Saturday, May 2, 2009

சுருக்கமாக சில கிறுக்ஸ்


சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது.அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து)திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம்.தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க.ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது.சற்று நேரம் ஆயிற்று.அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள்.தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர்.இளமை வென்றது.ஆட்டோ வந்தது.மனைவி முதலில் ஏறினாள்.மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பிதேன்.ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா?கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள்.காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில்,ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்)வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை.பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.


7 comments:

இராகவன் நைஜிரியா said...

சரியான அவதானிப்பு. வெளியில் செல்லும் போது மற்றவர்கள் செய்வதை இவ்வலௌ உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்.

நீங்க சொன்ன ஏ ஜோக் நண்பர் கேபிள் சங்கர் ”கொத்து பரோட்டாவிள்” சொல்லியிருக்கார்.. நீங்க குதிரை அவர் ஓட்டகம்.

மணிஜி said...

நன்றி...ராகவன் சார்..ஜோக்கை தூக்கிடறேன்

Muruganandan M.K. said...

"பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக.." கூறியிருந்தீர்கள். ஆனால் அத்தகைய குடும்பத்தில் இளம் பெண்களின் உணர்வுகளை உணராத நிலையும் பல இடங்களில் தென்படுகிறதே!

மணிஜி said...

அதையும் சுட்டி காட்டியிருக்கிறேனே ஐயா..நன்றி..வருகைக்கும் ,கருத்துக்கும்

குடந்தை அன்புமணி said...

எங்கும் நடப்பதுதான். ஆனால் தந்த வித்தியாசமான கருத்துக்களை தெரிந்துகொண்டேன், தோழரே!

Erode Nagaraj... said...

மனைவி வந்துவிட்டதால் அம்மாவை ஒதுக்குகிறான் என்ற உணர்விற்கு மகன் அல்லது ஆண் தான் கா"ரண"மாகிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் வரையிலும், எதற்கும் தாயை சார்ந்திருப்பது அல்லது அப்படிக் காட்டிக்கொள்வது தான் அவன் செய்கிற தவறு.

தன் வேலையைத் தானே செய்கிற ஆண் இருக்கும் குடும்பங்களில் பெரும்பாலும் இந்தத் தொல்லைகளில்லை.

அம்மா என்றில்லை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சற்று கௌரவமாக நடந்து கொள்வது ஆண் பெண் இருவருக்குமே நன்மை தரும். நாலு பேர் இருக்கும்போதே, அவர்களறியா வண்ணம் சின்ன தீண்டல்கள் பார்வைப்ப் பரிமாற்றங்கள் (இதுக்கு தான் விழிப்புணர்வுன்னு பேரு!) தேவை தான். அது, த்ரில்லோடு சேர்த்து, நீ எனக்கு எப்பவும் வேணும் என்கிற காதலை வெளிப்படுத்துகிறது.

men need to find a balance in expressing their love or themselves.

மணிஜி said...

தெளிவான கருத்து..வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நாகராஜ்..