Saturday, October 23, 2010

கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் .சீமை நெருங்கி கொண்டிருந்தது . அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது . ராமேஸ்வரம் விரைவு வண்டி . அதிகாலை அவஸ்தை . அந்த சங்கிலியை இன்னும் கொஞ்சம் நீளமாகத்தான் வைத்தால் என்ன ? பர்ஸை திறந்து சில்லறையாக ரூ 200 இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன் . இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன் . வெளியில் கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் . பா .ரா என்னும் நிழலை . ம(ஹா) களின் திருமணம் .


சிவகங்கை சீமையில் கால் வைத்தோம் . நான் , பொன் .வாசுதேவன் , ராஜசுந்தர்ராஜன் ஐயா . மலர்ந்த முகத்தோடு சரவணன் , கும்க்கி , தோளோடு தோளாய் முத்துராமலிங்கம் ..அப்புறம் பா .ரா . எளிமையான சிரிப்போடு அணைத்துக்கொண்டார் மக்கா .


சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் . ஹோட்டல் அறைக்கு போனோம் . அதிரசம் , முறுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணும் வேலை மட்டுமே பாக்கியிருக்கிறது மக்கா என்றார் பா .ரா . கிட்ட தட்ட முக்கால் கிணறை தாண்டி விட்ட அவனை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையே வந்தது .

நீங்க வேலையை பாருங்க மக்கா .ஒரு வண்டி மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுங்க போதும் என்றோம். இதே சிவகங்கையில்தான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன் . ஒரு விஜயதசமி நாளில் மேளம் முழங்க மாலையுடன் என்னை அப்பா மன்னர் பள்ளிக்கு அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . உடன் அப்பாவுக்கு (தஞ்சை ) போன் போட்டேன் . 45 வயதில் 81 வயது அப்பாவிற்கு அதை நினைவுபடுத்தினேன் . அது இன்னும் ஒரு சந்தோஷம் . அதற்காக பா.ராவிற்கும் , மகாவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி


செட்டிநாடு வீடுகள் , கம்பர் சமாதி , காளையார் கோயில் எல்லாம் சுற்றி விட்டு பா .ரா வீட்டிற்கு போனோம் . இந்த தெருவில் எந்த இடத்தில் அந்த வறட்டியை தட்டியபடி முன் முடியை புறங்கையால் ஒதுக்கியபடி அந்த அம்மணி பேசியிருப்பார் என்று தேடிப்பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் மாசாவை ருசித்து விட்டு அடுத்த கட்டத்துக்கு தயாரானோம் . மக்கா ..சுக்கா என்று முன்பு எழுதியதை நினைவில் வைத்திருந்தான் தோழன் முத்துராமலிங்கம் . வள்ளாலாருக்கு ஒரு முன் மன்னிப்பு கடுதாசி எழுதி கொடுத்தேன் ...நீங்க முன்னாடி போங்க மக்கா..நான் பின்னாடியே வரேன் என்றார் பா.ரா . வந்தவுடன் கையில் வைத்திருந்தார் போனபார்ட்டை (நெப்போலியன்) ... தொடர்ந்து ஜீவகாருண்ய சங்க தலைவர் பழனியும் வந்தார் ... அம்மாவை தத்தம் மொழியில் அழைத்து உயிரை விட்டிருந்த ஜீவராசிகள் ஆவி பறக்க அடைப்பட்டிருந்தன...


இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? சரக்கு உள்ளே போனது . அறை முழுவதும் பிரியங்களினால் நிரம்பி வழிந்தது . உண்டு , உறங்கி , விழித்து மீண்டும்.....


முகூர்த்தம் . குறித்த நேரத்திற்கு வண்டி வந்தது . முதல் நாள் இரவே வந்து அல்வா கொடுத்த அக்பரை விட்டு விடவில்லை என்பதை அவரிடம் சொல்லுங்கள். கா.பா . ஸ்ரீ , மதுரை சரவணன் , பாலா இவர்களிடமும் . மாதவ்ராஜ் சொன்னது போல் மண்டப திருமணங்கள் போல் இல்லாமல் வீட்டோடு நடந்த விசேஷம் .


எல்லாத் திசைகளிலிருந்தும் ஆசி வழங்குவதைப் போல் நண்பர்கள் அழைத்துக் கொண்டேயிருந்தனர் . ஒரு நண்பரிடம் நான் சரியாக பேச முடியாமல் நேர்ந்ததற்கு மன்னிக்கவும் . பாழாய் போன ...

மாது , கா மு இன்னும் வெற்றி, சிவாஜீ , ஜெர்ரீ மற்றும் நண்பர்களுடன் நடத்திய கச்சேரியை மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..


