Showing posts with label ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி. Show all posts
Showing posts with label ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி. Show all posts

Tuesday, October 6, 2009

கோவிந்தா...கோவிந்தா...


உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?பில்கேட்ஸ்?லட்சுமி மிட்டல்?அம்பானி?ம்ஹிம் இவர்கள் யாரும் இல்லை.சாட்சாத் தேவுடா திருப்பதிசாமிதான் அவர்

ரு. 1 லட்சம் கோடிக்கு அதிபதி ஆனார் வெங்கி
ஒரு காலத்தில் ஏகப்பட்ட கடனாளியாக இருந்த ஏழுமலை இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்
பெயர் ஏழுமலையான், ஊர்.. ஆந்திரமாநிலம் திருப்பதி

வெங்கடாஜலபதியானவர் பத்மாவதி தாயாருடன் தான் செய்த திருமண செலவுக்காக குபேரனிடம் மீட்டர்,ஸ்பீடு மற்றும் எக்ஸ்பிரஸ் வட்டிகளில்
ஏகப்பட்ட கடன் வாங்கினாராம்.
அந்த பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் கூறியிருந்தாராம்.
திருப்பதி ஏழுமலையான் அப்படி பணத்தை திருப்பித்தருவதற்காகத்தான், அவருக்கு உதவும் வகையில் பக்த்ர்கள் இன்னமும் காணிக்கைகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்

வெங்கடாஜலபதியின் இன்றைய சொத்துக் கணக்கை பார்த்தால் அவர் என்றைக்கோ அந்த கடனை அடைத்திருப்பார் என்பது வேறு விசயம்
ஏழுமலையானின் மொத்த சொத்து எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்
ரு.1000 கோடி, 10,000 கோடி... இல்லை

அவரது சொத்து மதிப்பு ரு,1 லட்சம் கோடியையும் தாண்டிவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10,33 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது திருப்பதி கோயில். உலகிலேயே அதிக பக்த்தர்கள் வந்து போகும் நம்பர் 1 கோயில் இதுதான். தினமும் சராசரியாக 1 லட்சம் பக்த்தர்கள் வருகிறார்கள்.

ஓரே ஒரு வினாடி நேரம் வெங்கடாஜலபதியை தரிசிக்க நீங்கள் குறைந்த பட்சம் 48 மணி நேரம் காத்திருந்தால் தான் முடியும். சராசரியாக ஆண்டுக்கு 4 கோடி பேர் இங்கே வருகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கையால் உலகின் மிகப்பெரிய பணக்கார இந்துக்கோவிலாகத் திகழ்கிறது திருப்பதி.

திருப்பதியின் விசேஷம் இங்கு இந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவர் எனப் பலதரப்பட்டவர்களும் மிகப் பெரிய அளவில் காணிக்கை செய்திருப்பதுதான்.
தாஜ்மகாலை கட்டிய முகலய மன்னர் ஷாஜகான் வெங்கடாஜலபதிக்கு எட்டு சுற்று சங்கிலி ஒன்றை வழங்கியிருக்கிறார். இதன் எடை100 கிலோவுக்குமேல்.

மன்னர் ஜஹாங்கீரும் இந்தக் கோவிலுக்கு விலை மதிபப்ற்ற ஆபரணங்களை வழங்கியிருக்கிறார். இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் மற்றும் ராணி விக்டோரியாவும் கூட தங்கள் பெயர் பொறித்த பல ஆபரணங்களை வழங்கியிருக்கிறார்கள்.
இங்கு காணிக்கையாக வந்த நிலப்பத்திரங்களை அடுக்கி வைக்க மட்டுமே ஒருவரின் வாழ்நாள் போதாது என்கிறார்கள். இந்த பத்திரங்கள் அனைத்தும் வெங்கடாஜலபதி பெயரில் இருப்பது இன்னும் விசேஷம்.


என்ன ஒரு கொடுமை.தரிசனத்திற்கு போனால் கூண்டில் போட்டு அடைத்து விடுகிறார்கள்.பாலாஜியை அடைவதற்குள் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டியிருக்கிறதுஒரு முறை நான் பாதியில் ஓடியே வந்துவிட்டேன்.


தூள் திரைப்படத்தில் மயில்சாமியின் ஜிலேபி காமெடியை ரசிக்காமல் இருக்கமுடியுமா?