Thursday, April 30, 2009

90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து

"காதுல பூ" நாடகம் பார்த்தேன்யா..ஒரே "சிரிப்பொலி'தான்
ஐய்யா..அடுத்து "உட்டாலக்கடி"நு ஒண்ணு போடறேன்..நீங்கதான் தலைமை.சாயந்திரம் டிபன் சாப்பிட்டு வந்திங்கன்னா
நைட்டு டின்னருக்கு வீட்டுக்கு போயிடலாம்

                            இந்த இருட்டுல வீராசாமியை எபபடி கண்டு பிடிக்கிறது?
                                                       பத்துக்கு மேல நம்பர் ஒண்ணு சொல்லு
                                                  ஜாக்கி சீப்பு கொண்டு வந்திருப்பாரா?
     30 ஆம் தேதிக்கப்புறம் உங்க படத்துக்கு நான் காமிரா பண்ணவா?

ஒரு வருஷத்துக்கு 500 கோடி ரூபா உபரியா டாஸ்மாக்ல பணியாளர்கள் சம்பாதிக்கிறாங்களாம்.2.75 கோடி பீர் மற்றும்  145 கோடிபிராந்தி பாட்டில்களில் ரூ1 முதல் ரூ7 வரை கூடுதல் வைத்து விற்கபடுகிறதாம்.old monk 180 ml-59ரூ.ஆனால் ரூ60 க்கு விற்கபடுகிறது. சராசரியா ஒரு டாஸ்மாக் பணியாளர் ரூ 5 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதிக்கிறாராம்..அடிச்ச போதையெல்லாம் இறங்கிடுச்சு..கட்டிங் போட்டா என்ன?

Wednesday, April 15, 2009

கூட்டாஞ்சோறு

தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட ஒரு தமிழ் சுதந்திர போராட்ட தியாகிக்கு பென்ஷன் தருமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.27 ஆண்டுகளாக கால் தேய நடையாய் நடந்தும் அரசு அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.அது மட்டுமல்லாமல் அவரை எதிர்த்து வழக்கும் நடத்தியுள்ளது.(தினமலர்)(மானாட ,மார்பாட என்ற ஒரு கேடு கெட்ட நிகழ்ச்சியில் நடுவராக வரும் கவர்ச்சி நடிகை ரம்பா சென்ற வாரம் முகவை சந்தித்து தன் பிரச்சனை சொன்னாராம்.அவர் திரும்ப வீடு போய் சேர்வதற்குள் அந்த பிரச்சனை தீர்த்து வைக்க பட்டதாம்.நெகிழ்ந்து போன ரம்பா தன் கொலைத் தமிழில் திமுக விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.(கும்பி எரியுதய்யா)

புதிய பாரதம் என்ற ஒரு பொறுக்கி கட்சி.அதன் தலைவர் ஜெகன் மூர்த்தி.அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தவர்.நடைபெற உள்ள நாடாளூமன்ற தேர்தலில் திமுக வின் ஜெகத்ரட்சகனுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக சென்னை cit நகரில் வீட்டு வசதி வாரியத்தின் 2 குடியிருப்புகள் அவருக்கு ஒதுக்கபட்டிருக்கிறது.அவர் அதை சட்டத்திற்கு புறம்பாக இடித்து கட்சி அலுவலகம் கட்டி வருகிறார்(ஜீனியர் விகடன்)

நரசிங்க பெருமாளின் நட்சத்திரம் சுவாதி.அழகிரியும் அதே நட்சத்திரம்தான்.மதுரை ஒத்தகடையில் உள்ள பிரசித்த பெற்ற நரசிங்க பெருமாள் கோயில் வாசலில் இருந்து தனது தேர்தல் பிராசாரத்தை அழகிரி தொடங்கியிருக்கிறார்.தனது பிராசார வண்டியில் வந்த போலி பகுத்தறிவு பிராசாரம் செய்யும் முகவின் முதல்(இரண்டாம் மனைவியின்) வாரிசை கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.கோயில் பிராசாதமான குங்குமம்,துளசியை
காந்தி(??)அழகிரி பவ்யமாக பெற்றூ கொண்டார்.அழகிரிக்கு விபூதியும் பூசப்பட்டது.

சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவித்து மானங்கெட்டதனமாய் ஒரு தொ(ல்)லைகாட்சி காசு பார்த்தது..
(இவர்கள் சோற்றில் உப்பு போட்டு கொள்வார்களா??)

பாலம் என்றாலே பாலு தான் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.செல்போன் என்றால் தயானிதிதானாம்.
அப்ப ஊழல்,போலி பகுத்தறிவு,பொறுக்கித்தனம்,கூட இருந்தவர்களையே நண்பர்களாகவே இருந்தாலும் நாக்கு கூசாமல் தூற்றுதல்(அடுத்தவன் மனைவியை அபகரித்து விட்டார் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரை இன்று அறிக்கையில் சாடியுள்ளார் மு.க) இதெல்லாம் யாரை நினைவூட்டுகிறது?

ஒரு காட்டுக்குள் ஒரு புலி அட்டகாசம் செய்த்தது.அதை பிடிக்க ஆந்திரா,கர்னாடகா மற்று தமிழக போலிசார் போனார்கள்.
முதலில் ஆந்திரா...புலி எதுவும் தென்படவில்லை என்று சொல்லி விட்டான்.பின் கர்னாடகா போலிஸ் உள்ளே போனார்கள்.சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து புலியை பார்த்தோம் .ஆனால் ஓடி விட்டது என்றார்கள்.இறுதியாக நம்ம
தமிழக காவல் துறை சென்றது.நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை.பயந்து போய் மற்றவர்கள் உள்ளே சென்றனர்.அங்கே நம்மாளூ ஒரு கரடியை கட்டி தொங்க விட்டு "நாந்தான் புலினு ஒத்துக்க போறியா, இல்லியானு அடி பின்னிக் கொண்டிருந்தனர்.

Tuesday, April 14, 2009

சத்தியமா அரைச்ச மாவு இல்லைங்க






சாருக்கு நாலு குஷ்பு பார்சல்..சப்ளையர் சொன்னதும் எனக்கு விபரீத ஆசைகள் வந்தது.
நிஜமாவே நாலு..இல்லை ஒரு குஷ்பு வந்தா போதுமே..சின்னதம்பி ல தொடங்கி எத்தனை வாட்டி கனவுலே வந்திருப்பா.நிறைய முறை நேரிலும் பாத்திருக்கேன்..அடடா..என்ன அழகு..என்று சொல்ல முடியா விட்டாலும் ஒரு வித வித்தியாசமான கவர்ச்சி..சே...பார்சல் வந்து விட்டது.நான் கேட்டேன்"இதுக்கு குஷ்பு இட்லினு ஏன் பேர் வந்துச்சு..சர்வர் சொன்னார்..எப்படினு தெரியாது.ஆனா என்ன பொருத்தமான பேர் பாருங்க..குஷ்பு மாதிரியே கொழு..கொழுனு நல்லா பூசினாப்பல,அழகா உப்பலா.. குஷ்புவை பார்த்தா கன்னத்தை தொட்டு செல்லமா கிள்ள தோணும்..குஷ்பு இட்லியை..கிள்ளி வாயில போட்டுக்க சொல்லும்..இந்தாங்க சார் பார்சல்.என்னமோ குஷ்புவையே எனக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரி பீலிங்க் ஆயிட்டாரு சர்வர்

தமிழனின் தேசிய உணவான இட்லி (இறையாண்மைக்கு எதிரா எதுவும் இல்லையே) சுமார் 800 ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்தது.அந்த காலத்தில் "இட்டு அவி" என்ற பெயரில் இருந்த ஒரு வித சிற்றுண்டி தான் காலப் போக்கில் மருவி இட்லி ஆகி விட்டது.நீராவியை கண்ட ஒருவன் அதை வைத்து நீராவி இன்ஜீனை கண்டு பிடித்தான்(ஜேம்ஸ் ஸ்டிவன்சன்)நம்மாளு?? வட்டமா நிலா மாதிரி சுவையா கண்டு பிடிச்சதுதான் இட்லி.இன்று சென்னை மயிலாப்பூரிலிருந்து தினமும் சூடா இட்லி சிங்கப்பூர்,மலேஸீயானு பறக்குது.அது மட்டுமல்ல உலகம் முழுக்க இட்லிக்கு ரசிகர் பட்டாளமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

எங்கள் தஞ்சாவூரில் நைட்டு கடையில் இட்லிக்கு ஆறு வித சட்னி கொடுப்பார்கள்.மல்லி,மிளகாய்.பூண்டு,வெங்காயம்,தக்காளி,தேங்கா என போட்டு தாக்கும் போது சும்மா ஒரு டஜன் சர்வ சாதாரணமா இறங்கும்.மதுரை முருகன் இட்லி கடை,கோவை அன்னபூர்னா கௌரிஷங்கர்,ஈரோடு குப்பண்ணா மெஸ்,சென்னை திருவல்லைகேணி ரத்னா கேப் ,பெங்களுரு M.T.R என இட்லிக்கு புகழ் பெற்ற இடங்கள் உண்டு.