மக்கா... தீபாவளி நெருங்குகிறது . மஹாவுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் . பால்யத்தில் தீபாவளி முடிந்தவுடன் கூட அந்த கடந்து போன திருவிழா ஏக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும் . இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன் ..சொன்னது போல் அடுத்த மாதம் ....ஏழுகடை...பாற்கடல் ... கொண்டாட்டம்.. அதுவரை .....

Monday, October 18, 2010

நான் ஆணாதிக்கவாதியா?
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.

இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.

பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.

மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.

ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் அவனை உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.


ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.
மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.

உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )

டிஸ்கி : நான் ஆணாதிக்கவாதி இல்லை

Thursday, October 14, 2010

அழிக்கப்படும் புராதானங்கள்.....மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\

Tuesday, October 12, 2010

அர்த்தமில்லாத கதைகள் ...5அந்த தெருவில் நுழையும் போது முதல் வீட்டில் இருந்து வந்த வாசனை மூக்கை துளைத்தது . சாப்பிடவே வேண்டாம் . சும்மா சமைக்கறவங்களை பார்த்தாலே போதும் என்று தோன்றியது . பொடுகு வேறு அரித்து தொலைக்க வறட்டு , வறட்டு என்று சொறிந்து கொண்டாள் . வழக்கமாக எல்லோரைம் போல் அம்மா தாயே என்று அவள் ஆரம்பிக்க மாட்டாள் . ரொம்ப உரிமையுடன் என்ன சமையல் நடக்குதா ? என்று பத்து வருட பழக்கக் காரியை போல் கேட்பாள் . அப்படியே தான் பிச்சை எடுக்க வந்த கதை ... எந்த ஊரில் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறேன் ..யார் , யாரிடம் எப்படி பிச்சை கேட்பது ? என்றெல்லாம் சுவாரசியமாக விளக்குவாள் . வீட்டுக்காரர்களுக்கும் ஒரு சுவாரசியம் வந்து விடும் . அவர்களும் தாங்கள் என்ன என்ன மெனு என்றெல்லாம் அவளிடம் விளக்குவார்கள் . ஒரு விஷயம் . அவளலால் சாப்பிடாமல் கூட இருக்க முடியும் . ஆனால் பிச்சையெடுக்காமல் இருக்க முடியாது . ஆனால் இது நடந்தது எல்லாம் வேறு ஊரில் . இப்போது அந்த ஊரில் பிச்சைகாரர்கள் ஒழிப்புக்கு குழு அமைத்து கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்கள் . அதனால் தொழில் நிமித்தம் இப்போது வேறு ஊர் . இந்த தெருதான் முதல் போணி.


வழக்கம் போல் தன் பாணியில் யாசகத்தை ஆரம்பித்தாள் . எல்லாருமா அப்படி இருப்பார்கள் .

முதல் வீட்டில் பழைய சோறுதான் இருக்கிறது என்றார்கள் . வேண்டுமென்றால் பக்கத்து பாய் வீட்டில் முந்தா நாள் பிரியாணி போடுவார்கள் என்று பரிந்துரை வேறு . ஆனால் அதையும் கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் தெரு நாய்க்கு போட்டார்களாம் . கொஞ்சம் முந்தி வந்தி ருக்க கூடாதா என்று விசனப்பட்டார்கள் . இவள் கேட்டாள் . அந்த நாய் எந்த வழியாக போனது என்று ?

இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் இதே பிரச்சனை .. அந்த ஊரில் ஒரு மடம் இருந்தது . ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம் அது . அதில் ஒரு திண்ணை காலியாக இருந்தது . பக்கத்து திண்ணையில் ஒரு பைத்தியக்காரன் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . அவளை பார்த்ததும் அவனுக்கு என்னவோ தோன்றியது . நிச்சயம் இவள் பிச்சைக்காரி இல்லை . தன்னைப்போல்தான் என்று நினைத்தான் . அவளை அழைத்து என்னம்மா பிரச்சனை என்றான் ?

அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .
பொழைப்பு இப்போதைக்கு நல்லா ஓடுதாம் . எழவு எங்கயோ இருக்கட்டும் . இந்த பக்கம் வராம இருந்தா சரி..

Sunday, October 10, 2010

மானிட்டர் பக்கங்கள்.....10/10/10

(வால் , ஜாஃபர் , கதிர்...அப்புறம் )

சென்ற வாரம் ஈரோடு போயிருந்தேன் . சில விளம்பர விவாதங்களுக்காக .

1 . வாகனமும் , அறையும் ஏற்பாடு செய்து கொடுத்த அன்பன் ஆரூரானுக்கு நன்றி .

