ஆர்த்தியை எப்போது அம்மணமாக காட்டுவார்கள் என்று அலைபாய்ந்த மனசுதான்,கிளைமாக்ஸில் இன்ஸ்பெக்டரின் மீது ஆசிட் அடிக்கும்போது எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது..
தினேஷின் கேரக்டர் திரையில் வரும்போது பின்னால் ஒருவன் இன்னொருவனிடம் மச்சான் ..அப்படியே நீதாண்டா என்றான்.. உண்மைக்கு வெகு அருகாமையில் படம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.. இன்னும் நிறைய பேர்கள் அல்பாசையில் தங்கள் மொபைலின் ஃப்ளூ டூத்தை ஆன் செய்து வைத்திருப்பார்களோ என்றும் எண்ணினேன்..
வடநாட்டு முறுக்கு கம்பெனியில் ஆரம்பிக்கும் வன்முறை ..படம் முழுவதும் மெல்லிய குரூரத்துடன் அலைகிறது.. அடியும்,ரத்தமும் மட்டும்தானா வன்முறை? அந்த வன்முறை இல்லாவிட்டால் மக்கள் தூங்கியிருப்பார்கள்.. நேர்மையாக கதை சொல்கிறோம் என்கிற பாசாங்குதான் படத்தின் ஹைலைட் ..வயதுக்கு வந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அவர்களின் மொபைலை நோண்டி பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்..அது எத்தனை உள்நாட்டு குழப்பங்களை உண்டாக்கப்போகிறதோ:-)
சம்பவங்களும் ,குறியீடுகளும் கற்பனையே என்று சொல்கிறார்கள்.. பிராத்தல் கேஸில் கைது செய்யப்பட்ட ஒருத்தி பள்ளிக்கூடம் நடத்துக்கிறாள்.. அவளும், மந்திரியும் ,இன்ஸ்சும் ஒரே சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது..தமிழ் சினிமாவில் அக்ரஹாரம், மேலவளைவு , முதுகுலத்தூர் தாண்டி எந்த சாதியையும் இழுக்க மாட்டார்கள்.. வழக்கு எண்ணில் குறியீடாக வரும் சாதி எந்த சாதியாக இருக்கும்? வேல்,கம்பு வகையாறாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம்..
உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்..
வழக்கு எண் 18/9
வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை
9 comments:
நாயகி பழிக்குப்பழி ஆசிட் அடிப்பது யூத/ இஸ்லாமிய நியாயம் ('பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண்' போதித்தது மோசே என்ற வகையில்). இந்தியப் படங்களும், தவறாமல், இந்த நியாயத்தைத் தூக்கிப் பிடிக்கக் காரணம், மகாபாரத, ராமாயண முடிபுகளை எளிமைப் படுத்தி நாம் புரிந்து கொண்டிருப்பதும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
//ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்..//
ஆமாம், ஆனால் அது உலக உண்மை.
//அப்படி முடித்திருந்தால் அது நேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்..//
அப்படிச் சொல்ல முடியாது. அப்படியே முடித்திருந்தாலும் அதையும் தாண்டி, நியாயம் போராட்டத்திற்கு மீள நிற்பதை அல்லது அநியாயம் எதிர்நிலைச் சிக்கலுக்குள் வீழ இருப்பதை நாம் யூகிக்கத் தரும் ஒரு திறந்த முடிபாகவே அது இருக்க நேரும்.
ஒரு கலைஞனின் பொறுப்பு அது என்றெல்லாம் இல்லை. உண்மையின் இரண்டு முகங்களில், ஒன்று, 'உலக உண்மை'; மற்றது, 'அது'.
'அது' காரணமாகவே, நீங்களும் நானும் கோடானுகோடி எளியவர்களும் உயிர் நீட்டித்திருக்க முடிவு செய்கிறோம்.
என்ன, இப் படத்தில் அப்படி உலக உண்மையின் வழி உண்மையின் மறுமுகத்தை உணர்த்தாமல், நம்பிக்கை வசனத்தில் முடித்துவிட்டார்.
மன்னித்துவிடக் கூடாதா, மணிஜி?
இந்த இடுகை அலம்பி தள்ளி விட்ட வாசல் போல் ஆகிவிடுமோன்னு பயந்து கிட்டே இருந்தேன்.. நன்றி ரா.சு.ரா சார்:-)
படம் இன்னும் பார்க்கலெ... பார்த்துவிட்டு வந்து கருத்து சொல்றேன்.
நான் பார்த்தவரையில் தெளிவான விம்ர்சனம்.. மிகவும் ஆறுதலாக இருந்தது
அதகள்ம்ண்ணே!
விசில் அடிக்கிறேண்ணே! சத்தம் கேட்குதா...?
:-)
மணி ஜி. said...
இந்த இடுகை அலம்பி தள்ளி விட்ட வாசல் போல் ஆகிவிடுமோன்னு பயந்து கிட்டே இருந்தேன்.. நன்றி ரா.சு.ரா சார்:-)//
சினிமா என்னிக்கும் கை குடுக்கும் தலைவரே :))
விமர்சனம் நன்று...
Nalla vimarsanam! sirantha paarvai
You can also enjoy the nice catalog of casino games that the app has. Although the app is free, you do must register and create an account. You can only play the slots after your account is accredited. Slot games are popular mainly as a result of|as a result of} they require little information and talent to play. Even new gamers can shortly understand how the games work in a 토토사이트 couple of of} seconds.
Post a Comment