Sunday, April 5, 2009

தஞ்சை சில டைரி குறிப்புகள்




சமீபத்தில் உறவினர் ஒருவர் அழைத்து தஞ்சாவூர் வீட்டு விலாசம் வேண்டும்,பத்திரிக்கை அனுப்பனும் என்றார்.எவ்வளவு யோசித்தும் நினைவுக்கே வரவில்லை..காரணம் கடிதம் எழுதும் பழக்கமே முற்றிலும் ஒழிந்து போனதுதான்.பிறகு தம்பிக்கு போன் பண்ணி விலாசம் வாங்கி கொடுத்தேன்.

தஞ்சையில் கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது(???)சினிமா மோகம் தலைக்கேறி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னைக்கு வர நினைத்த போது அப்பா..என்னவாவது பண்ணி த் தொலை...என்று சொல்லி விட்டார்..அம்மா என்ன ஆசையோ செய்..ஆனால் வாரத்துக்கு ஒரு கடிதம் கண்டிப்பா போடனும் என்று சொல்லி விட்டாள்.ஒரு சுப தினத்தில் படிப்பை (வராத)மூட்டை கட்டி விட்டு விடை கொடுத்தேன் தஞ்சைக்கு..கிளம்பும்போது அம்மா செலவுக்கு பணமும் ஒரு 50 போஸ்ட் கார்டுகளும் கொடுத்தாள்.அத்தனையும் சுய விலாசமிட்டவை..நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் ..எதாவது எழுதி வாரம் ஓண்ணு அனுப்பு போதும் என்றாள்.அதன் பின் சென்னை வந்து சந்தி சிரிச்சு.கால் வயிறு,அரை வயீறு காஞ்சு அதெல்லாம் தனி கதை..

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..
ராமனாதன் பார்(செல்லமா சபா)நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் மு ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..(அதாவது நான் இங்கு த(ண்) னி "குடி" த்தனம்..அவர்கள் கூட்டு "குடி" த்தனம்".பின் காபி பேலஸ் ரவா தோசை,நைட்டு ரோட்டு கடை இட்லி பூண்டு சட்னி,தேவர் பிரியாணீ(சரவணன்??)காமாட்சி மெஸ் விரால் மீன் மண்டை,வறுவல்,சினிமா(நைட் ஷோ)....எல்லாவற்றுகும் மேல் அவள் குடியிருந்த வீடு,கோயில் பிரகாரங்கள்..அங்கு நடந்த கொடுக்கல்/வாங்கல்கள்(கடிதம் மட்டுமல்ல)(அவளொடு சேர்ந்து பார்த்த முதல் படம்..அதாவது அவள் அவள் குடும்பத்தோடு/நான் நண்பர்களுடன்..படம் "திசை மாறிய பறவைகள்"

ம்ம்ம்..நினைவுகள் தான் எத்தனை சுகமானவை...

3 comments:

ttpian said...
This comment has been removed by a blog administrator.
Raju said...

ஆம்.. நினைவுகள் சுகமானவை.

குடந்தை அன்புமணி said...

தோழரே! நேற்று பதிவர் சந்திப்புக்கு தாங்கள் வந்திருந்தாலும், அறிமுகமில்லாததால் உரையாட முடியவில்லை. தஞ்சாவூர்காரராக இருக்கிறீர்கள். இனி நம் நட்பு பலப்படும். மிக்க மகிழ்ச்சி!