பரேஷன் மருந்து பட்ட கொசுக்கள் போல் எல்லோரும் கீழே விழுகின்றனர் ..

போதும் . எல்லாம் எந்திருங்க . பதவி ஏற்பை எங்க வச்சுக்கலாம் . காரப்பாக்கத்துல பந்தலுக்கு ஏற்பாடு பண்ணுங்க .

அம்மா ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்கலாமா ?

எல்லோரும் வந்தாச்சா ?

அவங்க எங்க போனாங்க .. இங்கதான் டேரா .. ஒருத்தர் அறிவாளோட தோட்டத்துல கைவேலையா இருக்காரு .. இன்னொருத்தர் நம்ம ஆஃபிஸ் பீரோவை சுத்தியலால நிமித்திகிட்டிருக்காரு ..


அவர் எங்க மேன் ?

உள்ளிருந்து குரல் கேட்கிறது . பென்சில்வேனியாவில் என்ன நடந்தது ? பாசிச வெறி பிடித்த...

என்ன மேன் ? எதாவது நாடக ஓத்திகை நடக்குதா ?

இல்லிங்க அம்மா . புரட்சி புயல் பேசிகிட்டிருக்காரு . சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்கணுமில்ல ..


வறுத்தகறி எங்கப்பா ?

அம்மா . அவர் விருதகிரி . ஏற்கனவே நீங்க சொன்னதுக்கு இவங்களா ஊத்தி கொடுத்தாங்கன்னு கேட்டாரு . இப்ப இதை கேட்டா ஆமாம் இவங்கதான் அறுத்து ஆக்கி போட்டாங்களான்னு கேப்பாரு ஹாங்..

முதல்ல அவரை வரசொல்லுங்க . இவர் யாரு ? புதுசா இருக்காரு .

அம்மா இவர்தான் இன்னிக்கு ஹைலைட் . பாசிச வெறி பிடித்தவர்கள் இவரை கொடுஞ்சிறையில் இட்டு..


மிஸ்டர் .. அதை நானும்தான் பண்ணுவேன் . அடங்கலைன்னா , அடக்க வேண்டியதுதானே . இந்த விஷயத்துல நானும் , மிஸ்டர் க..வும் ஒன்னுதான் .

வேற யாரு வந்திருக்கா ?

நாழ் வழ்ந்துருக்கேன்ம்மா என்றபடி கார்த்திக் எண்ட்ரி ..

நீங்க முதல்ல வெளிய போய் துப்பிட்டு வாங்க.. எச்சில் தெறிக்குது .. வரச்சொல்லுங்க அவரை .. போன் போடுங்க..

முரசு சப்தம் கேட்கிறது .

எல்லா நாற்காலிகளும் அகற்றப்படுகிறது . அம்மா மட்டும் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் . மற்றவர்கள் கை கட்டி நின்று கொண்டிருக்க ....

விருதகிரி உள்ளே நுழைகிறார் . பின்னால் அவர் மச்சான் கையில் சேருடன்

நான் வல்லரசு , விண்ணரசு , தென்னரசு , முடியரசு , குடியரசு


நீங்க சொன்னதுல ஒன்னுதான் உண்மை..கடைசியா சொன்னது . ஆலோசனையை ஆரம்பிக்கலாமா ? எப்படி பிரச்சாரம் பண்றது ?

விருதகிரி ஆரம்பிக்கிறார் .. இந்த ரம் பிரச்சனை ..

உங்களுக்கு அதே நினைப்பா ? முழுசா சொல்லித்தொலைங்க ஸ்பெக்ட்ரம்னு . கருணாநிதி ஆளுங்க பூத் கேப்சர் பண்ணா என்ன பண்றது ?

விஜி : அதுக்குதான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்

ஜெ : சொல்லித்தொலைங்க

விஜி : ம்ம்ம் ..நான் சொல்ல மாட்டேன் . நீங்க காப்பியடிச்சிடுவீங்க

கஷ்டகாலம் . இப்ப நம்ம எல்லாம் ஒரே செட் .

விஜி : சூப்பர் ஐடியா . எப்படி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்னு சொன்னேனோ , அதேப்போல் ஓட்டு மிஷினை வீடு தேடி எடுத்து கிட்டு போய் ஓட்டு போட வைக்கணும் .

ஜெ : முதல் இவருக்கு சோடா தெளிங்க . உருப்படியா எதாவ்து சொல்லுங்க .

ஓபிஎஸ் கையில் விபூதியுடன் வருகிறார் . அம்மா ! கோயிலுக்கு போயிட்டு வந்தேன் .. உங்க பேர்ல ஒரு அர்ச்சனை ..

இதய தெய்வம்னு என்னை சொல்லிட்டு எந்த கோயிலுக்கு போனிங்க .. நமது எம்ஜிஆர் ல கட்டம் கட்டவா..


அம்மா வெளியில இன்னும் ஒரு 10 கட்சி ஆளுங்க இருக்காங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேணுமாம் ..