2 . சரக்கு.. உபயம் வால் . ஆச்சர்யம் குடிப்பதை விட்டு விட்டதாம் வால் . அதனால் தலை கொஞ்சம் ஓவராக போக நேர்ந்தது . வால் குடிக்காததற்கு காரணம் .காதலாம் .. தோல்வியென்றால் குடிக்கலாம் . வெற்றியென்றால் விட்டு விடலாமா ?

3 . எளிமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரன் அன்பு தம்பி பாலாசி ..(பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?) . வயிற்றில் புளியை கரைக்காமல் . காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு பேடண்ட் ரைட் வாங்காத அகல் விளக்கு .

4 . ஜாஃபர் தம்பி...அன்புக்கு மிக்க நன்றி..கொஞ்சம் ஓவராத்தான் போனோமோ ? சென்னை வரும்போது அவசியம் சந்திக்க தண்டோரா ஆபீசுக்கு வர வேண்டும் . அது பதிவுலக அறிவாலயமாம் . ( நன்றி வெயிலான் )

5 . கார்த்திக் . நந்தாவில் ராஜ்கிரண் சூர்யாவிடம் சொல்லும் வசனம் ஒன்று உண்டு . என்னைய பார்க்கிறாப்ல இருக்கு . கார்த்திக் .. நானும் அப்படி உணர்ந்தேன் . ஹோட்டல் வாசலில் நாம் உரையாடியது ...இன்னும்....

6. கதிர் . கிராமத்து வேர் . நான் இவரது ஜெயா தொலைக்காட்சி பேட்டியை ஈரோட்டில்தான் பார்த்தேன் . 9.30 மணிக்கு வரேன் அண்ணே ! என்றவர் 9.40 க்கு வந்தார் . அதுவா முக்கியம் .உண்மையில் பேட்டி . அந்த சமூக அக்கறை . வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் சிறக்க ..சரக்குல பேசியதையெல்லாம் சாக்குல போட்டு மூட்டை கட்டணும் .. புரியுதா ?
ப்ரிபெய்டு உலகம் . மளிகை கடை வைத்திருந்த நண்பரின் கடையில் சரக்கே இல்லை . (மளிகை சாமான்களை சொல்றேன் ) பதிலாக எங்கும் செல்போன் மயம் . விரல் நுனி ரேகைகள் அநேகமாக அழிந்து போயிருந்தன . (ஈ சார்ஜாம் )

இட்லி மாவு மட்டும் விற்கறேன் . உங்களை மாதிரி சில நண்பர்களுக்காக என்றார் .

மக்களால் பேசாம இருக்கவே முடியாது . 200 ரூ சம்பாதிக்கற ஒருத்தர் டெய்லி 50 ரூபாய்க்கு டாப் - அப் பண்ணுகிறாராம் . பிஸினஸ் சூப்பரா போயிட்டிருக்கு என்றார் . பின்னூட்டமும் , ஓட்டும் போடறதுக்கு எதாவது ப்ரிபெய்டு ஸ்கீம் கொண்டு வரலாமா ? இந்த மாதிரி எல்லாம் அச்சு , பிச்சு கேள்வியெல்லாம் வினவ கூடாது . (ஈரோட்டு நண்பர்கள் ஃபேஸ் புக்கில் சில புகைப்படங்களும் , மற்றவைகளும் காட்டினார்கள் .. பார்த்தேன் ... வியர்த்தேன் ) காமெடி ஃபீஸ்களை பற்றி என்னத்த பேச ? ஈரோடு , கோவை எல்லா இடங்களிலும் இந்த நகைச்சுவை திரைப்படம் சூப்பர் ஹிட் .


கோவையில் அன்புடன் வந்து சூடாக இட்லியும் , தோசையும் (தானே ) வாங்கி கொடுத்த அண்ணாச்சிக்கும் , காங்கிரசின் நம்பிக்”கை” நட்சத்திரம் சஞ்சய் மாப்ளைக்கும் நன்றி .


அடுத்த வாரம் சிவகங்கையில் மட்டன் சுக்கா சாப்பிட போகிறேன் . அன்பு மக்கா பா . ரா வின் மஹாவிற்கு திருமணம் . ஏதோ என் மிக நெருங்கிய சொந்தம் வீட்டு திருமணத்திற்கு போக இருக்கும் உணர்வில் இருக்கிறேன் . காரணம் பா . ரா . எளிமையான மனுஷன் . ஆனால் மனுஷன் இப்பல்லாம் என் வேலையை எடுத்து கிட்டாரு . சரக்கு போட்டா , குரல் கேக்கணும்னு ....நீ எப்ப வேணா கூப்பிடு மக்கா ..நாங்க எல்லாம் இரவு பாடகனையே பார்த்தவன் ..(ர . வை) ..உப்புமா இல்லை .