முன்பு ஆட்டு கல்லில் தான் மாவாட்டுவார்கள்.அதுவும் அப்ப எல்லாம் கூட்டு குடும்பமாக இருப்பார்கள்.ஒரு 10,15 தலையாவது தேறும்(இப்ப நாள் கிழமைன்னா கூட அண்ணன் தம்பி எல்லாம் sms லதான் வாழ்த்து??) படிக் கணக்கில் அரிசியை ஊற வச்சு ஒருவர் தள்ளி விட்டு கொண்டேயிருப்பார்கள்.ஒருவர் குழவியை சுற்றி கொண்டே இருப்பார்கள்.இது சுவை மட்டும் இல்லை.ஒரு சிறந்த உடற்பயீற்சியாகவும் இருந்தது.திடகாத்திரமாக இருந்தார்கள்.ஆனா இப்ப??
ஆட்டு கல் போய் கிரைண்டர் வந்தது.இப்ப அதுவும் போச்சு.."என்னங்க வரும்போது ஒரு மாவு பாக்கெட்"வாங்கிட்டு வந்திடுங்க..இந்த வார்த்தை புழங்காத வீடே இல்லைனு அடிச்சு சொல்லலாம்...வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாகவே இது ஆயிடுச்சு.

டிப்ஸ்

இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளனிரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊர வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும்(ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)

அருமையான,சுவையான உடலுக்கு தீங்கு செய்யாத இட்டு அவித்த இட்லியை என் கணக்கில் சுவையாக சாப்பிட இங்கு வாருங்கள்.

Sunday, April 12, 2009

ஓரு வாக்காளனின் வாக்குமூலம்

ஒரு ஓட்டுக்குரூ2000/வீதம் மொத்தம் 50 ஓட்டு நம்ம குடியிருப்பில் இருக்கு.ரூ100000/- வசூலாகும்.அதை வச்சு நம்ம கழிவு நீர்,சாக்கடை அடைப்பு,தெருவில் உள்ள குழிகளை மூடுதல் மற்றும் பெயிண்ட் அடித்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.இது எங்கள் குடியிருப்போர் நல கூட்டத்தில் நான் சொன்னது.

அது எப்படி...நீங்க படிச்சவங்க(??)மீடியாவில வேற இருக்கீங்க..இப்படி சொல்லலாமா?இது ஒரு அரசாங்க ஊழியர்(அவர் சம்பளத்துல(மட்டும்) அவர் life style ல நினைச்சு கூட பார்க்க முடியாது(கிம்பளம்தான்)

சார்,இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல..இதோ ராமானுஜம் வீடு என்ன வெள்ளத்துல அடிச்சுகிட்டா போயிருச்சு..முத ஆளா இவர் தான் போய் கீயூல் நின்னு 2000 ரூபா வாங்கிட்டு வரல??

சார் எல்லாரும்தான் வாங்கினாங்க.ஏன் என்னைய மட்டும் குத்தி காட்டுறிங்க

சரி இப்ப என்ன சொல்றிங்க

சார்..போட்டி பலமாயிருக்கும் போல..நாம கொஞ்சம் ரேட்டை ஏத்திடலாமா?(ஒரு house husband)

சார்.நான் காசு வாங்கினாகூட அதுக்கு ஓட்டு(கை விரலை நன்றாக விரித்து)போட மாட்டென்..கண்டு பிடிச்சுடுவாளா?(TELEPHONES)

நான்: சரி நீங்க எதுக்கு வேணா ஓட்டு போடுங்க..அது பிரச்சனை இல்லை.இப்ப காசு கொடுத்தா வாங்கலாமா..வேண்டாமா..

ஒரு மனதாக அனைவரும் இந்த டீலை நானே முடிப்பது என்று முடிவாயிற்று..சீட் பேச்சு வார்த்தை போல அனைத்து கட்சி பிரதி நிதிகளிடமும் பேரம் பேசி(??)ம்ம்ம்..

ஒருவர் கேட்டார்..சார் இது அரசாங்கத்தை ஏமாத்தற மாதிரி இல்ல?

பதில் இந்த நகைச்சுவை..??

ஒருவன் சொன்னான்..நான் அரசை ஏமாத்திட்டேன்.. மத்திய அரசை..அதுவும் ரயில்வேயை
எப்படிடா? டிக்கெட் வாங்காம ரயில்ல வந்தியா?
இல்ல...தாம்பரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு, மாம்பலத்திலேயே இறங்கிட்டேன்..

மு.க மாதிரி ஒரு தீர்மானம்..