அவங்களுக்கு டிஸ் அப்பாயிண்மெண்ட்தான் . பத்திரிக்கைகாரங்களை கூப்பிடுங்க.


தொகுதி உடன்பாடு முடிந்தது ..குறிச்சுக்கங்க..

அதிமுக - 230

வைகோ -1

விஜயகாந்து - 1

வலது -1
இடது -1


18 comments:

Mahesh said...

ROTFL !!!! :))))))))))

'பரிவை' சே.குமார் said...

Ha... Ha...
ithuvum nallaththaan irukku....

ஞாஞளஙலாழன் said...

நல்ல நையாண்டி:-)

vijayan said...

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒன்றையொன்று கிண்டலடித்து கொள்கின்றன.

நித்யன் said...

///
கார்ப்பரேஷன் மருந்து பட்ட கொசுக்கள் போல் எல்லோரும் கீழே விழுகின்றனர்
///

பிரமாதமான உவமை.

அன்பு நித்யன்

தங்கராசு நாகேந்திரன் said...

ஜெவை கிண்டலடிக்க உங்களை விட்டா வேற ஆள் கிடையாது அருமை அனைத்தும் வாழ்த்துக்கள்

Sivakumar said...

//முரசு சப்தம் கேட்கிறது//

>>> கூடவே விருதகிரி பாடலும்.. டமக்கு டமக்கு டம் டம் டோரா.

Rajaraman said...

இதை விட மொக்கையாக எழுதுவதற்கு உங்களாலேயே முடியாதுன்னு நினைக்கிறேன்.

செங்கோவி said...

//நான் சொல்ல மாட்டேன் . நீங்க காப்பியடிச்சிடுவீங்க// இது டாப்!

ஈரோடு கதிர் said...

:))))))

yoganand vasavan said...

பரவாயில்லயே.. ஜெயாதான் இங்க இருக்குற தமிழனயும் இலங்கைத் தமிழனயும் காப்பாத்தப் போறதா எல்லாரும் ஜால்ரா அடிக்கிற நேரத்துல
மனசுக்கு இதமா இருக்கு.. மணிஜி..
கீப் இட் அப்.

யுவா said...

Naan oru large ketta (60), inthamma kdothathu oru drop-kooda aavaathu pole... hhham.

ரஹீம் கஸ்ஸாலி said...

சூப்பர்.....சூப்பர்....கலக்குங்க ஜீ

"உழவன்" "Uzhavan" said...

கேப்டன் ஐடியா சூப்பர் :-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))))))))))))))))))))))))
Super super.

R.Gopi said...

யேய்ய்ய்ய்ய்ய்....

வை.கோ.வுக்கு ஒரு சீட்டு... எனக்கும் 1 சீட்டா?

நான் ஃபுல் அடிச்சுட்டு வாந்தி எடுக்காம இருப்பேன்...

எனக்கு சரக்கு ஜாஸ்தி வேணும்... அதே மாதிரி சீட்டும்....

வர்ட்டா........ (டாக்குடரு கேப்டன்)

R.Gopi said...

மணிஜீ....

இங்கே பாருங்களேன் :

புதிய முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவு தரும் தோழமைகளின் அன்புக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்...

நண்பர்களின் துணையோடு, “சித்தம்”” எனும் ஒரு குறும்படம் உருவாக்கி இருக்கிறோம்...

“சித்தம்”””“ என்பதென்ன?

”””எல்லாம் ஆண்டவன் சித்தங்க...
ஆண்டவன் சித்தம் இருந்தா நடக்கட்டும்


இப்படி பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்வதை நாம் அன்றாட வாழ்வில் கேட்டிருக்கிறோம்... சோதனைகளும், வேதனைகளும் நம்மை சூழ்ந்து கொண்டு தாக்கும் போது, நமக்கு மேல் இருக்கும் மாபெரும் சக்தியை உணர்ந்து “சித்தம்“” ””இருந்தால் நடக்கட்டும் என்று சொல்வது நம் மிகப்பெரிய பலம். இந்த நுண்ணிய உணர்வை ஒரு கற்பனை கதையின் மூலம் அனைவருக்கும் எடுத்து சொல்ல “ஒலி ஒளி“யின்”””” உதவி கொண்டு ஒரு குறுங்கவிதை வடித்துள்ளோம்...

தங்களின் மேலான ஆலோசனையும், கருத்து பகிரலும் வேண்டி விரும்புகிறோம்.

”சித்தம்” குறும்படத்தை இங்கே கண்டு ரசியுங்கள்...

பார்ட் - 1
http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2
http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

தோழமையுடன்

ஆர்.கோபி, துபாய்
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com

லாரன்ஸ் பிரபாகர்
www.padukali.blogspot.com

மணிஜி said...

கோபி பகிர்வுக்கு நன்றி..அவசியம் பார்க்கிறேன்..

நண்பர்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி