Thursday, September 2, 2010

ஓங்கொய்யால...கல்லக்குடியில் தண்டவாள
அழுக்கை துடைத்த துண்டு
இன்னும் இருக்கிறது
அறிவாலய கருவூலத்தில்
கருப்பு சிவப்பு கறையோடு
ஆளுக்கு ஆயிரம் பாசுரம் பாடி
ஏலம் எடுக்க தயாராய்
வாலியும் , வைரமுத்துவும்

இல்லையெனப்படுபவரின்
பிறந்தநாள் கோலாகலம்
சிரிப்பொலியில் சிறப்பு திரைப்படம்
கிருஷ்ணலீலா

விநாயகருக்கு மட்டும்
ஏனப்பா விடுமுறை
கொண்டாட்டம்
கடவுள் மறுப்புக்கு
போடுங்கய்யா பிள்ளையார்சுழி

சேதுக்கால்வாய் தோண்ட
ஆள் சேர்க்கிறார்கள்
சிவபெருமானுக்கும் ஆசை
கழக விதியின்படி
பிட்டுக்கு மண் சுமக்க
சம்மதமாம்
கங்கை காவிரி இணைப்பிற்கு
கமிஷன் உண்டாம்
வேற வழி..கஞ்சா கேஸுக்கு
இதுவே மேல்

வாலையும் , தலையையும்
வசதிப்படி காட்டுவோம்
மாநில சுயாட்சி மசாலாவை
கூட்டணி அம்மியில்
அரைத்திடுவோம்

கவுண்ட் டவுன் ஆரம்பமாம்
விமான படிக்கட்டு ஏறி இறங்கியதற்கே
அம்மணிக்கு மேல் மூச்சு வாங்கிறதாம்
கொடநாடு மலையேறி விட்டது
தங்கத்தின் தங்கம்


கண்ணைப் பொத்தி
பொட்டல் வெளியில்
விட்டு விட்டார்கள்
தமிழ் குடிதாங்கியை
காட்டில் என்று சொல்ல
ஆசைதான்.. அதுதான்
எல்லாத்தையும் வெட்டி
பொட்டல் ஆக்கீட்டீங்களேப்பா

சமச்சீர் கல்வியாம்
39 பிராண்டு புதிதாக அறிமுகம்
ரஜினி பொண்ணுக்கு கல்யாணம்
வைரமுத்து பையனுக்கும்தான்
பம்பு செட் இலவசம்
வீரபாண்டிக்கு பெரியார் விருதாம்
தங்கம் வெலை கூடுதாம்
ஓங்கொய்யால.
ரேட்டை ஏத்துங்கப்பு
அடுத்த வாட்டி ஓட்டுக்கு

18 comments:

உண்மைத்தமிழன் said...

சில வார்த்தைகள் பொருத்தமா இல்லை..!

யாசவி said...

தல,

அடிச்சி ஆடுங்க.

நல்லா வந்திருக்கு

Katz said...

;-)

vasu balaji said...

கண்ண மூடிட்டு காடா சுத்தறது இதானோ:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

;))

அத்திரி said...

auto pls

கலகலப்ரியா said...

||உண்மைத் தமிழன்(15270788164745573644) September 2, 2010 1:26 PM
சில வார்த்தைகள் பொருத்தமா இல்லை..!||

நீங்க சொன்னாச் செரி...

புரட்சித்தலைவன் said...

nice

பா.ராஜாராம் said...

:-)

மரா said...

ரொம்ப அருமையா வந்திருக்கு கவிதை.
ஆராச்சும் தாத்தாகிட்ட படிச்சு காண்பிச்சா
அவிங்க கம்பெனில படம் இயக்குற வாய்ப்பாவது கெடைக்கும் :)
எம்.எம்.அப்துல்லா ஆவண செய்யவும் :)

மரா said...

@ உ.தமிழன்
// சில வார்த்தைகள் பொருத்தமா இல்லை..! //

ஆமா ரெம்ப சரியாச் சொன்னிங்க :)

பித்தன் said...

//ஓங்கொய்யால.
ரேட்டை ஏத்துங்கப்பு
அடுத்த வாட்டி ஓட்டுக்கு//

athu.... manijee punch

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அருமையா வந்திருக்கு கவிதை.

a said...

நல்லா இருக்கு மணிஜி...

R.Gopi said...

ஏத்துக்கங்கப்பா ரேட்டு....

உங்களுக்கு தான் எங்க ஓட்டு....

Sen22 said...

//ரேட்டை ஏத்துங்கப்பு
அடுத்த வாட்டி ஓட்டுக்கு//

Sema Punch..!!!

RVS said...

அட்டகாசாம் மணிஜீ... நல்ல சொல்லாட்சி... நல்லா வந்திருக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

அடுத்த செம்மொழி கண்ட பராக்கிரம வீரனை பற்றிய பாட்டு ரெடி......

தமிழே
தமிழகமே

வாழிய நீ
பல்லாண்டு

நான் இந்த நாட்டையே
போடுவேன் ஆட்டையே