உலக்கையை போட்டு
உள்ளறையில் ஏன்
உட்கார்ந்திருக்கிறாய் அம்மா?
விலக்குடா மகனே
விளங்கவில்லை
யார் வந்து சொன்னார்கள்?
காகம் வந்து
கல்லெடுத்து போடும்
தெரிந்து கொள்வேன்
காகத்துக்கு எப்படி தெரியும்?
யார் சொல்வார்கள்?
அதோ....அந்த
மரக்கிளை
மரக்கிளைக்கு?
அதோ ஓடுதே
அணில் அது சொல்லும்
யார் சொல்வார்
அந்த அணிலுக்கு?
சாமிதான் ராசா
சொல்லும்
அப்ப சாமிக்கு?
அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
தலையை ஆட்டிக்கொண்டேன்
விளங்கினதுக்கு அடையாளமாய்..
35 comments:
/அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
//
suuper
What
is
Happening
Here?
ரொம்ப கேள்வி கேக்குறீங்க. விளங்கிடும்..
--வித்யா
:) கவிதை நல்லாருக்கு.
--வித்யா
கவிதைப் படித்த பிறகு புரிந்தது உலகம் உருண்டை தான்
கவிதை நன்றாக இருக்கிறது.
சாமியை விட அம்மாதான் உயர்ந்தவர்!!
அழகு தலைவா...
அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?
மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??
ஒரே கவிதை மழையா இருக்கு..
மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??
ஒரே கவிதை மழையா இருக்கு..
மொதல்ல, இவர்கிட்டயிருந்து பேனாவப் புடுங்கனும்பா...!
விளங்கி விட்டது! விளங்கிவிட்டது!!! ஓட்டும் போட்டு விட்டேன்!!
நல்லா இருக்கு கவிதை. கடைசி இரண்டு வரிகள் இல்லாவிட்டால் கூட நன்றாக இருக்கும்.
அறியாத வயதில்
புரியாத கேள்விகள்...
கவிதை நல்லா இருக்கு..
வால்பையன் ...
/அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?/
ரிப்பீடடு!
/Cable Sankar said...
/அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
//
suuper///
நன்றி கேபிள்..சின்ன வயசுல எங்க அம்மா சொன்னதுதான்
/What
is
Happening
Here?//
நத்திங் நைனா
/ Vidhoosh/விதூஷ் said...
:) கவிதை நல்லாருக்கு.
--வித்யா//
நன்றி வித்யா
/இரும்புத்திரை அரவிந்த் said...
கவிதைப் படித்த பிறகு புரிந்தது உலகம் உருண்டை தான்//
அப்படியா தம்பி?
/"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
கவிதை நன்றாக இருக்கிறது//
நன்றி வாசு
/ கலையரசன் said...
சாமியை விட அம்மாதான் உயர்ந்தவர்!!
அழகு தலைவா.//
நன்றி கலை..அப்படியும் அர்த்தமிருக்கா?
/ வால்பையன் said...
அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா//
எதுனாலும் அதுதானே உண்மை..நன்றி அருண்
/ butterfly Surya said...
மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??
ஒரே கவிதை மழையா இருக்கு.//
நன்றி சூர்யா
/ ♠ ராஜு ♠ said...
மொதல்ல, இவர்கிட்டயிருந்து பேனாவப் புடுங்கனும்பா...//
திருநெல்வேலிக்கேவா?
/தேவன் மாயம் said...
விளங்கி விட்டது! விளங்கிவிட்டது!!! ஓட்டும் போட்டு விட்டேன்//
நன்றி தேவா...
கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு கவிதை. கடைசி இரண்டு வரிகள் இல்லாவிட்டால் கூட நன்றாக இருக்கும்//
சரிதான் தலைவரே..நன்றி
/ துபாய் ராஜா said...
அறியாத வயதில்
புரியாத கேள்விகள்..//
நன்றி நண்பா
/ முத்துலெட்சுமி/muthuletchumi said...
கவிதை நல்லா இருக்கு.//
மிக்க நன்றி மேடம்..
/ அன்புடன் அருணா said...
வால்பையன் ...
/அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?/
ரிப்பீடடு//
நன்றி
கவிதை அருமை... :)
கவிதை அருமை... :)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
பின்னி இருக்கீங்க நண்பா.. முடித்த விதம் அருமை..;-))))
ரசித்தேன்.
Post a Comment