Wednesday, June 23, 2010

இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்
மாய மான்களுக்கு
இன்னும் ஏமாந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்
கலியுக பிராட்டிகள்


ராமர்களுக்கு விறகொடிக்க
போக விருப்பமில்லை
சீதை தனியாக இருந்தாலும்
பரவாயில்லை
லட்சுமணர்களும் உடன்


கைகேயிக்கு புண்ணியவதி
பட்டம் கொடுத்தான் தசரதன்
திருமதி.செல்வத்துக்கும்
தங்கத்துக்கும் அவளது
நன்றிகள் உரித்தாகிறதுபாதுகையை விட
காலை கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்புதானே
சாராயக்கடையில் புலம்பகள்
பரதர்கள் மட்டையாகிறார்கள்


தேன் தடவி வறுக்கப்பட்ட
மீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன


வடை போன வருத்தம்
அனுமனுக்கு
வெயிலுக்கு கொஞ்சம்
வெண்ணெய் வேண்டியவனுக்கு
வாலில் நெருப்பு

கும்பகர்ணன் உண்பது போன்ற
கனவில் , சூர்ப்பனகை
அழகு நிலையத்தில்
விபீஷ்ணர்கள் மதில்
மேல் பூனையாய்

இமாமியின் புதிய சலுகை
ஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்

விடிய , விடிய
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்

19 comments:

மணிஜீ...... said...

மணிரத்னம்ஜீ

மயில்ராவணன் said...

அண்ணே, இதுதான் மணிஜி ஸ்டைலில் ‘ராவணன்’ விமர்சனமா? அருமை, அருமை. கோவைக்கு போகாமல் இங்கென்ன வேலை?

தராசு said...

//தேன் தடவி வறுக்கப்பட்ட
மீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன//

டாப் கிளாஸ்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//விடிய , விடிய
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்//

பாட்டமும் க்ளாஸ்!!

அப்ப படம் நல்லா இருக்குன்னு வேதாந்தம் பேசறீங்களா ஜீ! :)

வானம்பாடிகள் said...

ஆமாம்! மணி ‘ரத்னம்” ஜீ:)). ஒன்னாங்க்ளாசாணு. வளர நந்நாயிட்டுண்டு.

RG said...

I am always amazed at the way you interconnect 2 different things and bring a new dimension, though I do not agree with you many a times. Keep going...

அக்பர் said...

மணிஜீயா ரத்னம்ஜீயா ஒரே குழப்பமா இருக்கே.

vasan said...

இது 'அவ‌லை' நினைத்து
உர‌லை இடித்த‌தா?
அல்ல‌து, "அவளை" நின‌த்தா?
இல்லை 'அவாளை'த்தானா?

ஹாலிவுட் பாலா said...

அண்ணன்னா அண்ணந்தான்!!!

முன்னாடி.. ஆ.ஓ போஸ்டுக்கு முத்தம் கொடுக்கனும்னு நினைச்சேன் (ஆனா படத்தை பார்த்தப்ப வேற தோணுச்சி... அது சபையில் வேணாம்).

இப்ப.. இந்த கவுஜைக்கு...!! எப்படியும் ஒரு முத்தம் கணக்கில் இருக்கு!!

நேசமித்ரன் said...

Anagram of MANIRATNAM - ANTI RAMMAN SO HE DIRECTED RAVANAN

இப்படி ஒரு ட்வீட் நேத்து

இப்போ உங்க கவிதை

எப்பிடில்லாம் யோசிக்குறாங்கையா ?

:))

Cable Sankar said...

ஒரு படம் மனுஷனை என்னவெல்லாம் செய்யச் சொல்லுது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மணிஜி, மணிரத்னம்ஜியா மாறிப் போயாச்சுன்னு நினைக்கிறேன்..!

பா.ராஜாராம் said...

என்னால் உங்கள் தளத்தில் சுளுவாக வரப் போக முடியலை மணி..

it takes lots of time 2 flo..

மற்றபடி,

இது உங்க brand mark flo.. :-)

ஜாக்கி சேகர் said...

நல்லா இருக்கு சில இடங்கள் புரியலை.... இன்னும் நிறைய படிக்க வேண்டியது இருக்கு...

ஆறுமுகம் முருகேசன் said...

ha ha....
நல்லா ஏத்துராங்கப்பு போதையை :-)

easwari said...

என்னால் உங்கள் தளத்தில் சுளுவாக வரப் போக முடியலை மணிji. right now no probs. kavithai puriyalai.

இளைய கவி said...

சூப்பரு தலிவா ! நல்லா இரு..

கே.ஆர்.பி.செந்தில் said...

மணிரத்னம்ஜீ...

இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்...

மங்குனி அமைச்சர் said...

இமாமியின் புதிய சலுகை
ஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்

///


இந்து தான் மணிஜீ டச்சு