Saturday, September 19, 2009

நானும்....நீயும்....நாமும்.............



அடிவயிற்றை
தடவிக்கொள்கிறாள்
ஆதங்கத்துடன்
ஒவ்வொரு முறையும்

கைகுழந்தையை
போட்டு விட்டு
தாய் ஓட்டம்
செய்தியை படிக்கும்
போதெல்லாம்....

அடர்ந்த போக்குவரத்து
நெரிசலில்
ஆம்புலன்ஸின்
அலறல்...
அறுக்கிறது உயிரை...

ராணுவத்தை
அனுப்புவேன்
புரட்சி அறிவிப்பாளினி..

புறாவின் காலில்
மட்டும்தான்
கட்டி அனுப்பவில்லை
கடிதத்தை
கழகத்தலைவர்

வதைமுகாமில்
குமுறல்தான்
குறையவில்லை

எடைக்கு போட
ஒரு கூடுதல்
செய்திதாள்
வேறு ஒன்றுமில்லை




15 comments:

ஈரோடு கதிர் said...

//ஆம்புலன்ஸின்
அலறல்...
அறுக்கிறது உயிரை...//

பலமுறை உணர்ந்திருக்கிறேன்

கவிதைகள் அருமை

ஜெட்லி... said...
This comment has been removed by the author.
ஜெட்லி... said...

//புறாவின் காலில்
மட்டும்தான்
கட்டி அனுப்பவில்லை
கடிதத்தை
கழகத்தலைவர்
//

:))

ஆட்டோ வந்தாலும் வரும்....

butterfly Surya said...

அருமை.

புறா கிடைக்கவில்லை போலும்..

அன்புடன் அருணா said...

அருமையான கவிதை.......பூங்கொத்து!!!

இரும்புத்திரை said...

//ராணுவத்தை
அனுப்புவேன்
புரட்சி அறிவிப்பாளினி..
//

கண்டுப்பிடிக்கவே முடியல

இராகவன் நைஜிரியா said...

ஒன்னும் சொல்வதற்கில்லை.. கலக்கிட்டு இருக்கீங்க..

Raju said...

ஒரு ரூபாய்க்கு ஒலகம் ஃபுல்லா பேசலாமாமே..!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//எடைக்கு போட
ஒரு கூடுதல்
செய்திதாள்
வேறு ஒன்றுமில்லை//

உண்மை:(!

தமிழ் அமுதன் said...

நன்று ..!

///ராணுவத்தை
அனுப்புவேன்
புரட்சி அறிவிப்பாளினி..///

அடுத்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு பிச்சை கேட்பாரோ ???

Cable சங்கர் said...

பேப்பர் கிலோ எவ்வளவு?

Ashok D said...

பின்றீங்க பின்னுங்க :)

கேபிளார் கேலிய பாத்திங்களா...

ஆரூரன் விசுவநாதன் said...

வலிமையான வரிகள்.

அன்புடன்
ஆரூரன்

ஷங்கி said...

போட்டுத் தாக்குறீங்க! அற்புதம்!!

மாதவராஜ் said...

கவிதையில் உண்மைகள் சுடுகின்றன. கடைசி வரியில் வலி அறுக்கிறது...