அனைவரும் மிகவும் வற்புறுத்துவதால் குடியை விட்டு விடலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.இன்று முதல் sunday மட்டும் குடிக்கலாம் என்று ....????(நாளைய தீர்மானம் இனி monday மட்டும்)

Tuesday, April 7, 2009

சும்மா டச் வுட்டு போக கூடாதுன்னுதான்


கவிதை மாதிரி....கவிதையல்ல

எதாவது எழுதுங்கள் 
என்ன எழுதுவது...?
எதை பற்றியாவது ....
ம்ம்ம்..எதையும் பற்றி எழுதுவது
என்னால் ஆகாது..

வரவு என்பதே இல்லை..இதில்
பற்று எப்படி வரும்..
பின்..
கொஞ்சம் பொறுமை..
எதையாவது
கற்று பின் பெற்றதை
எழுதுகிறேன்....

ஒரு நகைச்சுவை(கொஞ்சம் பழசுதான்)

இருவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார்கள்.அங்கே ஒரு பலகையில்"இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.பணத்தை உங்கள் பேர பிள்ளைகள் செலுத்தினால் போதும்" என்று அறிவிக்க பட்டிருந்தது.நம்ம ஆளுகளுக்கு கேக்கவா வேணும்.வெளுத்து கட்டினார்கள்.பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன் சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார்.நம்ம ஆளுக்கு கோபம்னா அப்படி ஒரு கோபம்"என்னாங்கடா என்ன எழுதி போட்டு இருக்கு..என்ன இது பில்லு? சர்வர் அமைதியாக சொன்னார்"எல்லாம் சரிதான் ஆனா இது உங்க தாத்தா சாப்பிட்ட  பில்லாச்சே....

இது நம்ம"உண்மைத் தமிழன்" அவர்களுக்காக(சும்மாதான்)

தலைவரே..நீங்க இப்ப மதுரைல இருக்கணும்..அழகிரி அண்ணன் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கப் போராராம்.
கணக்கு போட்டு பாருங்க.."எத்தனை ஆடு...எம்புட்டு கோழி...ம்ம்ம்..



Sunday, April 5, 2009

தஞ்சை சில டைரி குறிப்புகள்




சமீபத்தில் உறவினர் ஒருவர் அழைத்து தஞ்சாவூர் வீட்டு விலாசம் வேண்டும்,பத்திரிக்கை அனுப்பனும் என்றார்.எவ்வளவு யோசித்தும் நினைவுக்கே வரவில்லை..காரணம் கடிதம் எழுதும் பழக்கமே முற்றிலும் ஒழிந்து போனதுதான்.பிறகு தம்பிக்கு போன் பண்ணி விலாசம் வாங்கி கொடுத்தேன்.

தஞ்சையில் கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது(???)சினிமா மோகம் தலைக்கேறி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னைக்கு வர நினைத்த போது அப்பா..என்னவாவது பண்ணி த் தொலை...என்று சொல்லி விட்டார்..அம்மா என்ன ஆசையோ செய்..ஆனால் வாரத்துக்கு ஒரு கடிதம் கண்டிப்பா போடனும் என்று சொல்லி விட்டாள்.ஒரு சுப தினத்தில் படிப்பை (வராத)மூட்டை கட்டி விட்டு விடை கொடுத்தேன் தஞ்சைக்கு..கிளம்பும்போது அம்மா செலவுக்கு பணமும் ஒரு 50 போஸ்ட் கார்டுகளும் கொடுத்தாள்.அத்தனையும் சுய விலாசமிட்டவை..நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் ..எதாவது எழுதி வாரம் ஓண்ணு அனுப்பு போதும் என்றாள்.அதன் பின் சென்னை வந்து சந்தி சிரிச்சு.கால் வயிறு,அரை வயீறு காஞ்சு அதெல்லாம் தனி கதை..

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..
ராமனாதன் பார்(செல்லமா சபா)நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் மு ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..(அதாவது நான் இங்கு த(ண்) னி "குடி" த்தனம்..அவர்கள் கூட்டு "குடி" த்தனம்".பின் காபி பேலஸ் ரவா தோசை,நைட்டு ரோட்டு கடை இட்லி பூண்டு சட்னி,தேவர் பிரியாணீ(சரவணன்??)காமாட்சி மெஸ் விரால் மீன் மண்டை,வறுவல்,சினிமா(நைட் ஷோ)....எல்லாவற்றுகும் மேல் அவள் குடியிருந்த வீடு,கோயில் பிரகாரங்கள்..அங்கு நடந்த கொடுக்கல்/வாங்கல்கள்(கடிதம் மட்டுமல்ல)(அவளொடு சேர்ந்து பார்த்த முதல் படம்..அதாவது அவள் அவள் குடும்பத்தோடு/நான் நண்பர்களுடன்..படம் "திசை மாறிய பறவைகள்"

ம்ம்ம்..நினைவுகள் தான் எத்தனை சுகமானவை...