என்னதான் இறுக்கமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
உன் உதடுகளின் வழியே
கசியும் அந்த ஒரு துளி
மெளனத்தில் எனக்கான
சம்மதம் ஒளிந்திருக்கிறது


(கதிரின் பாதிப்பு )சென்னை விமான நிலையத்தில் சொக்க வைக்கும் அம்மையாரை சந்தித்தாராம் பட்டு வேட்டி தலைவர் . ( சும்மா எத்தனை நாளைக்குத்தான் மஞ்சள் துண்டையே அடையாளம் சொல்றது ) . இலங்கை தமிழர் பிரச்ச்னை..கோரிக்கை மனு .. கூட்டணிக்கு உத்தரவாதம்..

ஆமாம்...உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா ?

போய்யா...நாங்க சோத்துலயே உப்பு சேர்க்கறது இல்ல.. (இது தமிழ்குடிதாங்கியின் வசனம்பா ...விரைவில் விருதகிரிக்கு சாமரம் வீச நேரலாம் )

Friday, October 1, 2010

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?


ஒரு “சிட்டி” கை போட்டால் நாட்டுக்கு நல்லதையே செய்யும் சாஃப்ட்வேர் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மந்திரித்த தகடு...அதாங்க எந்திரம்..இரும்பை கரும்புக்கு அறிமுகப்படுத்த , அது இளக ஆரம்பிக்கிறது. வசீகரமான ஆரம்பம்..அப்புறம் ஆரம்பம்..அங்கங்கே மானே..தேனே மாதிரி..அப்பாஸ்டுபி . டபுள் கோட்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணிக்கங்க..ஐஸ்வர்யா ராவணன் கடத்தலில் இருந்து மீண்ட பிறகு மெருகேறியிருப்பதாக எனக்கு பட்டது. அசுரன் கடைந்ததில் வெளியான ஆலகாலம் உஜாலா சேர்த்த எஃபெக்ட்...நூலிடை....அதன் கீழ் ஆலிலை...அமிதாப்பின் கபர்தார் ...ரஜினி என்கிற காந்தம்.

அடிக்கடி படத்தில் வரும் மானிட்டரில் மேக்னட் என்ற வார்த்தையை பார்த்ததாக நியாபகம்.. பிரசவத்துக்கு இலவசம் ஆட்டோக்காரன் பாட்ஷா மட்டுமல்ல..ஆட்டோமேட்டிக்காரனும் கூட.. ஐஸ் சிட்டியை கிஸ்ஸடிக்கும் காட்சியில் , உண்மையில் ரஜினியின் ரியாக்‌ஷன் மால்வேர் தாக்கின எஃபெக்ட் இருந்தது.. லேசாக வலது புருவம்.. என் பார்வையில் இடது புருவம்...உயர... இருவரில் அவளை நினைத்து..இடம் சரியாக நினைவில் இல்லை.. ஆலகாலம்.

அப்புறம் ஷங்கர்...இறையருள் பெற்றவர்.. ஆசிர்வதிக்கப்பட்டவர் ... ராசியான கலைஞர்.....(மஞ்ச துண்டு இல்லைங்க...)


பழசை மறக்காதவர் ரஜினி என்று சொல்வார்கள் . வில்லனாய் அவர் குழையும் போது அது உண்மைதான் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் ஐஸ்சுடன் ரத்தம் நிரப்பப் பட்ட பியுரெட் இதயத்துடன் , குறைவான எடை கொண்ட காதல் மொழிகளை இன்குபேட்டரில் பொத்தி , பொறித்து கொடுக்கும் போது....லேப்பில் ராஜலக்‌ஷ்மி எதிரில் என்னை திட்டிய பி. வி. வெங்கட்ராமனை மன்னித்து விட்டேன். (அவர் எஸ்.வி. சேகரின் மாமனார்..தஞ்சை)


இறுதியில் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள்.. பொது சொத்து 200 கோடி நாசம்... அது யாருடையது ? கம்மியாக சொல்கிறார்களோ?


சானா.....சீட்டாட்டத்தில் 12 கேம் முடிந்தவுடன் , கட்ஃபார் போடுவார்கள். மீண்டும் சீட்டு எடுத்து இடம் மாறி உட்கார வேண்டும்.. ராவணனில் விட்டதை.... 66 கிலோ எடை.. மீண்டும் ஒரு தேவதையுடன் டெம்ப்ரவரி கனவு..எந்திரம் துப்பிய சீட்டு ...ஒரு ரூபா காயின் இல்லை முழுசா..... அமவுண்ட் வேண்டாம்... ஒரு 10 ஓட்டு வாங்க ஆகும் செலவு. காசா முக்கியம்... அப்ப வேற எது முக்கியம்னு சொல்றவங்களுக்கு......கிளிமாஞ்சாரோ...கரும்பு சாரோ...உண்டு.....