Tuesday, April 14, 2009

சத்தியமா அரைச்ச மாவு இல்லைங்க






சாருக்கு நாலு குஷ்பு பார்சல்..சப்ளையர் சொன்னதும் எனக்கு விபரீத ஆசைகள் வந்தது.
நிஜமாவே நாலு..இல்லை ஒரு குஷ்பு வந்தா போதுமே..சின்னதம்பி ல தொடங்கி எத்தனை வாட்டி கனவுலே வந்திருப்பா.நிறைய முறை நேரிலும் பாத்திருக்கேன்..அடடா..என்ன அழகு..என்று சொல்ல முடியா விட்டாலும் ஒரு வித வித்தியாசமான கவர்ச்சி..சே...பார்சல் வந்து விட்டது.நான் கேட்டேன்"இதுக்கு குஷ்பு இட்லினு ஏன் பேர் வந்துச்சு..சர்வர் சொன்னார்..எப்படினு தெரியாது.ஆனா என்ன பொருத்தமான பேர் பாருங்க..குஷ்பு மாதிரியே கொழு..கொழுனு நல்லா பூசினாப்பல,அழகா உப்பலா.. குஷ்புவை பார்த்தா கன்னத்தை தொட்டு செல்லமா கிள்ள தோணும்..குஷ்பு இட்லியை..கிள்ளி வாயில போட்டுக்க சொல்லும்..இந்தாங்க சார் பார்சல்.என்னமோ குஷ்புவையே எனக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரி பீலிங்க் ஆயிட்டாரு சர்வர்

தமிழனின் தேசிய உணவான இட்லி (இறையாண்மைக்கு எதிரா எதுவும் இல்லையே) சுமார் 800 ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்தது.அந்த காலத்தில் "இட்டு அவி" என்ற பெயரில் இருந்த ஒரு வித சிற்றுண்டி தான் காலப் போக்கில் மருவி இட்லி ஆகி விட்டது.நீராவியை கண்ட ஒருவன் அதை வைத்து நீராவி இன்ஜீனை கண்டு பிடித்தான்(ஜேம்ஸ் ஸ்டிவன்சன்)நம்மாளு?? வட்டமா நிலா மாதிரி சுவையா கண்டு பிடிச்சதுதான் இட்லி.இன்று சென்னை மயிலாப்பூரிலிருந்து தினமும் சூடா இட்லி சிங்கப்பூர்,மலேஸீயானு பறக்குது.அது மட்டுமல்ல உலகம் முழுக்க இட்லிக்கு ரசிகர் பட்டாளமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

எங்கள் தஞ்சாவூரில் நைட்டு கடையில் இட்லிக்கு ஆறு வித சட்னி கொடுப்பார்கள்.மல்லி,மிளகாய்.பூண்டு,வெங்காயம்,தக்காளி,தேங்கா என போட்டு தாக்கும் போது சும்மா ஒரு டஜன் சர்வ சாதாரணமா இறங்கும்.மதுரை முருகன் இட்லி கடை,கோவை அன்னபூர்னா கௌரிஷங்கர்,ஈரோடு குப்பண்ணா மெஸ்,சென்னை திருவல்லைகேணி ரத்னா கேப் ,பெங்களுரு M.T.R என இட்லிக்கு புகழ் பெற்ற இடங்கள் உண்டு.

முன்பு ஆட்டு கல்லில் தான் மாவாட்டுவார்கள்.அதுவும் அப்ப எல்லாம் கூட்டு குடும்பமாக இருப்பார்கள்.ஒரு 10,15 தலையாவது தேறும்(இப்ப நாள் கிழமைன்னா கூட அண்ணன் தம்பி எல்லாம் sms லதான் வாழ்த்து??) படிக் கணக்கில் அரிசியை ஊற வச்சு ஒருவர் தள்ளி விட்டு கொண்டேயிருப்பார்கள்.ஒருவர் குழவியை சுற்றி கொண்டே இருப்பார்கள்.இது சுவை மட்டும் இல்லை.ஒரு சிறந்த உடற்பயீற்சியாகவும் இருந்தது.திடகாத்திரமாக இருந்தார்கள்.ஆனா இப்ப??
ஆட்டு கல் போய் கிரைண்டர் வந்தது.இப்ப அதுவும் போச்சு.."என்னங்க வரும்போது ஒரு மாவு பாக்கெட்"வாங்கிட்டு வந்திடுங்க..இந்த வார்த்தை புழங்காத வீடே இல்லைனு அடிச்சு சொல்லலாம்...வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாகவே இது ஆயிடுச்சு.

டிப்ஸ்

இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளனிரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊர வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும்(ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)

அருமையான,சுவையான உடலுக்கு தீங்கு செய்யாத இட்டு அவித்த இட்லியை என் கணக்கில் சுவையாக சாப்பிட இங்கு வாருங்கள்.

7 comments:

Joe said...

நல்ல பதிவு!

போற போக்கில முருகன் இட்லிக் கடைக்கும் ஒரு விளம்பரம். அவங்க கிட்ட கமிஷன் எதுவுமுண்டோ?

Senthil said...

ha ha ha
good post

Suresh said...

ha ha ha :-) நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

அக்னி பார்வை said...

இட்டு அவி தான் இட்லி ..சூப்பர் நியுஸ் தல

சின்னப் பையன் said...

:-))))))))))
super

மணிஜி said...

வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே

R.Gopi said...

தல

அப்படியே "நமீதா" இட்லி பத்தியும், ஏதாவது!!!!