Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை....













திருவிழா அல்லது பண்டிகை நேரங்களில் மட்டுமே இட்லிக்கு மாவு அரைப்பார்கள்சில கிராமங்களில்..அ.சாமியின் குதிரையில் திருவிழா அறிவிப்பும் , தொடர்ந்து தஞ்சை செல்வியின் கணீர் குரல் .

கம்மலோ , மூக்குத்தியோ அடகு வைக்கப்படும் காட்சியும் , மாவு அரைபடும் காட்சியும் .

சாதி வேறுபாடுகள் . தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஊர் கோடாங்கி, சாமி வந்த சாக்கில்  உசந்த சாதி பிரசிடெண்ட்டை ஏகவசனத்தில் விளிக்கிறார் .

சாமி வந்துருக்கா ? இல்ல பேய் பிடிச்சிருக்கா? ஒரு சிறுவனின் கேள்விக்கு இன்னொரு சிறுவன் பதில் சொல்கிறான்

“ரெண்டும் ஒண்ணுதான் :

எப்பயாச்சும் மழை வருது . வாசல் தெளிச்சாப்ல தெளிச்சிட்டு போகுது

பளிச் ..வசனங்கள் ..பாஸ்கர் சக்தி..

புரோட்டா சாப்பிடும் காட்சி அருமை . பாஸ்கர் சக்தியின் புரோட்டா என்று தலைப்பிட்டு ஒரு சிறுகதை எழுதலாம்.


ஊர் மைனர் ஒட்டவில்லை..சுப்பிரமணியபுரம் காட்சிகளை நிணைவூட்டுகிறது .

திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருக்கலாம் . உ.தா. முதல் பாடல் .அதற்கு முன் நடக்கும் ஊர் விவாதம் . பாடலை மாண்டேஜாக்கி , விவாதத்தை இன்னும் சூடேற்றி ,இண்டர் கட்டில் காட்டியிருக்கலாம் .

டப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது . டைட் குளோசப்பில் வசனங்கள் . இயல்பு மிஸ்ஸிங்.

அறிவாள் இல்லை. மதுரை ஸ்லாங் இல்லை (தேனி வட்டார வழக்கு ). ஆபாசம் இல்லை . சூரியை டைட்டில் ரோலில் நடிக்க வைத்திருந்தால் என்ன? என்று தோன்றியது.. அப்புகுட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இருந்தாலும் ..தோன்றியது .


ராஜா ..ராஜாதான் ..குதிரைக்குட்டி பாடலில் கிராமத்தான் துள்ளுகிறான் . பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் . இரண்டாம் பாதியில் மட்டும் லேசான கவனமின்மை எனக்கு தெரிந்தது.

உரையாடல் பாஸ்கர் சக்தி . மிக இயல்பாக வட்டார வழக்கை கையாண்டிருக்கிறார் பாஸ்கர் ..

அழகர்சாமியின் குதிரை .. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..அந்த எளிய சனங்களுக்காக..

படங்களுக்கும் ,பதிவிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க வேண்டாம் ..கோடைக்கேற்ற கிராமத்து விருந்து .. அழகர்சாமியின் குதிரையும்தான்...

(படங்கள் நன்றி : https://profiles.google.com/111554861917664287627#buzz) தமிழ் அமுதன்.

இந்த சுட்டெரிக்கும் வெய்யிலில ஒரு மண்சட்டி நிறைய பழைய சோறு, அதுல ஜில்லுன்னு பசும் தயிரை ஊத்திக்கணும். பிறகு பச்சை வெங்காயத்த அதுல உரிச்சு போட்டு,உப்பு மிளகாய் பொடி போட்டு ஊற வைச்ச மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,சுண்டைக்காய் வத்தல்,கொத்தவரங்காய் வத்தல்,மோர்மிளகாய், பழைய மீன் குழம்பு, வறுத்த கருவாடு, உப்பு புளி வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்ச துவையல்,சுண்டவைச்ச கருவாட்டு குழம்பு, அடை மாங்காய் ஊறுகாய். இன்னும் என்ன என்ன வகை தொட்டு கொள்ளும் ஐட்டம் இருக்கோ அதெல்லாம் சுத்தி வைச்சுகிட்டு வக்கணையா உக்காந்து சாப்பிட்டா அடடா..அடடா...! இன்னிக்கு முழுக்க சாப்ட்டுகிட்டே...! இருக்கலாம்...!

7 comments:

Unknown said...

அவ்வளவுதானா?

vasu balaji said...

மணிஜியின் குதிரை:))

பா.ராஜாராம் said...

//ஒரு மண்சட்டி நிறைய பழைய சோறு, அதுல ஜில்லுன்னு பசும் தயிரை ஊத்திக்கணும். பிறகு பச்சை வெங்காயத்த அதுல உரிச்சு போட்டு,உப்பு மிளகாய் பொடி போட்டு ஊற வைச்ச மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,சுண்டைக்காய் வத்தல்,கொத்தவரங்காய் வத்தல்,மோர்மிளகாய், பழைய மீன் குழம்பு, வறுத்த கருவாடு, உப்பு புளி வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்ச துவையல்,சுண்டவைச்ச கருவாட்டு குழம்பு, அடை மாங்காய் ஊறுகாய்//

உம்ம நாக்க என்ன செய்யலாம் ஓய்? :-)

good work!

CS. Mohan Kumar said...

மூணு பேரும் ப்ரீவியூ தியேட்டரில் ஒண்ணா பாத்தீங்களா?

Kumky said...

அங்க...லாம்..

இங்க ஒரு லாம்...

அப்புறம் ஒரு லாம்...

அடடா லாம்....

படம் ஒங்களுக்கு திருப்தியில்லையென எங்களுக்கும் தோன்றலாம்...

பாஸ்கர் சக்திக்காக இந்த மிதமான விமர்சனமாகவும் இருக்கலாம்..

இன்னும் ஏகப்பட்ட லாம்...

Kumky said...

உ.தா. முதல் பாடல் ..

நம்ம உ.தா வுங்களா ஜி...சொல்லவேயில்ல....

பாடலை மாண்டேஜாக்கி , விவாதத்தை இன்னும் சூடேற்றி ,இண்டர் கட்டில் காட்டியிருக்கலாம்...

எனக்கு ஜெய் ஜாக்கித்தான் தெரியும்..

பாதில கிணறு தெரியும்...அதென்ன இண்டர் கட்”? நம்ம சமாச்சாரமுங்களா எசமான்..?

Paleo God said...

அடிக்கடி எழுதுங்க தலைவரே!