Tuesday, June 8, 2010

கொக்கு..பற..பற..


வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். வயலட், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என்பதே இந்த வண்ணங்கள். வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுத்தெறிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.சரிதான் . அந்த 60,000 கோடியும் அதில் பிரதிபலிக்குமா? இதுல எதுவும் ஜாதியை பற்றி நான் சொல்ல வில்லை . ஏனெனில் இது ஒரு தலித் இலக்கியம்...


மீரா ஜாஸ்மீனை அந்த காலணி விளம்பரத்தில் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் . காதலனாய் இருக்க நிச்சயம் கொடுத்து வைக்கவில்லை. அட்லீஸ்ட் காலணியாய் இருக்க ஆசைதான் .சமீப நாட்களாய் துப்பாக்கியை நெஞ்சுக்கு நேராக நீட்டியதை பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நண்பர் ஒருவர் அரேஞ்ச் பண்ணவா என்று கேட்டார் . ஏ..அப்பா..பெரிய இடமாயிற்றே ..முடியுமா ? என்று கேட்டேன் . தலைவா ! இது சும்மா ..அடுத்து ஐஸ்ர்வர்யாவோட என்றார். அப்பீட் என்றேன் . இருந்தாலும் அவர்கள் இடத்திற்கு செல்ல மனமில்லை. இங்க வந்து என்று இழுத்தேன் . ஆனாலும் டவுட் . ரொம்ப செலவாகுமா என்றும் . இல்லை மச்சான் ..(பாவி நீ எனக்கு மாமாவா?) என்ன ஒரு 100 ரூபா .. கடைசியில் கொண்டு வந்து விட்டான் . மச்சான் சுமாராத்தான் இருக்கு . அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா? என்னடா விளையடறியா ? நீ கேட்ட காசை கொடுத்தேன் இல்ல.. பதில் சொல்லாமல் போயே விட்டான் . வேறு வழி . மீரா வேறு கண்ணடித்தாள் . விளைக்கை அணைத்தேன் . பரவாயில்லை . அந்த பேச்சுதான் தாங்கவில்லை. டைட்டிலில் போட்டார்கள் .

“கதை , திரைக்கதை, வசனம் “
.................................................. பெண்சிங்கம்........... இப்போது பாருங்கள் வெல்லுங்கள் நாற்பது லட்சம்..


குஷ்புவை மேல் சபைக்கு கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள் . மிகவும் நன்றி . குஷ்பு சார்பில் . திமுகவிற்கு எப்போதுமே ஒரு வரம் அல்லது சாபம் உண்டு . இவர்களே ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள் . அதை வலிமையாக்குவார்கள் . பின் அதனுடன் ஒரு நிழல் யுத்தம் நடத்துவார்கள் . இந்த முறையும் அப்படியா ? த..த..பா... செம்மொழி வாழ்க..மற்ற மொழிகளுக்கு சினம் வராமல் இருக்கட்டும் . உண்ணாவிரதத்திற்கு நாள் நெருங்கி விட்டதோ ?சென்ற மே 18 என்ன நடந்தது நமக்கு தெரியும் . இந்த மே 18 . நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்.. அபிராமி மெகாமாலில் ஒரு ஏழு நட்சத்திர திரையரங்கம் துவக்கப்பட்டிருக்கிறது . சென்ற வருட உண்ணாவிரத நாயகன் தான் பொத்தானை அமுக்கினார் . வீட்டிற்கே கார் அனுப்புகிறார்களாம் . காலை .கவனிக்க ..காலை நீட்டி அமர்ந்து படம் பார்க்கலாம் .


நீங்கள் அந்த பதிவரை படித்திருக்கலாம் . ஆனால் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . சந்தோஷம்தான் . கடவுள் மறுப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர் என்று பெரியாரை பற்றி எழுதுகிறார் . யார் இவர் என்று கண்டு பிடிப்பவருக்கு அரை கிரவுண்டு நிலம் இலவசம்...அய்யனார் கம்மா ஓரம்...


வேண்டும் என்பதற்கும்

வேண்டாம் என்பதற்கும்

ஒரே ஒரு வித்தியாசம்
நீயும்
நானும்
இடம் மாறி இருப்பதுதான்

18 comments:

padma said...

நடத்துங்க

VISA said...

kavithai super

ஆறுமுகம் முருகேசன் said...

குட்டியா ஒரு ஸ்மைலி.. ஒகே..
:)

வானம்பாடிகள் said...

இன்னாதிது:(

செந்தழல் ரவி said...

அவர் எழுதுவதை நிறுத்தக்கூடாது.

நேசமித்ரன் said...

ம்ம் நடத்துங்க!

:)

பா.ராஜாராம் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு மணிஜி.

// செந்தழல் ரவி said...
அவர் எழுதுவதை நிறுத்தக்கூடாது.//

yaa, mis u narsim. :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ப்ரஸண்ட் சார்!

Cable Sankar said...

ரவிக்கு மட்டும் புரிஞ்சிருச்சு.. அவர் யாருன்னு..:)

♠ ராஜு ♠ said...

ஆணாதிக்கவாதி மணிஜி வாழ்க...
ஸாரி..ஸாரி ஒழிக!

கே.ஆர்.பி.செந்தில் said...

.//வேண்டும் என்பதற்கும்
வேண்டாம் என்பதற்கும்
ஒரே ஒரு வித்தியாசம் நீயும்
நானும் இடம் மாறி இருப்பதுதான்//

மேலே கீழே ...

பார்வையாளன் said...

"அவர் எழுதுவதை நிறுத்தக்கூடாது."

யாரை பத்தி பேசரீங்க? அந்த ஜாதி வெறி, ஆணாதிக்க, நரகல் நடை பதிவரை பற்றி என்றால் என் கருத்தும அதேதான்.

ஊரில் குடி நீர் குழாய் மட்டும் இருந்தால் போதாது.. சாக்கடை குழாய்களும் வேண்டும். எனவே அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மணிஜீ...... said...

பார்வையாளன்...எல்லாமே கடந்துதான் போக வேண்டும்.இனி இதை இப்படி விமர்சிக்க வேண்டாமே.

RG said...

Mani! It seems you are seeing some rainbow against "rising sun". Can you please share with us the details of the rainbow?

Mahesh said...

வா....ன....வி.....ல் !!!

ரோஸ்விக் said...

இனிமேல் கருத்தும் சொல்லக்கூடாது... கிண்டலும் பண்ணக்கூடாதுன்னு இருந்தா...

"கருத்துக் கிண்டல்"-னு போட்டு கூப்புடுரீயளே மணிஜீ ... :-)))

மீரா ஜாஸ்மின் - அருமை.

எவராயினும் மீண்டும் எழுதவேண்டும்...

பார்வையாளன் said...

"இனி இதை இப்படி விமர்சிக்க வேண்டாமே"

உங்கள் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டேன். அதை மதிப்பது என் கடமை