Thursday, January 13, 2011

வாய்யா..வெங்காயம்




என்னய்யா... ரொம்ப நாள் ஆளையே காணும் ?

எங்க வர்றது ? ஒன்னும் சரக்கு தேறலை . வெறுங்கையோடு வந்து உங்க கிட்ட பாட்டு வாங்கறதா ?

ஆமாம்..இல்லன்னா மட்டும் கிழிச்சிடுவ .. என்னவோ முன்ன வந்தப்ப எல்லாம் முத்தை அள்ளி கொட்டிட்டு போயிட்டன்னு நினைப்பா உனக்கு . எல்லாம் புழுதி , புண்ணாக்கு , கால் பழுது , அரை பழுது .. ஏதோ எங்க தலையெழுத்து .. மூஞ்சியை பார்க்கனுமேன்னு வாங்கி தொலைச்சோம் .

ஆமாம்.. உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது . வைரமே வாங்கி படைச்சா கூட , வறட்டின்னு சொல்வீங்க..


சரி . அதை விடு . ஊர் கதை எதாச்சும் இருக்கா ? ஒன்னுமில்லன்னாலும் வம்பாச்சும் வளர்ப்பேயில்லை . ஆமாம் . இந்த வாட்டி சந்தையில நீ வெங்காய கடை போடலையா ?

ஆமாம் . அது ஒன்னுதான் குறைச்சல் . நான் வாத்து முட்டை கடைதான் போட்டேன் . வெங்காயத்துல் என்ன இருக்கு ? உரிக்க , உரிக்க கடைசியில பல்லைத்தான் இளிக்குது . வாத்து முட்டை வாயுவுக்கு நல்லது தெரியுமில்ல..

இந்த . வக்கணைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை . உன்னை சீந்தறதுக்கு ஆள் இல்லைன்னு சொல்லு ? எப்படி இருக்காம் வெங்காய வியாபாரம் ?

அதுக்கென்ன .. பிச்சுகிட்டு போகுதாம் . உள்ளார போயிட்டு வாராவன் எல்லாம் 1 அடி கூட வளர்ந்தாப்லயே வாரான் . அவ்வளவு விருத்தியாம் .

அப்புறம் வேற எதாவது ?


வேற என்ன ? அங்க இங்க கேட்டதைத்தான் சொல்லனும் . மூத்ததுக்கும் , மூணாவதுக்கும் போட்டிதான் . அடுத்த மாசம் 3 ஆம் தேதி தெரியும் ..


ஒன்னும் புரியலை . எதோ ராஜபரிபாலம்னு தெரியுது ?

ராஜாதான் இருக்காரு . பரிபாலம் எங்க இருக்கு . அது எங்காச்சும் ரிக்கார்டு டான்ஸ் ஆடற மேடையில கூத்துல இருக்கும் .

யோவ் ..பார்த்துயா .. டின் கட்டிற போறாங்க.. ஆட்டோ வந்துட போகுது .

அட..நாமல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பா.. வேணுமின்னா டி. நகர்லேர்ந்து பொடிநடையா வந்து ரெண்டு தட்டு தட்டிட்டு போகலாம் . அவ்வளவுதான் ..


உன் கிட்ட வாயை கொடுத்தது தப்புதான் . இதுக்கு நீ வராமயே இருந்திருக்கலாம் . நீ கிளம்பு . அப்புறம் எவனாச்சும் எனக்காக பாவம் ரெண்டு ரூபாயை வேஸ்ட் பண்ணுவானுங்க ..

புரியலையே..

புரியலை .. வாலி சொன்னாருல்ல..

என்ன சொன்னாரு ?

தாத்தா ரெண்டு ரூபாய்க்கு கொடுத்தாரு ஒரு கிலோ..

பேரன் கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ..

12 comments:

R.Gopi said...

//தாத்தா ரெண்டு ரூபாய்க்கு கொடுத்தாரு ஒரு கிலோ..

பேரன் கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ..//

******

இத்த பட்ச்சா, சொம்மா “ஜிலோ”ன்னு கீதுபா....

Vidhoosh said...

வந்தேன் :))

Ahamed irshad said...

லேட்டா வ‌ந்துட்டு ரொம்ப‌ சுருக்'க‌மா(ன‌) ப‌திவா..

vasu balaji said...

வெல்கம் பேக்:)

'பரிவை' சே.குமார் said...

அது சரி...
ரொம்ப நாளைக்கு அப்புறம் வரும்போதே வெங்காயங்களை தோலுரிச்சுக்கிட்டே வாறீங்களேண்ணே... கண்ணெரியுதுன்னு தேய்ச்சுக்கும் போது பாத்துக்கங்க ஆட்டோ வருதான்னு...

ராகவன் said...

அன்பு மணிஜீ,

பகடி... அருமை... வெங்காயக்கடை சீசனல் போல... டிசம்பர் மாச கச்சேரி போல...

அன்புடன்
ராகவன்

செ.சரவணக்குமார் said...

ஆஹா, சிங்கம் களமிறங்கிருச்சி..

என்னாது உங்களுக்கு எழுதுறதுக்கு மேட்டர் இல்லியா? மொதல்ல பஸ்ல இருந்து எறங்குங்க.

வரும்போதே வெங்காயத்த உரிக்கிறீங்க. இனி எலக்ஷ்ன் வரைக்கும் அடி பின்னுவீங்களே.

பொங்கல் நல்வாழ்த்துகள்.

செங்கோவி said...

திரும்பி வந்ததற்கு வாழ்த்துகள்..தொடருங்கள்.

ஆர்வா said...

தண்டோரா சத்தம் இந்தவாட்டி அலப்பறையா இல்ல இருக்கு

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

யுவா said...

இப்பலாம் அப்பப்ப அடிச்சாலும் தாளம் மட்டும் தப்பரதில்லே. அடிக்கடி அடியுங்கோ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

welcome Back

ரோஸ்விக் said...

போடுங்கண்ணே ஒரு மானிட்டர் பக்கத்தை.... வெயிடிங்