Wednesday, December 1, 2010

அர்த்தமில்லாத கதை...


பாலு !

ஆஜர் சார்.

பாலு ஏன் நீ அவங்க கூட உட்கார்ந்திருக்க . எழுந்திரு.

இல்லை சார். இவனுக்கு கணக்கு பாடத்துல ஒரு சந்தேகம். அதான் சார். ஏன் சார் நான் இவன் பக்கத்தில் உக்கார்ந்தா தப்பா?

தப்பா ? தீட்டு. என் தலைதான் உருளும். இங்க வந்து உக்காரு.

பாலு என்கிற பாலசுவாமி.

இது ஆண்டவனுக்கே அடுக்குமா?
ஆண்டவனோட.. ஆள்றவாதான் பெரியவா?

இப்படியெல்லாம் நடந்திருக்குமா?

பாலு உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுடா முனியா ! நீ கத்து தர்றியா?

தருவேன். ஆனா யாராவது பாத்துட்டா? என் முதுகு தோல் இல்ல உரியும்.

ஏன் இப்படி பயப்படறீங்க ? நாமெல்லாம் ஒன்னுதானே.

இல்லை பாலு. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். அப்பறம் எங்கப்பாருதான் சொன்னாரு.

என்ன சொன்னாரு?

நீங்க என்ன சொல்றேள்? என்னால நம்பவே முடியலையே !

ஆமாம்டி. நம்ம சங்கரந்தான் சொன்னான். பெரியவர் முடிவு பண்ணிட்டாராம். எவ்வளவு பாக்கியசாலிடி நீ. லோகத்தை ரட்சிக்கிறப் போற ஒருத்தரை.

கனம் கோர்ட்டார் அவர்களே ! இந்த வழக்கு முற்றிலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என் கட்சிக்காரரின் மீது அபாண்டமாக தொடுக்கப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட விரோதம் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும்...

பாலு மகா கெட்டிக்காரன். படிப்பிலும் , விளையாட்டிலும். வில் விதையில் தேர்ச்சி பெற்றவனாக வேண்டும் என்பது அவன் கனவு. காண்டீபன் கதையை தினம் உறங்கும் முன் கேட்டதால் இருக்கலாம்.

பாலு . உனக்கு அதுக்குள்ள பழகிடுச்சே. குட்டிக்கரணம் வேற அடிக்கிற!

நீங்க இன்னொருவாட்டி பெரியவா கிட்ட பேசுங்களேன். ஒத்தை புள்ளையை ஊருக்கு கொடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே! தோ ஆச்சு. பொண்ணு வேற இடத்துக்கு போயிடுவா . அப்புறம் நீங்களும் நானும் மட்டும் தான் . மோட்டு வளையை பார்த்துண்டு உக்கார்ந்திருக்கறதா?

அடி அசடு . இதுக்கு நமக்கு கொடுப்பினை வோணும்டி .

நாட்ல இத்தனை பெரிய மனுஷாள் எல்லாரையும் தெரியும். ஒருத்தர் செல்வாக்கு கூடவா எடுபடலை. கேஸை ரொம்ப ஸ்டிராங்கா ஆக்கிட்டாளே.

அதுக்குத்தான் வேற ஸ்டேட்ல மாத்த சொல்லி அப்பீல் பண்ணியிருக்கோம். பாக்கலாம். இவா செஞ்ச பூஜைக்கு அந்த பகவான் என்ன கைமாறு பண்ணப்போறாறுன்னு!

அம்மா ! என்னம்மா இது ? நீங்க என் கால்ல விழறேளே ? நான் எங்கயும் போகலை. உங்க கூடவே என்னையும் கூட்டிண்டு போயிடுங்கோ . வயசுல பெரியவாள்ளாம் என் கால்ல.. எனக்கு பள்ளிக்கூடம் போகணும். வேணும்னா என்னை மிலிட்டரில கூட சேர்த்து விடுங்கோ !

இல்லை பாலு. நீ இனிமே சாதாரண மனுஷா மாதிரி இல்லை. இந்த லோகத்தை ரட்சிக்கிறதுக்குன்னே என் வயித்துல வந்து வாய்ச்சிருக்கே. உன் முகத்துல அந்த தேஜஸ் வந்துடுத்து.

அப்ப இனிமே நா விளையாட முடியாதா ? நம்ம ஊர் ஏரியில அவங்களோட குதிக்க முடியாதா?

பாலு என்கிற பாலகுரு. . ஒரு கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இனிமே உஷத் கால பூஜையை பாலுவே பண்ணட்டும்- பெரியவர்.

பாலுவிற்கு நாக்கு செத்து போச்சு. அம்மா பண்ணும் வற்றல் குழம்பிற்கும், புடலங்காய் கறிக்கும் மனசு ஏங்கியது. இந்த பழங்கள்..வெள்ளிக் கிண்ணத்தில் பால். வாழையிலையில் வெளிக்கி.. இன்னும் இத்யாதிகள்...இதெல்லாம் தூக்கத்தை வரவழைக்க வில்லை. மாறாக இனம் புரியாத சஞ்சலமும், வேதனையும்..

இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் யுவர் ஹானர் . சின்னவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மருத்துவ பரிசோதனை மாதிரியான விஷயங்கள் . அவரை பின் பற்றும் லட்சக்கணக்கான நபர்களை வேதனை படுத்தும்.

”சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்!

பாலுவிற்கு என்னன்னமோ தோண ஆரம்பித்திருந்தது. வேதம் , மந்திரம் எல்லாவற்றையும் மீறி உள்ளங்காலில் தைக்கும் முள் போல் ஒரு வித வலி. அது முட்டியில் தேங்கி என்னமோ செய்கிறது.கண்களை மூடி தியானம் .முடியவில்லை. இடுப்பு சளியின் இம்சை.

இவ என் பொண்ணு. வளர்ந்திருக்காளே ஒழிய, புத்திதான் அப்படியே இருக்கு. நமஸ்காரம் பண்ணுடி.

வயசுக்கு மீறி வளர்த்தியுடன் அந்த பெண் பாவாடை சட்டையுடன் குனிகிறாள். தொட்டு தூக்கி ஆதரவாய் தடவி கொடுக்கிறார் பாலு என்கிற பாலகுருசுவாமி.

நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கோ . நான் கொஞ்சம் பூஜை பண்ணனும். உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் புஷ்பம் மட்டும் கொடுத்து விடறேன். எல்லாம் அம்பாள் சித்தம்.

இந்த ஒரு பெண் மட்டுமில்லை யுவர்ஹானர் . இன்னும் நிறைய .... ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே..

பாலுவிற்கு இலை மறைவாய் காய் மறைவாய் பார்த்தவைகள் எல்லாம் மெல்ல புலப்பட ஆரம்பித்தது. வீட்டிலும், சமயங்களில் வெளியில். ஐந்து வயதில் வேதத்தை உருவேற்றும்போது இருந்ததை காட்டிலும் இன்னும் வேகம். உன்மத்தம். நாக்கு மடிந்து சொஷ்டமாய் சொல்லி கற்றுக் கொள்ள இது வேதமோ, மந்திரமோ இல்லையே. வழியில் இருக்கும் எந்த பாறையையும் உருட்டிக் கொண்டு பாயும் காட்டாறு போல் சீற ஆரம்பித்திருந்தது. அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுவான அந்த காமம் என்னும் சுகவேதம்..

19 comments:

மணிஜி said...

காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில் சாட்சிகள் பல்டியாம்..(இது ஒரு மீள் பதிவு..எப்ப வேணா போடலாம்..பொருந்தும்)

Unknown said...

சூப்பர் தல! வேற என்ன சொல்றதும்ன்னு தெரியல!:-))

Cable சங்கர் said...

நிஜமாவே எப்ப போட்டாலும் பொருந்தும்..

உண்மைத்தமிழன் said...

ஆளெடுக்க அப்பு வர்றாராம்ண்ணே..!

vasu balaji said...

ஆஹா!

ராகவன் said...

Dear Mani,

Arumaiyaa irukku... ithu pondra vadivaththil ezhuthum uththi...oru... cut, edit and compose ungalaala thaan mudiyum...

anbudan
ragavan

செ.சரவணக்குமார் said...

காஞ்சிக்கு மட்டுமில்லை தலைவரே.. எல்லாக் கருமாந்திர மடத்திற்கும் பொருந்தும் கதை இது. உங்க பாணியில கலக்கிட்டீங்க.

Ahamed irshad said...

க‌ண்டிப்பா எப்ப‌ வேணாலும் போட‌லாங்க‌ ம‌ணிஜீ ..:)

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
Unknown said...

ஜெய ஜெய சங்கர.....

rajasundararajan said...

//இடுப்புச் சளியின் இம்சை// பாவம், அவர் என்ன செய்வார்!

என்ன ஒரு எழுத்துநடை! ராகவனை வழிமொழிகிறேன்.

வினோ said...

அண்ணா, முதல் முறை படிக்கும் போது ஒன்னும் புரியல.. திரும்பவும் படித்தேன்... :)

Paleo God said...

பழைய ஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் எல்லாம் படிச்சா இப்படித்தான் எழுத முடியும்.

ஆதாரத்தோட நீரா டேப்ப வெச்சி ஒரு தீரா நதி எழுது தல!

பாலா அறம்வளர்த்தான் said...

ஆஹா - உங்களின் தனித்துவமான நடையில் நன்றாக இருக்கிறது.

முன்பொரு கதையை படித்துவிட்டு பா ரா - "ராட்டினத்தில் உட்காரவைத்து வேகமாய் சுத்தி விட்ட மாதிரி இருக்கு" என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்லாருக்கு ஜீ !

தேவன் மாயம் said...

சூப்பர்! நலமா!

a said...

என்றும் 16 பதிவா???

vinthaimanithan said...

//இடுப்பு சளியின் இம்சை.// யப்பா சாமீ! சத்தியமா பொறாமையா இருக்குங்க.

RAMYA said...

நல்லா இருக்கு.. நலமா மணிஜி??