Thursday, May 14, 2009

செருப்படி...... முதல் ஜேப்படி வரை.......

சுயனலமில்லாத,கண்டிப்பான ஒரு தகப்பனுக்கும்.வயசுக்கு மீறிய சிந்தனை கொண்ட ஒரு விடலை மகனுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் ....எனக்கும் ஏற்பட்டது..மயிர் வெட்டி கொள்வதில் தொடங்கி அடுத்த வருடம் வளர இருக்கும் கை,காலுக்கும் சேர்த்து துணி தைத்து கொள்வது வரை(பின்னி தான் நல்லா உழைக்கும்) .நான் பெரியவனாகி விட்டேன் ..ஏன் இந்த முடிவுகளை நானாக எடுக்க கூடாது..அம்மாவிடம் இதை சொன்னால் "போடா .நீ இன்னும் சின்ன குழந்தைதான் என்றாள்.நான் அதை ஏற்க வில்லை.ஒரு மூத்த நண்பன்(பிஞ்சிலே பழுத்த)ஆலோசனையின் பேரில் அப்பாவின் மஞ்ச கலர் டயல் hmt யுடன் கழிவரைக்கு சென்று 15 நிமிடம் முயற்சி செய்து கொண்டிருந்தேன்.வரவே இல்லை.அல்லது எனக்கு வரவழைக்க தெரிய வில்லை(இப்பல்லாம் தொட்டாலே தளும்பி விடுகிறது)..

மீண்டும் மயிர் வெட்டி கொள்ளும் பிரச்சனை வந்தது.ஒட்ட சிரைச்சுட்டு வரலே அவ்வளவுதான்.எச்சரிக்கையுடன் சலுனுக்கு அனுப்ப பட்டேன்..முடி வெட்டி கொண்டு வீட்டுக்கு வந்தால் ஆரம்பித்தது குருஷேத்திரம்.பின்னே நான் ஸ்டெப் கட்டிங் வெட்டி கொண்டு ,ஒரு சுருள் சீப்பு,பின்னால் பார்த்து வாரி கொள்ள ஒரு கண்ணாடி சாதா வில்ஸ் ரெண்டு ஒன்றாக பிடித்து விட்டு மூணு ரோஜா சுபாரியையும் மென்று கொண்டு ஒரு முடிவோடுதான் வந்திருந்தேன்.அடுத்து நடந்தவை..முதலில் கையால் அடிக்க தொடங்கி கீழே தள்ளி காலால் எத்தி கடைசியில் செருப்பை எடுத்தி விளாசியதுதான் என்னை வீட்டை விட்டு ஓடி போக தள்ளியது.

வீட்டை விட்டு வந்ததும் நான் நேராக போய் பார்த்தது ரபீக்கை.ரபீக்கும் வீட்டை விட்டு வந்து ஒரு சினிமா கொட்டகையில்(ஜீபிடர்) கடலை மிட்டாய்,முறுக்கு, சோடா கலர் என்று கூவி விற்று கை நிறைய ??சம்பாதித்து கொண்டிருந்தான்.நம்மலாம் யாருன்னு அவங்களுக்கு நிருபிக்கனும்டா ..ஆறுதல் சொல்லி என்னையும் அந்த வேலையில் சேர்த்து விட்டான் ரபிக்..அந்த வாழ்க்கை எனக்கு புது சுதந்திரத்தையும் அப்பாவை பழி வாங்குற சுகத்தையும் தந்தது(ஊர் முழுதும் நான் அங்கு வேலை பார்ப்பது தெரிந்து எல்லாரும் அப்பாவை துக்கம் விசாரித்தனர்)

அப்ப ஜீபிடரில்" முதல் இரவு" படம் ஓடி கொண்டிருந்தது.சிவக்குமார்,சுமித்ரா நடித்த படம்.அதில் வரும் "மஞ்சள் நிலாவிற்கு ஒரே சுகம்" சுகம் என்ற பாட்டு பெரிய ஹிட்.அந்த பாட்டு பாதி முடியும் போது ரபிக் கழிவரைக்கு போய் விடுவான்.என்னடா என்றால் மீதி பாட்டை மனதில் ஓட்டி பார்தேன் என்பான்.எனக்கு அது புதிராக இருந்தது.பின் எனக்கும்
ரபிக் அந்த வித்தையை கற்று கொடுத்தான்.ஆனால் அதற்க்கு hmt கடிகாரம் தேவைபடவில்லை.ஆனால் இன்னும் ஒன்றை அவன் கற்று தர முற்பட்டபோதுதான் நான் பயந்து விலகி விட்டேன்.அதுதான் ஜேப்படி?/

காசு நிறைய அவனிடம் புரளும்..காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.டிக்கெட் கொடுக்கும் போது அவன் கவுண்டரில் கூட்டத்தோடு மல்லு கட்டுவான்.ஆனால் டிக்கெட் வாங்க இல்லை.திரும்ப வரும்போது பணத்துடன் வருவான்.அந்த பணம் எனக்கும் சபலத்தை தூண்டும்.மேல் பை மற்றும் கீழ் பை வாங்குவதை கற்று கொள்ள ஆசையாக இருந்தது.களவும் கற்று மற என்ற பழமொழி வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.ஆனால் ....என் அம்மாவுக்கு வந்த வியாதி என்னை காப்பாற்றி விட்டது.அவள் கர்ப்ப பை புற்று வந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட என் வைராக்கியம்(இனி வீட்டு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது)உடைந்து நான் திரும்ப வீட்டிற்கு....

6 comments:

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

நையாண்டி நைனா said...

அட எப்பா...
உங்க தொல்லை தாங்க முடியலப்பா...
"A" கிளாசா இருக்குண்ணே இந்த கதை.

அக்னி பார்வை said...

///அடுத்த வருடம் வளர இருக்கும் கை,காலுக்கும் சேர்த்து துணி தைத்து கொள்வது வரை(பின்னி தான் நல்லா உழைக்கும்) ///

இது எல்லாருக்குமே நடந்திருக்கும்

ரமேஷ் வைத்யா said...

யாருப்பா அது, நம்ம கதையை எளுதிருக்கது

ரமேஷ் வைத்யா said...

முந்தைய கமென்டில் எச் எம்டி தவிர்த்து என்பதைச் சேர்த்துக்கொள்ளவும்.

Cable சங்கர் said...

பல பட்டறை போலிருக்கிறதே..